Wednesday, August 7, 2013

சேரன் எழுதாத கதை!றிவார்ந்த நண்பர்களே
வணக்கம்.

தர்மபுரி ’திவ்யா-இழவரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்படும் இன்னொரு காதல் விவகாரம் சினிமா இயக்குநர்நடிகர் சேரன் மகள் தாமினிசந்துரு காதல் விஷயம்தான்.

சினிமாக்களில் காதலைப் புதிய கோணத்தில் சிந்தித்து எழுதிப் பிரபலமான சேரன், இந்தக் காதல் கதையை எழுதவில்லை ஆயினும் அவருடைய மகள் நம்மையெல்லாம் எழுதும்படிச் செய்து விட்டார்.

ஆகையா’ல்  ‘இது சேரன் எழுதாத கதை’ என்று தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைபோல் ஆகிவிட்டது.

இன்று நம் இளைஞர்,இளைஞிகளிடையே பரவலாகத் தொற்றிக் கொண்டிருக்கும் காதல், வீட்டுக்கு வீடு வெந்து தணிந்து கொண்டிருக்கிற விஷயம்.

அதைப்பற்றி எல்லாம் நம் சமூகச் சிந்தனையாளர்கள் கவலை கொள்ளாமல் சினிமாக்காரர் வீட்டுக் காதல் பிரச்சினை என்பதால் சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதித்து தங்கள் மேதைமையைக் காட்டிக் கொள்கிற அவலம்தான் இங்கே ஆட்கொண்டிருக்கிறது.

காதல் என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமாகக் கவனிக்கப்பட்டு, அதன் மூலம் குடும்பக் கவலைகள், உறவுக் கவலைகள், ஊர்க் கவலைகள், சாதிக் கவலைகள் முதலான கவலைகள் வாராமல் தடுத்து சமூக நல்லிணக்கத்தின் நடுகல்லாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்.

தர்மபுரி ’திவ்யா-இழவரசன்’ காதல் விவாகரத்தால் 200 குடிசைகள் எரிக்கப்பட்டது முதலேபருவக் காதலை சமூக அக்கறையுள்ள எவரும் ஆதரிக்கக்கூடாது’ என்றும் மாறாக  ‘அதனை ஊக்குவித்தும் அரசியல் ஆக்கியும் அது சமூகநீதியின் சின்னம்’ என்றும் பேசுவோர் சமூகக் கேடர்கள் என்றும் எழுதி வருகின்றவன் நான்.

வயதுக்கு வந்த பெண்ணும் வாலிபத்தைத் தொட்ட ஆணும் பருவக் கவர்ச்சியாலும் பாலின ஈர்ப்பாலும் ஒருவரை ஒருவர் நெருங்கி உணர்ச்சிகளைப் பறிமாறிக் கொண்டுஉயிர் நீ;உடல் நான்; என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு, சதைப்புணர்வு கொள்வதைக்காதல்என்று கதைக்கின்றார்கள்.

அதனடிப்படையில் தாங்கள் ஒருவரை ஒருவர் மணம் புரிந்து கொள்ள விழையும்போது, அவர்களின் பெற்றோர் அதை அதிர்ச்சியுடன் எதிர்க்கின்றார்கள்.

அதன் பிறகு, இது சட்டப் பிரச்சினையாகி, பெற்றவர்களுக்கும் விரோதமாக சட்டத்தின் துணையோடு பிள்ளைகள் காதல் மணம் புரிந்து கொண்டு தங்களைப் பெற்றவர்களைப் பிரிந்து வாழத் தலைப்படுகிறார்கள்.

இதில் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் சில மாதங்களிலோ,சில வருடங்களிலோ இரண்டு குடும்பங்களும் ஒன்று சேர்ந்து விட வாய்ப்புக்கள் இருக்கின்றன

வெவ்வேறு சாதிகள் என்றால் இரண்டு சாதிகளிடையே பகைமை வளர்ந்து சாதிச் சண்டையாக உருவெடுத்து விடுகிறது. இரண்டு வெவ்வேறு சாதி மண உறவுகள் தொடர்பான குடும்பங்கள் பின்னாளில் சேரும் நிலை ஏற்பட்டாலும்கூட மெஜாரிட்டி சாதியானது அந்தக் குடும்பங்களைஊர்க் கட்டுப்பாடு’ என்ற பெயரில் ஒதுக்கி விடுகின்றன.

இப்படியான காதல் பிரச்சினைகள் அநேகமாக ஊர்கள் தோறும் இப்போது முளைக்கத்தொடங்கி விட்டன.

இத்தகைய காதல் வாழ்க்கையானது பெரும்பாலும் நீடித்து நிலைப்பதில்லை.
பருவம் வந்ததும் ஆணும் பெண்ணும் காதல் கொண்டு எப்படியோ போராடி அல்லது பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம் செய்து கொண்டு வாழத்தொடங்கிய பின், சில ஆண்டுகளிலேயே கணவன் -மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு காதல் கசந்துபோய் விவாக ரத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன. ‘ஆசை அறுபது நாள்;மோகம் முப்பது நாள்என்று முன்னோர் சொன்னது இங்கே முழு உண்மையாகி விடுகிறது.

இப்படி,காதல் பருவக் காமத்தின் உந்துதலால் கலப்புத் திருமணம் செய்து கொண்டு வாழாவெட்டிகளாகிப் போகின்ற ஜோடிகளின் விகிதாச்சாரம் 40 விழுக்காடுகள். வேறு வழியில்லாமல் துக்கப்பட்டும் வெட்கப்பட்டும் தலைகுனிந்து கொண்டு வாழ்கின்றவர்களின் விகிதாச்சாரம் 25 விழுக்காடுகள்; வாழ்க்கை கசந்து போய் கணவன்மனைவி இடையே பரஸ்பரம்  துரோகம் இழைக்கப்பட்டு,விவாகரத்துப் பெற்று மறுமணம் செய்து கொள்கின்றவர்களின் விகிதாச்சாரம் 15 விழுக்காடுகள்; ’காதல் என்ற பருவத் தூண்டலில் நமது வாழ்க்கையை நாமே தொலைத்து விட்டோமேஎன்று சுய தரிசனம் கொண்டு  மீளாக் கவலையில் தற்கொலை செய்து கொள்வோரின் விகிதாச்சாரம் 5 விழுக்காடுகள்.

இப்போது சொல்லுங்கள்:
விடலைக் காதல் வாழ்க்கை எங்கே நமது இளைஞர்களையும் இளைஞிகளையும் வாழ வைக்கிறது?

இப்படி,காதல் திருமணம் செய்து கொண்டு வெகு விரைவில் வீணாய்ப் போகின்றவர்களுக்காகக் குரல் கொடுப்போர் உண்மையில் தமிழன் வாழவா, போராடுகிறார்கள்.?

தமிழ்ச் சாதி நிலைகுலைந்து, நீர்த்துப் போகும்படிச் செய்யும் இத்தகைய விடலைக் காதலைத்தான் நாம் வீறு கொண்ட எழுத்துக்களால் சாடுகிறோம்; எதிர்க்கின்றோமே தவிர, நியாயமான நேர்மையான காதலை அல்ல!

வாழ்க்கைத் துணையைத் தேடுவதில்  நியாயமான தேவைகளை முன்னிட்டும் நேர்மையான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டும்
காதல் திருமணங்கள் உருவாகுமானால் அதை முன் நின்று வாழ்த்தும் முதல் ஆளாக நாமிருப்போம்என்பதை இங்கே பலரும் உணர்வதில்லை.

விவாகரத்து மூலம் கணவனை இழந்து வாழும் பெண்ணோ; மனைவியைப் பிரிந்து விட்ட ஆணோ, அல்லது விதவைகளோ காதல் மூலம் மறுமணம் புரிந்து கொள்வதோ கடிமணம் புரிந்து கொள்வதோ  இயற்கைக்கு உகந்த நியதிதான்.

ஒரு ஆணும் பெண்ணும் முதிர்ச்சியான சிந்தனையில் இணந்து வாழ்வது என்பது பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் பேணுகின்ற விஷயம்.. அறிவுடையோர் இதற்கு எதிராக எழுத மாட்டார்கள்; அப்படி எழுதுவோர் அறிவுடையோர் ஆக மாட்டாரகள்; அவர்களைப் பத்தாம் பசலிகள் என்றுதான் கூறமுடியும்.

இக்காலத்தில் வயதுக்கு வந்த பெண்ணையும் ஆணையும் முறையாகக் கண்காணித்து அவர்களின் கவனம் ஒழுக்கமற்ற சிந்தனைகளில் புகுந்து விடாமல் குடும்பப் பொறுப்புக்களையும் பெற்றவர்களின் நேசத்தையும் பாசத்தையும் இடைவிடாமல்  அவர்களிடையே நிலைக்கச் செய்ய வேண்டியது பெற்றவர்கள் கடமை.

முன்பெல்லாம்,குழந்தைத் திருமணங்களை நம் முன்னோர்  செய்து முடித்த காரணம் ‘இந்தப் பருவக் கிளர்ச்சியால் விடலைகள் இப்படி வாழ்க்கையை வீணாக்கி விடக் கூடாதேஎன்ற சிந்தனையை முன்னிட்டுத்தான்.

காதலர்களை வாழ வைக்கஎன்று ஒரு கூட்டம் சமூக நோக்கர்கள் என்ற போர்வையிலோ; பெண்ணியவாதிகள் என்ற பித்தலாட்டத்திலோ,புரட்சிச் சிந்தனையாளர்கள் என்ற பொய்யிலோ புதைந்து கொண்டு பெற்றவர்களின் பிரிக்க ஒண்ணாப் பாசத்தைக் கேலியாக்கி விடலைக் காதலில் போதை ஏறிய ஜோடிகளுக்கு அடைக்கலம் தந்து கடைசியில் அவர்களைக் காதல் திருமண ஜோடிகளாக்கிப் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

எங்கேனும் ஒரு காவல் நிலையத்தில் இளம் காதல் ஜோடிகள் தஞ்சம் என்ற செய்தி வந்தால் போதும். அதற்கென்றே காத்துக் கொண்டிருக்கும் இந்தச் ‘சமூக சீர்திருத்த வியாதிகள் அங்கு ஓடிப்போய். ’கூவாத கோழி கூவுற வேளைஎன்று குழுமிக் கும்மி அடிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களின் நம்பிக்கையை நாசமாக்கி, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, தங்கள் குடும்ப உறவுக்களுக்குச் சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு ஆண்பிள்ளையுடனோ அல்லது ஒரு பெண்ணுடனோ ஓடிப்போய்த் திருமணம் செய்து கொள்வது என்பது நீதிக்கும் பண்புக்கும் சமூக ஒழுக்கத்துக்கும்  எதிரானது.

பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் பாசத்தையும் அவர்களின் கஷ்டத்தையும்  ‘தங்கள் மகள் எப்படி எல்லாம் வாழ வேண்டும்?’ என்ற பாசக் கனவுகளையும் கேலிக் கூத்தாக்கி விடுகின்ற இத்தகைய இழிநிலைப் பருவ உணர்ச்சிக் காதலை சரியானபடி தடுக்காமல் போனால், அது,  அந்தப் பெண்ணின் எதிர்காலத்தை இருட்டுக்குள் மூடி வைக்கின்ற முயற்சியே தவிர முன்னேற்றக் கருத்து ஆகாது.

இங்கேதான் நடிகர்-இயக்குநர் சேரன் எழுதாத காதல் கதை சின்னாபின்னப்படுகிறது.

தன் மகள் தாமினியை அவர் வளர்த்த விதமும்;தாமினி. சந்துரு என்ற இளைஞனின் காதல் வலையில் வீழ்ந்த விதமும் முதலில் அவர்கள் காதலை சேரன் ஆமோதித்து விட்டுப் பின்,’இப்போது தாமினியின் சாய்ஸ் சரியில்லை;சந்துருவை மருமகனாக ஏற்க முடியாதுஎன்று ஊடகங்களின் முன்னிலையில் கண்ணீர் விடும் அவல நிலையும் இந்தச் சமூகம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.

இதுபற்றி நமது கருத்துக்களாக, கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல்வேறு சூழ்நிலைச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியவற்றை   ‘உலகத் தமிழர் மையத்தின்’ வாசகர்களுக்காகத் தொகுத்து வழங்குகிறேன்:

தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவருவரும் நமது சந்ததியினரின் நல் வாழ்வுக்காக சிந்திக்க வேண்டும்.

பெண் குழந்தைகளை எப்படிக் கண்காணித்து வளர்த்தால் இம்மாதிரியான அவல நிலைக்கு ஆளாகாமல் இருப்போம் என்பதை நாம் நமது சூழ்நிலைகளுக்கேற்ப சிந்திக்க வேண்டுகிறேன்:

  •   
அன்புக்கும் காதலுக்கும் ஆங்கிலத்தில் வேண்டுமானால் ஒரே அர்த்தம் தேடலாம்; ஆனால் வாழ்க்கையில்,யதார்த்தத்தில் அப்படி எல்லாம் இல்லை

அறிவுடையோர் அன்பு காதலாகாது; இளைஞர்களின் காதல் அன்பு ஆகாது.


பருவத் தூண்டலின் காரணமாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை நட்பு என்றும் அன்பு என்றும் கூறிக் கொண்டு காமப் புனைவு கொள்வதற்கு அனர்த்தம் கற்பித்து அநேகம் பேர் காதலும் அன்பும் ஒன்று என்றும் காதலின் பரிணாமத் தோற்றமே காமம்என்றும் கதைப்பது அறிவீனம்.

காமம் என்ற சொல் பல்வேறு நிலைகளில் பல்வேறு அர்த்தங்களை உடையது.ஒருதவறு சரித்திரம் என்று ஆகிவிட்டால் பிறகு எல்லாத் தவறுகளுமே அதன் பிரஜா உற்பத்திதான்!தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்து மகிழ வைத்த அப்பா,தனக்குப் பருவ ஆசை வந்த பின் காதலன் பொம்மையை வாங்கித்தர மறுப்பதால் இப்போது அப்பா எதிரி ஆகிறான்.

தன் குழந்தை கேட்டதையெல்லாம்,வாங்கித்தராமல் அவளுக்கு  ‘எது தேவை?;எது தேவை இல்லை?’ என்பதை நிதானித்துக் கற்றுத் தராதவன், இப்போது தன் மகள் சூட்டும்  தரம் கெட்ட காதலனைக் கை நீட்டுவதை நிராகரிக்கின்றான்.

இப்போது,மகள் அவனுக்கு எதிரி ஆகிறாள்.

  •   
சமூகக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கற்பிக்கப்படாத செல்லுலாயிட் குழந்தைகளைப் பெற்று வளர்த்து, பிறகு அவர்கள் அதே செல்லுலாயிட் காதலில் துணிந்தபிறகு அவர்களுக்காக அசிங்கப்பட்டுப் போவதை விட பெற்றவர்களுக்கு வேறு வழி இல்லை.

பெண்மையையும் உண்மையையும் இழந்த பெண்ணை மீட்டு, எங்கே யார் தலையில் கட்டி வைப்பதாக உத்தேசம்?

சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை.


காதலை எடுத்துச் சொல்ல அனுபவம் வேண்டும்;
காதலை இடித்துச் சொல்ல அறிவு வேண்டும்.

இரண்டுமே இல்லாத கத்துக் குட்டிகள்காதலை வாழ வைப்போம்
என்று இங்கே கதைப்பதும் அவற்றின் பின்னே நின்று, ‘ஆமாம்போடுவதைப்போல் Like போடுகிற கூட்டமும் அஃறிணைகளே அன்றி உயர்திணைகள் அல்லர்.எந்தச் சூழ்நிலையிலும் கைவிட முடியாத தன் மகளுக்காக நடிக்கத்தெரியாது அழுகிறான் அப்பன்.

எப்போதோ கசக்கி எறியப் படக் கூடிய தன் காதலிக்காக அழுவதைப் போல் நடிக்கிறான் காதலன்.

ஆடு அறுக்கிறவனைத்தான் நம்புகிறது.பெற்றோரை வெறுத்து வெறும் சதை இன்பத்துக்காக நேற்றுக் கண்டவனுடன் கைகோர்த்து வாழுவதே வாழ்க்கைஎன்று காதல் வசனம் பேசும் கத்துக் குட்டிகள், தங்களைப்போலவே ஓடிப் போய்க் கல்யாணம் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்பவர்கள் எத்தனை பேர்? கசந்து போய்க் கல்லாய் வாழ்கிறவர்கள் எத்தனை பேர்? தங்கள் காதலுக்காகக் குரல் கொடுத்து விட்டு, காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? ’காதல் என்பது நிஜம்தான்’ என்று சாட்சி சொல்லும் காதல் தம்பதிகள் எத்தனை பேர்? என்று கணக்கெடுத்துக் கொண்டு காதலித்தல் நன்று. 
  •  
“காதலுக்கு நீங்கள் ஆதரவா? அல்லது எதிர்ப்பா?’’ என்று ஓட்டெடுப்பு
நடத்தப்பட்டால் நிச்சயம் காதலுக்கான ஆதரவே வெல்லும்.

உண்மை வென்றால்தானே இன்றைய உலகில் ஆச்சர்யம்?

  •   
சேரன் ஒரு கோழை என்பது மட்டும் புரிகிறது.

சினிமாவில் காதலைச் சொல்லும்போது அதன் யோக்கியதை என்ன என்பதையும் சொல்லாமல் காதலை மிகைப்படுத்திக் காட்டியவர் இன்றுதன் மகள் அப்படியே மிகைபடச் சென்ற பின்னரும் அழுவது கோழைத்தனம் அன்றி வேறென்ன?

இந்தக் காதல் பணத்தையும் அந்தஸ்தையும் வைத்து நடத்தப்படுவதால் தாமினியின் காதலன் தரமற்றவன் என்கிறார்.

உப்பைத் தின்று ஊருக்கு சொன்ன உபதேசம்,இன்று தப்பைத்தானே எதிர்வினையாய்த் தரும்?

இந்தப் பதிவின் மூலம்தாமினியின் தகப்பன் விரோதக் காதலைநான்
சந்துரு-தாமினி
ஆதரிப்பதாக எவரேனும் எண்ணிக் கொண்டால் அவர்களுக்கு என் அனுதாபங்கள்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்

என்ற வள்ளுவனின் தீர்ப்பை,இந்த விவகாரத்தில் பொருத்தி பார்த்தால்
தேராதவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட தாமினி ஆகட்டும்;அந்தப் பெண் அவனைத் தேர்ந்தெடுக் கொண்டபின் -அவ்விஷயம் தெரிந்து முதலில் சம்மதம் தெரிவித்து விட்டு (அதாவது தெளிந்து கொண்டபிறகுஇப்போது அவளுடைய காதலனைப் பற்றி சந்தேகம் கொண்டு பேசும் சேரன் ஆகட்டும் இருவருக்குமே தீரா இடும்பை (கடக்க முடியாத துன்பம்) என்பது விளைந்திருக்கிறது.

சரி,விஷயத்துக்கு வருவோம்:

தாமினியின் காதல் விவகாரத்தில், சினிமா இயக்குநர் சேரன் அவர்களின் கொள்கையும் குடும்பப் பாசமும் தமிழ்ப் பண்பாட்டின் முன்னே சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

காதலா,ஒழுக்கமா?’ என்ற கேள்வி இங்குள்ளோர் முன்பு காணாமல் போய், சேரன் பாவமா? தாமினி நியாயமா? என்ற பட்டி மன்றம் எங்கும் நடக்கத் தொடங்கி உள்ளது.

கெட்டவன்என்று தெரிந்தும்அவனோடுதான் வாழ்வேன்என்று அப்பனையும் அம்மையையும் துச்சமெனப் பேசுபவளுக்காகக் கண்ணீர் விடும் சேரன், ’ஒருவேளை தன் மகளின் மனதை மாற்றி விட்டார்என்று வைத்துக் கொள்வோம்; அந்தப் பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு வேறு ஒரு தகுதி வாய்ந்த மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்கத்தானே விரும்புவார்?

அவ்வாறாயின், அந்தக் கெட்டவனை விட படு கேவலமானவன் அல்லவா தாமினிக்குத் தன் தலையைக் கொடுக்கத் துணிவான்?

ஊரறிய,உலகறிய ஒருவனுடன் ஓடிப் போனவளைத் திருத்தி, பணத்தையும் செல்வாக்கையும் காட்டி, ஒரு இளிச்சவாயனை மடக்குவதை விடவும் இந்தக் கெட்டவனுடன் எப்படியோ வாழ்ந்து போ என்று வைராக்கியம் கொள்வதல்லவா, கற்பு நெறி பேணும் பொற்புடைய வாழ்வு?

ஒழுக்கம் என்பது குறித்து இந்த சினிமாக்காரர்களுக்குச் சிறிதுகூடக் கவலை வராதோ?

சிந்தித்தாரா சேரன்?


நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
6.8.2013
Post a Comment