Sunday, March 29, 2015

இந்த நா’றி’மணிகள்...

அறிவார்ந்த நண்பர்களே,

முகநூலில் தங்கள் அறிவார்ந்த விஷயங்களைக் காட்டிக் கொள்ள எந்த அளவுக்கு சுதந்திரம் உண்டோ?, அதுபோலவே, ஒருவருடைய ஒழுக்கங்கெட்ட சிந்தனைகளைப் புளகாங்கிதப்படுத்தி, அம்பலமாக்கிக் கொள்ள,சுய தம்பட்டம் அடித்துக் கொள்ள  அதைவிட அதிக சுதந்திரம் இருக்கிறது.

இதில் சில பெண்களின் பதிவுகளைச் சொல்லத்தான் வேண்டி இருக்கிறது:

சில பெண்கள் இங்கு-முகநூலில்  ஆடுகிற ஆட்டமும் போடுகிற கூத்தும் சகிக்க முடியவில்லை:எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

இவர்களின்  பதிவுகளுக்கு உடனுக்குடன் உற்சாகம் ஏற்றிக் கொண்டிருக்கிற  (கைப்) பானங்களானவெத்திப்பயல்களை மேலும் உற்சாகப்படுத்தி இந்தப்பெண்கள் எழுதும் எழுத்துக்களும் அந்த எழுத்துக்களின் மூலம் இவர்களைப் பற்றி எழும் உருவகமும் இந்த வலைத்தளத்தில் வக்கிரப் புத்தியாளர்களையே வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது.

பொற்பும் கற்பும் உள்ள மாதர்கள் பொதுச் சந்தைக்கு வர மாட்டார்கள்; அப்படி வந்தால் நாம் எதிர்பார்க்கின்ற பண்பாட்டை,கட்டுப்பாடுகளைத்தான்ஆணாதிக்கத்தின் கொடிய விலங்குகள்எனச் சாடி, தங்களுக்கென்று  கூப்பாடு போடுகின்ற கூட்டத்தைத் துணைக்கு அழைத்துக் குத்தாட்டம் போடுவதில் இந்த நாறிமணிகள் மேலும் குஷிப்படுபவர்களாகி விடுகிறார்கள்.

இப்பெண்கள் இப்படியெல்லாம் எழுதிக் குத்தாட்டம் போடுவது இவர்களுடைய குடும்பத்தாருக்குத் தெரியுமா? அல்லது  அவர்கள்தான் யார்எப்படிப் பட்டவள் ? என்பது தங்கள் குடும்பத்தாருக்கு இதன் மூலமாவது தெரியட்டும்என்பதற்காக எழுதுகிறார்களா?

இவர்களுடையஅஜண்டா என்ன? என்பது  ஆண்டவனுக்கும் கூடத் தெரியாதுஎன்னும்போது இவர்களின் கணவன்மார்களுக்கோ, குடும்ப உறவுகளுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பே இல்லைஎன்றுதான் நம்ப வேண்டியிருக்கின்றது..

இவர்களின் நடை, உடை, நக்கல் எழுத்துக்கள் அதைத்தான் இங்கே நாட்டிக் கொண்டிருக்கின்றன.

‘நச்’சென்று நாணிக் கொள்ளும் அளவுக்கு இவர்களை இடித்துச் சொல்லி நெறிப்படுத்த ஏதேனும் வழி உண்டா?

குறைந்த பட்சம் அடுத்த இளம்தலைமுறைகளாவது ஒழுக்கம் மிக்க பெண்களாய் இருக்க வேண்டுமே?

ஆராய்ச்சி செய்துதான் பார்க்க வேண்டும்.

-கிருஷ்ணன்பாலா

29.3.2015

நல்ல மனதின் நட்புத் தேடி,

றிவார்ந்த நண்பர்களே,
 
சரியோ,தவறோ? நாட்டுச் சிந்தனை எனக்குள் புகுந்து விட்டது

சினிமாப் பாட்டு, சினிமாச் செய்திகள், காதல், கருமாந்திரம் போன்ற விஷயங்களில் ஏனோ ஒவ்வாமை என்னுள் புகுந்து விட்டது.

அதனால், அதைப்பற்றிச் சிலாகித்துக் கொண்டு தங்கள் வித்வத்தைக் காட்டிக் கொண்டு கிறுக்குவோரையும் எப்பொழுதும் அதற்கென்று வெட்டிக் கூட்டத்தை வளர்த்துக் கொள்வதை ஒரு பொழுது போக்காவே கொண்டிருப்போரைய்ம் இருப்போரையும் நான் அங்கீகரிக்க முடியாதிருப்பது  எனது அறிவுக் குறைபாடா? அல்லது அறிவு சார்ந்த விஷயமா? என்பதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்வதில்லை

அந்த  வேலையைப்  புத்திக் கூர்மையுள்ள வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன்.

ஆனால் இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாவது

நியாயம் தேடும் நண்பர்களே,நல்லோரே,  

நாட்டுப் பற்றுக் குறித்தான சிந்தனைகளுக்கும், அறிவுப் பூர்வமான விஷயங்களுக்கும் சினிமாச் சிந்தனை,காதல் சிந்தனை என்பதெல்லாம் நேர் முரணானது

சினிமா பற்றியும் சினிமாப் பாடல்கள் பற்றியும் குறிப்பாக காதல் சங்கதிகளின் பலவித ரசனைகளை நீங்கள் எழுதிக் கொண்டே தேசம்,பண்பாடு, மக்கள் இலக்கியம்,ஒழுக்கம், குடும்ப மரியாதை இவை பற்றியும்  விரும்புவீர்களானால் அது விபரீதமான பாதைகளுக்கே உங்களை வழி நடத்தும்.

உங்கள் உள்ளக் கிடக்கையை  சாக்கடைச் சங்கதிகளால் நிரப்பிக் கொண்டு சமுதாயத்துக்கு நறுமனம் தெளிக்கும் வேலையைச் செய்கின்றேன்என்னும் உங்கள் வாதம்  நீங்கள்  யாரைக் கோமாளியாக்க விரும்புகிறீர்கள் என்பதை விளக்கி விடும்

கட்டிய மனைவியும் கழுத்துக்கு மேலே வளர்ந்த பிள்ளைகளும் அருகில் இருக்க  இன்னும் இருபது வயசுக்கு மேல் வளராதிருக்கும் உங்கள் புத்தியைச் சற்றேனும்  தீட்டிக் கொள்ளப் பாருங்கள்

வெட்டிப்பயல்களின் கூட்டத்தைச் சேர்ப்பதற்காகவும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சொறிந்து கொண்டு சுய புகழில் தேடிக் கொள்கிற அவல் நிலையை வளர்க்கவும்  எழுதாதிருங்கள்

ஒழுக்கம்,பண்பாடு,உயர் குணங்கள். அறச் சிந்தனை இவற்றில் நாட்டம் கொண்டோர் மட்டுமே நண்பர்களாக இருப்பதை குறிக்கோளாகக் கொண்டு,புதியதோர் சமுதாயம் காண விழையுங்கள்

முக்கியமாக மனச் சாட்சியை அடகு வைத்து விட்டு,முகநூல் முதலான வலைத் தளங்களில் முறுக்கிக் கொண்டு  அசுத்தம் செய்யாதிருங்கள்

ஒழுக்கம் மிக்க சமுதாயத்தின் ஒப்பரிய மாண்பை ஓங்கி நின்று உரைக்கும் எழுத்துக்களில் உலாவரும்  உள்ளத்தை எப்போதும் தீட்டிக் கொண்டிருங்கள்.

புத்தியைத் தீட்டுங்கள்-மனதின்
சுத்தியைக் காட்டுங்கள்

நல்ல மனதின் நட்புத் தேடி,

நான் உங்களுக்கு எழுதும் நல்லுரை இதுதான்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
29.3.2015

Friday, March 27, 2015

மண்டைக் கிறுக்கை மாற்றிக் கொள்க!


முதிர்ச்சியற்ற ஆரவாரம்; கண்மூடித்தனமான புகழுரைகள்; முடிவு வரும் முன்னரே தீர்ப்புரைகள்; பெரும்பான்மை முட்டாள்களின் ஆதரவு என்பது இன்றைய அரசியலில் மட்டும் இல்லை;கிரிக்கெட் விளையாட்டிலும் மலிந்து விட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின்மீது இருந்த அதீத நம்பிக்கை, இன்று வேரோடு அடி சரிந்து போய்விட்டது நமது கிரிக்கெட் இந்திய தேசபக்தர்களுக்கு.
கிரிக்கெட் ஒரு வீர விளையாட்டும் அல்ல; இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் விளையாட்டும் அல்ல.அது ஒரு Mind Game. அதாவது மூளைத் திறன் சார்ந்த சூதாட்ட விளையாட்டு.

எதன் மீது அதிக ஆர்வமும் எதிர்பார்ப்பும் கொண்டு பெரும்பாலோர் ஆரவாரம் செய்கின்றார்களோ அதன்மீது தான் அதிகப் பந்தயம் வைக்கப்படும் என்பது சூதாட்டத்தின் சூத்திரதாரிகளுக்குத் தெரியாததல்ல.

பெண்ணாசையிலும் பணத்தாசையிலும் கிறுக்குப்பிடித்தவன் வீரனே அல்லன்; இந்திய கிரிகெட் அணியில் இருப்பவர்கள் பெண்ணாசையையும் பணத்தாசையையும் விட்டு,இந்த தேசத்தின் கவுரவம் காக்க விளையாடுகின்றவர்கள் அல்லவே!.

நான் இரண்டு நாளைக்கு முன்பு எழுதின இந்த விஷயத்தை இப்பொழுதும் 29 ஆம் தேதி மாலையிலும் படித்தாவது கிரிக்கெட் மண்டைக் கிறுக்கை ஒழித்துக் கொள்ளப் பார்ப்பது புத்திசாலித்தனம்.

-கிருஷ்ணன்பாலா
26.3.2015

தறுதலைகளை அறுப்பீர்!

தாலியை அறுக்கச் சொல்லும் தறுதலைகளை
அறுப்பீர்!
----------------------------------------------------------------------

தமிழரென்று தலைநி மிர்ந்து வாழுகின்ற கூட்டமே!
தமிழனுக்குப் பெருமையான தகுதி என்ன தெரியுமா?
’தமிழர்களின் இல்லறத்தின் சாட்சியான தாலிதான்; தலைமுறைகள்தோறுமிங்கு தலைமைச் சின்னம்’ என்பது!

கற்புடைய மாதருக்கும் கருத்துடைய ஆண்களுக்கும்
கட்டுப்பாடு கூட்டி, இந்த உலகை வியக்கச் செய்ததும்
பொற்புடைய வாழ்வில் நமது பரம்பரையைக் காப்பதும்
’பொன் இழைத்த தாலி’இந்த ’மங்கலநாண்’ அல்லவோ?

தாலிதானே பெண்களுக்கு வேலி என்று சொல்கிறோம்?
தாலியில்லாப் பெண்களைத்தான் ’மூளி’என்றும் காண்கிறோம்;
தாலியதன் பெருமைகளைத் தாங்கவொண்ணாப் பயல்களின்
தகுதியிங்கு என்ன வென்று தரம் உரைக்க வேண்டுமோ?

தாலிகளை அறுத்து விட்டு மூளியான கழுத்தொடு
தலை நிமிர்ந்து நடப்பதுதான் தமிழச்சியின் பெருமையாம்;
வேலிதாண்டி மேய்ந்த ஆட்டு முண்டச்சிகள் பிள்ளைகள்
வேறு என்ன பேசுவார்? வெட்கம் கெட்ட நாய்களாய்?

அப்பன்-அம்மை வாழ்ந்த வாழ்வு அற்புதமாய் இருக்கத்தான்;
அகிலமெல்லாம் தமிழர்களின் தனிச் சிறப்பை மதிக்குது;
தப்பில்லாத தரம் மிகுந்த கற்பு வாழ்வின் அறநெறி
கட்டிக் கொண்ட தாலிக்குத்தான் ஒட்டியுள்ள அற்புதம்.

அதையறுத்து வீசி விட்டு ஆட்டம் போடும் வாழ்க்கையை
அற்பரெல்லாம் ஆதரித்துக் கூட்டம் போட்டுத் திரிவதோ?
கொதித்தெழுந்து தமிழரெல்லாம் காறி உமிழத் திரளுங்கள்;
கூறுகெட்ட வேசி மக்கள் வியர்த்து ஓட, விரட்டுங்கள்

கேட்பதற்கு ஆள் இல்லாத கேடு கெட்ட பயலெலாம்
கேனை என்று நம்மை எண்ணித் தலைநிமிர்ந்து பேசவும்;
ஆட்சி செய்யும் அரசு அதை வேடிக்கையே பார்க்கவும்
அமைதியாக விட்டுவிட்டால் அழிந்து போகும் தமிழினம்!

தட்டிக் கேட்கும் துணிவைத்  தூரவீசி விட்டு நாமெலாம்
தலை குனிந்து நின்றுவிட்டால் தலைமுறைகள் வீழுமே!
எட்டி உதைத்து எப்பொழுதும்  வாய்  திறக்க வழியின்றி
இப்பதர்கள் அஞ்சுமாறு எழுச்சி கொள்க, தமிழரே!

சாட்டைபோலத் தமிழ் எடுத்து சாடுகின்ற திறனுளோர்’
சண்டாளர் மாய்வதற்கே ஒன்றுபோலச் சேருவீர்!
தீட்டிடுவீர் எழுத்து என்னும் கூர் மிகுந்த ஆயுதம்;
திரட்டி அதைக் குவித்திடுவீர்; பாதகர்கள் அஞ்சவே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
27.3.2015

Wednesday, March 25, 2015

’கிரிகெட் கிறுக்கை’வளர்க்காதீர்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம். 

இந்திய கிரிகெட் அணி வெற்றிகளைக் குவிப்பதில்தான் இந்தியாவின் பெருமையும் ஆற்றலும் உலக அரங்கில் இருப்பதாகக் கருதிக் கொள்ளும் பேதைமை ’ஆறாங்கிளாஸ்’ ’ஏழாங் கிளாஸ் ‘பசங்களுக்கு இருப்பதில் பிழை இல்லை. 

ஆனால் சமூக விழிப்புணர்வுக்குரிய ஆன்மீகம், அரசியல் இலக்கியச் செய்திகளை எல்லாம் மாய்ந்து மாய்ந்து எழுதித் தள்ளும் பலருக்கும் இந்தப் பேதைமை இருப்பதுதான் நமக்குள் ஒவ்வாமையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவிடம் பாகிஸ்தான்  தொடர்ந்து தோற்று வருவதில் கிரிக்கெட்டில் பித்துக் கொண்டிருக்கும் பலரும் எதிரியை அடித்துத் துவைத்து கிழித்தெறிந்து விட்டதுபோல் புளகாங்கிதம் கொண்டு ஆரவாரம் செய்வதும்  

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடம் இந்தியா தோற்றுவிடக்கூடாது என்பதற்காக இந்திய அணிக்கு ,ஊக்கம் தருவதாக எண்ணிக்கொண்டு ஆஸ்திரேலியா அணியை மட்டம் தட்டி எழுதியும் பேசியும் மகிழ்ச்சி காண்பதும் 

’பேதைமையான  குதூகலிப்புக்கள்’ என்பதை இவர்கள் உணர்வதில்லை.

விளையாட்டை விளையாட்டாய் ரசிக்கத் தெரியாமல் ஏதோ இரு நாடுகளும் யுத்தக் களத்தில் நேருக்கு நேர் நிற்பதுபோல் கற்பித்துக் கொண்டு,அறிவற்ற ரசிகர்களாக, எதிரி  நாட்டு வீரர்களோடு கற்பனை யுத்தம் செய்யும் அற்ப மானிடராய் நம்மில் பலர் ஏன் மாறிப்போனார்கள்? 

’கிரிக்கெட்’ என்பது வீர விளையாட்டு அல்ல; அது விளையாட்டு என்ற பெயரால் சூதாட்டத்தின் சூட்சும மையமாகிப் போன சோம்பேறிகளின் சொர்க்கம் என்பதைக் கடந்த காலங்களில் நிரூபித்துக் கொண்ட விளையாட்டு.

இந்தியாதான் ,உலக அரங்கில் பணம் கொழிக்கும் பந்தய பூமிக்குள் கிரிக்கெட் பந்துகளை எறியச் செய்து இன்று பத்துப் பன்னிரெண்டு நாடுகளின் விளையாட்டு ரசிகர்களை ஈர்த்த பெருமைக்குரியதாகி இருக்கிறது. 

எப்படியாவது இந்தியாவை இந்த விளையாட்டில் தோற்கடித்து விட்டால் காஷ்மீர் .மாநிலத்தையே பாகிஸ்தானுடன் சேர்த்து விட்ட பெருமையை அந்நாட்டு ரசிகர்கள்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்குத் தந்து விடுவார்கள்; 

எப்படியும் தோற்காமல் வெற்றியே பெற்று வந்தால் நம் வீரர்கள் பாகிஸ்தானைக் காஷ்மீர் பக்கமே தலைவைத்துப் படுக்க முடியாமல் செய்து விட்டது போல் இவர்கள் கொண்டாடுவார்கள்.

இப்படித்தான் இந்தக் கிரிக்கெட் விளையாட்டில் நம் தேசபக்தி  பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. 

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் தற்பொழுது ஆஸ்திரேலியாவில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கால் இறுதியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணியை அப்படி, இப்படி என்று இல்லாமல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரணியாய்ச் சிலாகித்துப்பேசிக் கொண்டிருந்தார் என் நண்பர் ஒருவர்..

”உங்கள் தேசபக்திக்கு வாழ்த்துக்கள்; எதிர் வரும் போட்டிகளில் இந்திய அணி தோற்றுவிட்டால் எப்படி இருக்கும் உங்கள் விமர்சனம்?” என்று கேட்டேன்.

கொதித்துப் போனார் நண்பர்; ”உங்களுக்கெல்லாம் தேச பக்தியே இல்லை’ இந்தியாதான் இறுதிவரை வெற்றியை நாட்டும்; பாருங்கள் கோப்பை இந்தியாவுக்கே”  என்று என்னை ஒரு முறை முறைத்து விட்டு எக்காளமிட்டார்.

’நாளை நி்யூஸிலாந்துதான் கோப்பையை வெல்லும்’ என்று என் மனம் ஊகிக்கிறது. அப்படியே ஆனாலும்  ‘என் நாடு இந்தியா’ என்கிற செருக்கில் என் தலை தாழ்ந்து போகாது’ வேண்டுமானால் பாருங்கள்’ என்றேன். 

நண்பர்களே,

இப்பொழுதும் சொல்கிறேன்; இந்தியாவின் கவுரவமும் பெருமையும் அதன் கிரிக்கெட் வெற்றியில் இல்லவே இல்லை; கிரிக்கெட் ஒரு வீர விளையாட்டல்ல;அது ஒரு மூளைத்திறன் சார்ந்த விளையாட்டுத்தான் (Mind Game)

இதை விளையாட்டாகவே ரசிக்கப் பழகுங்கள்!

இந்தியா தோற்றுப் போனால் அதனால் அதன் மானமும் கவுரவமும் இந்திய கிரிக்கெட் வீரர்களால்  கவிழ்ந்து போனதாகவோ அவர்களால்தான் இந்தியாவின் கவுரவம் பாழாக்கட்டுவிட்டதாகவோ  சுனாமியாகச் சீறாதிருங்கள்!

புகழ்மிக்க பிரிட்டீஷ் சிந்தனையாளரான பெர்னார்ட் ஷா ஒருமுறை சொன்னதை இந்தக் கிரிக்கெட் கிறுக்கர்கள் நினைவு கொண்டு  நிமிர்ந்து கொள்வது நல்லது:

“மைதானத்தில் 11 முட்டாள்கள் ஆடுவதை  11 ஆயிரம் முட்டாள்கள் ரசிக்கின்றார்கள்”

இந்தக் கிறுக்குப்பிடித்த கிரிக்கெட் பைத்திய முட்டாள்களை திருத்துவதற்குப் பதில் உற்சாகப்படுத்தி எழுதும் முட்டாள் தனத்தை மூளை உள்ளோர் செய்ய மாட்டார்கள். 

இவண்-
கிருஷ்ணன்பாலா
24.3.2015

Tuesday, March 17, 2015

இது சாபமல்ல: எச்சரிக்கை!





இது சாபமல்ல: எச்சரிக்கை!

நம் முன்னோர்கள் வாழ்ந்த முறைமையும் அவர்கள் நமக்கெல்லாம் சொல்லிவைத்த பண்பாட்டு ஒழுக்க நெறிகளும் இன்றைய தலைமுறையினருக்கு அந்நியமாகிப் போய் விட்டன.

முன்னோர் சொன்ன நெறிகளையெல்லாம் ’பத்தாம் பசலிக் கொள்கை’  எனப் பரிகசிக்கும் அவர்களைப் பரிதாபப்பட்டுத்தான் பார்க்கின்றேன்.

உண்மையில்-
குடும்பம் சமூக மரியாதை கட்டுப்பாடு மிக்க ஒழுக்கவியல் இவற்றை நமது சந்ததிகள் முன்னே வாழ்ந்து காட்டும் வைராக்கியம் இன்றி, சந்தர்ப்பத்துக்கேற்ப  வளைந்து கொடுத்து போலி சுகங்களுக்காகவும்   பொய்யான ஆடம்பரங்களுக்காகவும் பிழைபட்டு நின்று வாழ்கின்றவர்களாய் நாம், நமது பண்பாட்டியலைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைய தலை முறையினருக்கு நமது முன்னோர் வாழ்ந்த கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமும் உயர் நெறிகளும்  கற்கால மனிதர் வாழ்வுபோல் காட்டப்பட்டுள்ள அவலம் கண்டு உண்மைத் தமிழ் உள்ளங்கள் ஊமையாகிக் கையறு நிலையில் கண்ணீர் சிந்துகின்றன.

’உலக மயமாக்கல்’ என்ற காட்டாற்று வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி அதனை பண்பாட்டு வாழ்வெனும் பயன் மிக்க வயலுக்கு உரமாக்கும் பாசனமாய்க் கொள்ளும் திறன் இன்றி  அந்த வெள்ளத்தில் உருண்டோடும் பாறைகள் போல் நமது மரபும் ஒழுக்கவியலும் ஆகி விட்டன.

’உலகமயமாக்கல்’என்பது மனித அறிவின் பரிணாம வளர்ச்சி; ஆனால் அதை உணராது ‘உலகமயமாதல் என்பதில் மகிழ்கின்ற/பெருமைப்படுகின்ற நிலையை என்னென்பது?

`அறிவின் வீழ்ச்சி’ தான் அது.

அதைத்தான் இன்றைய தலை முறையினர்  ஆரவாரம் செய்து கொண்டாடுகின்றனர்.

இந்தப் பாகுபாட்டை உணராது, செல்லுலாயிட் சுகங்களிலும் சிந்தனையற்ற  நாகரிகங்களிலும் நாம் நம் பயணத்தைச் செலுத்திக் கொண்டிருப்போமானால் நம் கண் முன்னமேயே, நமது பிள்ளைகள் நம் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் போய், இன்னும் இரண்டு மூன்று தலைமுறைகளில் உண்மைத் தமிழனின் அடையாளம் அவனுக்கே அந்நியப்பட்டுப்போகும்!

இது சாபமல்ல: எச்சரிக்கை!

தமிழா விழி;
அது -
‘உனக்காக இல்லாமல், உனது பிள்ளைகளுக்காக’
என்றிருக்கட்டும்!  .

Wednesday, March 4, 2015

அறியாமையின் விளம்பரம்!

தமிழ் உணர்வாளர்களைத் ’தட்டி’ (?) எழுப்பும் கவிஞர்  தாமரையின் பேனர்

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

எந்தத் தமிழால் பேர் பெற்றாரோ,  அந்தத் தமிழால் வாழ்வில்  கெட்டேன்
என்று  தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும்  பெண் கவிஞரின் வாழ்க்கையை எள்ளி நகையாடுவதல்ல, இக்கட்டுரையின்  நோக்கம்.

தனது இன்றைய அவலநிலைக்குக் காரணம்என்றுதமிழ் நேசிப்பைக் கேவலப்படுத்தும் தாமரை அவர்களின் விபரீதமான, அறியாமையைக் கிள்ளி எறியவும் தமிழை நுனிப்புல் மேய்ந்து கொண்டுகவிஞர் என்றும் அறிஞர் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கின்றவர்கள் இவர்போல் இன்றைய இளம் சமுதாயத்துக்குத தவறான வழியைக் காட்டுகின்ற அதர்ம வழியை எச்சரித்து இடித்துரைக்கவும்தான் இதை எழுதக் காரணம் என்பதை முன் அறிவித்துக் கொள்கின்றேன்!

நண்பர்களே,

தமிழை நேசித்தேன்;  தெருவுக்கு வந்து விட்டேன்என்ற மிகப்பெரும்  பழியைத் தமிழ் மொழி  மீது சுமத்தி, விசித்திரமானதொரு  போராட்டத்தை, தெருவில் இறங்கி, நடத்திக் கொண்டிருக்கிறார் கவிதாயினி  தாமரை அவர்கள்.

சினிமாவில் சில நாட்கள் பாட்டெழுதி கவிஞர்என்று சுயபட்டம்
புனைந்து கொண்டு, தமிழ்த் தேசியம் பேசி அரசியல் நடத்தி வந்த தோழர் தியாகுவைக் கைத்தலம் பற்றியவர் இவர்.

இவர் தனது குடும்ப வாழ்வை அமைந்துக் கொண்ட விதமே தமிழ்கூறும்
நல்லுலகிற்கு ஏற்புடையதாக இல்லை.

பிறன்மனை விழையாதிருப்பதுபேராண்மை..
அது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது அடிமுட்டாள்தனம்.
பெண்மைக்கும் சேர்த்தே அதைப் பெருமைப் படுத்திப் பார்க்க வேண்டும்.
மனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவன்பால் காமுற்று, அதன் மயக்கத்தில் அவனுடைய மனைவிக்குத் துரோகம் இழைத்து அவனைத்
தன் பக்கத்தில் இழுத்துக் கொள்ளும் ஒருத்திக்கு இச் சமூகம் தரும் பேர், ‘இரண்டாம் தாரம்’ என்பதுடன் ;இரண்டாம் தரப் பெண்’ என்ற தகுதிச் சான்றுரையும்தான்.

தமிழைத் தரம் தாழ்த்திப் பேசினால் அது மூன்றாம்தரப் பண்புள்ளோர் குணம்’என்றே சான்றோர் சபை சபிக்கும்.

அந்தச் சாபத்தைச் செய்யும் பாவத்தைக் கவிஞர் தாமரை அவர்கள் சற்றும் சிந்திக்காமல் செய்வது  நமக்கெல்லாம் சினத்தை ஏற்படுத்துகிறது!

நண்பர்களே,

நீதி நெறி பிறழா நேர்மையைக் குணத்தை உருவாக்கும் தெய்வத்
தமிழுக்கு அறத் தமிழ்’  என்றும்;  உயிர் போகின்ற நிலையிலும்
குன்றா வீரத்தையும் குறையா விவேகத்தையும் கொப்பளிக்கச் செய்யும்
தமிழுக்கு  ‘மறத்தமிழ்என்றும் இருவகைக் காரணப் பெயர்கள் உண்டு.

சிலர் தங்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கைக்காக, அதைப் பயன் படுத்திக் காணும் சுகத்தினால் அது ’காமத் தமிழ் ஆகி விடாது; அந்தக் காதல் வாழ்க்கை தோற்றுப் போனதால் பாவத் தமிழும் ஆகி விடாது.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழை,’
சங்கப் புலவர்கள் போற்றிப் பணிந்த சாகாத் தமிழை,  புராண, இதிகாச
காலங்களையும் கடந்து நிற்கும் முப்பெரும் தமிழை தனது நெறிகெட்ட
வாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணம்’ எனக் காட்டிக் கவிஞர் தாமரை அவர்கள் அனுதாபம் தேடுகின்ற அவலத்தை இடித்துரைக்காமலும் , எதிர்க்காமலும் இருப்பது தமிழ் உணர்வுடையோருக்கும் தமிழ்ச் சான்றோருக்கும் அவமானம்.

நமக்கெல்லாம் தாமரை அவர்களின் தற்குறித்தனமான அறிவிக்கை தன்மானத்தைக் கிளர்ந்தெழச் செய்கின்றது.  தற்குறித்தனம்
படித்தவர்களிடையே இருப்பது அந்த மொழியின் சீர்மரபுக்கே இழுக்கு.

நினைவில் கொள்வோம், நண்பர்களே:

யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்
காணோம்’ என்று தலை நிமிர்ந்து முரசறைந்தவன்  நமது பாட்டன்
முண்டாசுக் கவிஞன்.

ஏதோ தமிழை மட்டுமே கற்றுக் கொண்டு அதன் போதையில் ஊறிப் போய், அவன் அப்படிப் புகலவில்லை; தமிழைப் புகழவில்லை.

ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்கம், மராத்தி முதலான
பல மொழிகளிலும் வித்தகம் பெற்ற மகாகவி அவன்.

உலக மொழிகளில் ஒப்பற்ற மொழி, தமிழ்தான் என்று பன் பொழிகளிலும் புலமை பெற்ற மகாகவி பாரதி  சொன்னதுதான் மிகச் சரியான உண்மை; உலக மொழி ஆய்வாளர்கள் எல்லோரும் ஆமோதிக்கின்ற பேருண்மை.

உலகோர் வியக்கும் பண்பு நெறிகளைக் கற்பிக்கும் அந்த உன்னதத் கவிஞர் தாமரை கற்றுக் கொள்ளவும் இல்லை; நேசிக்கவும் இல்லை.

கற்றிருந்தாலோ அல்லது நேசித்திருந்தாலோ,
’தான் தெருவுக்கு வந்த அவலநிலை’க்குத் தமிழை நேசித்ததன் விளைவே காரணம்’ என்று அவர் கழிவிரக்கம் கொண்டு,  கதை எழுதித் ’தட்டி
(பேனர்) வைத்திருக்க மாட்டார். மாறாகத் தன் நாவைக் கட்டி வைத்திருப்பார்.

சினிமாவில் எழுதிப் பேர் வாங்கி விட்டதால், தன் வாழ்க்கையை ஒரு சினிமாபோல் சிந்தித்துக் கொண்டு ஏதோ ஒருவகையில் தனக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தமிழ் உணர்வாளர்கள் குவிக்க வேண்டும்’ என்று எதிர்பார்க்கும் அவருடைய முதிர்ச்சியின்மையானது, தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிற ஆபத்து மிக்கது.

பெற்ற அன்னைக்கும் மேலான தமிழை, தனது தவறான வாழ்க்கைப் பாதையின் வினை எச்சமாகக் கண்டு அதன்  வேதனைக்கு விளக்கம் தருவதற்காக தமிழ் மீது பழி சுமத்தும் இழிவை, உண்மைத் தமிழ் உணர்வுடையோர் உதைக்காமல் விடமாட்டார்கள்!

தவறான எண்ணங்களோடு தமிழைப் படித்துக் கொண்டு ’கவிஞர்’ என்று
கதைத்துக் கொண்டு, தமிழ்த் தேசியத்தில் பற்றுக் கொண்ட தோழர் தியாகு அவர்களுடன் கொள்கை இணக்கமும் கூடல் இணக்கமும் கொண்டு குடும்பம் அமைத்துக் கொண்டவர் தாமரை அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது மண வாழ்வின் மன முறிவு பற்றியும் கணவர் தோழர் தியாகு மீது அவர் நெறிபிறழ்ந்த பாதை பற்றியும் தாமரை அவர்கள் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு பேட்டி தந்ததை நாம்
மறக்கவில்லை.

அதைப் பல்வேறு ஊடகங்களும் பலபட எழுதி, தோழர் தியாகு-
கவிஞர் தாமரை இவர்கள் இருவரின் முரண்பாடுகளையும் முட்டல் மோதல்களையும் தமிழ் மக்களிடையே முழுமையாகத் தந்து விட்டன
என்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த பழைய செய்திதான்.

என்றாலும்-
’இவ்விவகாரம் இந்த இருவருடைய சொந்த விஷயம்என்ற அளவில் பார்வையாளர்களாகிய நாம் அமைதியாக இருந்து விட்டோம்.

மறுபடியும் இப்போது இவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு விவகாரம் தெருவுக்கு வந்து விட்டது.

இதில் உண்மையாக யார் மீது குற்றம்? எதனால் குற்றம்?’ எதற்காகக் குற்றம்?’ என்றெல்லாம்  நாம் ஆராய்ச்சி செய்து தீர்ப்புக் கூறுவதற்காக இங்கு நாம் தலைப்படவில்லை.

ஆனால்கவிஞர் தாமரை, தன் துன்பத்துக்கான
குற்றத்தைத் தமிழ்மீது போட்டு,  ‘அது உங்களுக்குச் சம்மதம்தானா?’
என்று, தமிழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற, சுவாசிக்கின்ற தமிழ் உணர்வாளர்களை எல்லாம் தட்டிக் கேட்கின்றாரே!’

அதற்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்?

தனது கணவர் காணாமல் போய் விட்டார்’  என்றும் தன்னைக் கைவிட்டு விட்டு இரண்டு முறை வீட்டை வீட்டு ஓடிப் போனவர்என்றும் கடந்த சில நாட்களாக அவரைக் காணவில்லைஎன்றும் இவர் ஊடங்கள் முன்னிலையில் பேசி வருவதும் அப்படிப் பேசி வரும்போது அவர்  வேறு பெண்களுடன் கூடா நட்பில்இருக்கிறவர்’ என்று பட்டியல் போட்டுப் பேசுவதும் கண்கூடான நிலை.

இவ்வாறு,’தன்னோடு கணவனாக வாழ்ந்த ஒருவரை, இன்று கடுமையான குற்றச்சாட்டுக்களில் பேசி, ஏசி வருவதானது, ‘அவர் (தியாகு) இப்படிப்
பழிகளைச் சுமப்பதற்கு அஞ்சி மீண்டும் தன்னோடு சமாதானத்துக்கு வந்து சேர்ந்து வாழ வேண்டும்என்ற எண்ணத்தினாலா? அல்லது அவராக விரும்பினாலும் இனி வந்து தன்னோடு சேர்ந்துவிடக் கூடாது’ என்பதன் நோக்கத்தினாலா? என்றெல்லாம் கேள்விகளை எழவைக்கும் தாமரை அவர்களின் செயலும் சிந்தனையும் எத்தகைய அவலத்துக்கும் அறியாமைக்கும் உரியது?’ என்பதைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.

உண்மையில்,-
வளர்ந்து கொண்டிருக்கிற ஆண் பிள்ளைக்குத் தாயாகி, ஓரளவுக்குக் கவிஞர் தாமரைஎன்ற பெயருடன் பிரபலமாகி  இருக்கும்  இப்பெண்மணி
இப்போது தட்டி வைத்துக் கொண்டு முதிர்ச்சியும் தன்மானமும் இல்லாத  தனது பலகீனமான அறிவை, ஊரறிய,உலகறிய விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்,

இவரது தனிப்பட்ட வாழ்வு தரம் கெட்டுப் போனதிலும் அதனால் இவரது பிள்ளையின் எதிர்காலம் தடுமாறும் நிலையில் இருப்பதிலும் எனக்கு
மிகமிக வருத்தம் உண்டு;  இரக்கமும் உண்டு.

 ‘எப்படியோ, இவரது குடும்ப வாழ்வில் அமைதியும் நிம்மதியும் சீக்கிரமே சேரட்டும்’ என்று என் மனம் எண்ணுகிறபோதும்  –

//தமிழை நேசித்ததால்
தெருவுக்கு வந்து விட்டேன்:
தமிழ் உணர்வாளர்களே. 
சம்மதம் தானா?//

என்று-
தட்டி (பேனர்) வைத்து, எம் போன்றோரைத் தட்டி எழுப்புகிற சிறுமை கண்டு,விசனம் கொள்ளவும் சினம் விமர்சிக்கவும் நேர்ந்திருக்கிறது.

தமிழ்ப் பெருமக்களே,

தமிழ், தன்னைப் பயின்றவனின் வயிற்றை நிரப்புகிறது’ என்பதைவிடவும்    ‘தன்னைக் கற்றவனின் வாழ்வை உன்னதமாக நிரப்புகிறதுஎன்பதே சத்தியம்.

இந்த உன்னதத் தமிழை  நேசிப்பவர்களும் வாசிப்பவர்களும்தான் சமுதாயத்தில் பண்பு மிக்க வாழ்வின் பயனாளிகள்; முளைக்கின்ற
இளம்பயிர்களுக்கு முன் ஏர் பிடிக்கும் தகுதியாளர்கள்; சான்றோர்கள் சபையை அலங்கரிக்கின்றவர்கள்.

அந்தத் தமிழையாஇப்பெண் கவிஞர் தாமரை நேசித்தார்?

தமிழை நேசித்தோர், தரம் தாழ்ந்து போவதில்லை; தரம் தாழ்ந்து போனவர் தமிழை நேசித்ததில்லை.

தமிழை அரைகுறையாகக் கற்றுக் கொண்டு பிழைப்புக்காகவும் பிழைபட்ட வாழ்வுக்காகவும் தவறான சித்தாந்தந்தங்களை சினிமாவில் அரைகுறைகள் ரசிக்க எழுதிப் பேர் வாங்கிய கையோடு, தனக்குத் தானே கவிஞர்என்று தம்பட்டம் கட்டிக் கொண்டு பரபரத்தவர்களின் வாழ்க்கை, சுழற் காற்றில்  அகப்பட்ட பட்டம்போல் ஆகி விடும்’ என்பதற்கு உதாரணம் ஆகி விட்டவர், இவர்..

தமிழை நேசித்தேன்; அதனால் தெருவுக்கு வந்து விட்டேன்; தமிழ்
உணர்வாளர்களே சம்மதம்தானா? என்று தட்டி வைத்துத் தனது அறியாமைக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் இவருக்கு  நாலுபேர்  கூடி,    உச்சுக் கொட்டவும் ஆதரவு கூட்டவும் இருக்கத்தான் செய்கின்றார்கள்’ என்பதில் தமிழன்னை வெட்கித் தலை குனிகின்றாள்.

தமிழ் உணர்வாளர்களே,

தமிழை நேசித்ததால் தெருவுக்கு வந்து விட்டேன் ‘என்கிறாயே? அப்படியானால் நீ தெருவுக்கு வந்ததற்கு உன்னைக் கைவிட்டவன் காரணமில்லையா? அல்லது உன்னைக் கைவிட்டவனைத்தான்   ‘தமிழ்’ என்கிறாயா?

உன்னைப்  போன்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிட்டு,
அவள் கணவனை  நீ  பறித்துக் கொண்டபோது, அதே கணவன், 
தனது மனைவியைக் கை விட்டு விட்டானே? அப்போது கைவிடப்பட்ட அவனது முதல் மனைவியின் மனம் எவ்வளவு கதறியிருக்கும்?

அந்தப் பெண் உன்னையும்  அவனையும் எப்படியெல்லாம் சுட்டிக் காட்டி அழுதிருப்பாள்? அவமானப்பட்டுக் குமைந்து  குமைந்து சபித்திருப்பாள்?
அப்போது, அந்த அபலையின் அவலத்தை, அவர் விட்ட கண்ணீரின்
தாக்கத்தை எல்லாம் சிந்தித்தாயா?

இப்போதேனும் அவற்றை உணர்கின்றாயா?

உனது பருவக் கிளர்ச்சிக்கு அவனை அடைய அன்று  உதவிய தமிழ்,
இப்போது உதவவில்லை’  என்பதற்காக, அன்னையினும் மேலான அந்தத் தமிழை  இழிவு படுத்துகிறாயே?’

//பிறர்க்கின்னா  முற்பகல்செய்யின்; தமக்குஇன்னா         
பிற்பகல் தாமே வரும்.//

என்று –

இன்னாசெய்யாமைகுறித்து எழுதிய வள்ளுவனின் அறத் தமிழை நீ நேசித்திருப்பது உண்மையானால்இன்று உனது முற்பகல் வினைகளின் வேதனைதான் இதுஎன்ற உண்மை உனக்கு விளங்கியிருக்க வேண்டும்’

என்று நீங்கள் இடித்துரைத்துக் கேட்க வேண்டாமா?

தமிழைக் கீழ்மைப்படுத்தும் எவரையும் எதிர்த்து நிற்கும் அறத்தமிழும் மறத்தமிழும் உங்கள் உணர்வுகளில் ஆர்த்தெழ வேண்டாமோ?

தமிழை உண்மையாகவே கற்றுக் கொள்ளாது அதை ஊனப்படுத்தும்
விதமாக, அன்னைத் தமிழைத் தனது பிழைபட்ட வாழ்வுக்கு காரணம்என்று தட்டிவைக்கின்ற இந்தப் பெண் கவிஞரைத் தட்டிக் கேட்கும் தமிழ் உணர்வாளர்களைத்தான் இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
4.3.2015