Sunday, March 1, 2015

அஞ்சுவது அஞ்சல்!

அறிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

'ஆணாதிக்கத்தின் அடையாளம் ' என, எனது  பதிவுகளைப் போலி பெண்ணியக்கவாதிகள் (வியாதிகள்) முத்திரை குத்தி எனது பக்கத்தில் தலை வைத்துக் கூடப் படுப்பதில்லைஎன கங்கணம் கட்டிக்  கொண்டு, காணாத தூரத்தே ஓடி விட்டதுண்டு.

எனது வலைத்தளம் மற்றும் இந்த முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கின்ற நண்பர்கள்,வாசகப் பெருமக்கள் இதனை அறிவர்.

அரைகுறை அறிவும் அதுபோலவே  ஆடையும் ஜாடையும் தரித்துக் கொண்டு பெண்ணினத்தின் பேரிகைகளாய்க் காட்டிக் கொள்ளும்  அவர்கள், உண்மையில் பெண்குலத்தை நாசம் செய்கின்ற பேரிடிகள் என்பதை நான் அறிவேன்.

வாழ்க்கையில் அன்பும் இல்லாமல் அறமும் இல்லாமல் துன்பவியலில் கண்டதை நாடும் காரிகைகளான இவர்கள் பண்புமிக்க பெண்கள் முகநூலில் பண்பாடு குறையாமல் எழுதும் நல்ல பெண்மணிகள் இருப்பதை விரும்புவதில்லை; நான் அவ்வப்போது எழுதும் மரபு போற்றும் பதிவுகளில் கருத்துரைக்கும் பெண்களைக் கூட எனக்கு எதிராகக் கரைக்கும் கயமை எண்ணங்களிலும்  அவர்கள் ஈடுபட்டதுண்டு.

ஆனால் இத்தகையவரைவின் மகளிரின்வலைக்குள் வீழ்ந்து விடாமல், எனது உணர்வுகளின் உண்மைத் தன்மையிலும் ஒழுக்க நெறி போற்றும் ஒண்தமிழ் நடையிலும் நட்பும் அன்பும் காட்டிக், கருத்துரைக்கவும் பதிவுகளைப் படித்து விருப்பக் குறி (Like) இடவும் நற்குணவதிகள் இருக்கின்றார்கள்.

ஒருவகையில், எனது பதிவுகளைப் படித்து Like இடும் பெண்கள் பண்புமிக்க தாய்க் குலத்தின் பிரதிநிதிகளாக இங்கு அவர்கள் தங்கள் பக்கத்தில் எழுதி வருவதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

அத்தகையோரின் பதிவுகளை நான்  தொடர்ந்து படித்தும் வருகின்றேன்

நான் பெண்மையைப் போற்றுகின்றவன்;அதன் பெருமையை விவரிக்கின்றவன். பெண்மையின்  பண்புகளை வளர்க்கவும் வாழ்த்தவுமான பதிவுகளை எழுதுகின்றவன்.

பெண்ணின் பெருந்தக்க பண்புகளை  வலியுறுத்தியும் போற்றியும் எழுதப்படும் எழுத்துக்கள் இன்று பெண்ணீயம்பேசும் பித்தளைப் புர்ர்ரட்சீ’’க்களுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவதாக  இருக்கின்றது

அவ்விதம் எழுதுவது ஆணாதிக்க எண்ணத்தின் வெளிப்பாடுஎன்று விளம்பும் எவரையும் அஞ்சாது எதிர் கொள்பவன்

அதேசமயம், நற்பண்பு கொண்டிங்கு பதிவுகள் இடும் எந்தப்பெண்மணியின்  உள்ளமும் உணர்வும் எனது எழுத்துக்களால் கசந்து  வருந்துமானால்  அதற்கு அஞ்சுபவன்.

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை;அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்”    அன்றோ?

இவண்-
கிருஷ்ணன்பாலா

27.2.2015

No comments: