முகநூலில் சமூக நலன் சார்ந்து
பதியப்படும் கருத்துக்கள் நீர் மேல் எழுத்தாக
ஆகி விடாமல் கல்லின் மேல்
எழுதப்படும் எழுத்துக்களாக இங்கே பதிவு செய்யப்படுகின்றது.
-கிருஷ்ணன்பாலா
-------------------------------------------------------------------------------------
-கிருஷ்ணன்பாலா
-------------------------------------------------------------------------------------
திருக்குறளின் தனிச் சிறப்பு:
அகரம்.சிகரம்.விரகம்.
அகரத்தில் தொடங்கி சிகரத்தில் விரிந்து விரகத்தில் முடியும் அறம் பொருள் இன்பம் ஆகிய
மூன்றையும் முறையோடு சொல்லும் மறைநூல் இது.
தமிழின் முதல் எழுத்து ‘அ’ அதாவது, அகரம்;
அறத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் சிகரத்தில் ஏற்றிp பொருள்படச் சொல்லிவிட்டு -
காமத்துப்பாலின் கரைகண்ட நுணுக்கமான விஷயங்களை வாத்ஸ்யாயனரும் தெரிந்து கொள்வதற்காக விரிவுரை செய்யும் உத்தி.
இறுதிக் குறள் சொல்லும் செய்தியானது,காதலின் ஒப்பில்லாத இலக்கணத்தை இணயற்ற இலக்கிய வரியாக முடிப்பதுதான்.
‘ஊடுதல் காமத்துக்கின்பம்;அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்’
தமிழின் முதல் எழுத்தான ‘அ’வில் தொடங்கி தமிழின் கடைசி எழுத்தான ‘ன’ வில் நிறைவு செய்யும் வகையில் ‘ன்’ என்று முடிவதுதான்.
இதற்கிணையான மக்கள் இலக்கியம் உலகில் எங்கும் இல்லை.

23.10.2013
இது அறிவுரை அல்ல!
சுய ஒழுக்கமும் பண்பாட்டறிவும் இன்றி, முகநூலில் பதிவுகள்
இடுவது மானுடச் சந்தையில் மலிவான
சரக்குகளை விற்பதைப்போல.
’ஆ...அவருக்கு இத்தனை லைக்குகளா?இவ்வளவு நண்பர்களா?’ என்று
ஆதங்கமும் ஆயாசமும் கொள்வது அர்த்தமற்ற அற்பப் புத்தி.
’ஆ...அவருக்கு இத்தனை லைக்குகளா?இவ்வளவு நண்பர்களா?’ என்று
ஆதங்கமும் ஆயாசமும் கொள்வது அர்த்தமற்ற அற்பப் புத்தி.
இந்த அற்பப் புத்தி கொண்டு கிறுக்குவோரும் முகநூல் பக்கத்தில் தோன்றும் முகவரியாளர்களை எல்லாம் வலியத் தேடிச் சென்று Friends' Request கொடுத்து விட்டு, பிறகு இப்படிக் கண்டவர்களுக்கெல்லாம் Request அனுப்பியது ‘அதிகப் பிரசங்கித்தனம்; அடுத்தவர் Privacyயில் அத்து மீறிய உங்கள் முகநூல் இயக்கம் 15 தினங்கள் முடக்கி வைக்கப் படுகிறது என்று ‘மார்க்’ இட்ட பின்னரும்கூட, பரப்பரபப்பாக முகநூல் நண்பர் வட்டத்திலேயே வட்டம் அடிப்பதும் இங்குள்ள பலரின் வாடிக்கை.
வெளியில் உள்ளவர்கள் உங்கள் பதிவுகளைப் படிப்பதில் ஆர்வம் கொள்வது தவறில்லை. ஆனால் அப்படி எழுதும் விஷயங்களின் கருத்துக்கள் உங்கள் வாழ்வின் செயல்பாடுகளில் பொருந்தி இருக்கிறதா? என்ற மனச்சான்றின் சான்றிதழ் பெற்று எழுதாமல் கண்டதைக் கிறுக்குவது தவறு.
அது உங்களைப் பெருமைப் படுத்திக் கொள்வதற்குப்
பதில், உங்கள் எதிர்காலச் சந்ததியினருக்கு மாபெரும் தவற்றினை நீங்கள் செய்கின்றீர்கள் என்பதை
எண்ணிப் பாருங்கள்.
இப்படி எண்ணிப்பார்த்து எழுதுவோர் இங்கே மிக மிகக்
குறைவு. இரட்டுற மொழிதலும் சினிமாப்
பாட்டுக்களில் பாண்டித்யம் பெற்று, அதே பித்தில்
கலந்து கொண்டு கருத்தூட்டம் பகிர்ந்து
கொண்டு பிறகு உள் பெட்டியில்
சென்று உசாவுவதும் விசாவதுமாக கரிசனப்பட்டு தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக்
கொள்கின்றவர்கள் மலிந்து விட்டனர் இங்கு.
தங்கள் குழந்தைகளிடம்,
மனைவிகளிடம் காட்டாத அக்கறையையும் நட்பையும்
இங்கே
நட்பு’ என்ற கோணத்தில் பிறன்
மனையாட்டிகளிடமும் மகளையொத்த
பெண்களிடமும் காட்டும் ஆடவர்கள் மிகுந்துள்ளனர்.
அதேபோல் கணவனிடம் தேட முடியாத அன்பையும்
நட்பையும் அக்கறையையும் முகநூலில் புகுந்து புரட்சிகரமான சிந்தனைகளை வெளியிட்டு ‘பொது மகளிர்’ போல்
வெட்கமின்றி எழுதி Likeகளைக் குவித்துப் பேரின்பப்படுகிற
பெண்களும் அதிகம்.
இம்மாதிரியான நிலை நம் தமிழர்களிடையே பரவி வருவது எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வை நாசப்படுத்துமே அன்றி நன்மை செய்யாது.
நீங்கள் எழுதுகின்ற கருத்துக்களை உங்கள் கணவர் அல்லது
மனைவியர்,குழந்தைகள் மற்றும் சகோதர சகோதரிகள்
அறிய எழுதுங்கள்;அவர்களையும் படிக்கச் சொல்லுங்கள்.
நாட்டு நடப்புக்களில்,அரசியல் கேடுகளில்,சினிமாக் கலாசாரத்தில், பாவச் சிந்தனைகள் பரவுவதில், காமம்,கொலை,கற்பழிப்பு,மனித நேயமற்ற வன்முறைச் செயல்களில் உங்கள் கோபத்தையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தி எழுதுங்கள்.
அப்போதுதான் அதைப் படிக்கின்ற உங்கள் குடும்பத்தினர் குற்றமற்ற ,பழுதில்லாத மன உணர்வுகளை வளர்த்துக் கொள்ளவும் அந்த பண்பட்ட நிலைக்கு அவர்களைத் தூண்டி வளர்க்கவும் நீங்கள் காரணியாக மாறுவீர்கள். இல்லை என்றால் கூட்டத்தில் ’கோவிந்தா’ போட்டு விட்டு உங்கள் வாழ்க்கையின் வசந்த ருதுவை இழந்த துரதிர்ஷ்டசாலிகளாகத் தொலைந்து கொண்டிருப்பீர்கள்!
இது அறிவுரை அல்ல; அறவுரை.
26.10.2013
அந்தணர்
இகழேல்!
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், வசவு பாடுவது ஒரு
அறிவு ஜீவித்தனம் என்று கணக்குப் போட்டுக்
கொண்டு, அந்தணர்களைக் காய்கிற எழுத்தில் சுகம்
தேடும் சூத்திரத் தனம் இங்கு பலருக்கு
ஒரு ஃபேஷன் போல் இருக்கிறது.
அப்படி எழுதுவோருக்கு -
அப்படி எழுதுவோருக்கு -
அந்தணர்களை முற்றிலும் புறக்கணித்து வாழும் அறிவைத்தேடுங்கள்.
அவர்களின் துணை இன்றி பூஜை புனஸ்காரங்கள்,கோவில் வழிபாடுகள், திருமணச் சடங்குகள் இவற்றை நீங்கள் முற்றிலும் துறந்து வீட்டீர்களா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.
அவர்களைப்போலவே பிறர் வாழ்வில் அழுக்காறு கொள்ளாது,இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் எளிமையைக் கற்று கொண்டீர்களா?
நீங்கள் போற்றும் புகழும் இலக்கியவாதிகளும் கவியரசுகளும் இதே மாதிரியான கொள்கைகளை ( அதாவது அந்தணர்களைக் கேலி செய்து வாழும் குணத்தைக்) கொண்டிருந்தார்களா என்பதையும் முன் நின்று உரையுங்கள்.
அதைவிட இந்த மானுடம் பழி சொல்ல ஒண்ணா பாவச் செயல்களில்
ஒருபோதும் உங்களுக்கு உறவில்லை என்பதைச் சத்தியம் செய்யுங்கள்.
அந்தணர்களைச் சகட்டு மேனிக்கு விமர்சித்து எழுதினால் நாலுபேர் Likeபோட்டு,நாலுபேர் தத்து பித்தென்று Comment போட இன்றைய
அந்தணர்களைச் சகட்டு மேனிக்கு விமர்சித்து எழுதினால் நாலுபேர் Likeபோட்டு,நாலுபேர் தத்து பித்தென்று Comment போட இன்றைய
பொழுது போய் விடும் என்ற
புல்லறிவாண்மையில் புளகாங்கிதம் கொள்ளாதீர்கள்..
’ கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.”
என்று வள்ளுவன் வேறு எச்சரித்திருக்கின்றான்.
நான் வள்ளுவத்தை வேதம் என்று மதிக்கின்றவன்.
26.10.2013
மீடியா முதலாளிகளின் ஞானம்!
வெகு சாதாரண உரைநடையைக் கவிதை
என்று கூறிக் கொள்ளும் தற்குறித்தனம்
சாதாரணக் கவிதை ஆர்வலர்களுக்கு இருந்தால்
கூட மன்னித்து விடலாம். ஆனால் மீடியாக்களில் பணியாற்றும்
மேதாவிகளுக்கு இருந்தால்.......?
கவிதை இலக்கியத்துக்குச் சாவு மணி அடிக்கவே மீடியா முதலாளிகள் இம்மாதிரியான வெட்டியான்களைக் கூலி கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?
26.10.2013
கவிதை இலக்கியத்துக்குச் சாவு மணி அடிக்கவே மீடியா முதலாளிகள் இம்மாதிரியான வெட்டியான்களைக் கூலி கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?
26.10.2013
இந்தியாவின் நீரோ
நேற்று
(27.10.2013) பாட்னாவில் நரேந்திர மோதி அவர்களின் கூட்டத்தில்
குண்டுகள் வெடித்து 60க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிர்ழ்ந்திருக்கிறார்கள்;
குண்டுகள் வெடித்து 60க்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிர்ழ்ந்திருக்கிறார்கள்;
80 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
தேசத்தைக் குலுங்க வைக்கும் நாசக்காரர்களின் சதிச்செயல் மிருகங்களின் வெறிச்செயலை விடவும் கீழானது.
இந்த தேசத்தின் உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டே ரோம்
தேசத்தைக் குலுங்க வைக்கும் நாசக்காரர்களின் சதிச்செயல் மிருகங்களின் வெறிச்செயலை விடவும் கீழானது.
இந்த தேசத்தின் உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டே ரோம்
தீப்பற்றி எரிந்தபோது பிடில் வாசித்துக் கொண்டிருந்த
நீரோ மன்னனின் வாரிசுபோல்,இந்த குண்டு வெடிப்புக்குப்
பின் சில நிமிடங்களில் மும்பையில்
நடந்த ஒரு இசைவிழாவில் குஷியாகக்
கலந்து கொண்டு மூன்று மணி
நேரம் செலவிட்டிருப்பது நாடு தழுவிய அதிருப்தியைத்
தோற்றுவித்திருக்கிறது.
பிரதமரோகூட இது பற்றி உடனடியாக உள்துறை அமைச்சரை அழைத்து உரிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தவில்லை.
பிஹாரிகளுக்கு எதிராக மராத்தியர்கள் நடத்திய வன்முறையை மறைமுகமாக அங்கீகரித்தது போல் சுஷில்குமார் நடந்து கொண்டிருப்பது உள்துறை அமைச்சரின் பதவியைக் கேலிக் கூத்தாக்கி இருக்கின்ற செயல் அல்லவோ?
பதவி எடுத்தபோது அரசியல்சாசனத்தின் மீது கூறிய உறுதி மொழியை நழுவியவர் மீது வழக்குத் தொடர்ந்தால் என்ன?
28.10.2013

ஒரு மனதாக....
நரேந்திர மோதி அவர்களைப் பார்க்கவும் அவரது பேச்சைக் கேட்கவும் நாடெங்கும் பெருங் கூட்டம் கூடுகிறது.
காரணம், காங்கிரஸ் மீதும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற விரும்பும் கட்சிகளின் மீதும் இந்திய மக்கள் கொண்டிருக்கும் ஆறாத சினம்.
இனி, மோதியின் கூட்டங்களுக்குக் கூடுவோரின் எண்ணிக்கை சிதற வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவைச் சிதைக்கத் துடிக்கும் மிருகக் கூட்டத்தின் சதியே பாட்னா மக்கள் கூட்டத்தில் குண்டுகள் வெடிப்பு.
நேர்மையிலும் சத்தியத்திலும் மனித நேயத்திலும் மக்களைச் சந்திக்க முடியாதவர்களின் வன்முறைக்கு ஜன நாயகம் பலியாகி விடாது.
இந்தியா நிச்சயம் மாற்றத்தை விரும்புகிறது. பரம்பரைச் சுரண்டல்
ஆட்சி மண்ணோடு மண்ணாய்ப் போக
வேண்டும்.
மோதியை நல்லாட்சியும் வல்லாட்சியும் தருவார் என்று இந்திய மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இதில் மதச் சாயம்,அரசியல் சாயம் எல்லாம் பூசாமல் அனைவரும் ஒருமனதோடு இந்தியாவில் மாற்றம் காண முயல வேண்டும்.

இஸ்லாம் மதம் சார்ந்தவர்களை எல்லாம் இந்துக்களின் எதிரிகள் என்று பார்க்கின்ற அறியாமையும் மத வெறியும் உண்மையான இந்துக்களிடம் இருக்க முடியாது; அப்படி இருந்தால் அவர்களும் IM களைச் சேர்ந்தவர்கள்தான்.
அதாவது, இந்தியன் முஜாகீத்துக்களே.
28.10.2013
பெருமைக்குரிய பெண்மணிகள்!
பெண்ணீயப் பித்தலாட்டக்காரர்களின் பிரச்சாரத்தையும் பிழைகளையே கற்பிக்கும் அபச்சாரத்தையும் கண்டித்து, நான் எழுதும் பதிவுகளை இங்கே பெண்மணிகள் பலரும் படிக்கின்றார்கள். அப்படிப் படிப்பவர்களில் சிலர் வெகு துணிச்சலோடு எனது கருத்துக்களைப் பாராட்டவும் செய்கின்றார்கள். ’அத்தகு பெண்மணிகளே பெண்ணினத்தின் பெருமைக்குரிய பிரதிநிதிகள்’ என்று சொல்வேன்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகம் வியக்க வாழ்ந்திருந்த உன்னதக் குடிகள் தமிழரினம். இதுவரை இந்தச் சமுதாயத்தின் அங்கமெனத் திகழ்ந்து வந்த பெண் இனத்துக்கு ’ஆணாதிக்கத்தால் இன்று பெரும் கேடுகள் வந்து விட்டது போலவும் பெண்ணடிமை இங்கே அதிகம் பேணப்படுவதாகவும் அதனால் பெண்கள் ஆண் ஆதிக்கத்துக் கெதிராக வீறு கொண்டெழ வேண்டும்’என்றும் எழுதியும் பேசியும் இந்தப் பெண்ணீயவாதிகள் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
இது மேய்கிற மாட்டை நக்கும் மாடு கெடுத்த கதையாகத்தான் போகுமே தவிர,பெண்ணினத்தைப் பெருமைபடுத்தும் சித்தாந்தம் ஆகாது.
தங்கள் வாழ்வில் ஆணுக்குரிய அன்பையும் நேசத்தையும் அந்தஸ்தயும் அளிக்கத் தெரியாத அறிவு கெட்ட பித்துக்குளிகளின் பித்தம் பிடித்த சித்தாந்தம்தான் பெண்ணீயம்.
எந்த ஆணோடும் சமமாகப் பழகலாம்; சேரலாம்;சலித்து விட்டால் தூக்கி எறிந்து விட்டு அடுத்த நட்புக்கு வலை வீசலாம்; ஒரே அறையில் பல ஆண்களோடும் பல பெண்களோடும் அரட்டை அடித்தும் மெத்தை விரித்தும் ’ஆணுக்கு நகராக வாழ்வோம் வாருங்கள்’ என்று வலி விரிப்பவர்கள்தாம் ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையில் போதை கொண்ட பேதைகள். அவ்ர்கள்தான் இந்தப் போலிப் பெண்ணீயச் சித்தாந்தத்தின் பிரதிநிதிகள்.
பெண்கள் தங்கள் எல்லைகளை மீறாதவகையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஓங்கி நின்ற சமுதாயத்தில் மேலைநாட்டுச் சிந்தனைகள் புகுந்தபின்னர்தான் நாகரீகம் என்ற பித்தம் நம் பெண்களுக்குள் புகுந்து, அதன்வழியே இந்த அநாகரீகச் சித்தாந்தம் பரவத் தொடங்கி இருக்கிறது.
பெண்ணியம் பேசும் எவரும் நல்ல குடும்பத்தை நடத்துவதில்லை; நல்ல குடும்பத்தை நடத்தும் எவரும் இந்தப் பித்தலாட்டப் பிரச்சாரங்களை அங்கீகரிப்பதில்லை.
நான் இங்கு எழுதுவது நமது பெண்கள் நல்ல குடும்பத்தை நடத்தும் நாயகிகளாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

யார் இவர்கள்?
பித்தம் தலைக்கேறிப் பேசுவோரை உற்று நோக்குங்கள்:
1.அவர்கள் தங்களது பழக்க வழக்கங்களின்பால்
கொண்டிருக்கும் அடிமைத் தனத்தினால் சமூக
அந்தஸ்தை இழந்தவர்கள்.
2. தமிழின் உயர் இலக்கிய அறிவு
கடுகளவேனும் இல்லாதாவர்கள்.
3. சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும் அதன் மூல காரணம்
இன்னதென அறியும் மனசாட்சி அற்றவர்கள்.
4.பிறருடைய மகிழ்ச்சியில் அழுக்காறு கொண்டவர்கள். அதாவது பிறர் மகிழ்ச்சியாக
வாழ்வது கண்டு பொறுக்காதவர்கள்.
5.கட்டுக்கோப்பான குடும்ப வாழ்க்கையில் கறைபடிந்து போய், அந்தக் கறையை நீக்கிக் கொள்வதற்குப் பதிலாக அடுத்தவர்மீது பழி போடும் பாசாங்குக்காரர்களை ஊக்குவிப்பவர்கள்.
6.கருத்துச் சுதந்திரம்,எழுத்துச் சுதந்திரம்,மதச் சுதந்திரம்,அரசியல் சுதந்திரம் என்ற அடிப்படைச் சுதந்திரம் இங்கு இருப்பதாலேயே அவர்கள் தங்கள் மனச்சாட்சிக்கு எதிராகவே பேசவும் எழுதவும் அவற்றைத் தவறாகப் பயன் படுத்தவும் வெட்கப் படாதவர்கள்.
7.குப்பைகளைக் கூட்டி எடுத்து, குப்பைத்தொட்டியில் போடுகின்ற பண்புக்கு மாறாக குப்பைகளைத் தெருவில் எறிந்து இன்புறும் இழிகுண இதயம்கொண்டோர்.
8. இந்த எட்டுவகையான பிரிவுகளுக்கு மட்டும் அன்றி இன்னும் எட்டாத பிரிவுகளுக்கும் உரிமை உடையோரே பெண்ணியவாதிகள் என்றும் சமூகப்புரட்சியாளர்கள் என்றும் அடையாளம் காணப்படுகிறார்கள்.
விஷயம் தெரிந்த நண்பர்கள் அவர்களைப் பற்றி மேலும் அணி இலக்கணம் படைக்கலாம்.

25.10.2013
பத்திரிகைப் புரட்டர்கள்
சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல்,தனக்குக் கிடைத்திருக்கிற பத்திரிகையாளர் என்ற அந்தஸ்தைப் பயன் படுத்தி சமூகத்தின் அடிப்படை கட்டமைப்புகளைத் தகர்க்கின்ற கருத்துக்களைத் தன் இஷ்டம் போல் எழுதுவதும்;அதை இந்த சமூகத்தின் பிம்பங்களான ஆயிரக் கணக்கான வாசகர்கள் படித்து அமைதியை இழப்பதும்;அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க சம்பந்தப்பட்ட பத்திரிகையில் இடம் இல்லாமல் இருப்பதும் அதனால் உண்மை ஊமையாகி; பொய்யும் புரட்டும் ஊர்வலம் வருவதுமான காலம் மலையேறி விட்டது’ என்பதைப் புன்மைச் சமூகவாதிகளான குறிப்பிட்ட சில பத்திரிகைப் பிசாசுகள் உணரவேண்டும்.
இப்போது சமூக வலைத்தளங்கள் தோன்றி,இங்கு ஒவ்வொரு வாசகனும் எதிர்ப் பிரச்சாரகனாகவும் பொய்ம்மையை எதிர்க்கின்ற சமூக அக்கறையாளனாகவும் மாறி இருக்கின்றான்.
உண்மையில் செய்தி எது?; செய்திக் கட்டுரை எது? சுய சிந்தனை எது? சுதந்திரமான விமர்சனம் எது? என்பதையெல்லாம் பல ஆண்டுகள் பத்திரிகையாளராக இருந்து கொண்டு இன்னமும் கற்றுக் கொள்ளாமல், கத்துக்குட்டித்தனமாகவே எழுதி பிதற்றிவரும் சிலருக்கு இந்த முகநூல் பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.
‘நான் பத்திரிகையாளன்’ ’நான் எழுத்தாளன்’;’நான் சமூகநலன் சார்ந்த படைப்பாளி’ என்ற கர்வமெல்லாம் இனி நேர்மையான பத்திரிகைக்காரனுக்கும் நியாயமான சிந்தனையுடையவனுக்கும்தான் பொருந்தும்.
வெறும் சுடிதார்களும் வெற்றுப் பிரசங்கிகளும் அவர்களுக்கு வால்பிடிக்கும் வாலிபங்களும் பத்திரிகையாளன் ட்ராஃபிக் போலிசிடமிருந்து தப்பித்துக் கொள்வதுபோல், தப்பிக்கலாமே தவிர, மக்களின் பார்வையிலிருந்து முடியவே முடியாது.
உங்கள் எழுத்து உங்களுடைய கூச்சமற்ற கூவலையும் குக்குடங்களைச் சொடுக்கி அவற்றின் துணை கொண்டு செய்யும் ஏவலையும்தான் வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கின்றன.
1.10.2013
(தொடரும்)
No comments:
Post a Comment