Friday, November 1, 2013

அரசியல் சதுரங்கம் :4 (கவிழும் கப்பல் காங்கிRUSH!)

ந்தியாவில் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டும் வேகம் அநேகமாக எல்லா இந்தியரிடத்திலும் பரவி இருக்கிறது.

இந்த எண்ணத்துக்கு எண்ணெய் ஊற்றி,திரியைத் தீண்டி மேலும் பளிச்சென்று எரிய வைக்கும் உபாயமாக நர்மதை நதி தீரத்தில் உலகிலேயே மிக உயர்ந்த சர்தார் வல்லபாய் படேலின் முழு உருவச் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி, சர்தார் வல்லபாய் பட்டேலின் தேசப்பற்றையும் துணிவையும் அவருக்கு எதிராக நேரு செய்த சதிகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார் நரேந்திர மோதி.

அவர் பேசுவதை மேடையில் இருந்தவாறே ரசித்த அத்வானி அவர்களும் கூட வல்லப்பாய் பட்டேலின் தீரமிக்க  செயலினால் இந்தியா தீவுகளற்ற பெரிய தேசமாக வடிவெடுத்தத்தை ஆதாரபூர்வமாக எடுத்துப் பேசி இருக்கிறார்.

உண்மையில் பண்டித நேரு, ஐதராபாத் நிஜாமின் இஷ்டத்துக்கு முடிவெடுக்க விடுமாறு வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தவாறே தனது உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேலிடம் தொலை பேசியில் கேட்டுக் கொண்டும் கூட நேருவின் உத்தரவை/ஆலோசனையைப் புறக்கணித்து ஒரே விசையில் நிஜாமைப் பணிய வைத்த வல்லபாய் பட்டேலின் விவேகம் இப்போது நாட்டுக்கு நன்கு வெளிச்சமாகி இருக்கிறது.

காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த நேருவுக்கு இருந்த பூர்வீக உறவுகளால் முஸ்லீம் அதிகார வர்க்கத்தின் மீது எப்போதும் கொண்டிருந்த தனி அக்கறை சர்தார் வல்லபாய் பட்டேல் முன்னால் சருகாகிப் போனது.

உண்மையில் இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருக்க வேண்டியவர் சர்தார் பட்டேல்தான். ஆனால் அப்போதைய பிரிட்டீஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான மவுண்ட் பேட்டன் பிரபுவும் அவரது மனைவியும் நேருவுடன் கொண்டிருந்த அதீத நட்பின் காரணமாக நேருதான் பிரதமர் என்பது பிரிட்டீஷ் அரசால் தீர்மானிக்கப்பட்டு விட்டது.

அதாவது நேருவே பிரதமராக இருக்க வேண்டும் என்பது ஒரு சர்வதேச நிர்ப்பந்தமாக்கப்பட்ட அரசியல் சதி.

நேருவின் வீரமற்ற விவேகத்தினால்தான் இந்தியா,தனது மிகப் பெரும் நிலப் பரப்பை சீனாவிடம் இழந்தது; சீனப் படை எடுப்புக்குக் காரணமே நேருவின் மெத்தனமும்  தப்புக் கணக்கும்தான்.நேருவின் மிகப் பெரிய ராஜதந்திரத் தோல்விகளில் இது ஒன்று.

ஆனால், சீனாவின் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டுவிட்டு, மிகப் பலவீனமான நிலையில் ’இந்தோ-சீனா பாய்,பாய்’ என்ற கோஷத்தை மிகப் பெரும் ராஜ தந்திரமாக நாடு முழுவதும் பரப்பிக் குஷியாக இருந்தவர் பண்டித நேரு.
உண்மையிலேயே பல்வேறு விஷயங்களில் மிகப் பலவீனமான பிரதமராக இருந்த பண்டித நேரு, ஒரு அறிவு ஜீவியே தவிர இந்த தேசத்தின் பெருமையை  நிலை நாட்டியவர் அல்ல’ என்பது என் போன்ற நடு நிலைச் சிந்தனையாளர்களுக்கு இப்போதுதான் புரிகிறது. அப்போது அறிந்திருக்க அனுபவமும் இல்லை;அறிவும் இல்லை. வயதும் இல்லை.பிள்ளைப் பிராயத்தில் இருந்த காரணத்தால்.

ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்குப் பிறகு, நேருவின் பரம்பரை ஆட்சி முடிவுக்கு வர நரேந்திர மோதி காரணமாகி இருக்கிறார்.

வல்லபாய் பட்டேலின் அரசியல் துணிவும் தேசப்பற்றும்  ’இந்தியாவின் சிற்பி அவர்தான் ‘என்ற உண்மையும் நாட்டு மக்களுக்கு நறுக் கென்று  மோதி முன் வைக்கப்போவதுகூட,வரும் நாடாளுமன்றத் தேர்தலில்  மிகப் பெரிய எதிர்ப்பு அலையை காங்கிரஸுக்குத் தரும்’ என்பது கண்கூடு.

இனி எதிர்காலத்தில் தேசத்தின் நன்மைக்கென்றே முடிவெடுத்து ‘இரும்பு மனிதராகத் திகழ்ந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் மரணம்கூட அவரை பிடிக்காதவர்களின் சதியே காரணம்’ என்ற அதிர்ச்சியூட்டும் ஆய்வுகள் வெளிவரத்தொடங்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இந்த அரசியல் சதுரங்கத்தில் மோதியின் காய்கள் அசுர வேகத்தில் நகர்கின்றன.

பி/ஜே.பிக்குப் பல மாநிலங்களில் அடித்தளங்கள் இல்லை.மோதியின் ஆதரவு அலையைப் பயன்படுத்தி, வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் அதன் கட்சி அமைப்பு இல்லை’அதனால் மோதியின் நம்பர் விளையாட்டில் அவர் உரிய மெஜாரிட்டியை ப் பெற முடியாது’ என்று காங்கிரஸார் கணக்குப் போடுகின்றனர்.

ஜெயிக்கின்ற குதிரை மீதுதான் பணம் கட்டுவது நமது தேசத்தின்  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வழக்கம்.

கவிழும் கப்பலில் இருந்து ’மட’ மட’வென்று வெளியேறித் தப்பிப்பவர்கள் அரசியலில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பர்..

இப்போது நரேந்திர மோதிதான் 'Running Horse and Winning Race"

மாநிலங்களின் உள்ள கட்சிகளில் பலவும் ‘மோதியோடு மோதினால் தங்கள் நிலை என்ன்வாகும்?’ என்பதை நன்கு தெரிந்தே வைத்துள்ளன.

எனது மூன்றாவது அரசியல் சதுரங்கக் கட்டுரையில் இதைக் கணித்து எழுதி
இருக்கின்றேன்.

அதைப் படிப்போர் இந்த உண்மையை இங்கே ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்.

தமிழகத்தில் அமையவுள்ள மோதியின் கூட்டணியானது, நான் கணித்தவாறே அமைவதற்கான அரசியல் சதுரங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.இன்று .

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டால், இப்போதைய மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு ஜி.கே. வாசன், இந்தக் கவிழும் கப்பலைக் கை கழுவி  விட்டு வெளியேறத்தான் வேண்டும்.

அப்படிக் கை கழுவி விட்டால் இன்னொரு துருப்பிடித்த படகுகளில் ஏறிப் பயணிக்கும் ஏமாளியல்ல அவர்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
1.11.2013.


Post a Comment