Tuesday, November 26, 2013

’தல்வார்களும் ஆருஷியும்’ பகுதி :2

அறிவார்ந்த நண்பர்களே,
‘தல்வார்களும் ஆரூஷியும்’ என்ற எனது  கட்டுரையைப் படித்த, எனது மதிப்பிற்குரிய நண்பர்களில் ஒருவராகவும்  பெரும் கல்வியாளராகவும் திகழும்  ஒருவர் எனக்கு எழுதி இருந்தார்.

// Dear Thiru Balaa
I am able to understand your sentiments by looking at the issue on the periphery.
If you deeply look at the family system Mrs and Mr Thalwar had, you would have few facts about how they have been leading their family. He and his wife went for a Party and had drink for both of them and returned home late in the night.

Imagine what kind of descipline they would have taught for their daughter. What kind of honor they had that they should resort to this honor killing.

These things may look small.

" Small things make perfection; but
   Perfection is not a small thing."

It is not one day's indiscipline that has mattered. There is something more that is hidden. Here the indiscipline of the parents lies.//

அதற்கு என்னுடைய கருத்தைச் சொல்ல வேண்டியது என் கடமை.

அது  வருமாறு:
 
மதிப்பிற்குரிய அய்யா,
வணக்கம்.
தங்கள் கருத்து  ஒருவகையில் உண்மைகளை மேலும் ஆராயச் செய்கின்றது;சரியானதுதான்.
ஆருஷியின் பெற்றோர் அவ்வாறே மது அருந்தி விட்டு வந்து கொலை செய்திருக்கிறார்கள் என்றால் அதுவும்கூட திடீரெனத் தோன்றிய அனிச்சைச் செயலாக இருக்க முடியாது.
இந்தக் கொடூரச் சிந்தனை பல நாட்களாக அவர்களுக்குள் திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

ஏற்கெனவே அவர்கள் ஆருஷியை எச்சரித்துக் கண்டித்திருக்கலாம்; ஹேம்ராஜை அந்தப் பெண் மறக்க முடியாதவளாக் கூட மறுபடியும் மறுபடியும் அதே குற்றச் செயலுக்கு உடந்தை ஆகி இருக்கலாம். இதை வெளியில் யாருடனும் பகிர்ந்து கொண்டு மாற்று வழி டேட முடியாத நிலையில் மது அருந்தி விட்டு வந்து பார்த்த போது அவர்கள் கண்ட அவமானமும் அருவறுக்கத்தக்கதுமான நிகழ்ச்சி அவர்களை ஒரே முடிவில் -கொலை செய்ய வைத்திருக்கலாம்.

உண்மைக முழுமையாக உலகிற்குத் தெரியவில்லை.

ஆனால் 45 வயது வேலைக்காரனுடன்  தங்கள் 14 வயது மகள் கொண்டிருந்த உடல் புணர்ச்சி பற்றி நாம் நாகரிகம் கருதி விரிவாக எழுத முடியாது.

இன்னும் சொல்லப்போனால் அதுபற்றி உண்மைப் பின்னணி உலகிற்குத் தெரியாது.
ஆனால் ஆருஷியும் வேலைக்காரனும் ஒருவருடன் ஒருவர் உறவு கொண்டிருந்த காரணத்தால்தான் இக்கொலை நிகழ்ந்திருக்கிறது என்பதும் அதன் அடிப்படையில் பெற்றவர்களைக் குற்றவாளிகள் என்று பேசுவதும் தீர்ப்பளிக்கப் படுவதும் நியாயமற்றது என்பதே உள்ளம் காணும் காட்சி.
துஷ்டர்களையும் துஷ்டத்தனங்களையும் தண்டிக்க ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சங்கு சக்கரதாரியாய்த்தான் தோன்றிக் கொல்ல வேண்டும் என்பதில்லை.

அதற்காக நீண்ட காலம் விசாரணை நடத்தி உண்மை இது வென்று உணாரமலே, அக்கிரமச் செயல்களுக்கு உடன்பட்டவர்களை உணராது அக்கிரமத்துக்கு எதிராக செயல்பட்டவர்களைத் தண்டிப்பதில் சட்டம் தன்னிறைவு கொள்வதை ஏற்றுக் கொள்ளவும் இயலாது.
தண்டனையைப் பாதிக்கப் பட்டவர்கள் தருவதைக் குற்றம் என்றும் ஆனால் தண்டிப்பதற்குச் சட்டத்துக்கு மட்டுமே உரிமை உள்ளது என்பது நியாயம் என்றும் ஏற்பது ஒரு விசித்திரமான - விபரீதமான அர்த்தம் அல்லவா?

தங்களைப்  போன்ற  அறிஞர்கள்தான் இதற்கு விளக்கம்  தர வேண்டும்.

தங்கள் அன்புள்ள,
கிருஷ்ணன்பாலா

No comments: