Wednesday, November 27, 2013

நீதிக்குத் தலை குனி!



றிவார்ந்த நண்பர்களே,

தேடல்:5’ என்ற எனது பதிவை எழுதிக் கொண்டிருந்த போது காஞ்சி மடாதிபதி அவர்கள் தொடர்புடைய வழக்கின் தீர்ப்பு  இன்று (27.11.2013 ) வெளியாயிற்று.

நேற்று எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நான் சொன்னேன்:’சங்கராச்சாரியார் விடுதலை ஆகி விடுவார்அதற்கு அவர் சொன்னார்: 

அவர் வணங்கும் தெய்வம் உண்மையானது என்றால் அவர் தண்டிக்கப்படுவார்நான் கலியின் ஆளுமையை நம்பிச் சொன்னேன்.

அவர் தெய்வத் தீர்ப்பை நம்பிச் சொன்னார். தெய்வமே இப்போது கலியின் வடிவத்தில்தானே இருக்கிறது?

நேற்று முன்தினம்  ’கொலை செய்தது யார்?’ என்றே தெரியாத, தெளிவிக்கப் படாத நிலையில்   யூகத்தின் அடிப்படையில் தல்வார்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது. கொலை செய்ததற்கு மடாதிபதிகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப்படாத நிலையில் அவர்களுக்கு இன்று (27.11.2013) விடுதலை என்று தீர்ப்பு..

ஒரு கையில் சுண்ணாம்பும் இன்னொரு கையில் வெண்ணெயையும் வைத்துக் கொண்டு கண்ணைக் கட்டிக் கொண்டு தீர்ப்பருளும் இந்த நீதி தேவதையை என்னால்  நெஞ்சம் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

அவளுடைய குடுமியைக் கையில் பிடித்துக் கொண்டு அவளைத் தங்கள்  இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்கும் கறுப்பு (உடை அணிந்த) மனிதர்கள் மலிந்து போக வைத்திருக்கின்ற நீதி மன்றங்களே இந்தக் கலியுகத்தின் அதர்ம மையமாகத் திகழ்கின்றன.
   
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்  கோடாமை  சான்றோர்க் கணி. ” என்றான் வள்ளுவன்.

அத்தகைய  சான்றோர், நீதி மன்றங்களில் அமர்ந்திருந்து நீதியின் துலாக்கோலைத் தூக்கிப் பிடிக்காமல் இருப்பதுதான் நமது நாட்டின் துரதிர்ஷ்டம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.11.2013


No comments: