Sunday, October 31, 2010

அறிவுடையோர் அறிக-1 (புதிய தொடர்)

அறிவார்ந்த நண்பர்களே,

வணக்கம்.

நமது நாட்டில்,தொன்று தொட்டுப் போற்றப் பட்டு வந்த ஞானக் கலைகளில் தலையாயது, ஜோதிட அறிவியல்.

உலகின் ஞானப் பொக்கிஷங்களில் ஒப்பற்றதும் காலக் கணிதத்துக்கு அப்பாற் பட்டதுமான இந்திய வேதங்கள் நான்கு
இந்த நான்குக்கும்கண் போன்றது,ஜோதிடம்என்று வேதங்களே சொல்கின்றன.

நமது வேதங்களை அறிவது; அவற்றின் கொள்கைகளைப் புரிந்து கொள்வது என்பதே மிகப் பெரிய அறிவுடைமை; அதற்கென்றுஞானம்வேண்டும்அதை 'ஒரு மொழியினருக்கும்,ஒரு இனத்தவருக்கும் உரிமை' என்று பேசி ஒதுங்கிக் கொள்வதும்,ஒதுக்கி விடுவதும் மூடர்களின் இயலாமை.

'வேதமும் வேதாந்த விஷயங்களும் ஆரியரின் சொத்துக்கள்என்பதாய் ஒரு மாயை உருவாக்கப் பட்டு அதைப் பரப்புவதும்பேசுவதும் அறிவு ஜீவித் தனமென்றும்;பகுத்தறிவு சார்ந்த விஷயமென்றும் பேசி சந்தோஷப்பட்டுத் திரியும் ஒரு கேனத் தனமான உணர்வு நம் தமிழர்களிடையே தொற்றுநோய் போல் தொடர்கிறது.

வேதங்கள் என்றாலும் வேதாந்தம் என்றாலும் நம் தமிழர் 
சிலருக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது; வெறிகொண்டு சீறுகிறார்கள்.

நம் வாயில்  நுழைய வில்லை என்பதற்காக நாம் இந்தியைப் புறக்கணித்தோம்.அப்போது ஏழை எளிய மக்கள் இருண்ட கண்டத்தில் வாழ்ந்திருந்த  காலம்,’தமில்பிரசங்கிகளுக்கு வசதியாகப் போயிற்று.

அன்று-
தமிழர்கள்,அவர்களின் பிரசங்கத்தை நம்பினர்.

இன்று-
அந்த ஏழைகளின் பிள்ளைகள் எந்த முன்னேற்றமும் இன்றித் தவிக்கின்றார்கள்.

நாம் முன்னேற்றத்தில் ஒரு 40 ஆண்டுக்காலம் பின் தங்கி விட்டோம்.
அந்தப் பிரசங்கிகளின் பிள்ளைகளோ, ‘இங்லிஷ் கான்வென்ட்டில் செகண்ட் லாங்குவேஜ்ஆக இந்தியைப் படித்து, பதவிகள் பெற்று, முன்னேறி,இன்று பில்கேட்ஸ்களுக்குப் பிரியா விடை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் இந்தஅறிவுஜீவிகள்கேட்பதாய் இல்லை.

இந்திய ஞானத்தின் சிறப்பான விஷயங்களை இங்கொரு தமிழன் எடுத்தியம்பினால், அது கெட்ட விஷயமாம்.

இந்தக் கேனத் தனத்தை என்னென்பது? இதைக் குறிப்பிடுவதற்குக்  
காரணம் உண்டு.

ஞானத்தையும் மெய்ஞ்ஞான அறிவியலையும் கொண்டு திகழும்ஜோதிட ஞானம்பற்றிய அறிவு கிஞ்சித்தும் இவர்களுக்குக் கிடையாது;அதைக் கேலி செய்ய மட்டும் அறிவு நம்மவர்களுக்கு;கடன் வாங்கியாவது கிடைத்து விடுகிறது.

நண்பர்களே,
முதலில் நமது சாத்திரங்களைக் கேலி செய்யும் மனப் பாங்கை மாற்றிக் கொள்ளுங்கள்; அடுத்து. இந்த  அரைவேக்காட்டுஅறிவாளிகளிடம் அடிமைப் பட்டுப் போய்விடாதிருக்க விழித்துக் கொள்ளுங்கள்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்; அப் பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

என்று வள்ளுவன் சொல்வதை உணருங்கள்;அந்த அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

'ஜோதிடம்பற்றிய அறிவு இல்லாமலேயே அதைக் கேலி செய்து பேசும்அறிவுப் பதர்களுக்கு. ஜோதிடம் என்பது யாது என விளக்கவும் இந்திய ஞானப் பொக்கிஷமான அதனைப் பற்றிய ஞானமின்றி, குன்றிப்போன பார்வை கொண்டு குத்தாட்டம் போடும் அவர்களது பேதமை பற்றி எடுத்துக் கூறவும், எந்தக் கலாசாரம், பண்பாடு இவற்றின் சாராம்சமாகப் பிறந்தார்களோ அவற்றைப் பழிக்கின்ற கொடும் பாவத்தை அவர்கள் செய்யாதிருக்கவும்கூர்வாள்எனும் எழுத்தாயுதத்தை எடுக்க நேர்கின்றது.

நமது ஞானப் பொக்கிஷங்களை அழிக்க நினைப்போர், தங்களிடம்
உள்ள சிந்தனை ஆயுதத்தைத் தீட்டிக் கொண்டு நம் எதிரில் வரலாம்; வரவேற்போம்.

முதலில் நாம் பகிரங்கப் படுத்திக் கொள்வது இதுதான்.

வேதங்களும் வேதாந்த விஷயங்களும் ஜோதிட அறிவியலும்இவர்கள் சொல்கின்றஆரியர்களானஅந்தணர்களின் அப்பன் வீட்டுச் சொத்தல்ல;அவை; அவை நம் நாட்டுச் சொத்து.

வேதம் சொன்னவர்கள் டைக்ரீஸ் நதிக் கரையிலிருந்து போலன்,கைபர் கணவாய் வழியாக கங்கை நதித்  தீரத்துக்கு வந்து குடியேறியவர்கள்என்று வசனம் பேசுவது பித்தலாட்டம்.

ஆரிய மாயை;ஆரிய சூழ்ச்சிஎன்று வாய் ஜாலம் பேசும் திராவிட மாயைக்கு மயங்கி, திராவிட சூழ்ச்சியில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு அறிவிலித் தனம்.

வரலாற்றுப் பின்னணியில்,தென் மேற்கு ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர்  போலன்,கைபர் கணவாய் வழியாக இந்துப் பிரதேசம் என்கின்ற  இன்றைய இந்தியாவுக்கு  வந்து  குடியேறியிருக்கலாம்.

ஆனால், அவர்கள்தான் வேதங்களைப் படைத்தார்கள்; அவற்றுக்குச் சொந்தக்காரர்கள்என்று பேசுவதும் அதை நம்புவதும் மிகப் பெரிய மோசடி;மடமை. பூவியலுக்கும் மானுடவியலுக்கும் பொருந்தாத தகவல்கள்.

ஏறத்தாழ 2500 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பூவியலில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்பட்டு,பாதிக்கப் பட்ட மக்கள் பூகம்பப் பகுதியை விட்டு,புலம் பெயர்ந்து புதிய குடியேற்றத்தை நாடி,தேடிக் கிழக்கே வந்திருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

அப்படி வந்தவர்கள், இமயத்தின் அடிவாரத்தில் கங்கை நதியின் கரைகளில் குடியேறி அதைக் காலப்போக்கில் சுவாதீனம் செய்து கொண்டார்களே யன்றிஅவர்கள்தான் வேதத்துக்கு உரியவர்கள்;அவர்கள் மொழியே சமஸ்கிருதம்என்று எவர் சொன்னாலும் அல்லது சொல்லியிருந்தாலும் அது ஒரு மாயையே தவிர மாண்பு மிக்க விஷயமல்ல!

ஆரியர்களே வேதத்தைப் படைத்தார்கள்என்று சொல்வதுநம் அம்மை இன்னொரு அப்பனிடம் குழந்தை பெற்றுக் கொண்டாள்என்று கூறுகின்ர கூறு கெட்டத் தனம்.

எந்த வரலாற்றுக்காரனாவதுவேதங்களை ஆரியர்கள்தான் இயற்றினார்கள்' என்று சொல்லியிருந்தால் அவன் நிச்சயம் கலப்பினக்காரனாகத்தான் இருப்பானேயன்றி, நம் நாட்டின் அசல் வித்தாக இருக்க முடியாது.

தென் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்களாகவே இருக்கட்டும்; ‘எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் சமஸ்கிருதம்பாலி மொழிகளில் அவர்கள் தேர்ந்து வேதங்களை உருவாக்கி இருக்க முடியும்?’ என்று எந்தத் திராவிடப் பிரசங்கியாவது சொல்லட்டும், ஆதாரத்தோடு.

இங்கு வந்த ஆரியர்கள் தென் மேற்கு ஆசியாவில் வாழ்ந்த அறிவு ஜீவிகள்.இதைக் கீழ் காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக உணரலாம்:

1. தங்கள் வாழ்விடம் பூம்பத்தினால் பாதிக்கப்பட்டதும்தாங்கள் வாழ்வதற்கேற்ற பகுதி வேறு எங்கு இருக்கிறதுஎன்பதைத் தங்கள் மதியூகத்தினால் கண்டுணர்ந்து இந்தியாவுக்கு வந்தது;

2. இந்தியப் பகுதிக்குச் சென்றால், அங்குவாழ்வதற்கும் நிலைப்பதற்கும் மக்களிடையேயும் மன்னர்களிடையேயும் மிக உன்னதமான இடத்தைப் பெற முடியும்என்கிற தன்னம்பிக்கை கொண்டிருந்தது;அதற்கேற்ற அறிவும் ஞானமும் அவர்களுக்கு இருந்தது.

3. பூகம்பத்தால் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து அவர்களை இங்கு வரவழைத்து அடைக்கலம் கொடுத்ததே நமது இமாயலயத்தில் லயம் கொண்டிருந்த ரிஷிகள்தாம். இமயச் சாரலில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்கள்,தங்கள் ஞானத்தினாலும் மேதைமையினாலும் தாங்கள் உணர்ந்திருந்த வேத அறிவை உள்வாங்கிக் கொண்டு, உரிய வகையில் காத்து, ‘அவற்றை இந்தியா முழுவதும் மக்களிடையே பரப்பும் ஞானமும் மனோதிடமும் உள்ளவர்களாகஇந்த ஆரியர்களை, அந்த ரிஷிகள் ஏற்றுக் கொண்டது

4. அதற்கேற்ப நமது ரிஷிகளின் கருணைக்கும் இரக்கத்துக்கும் பாத்திரமானவர்களாகவும், அறிவுடையவர்களாகவும் அந்த ஆரியர்கள் இருந்துள்ளனர்.

5. இங்கு வந்து குடியேறிய ஆரியர்களைக் கங்கை நதி தீரங்களில் பரவலாகக் குடியேற வைத்த  ரிஷிகளின் கருத்தை நடைமுறைப் படுத்தியது ஆங்காங்கே கோலோச்சிய மன்னர்கள். காரணம்,நமது ரிஷிகளின் சொல்லையும் எண்ணங்களையும்  நமது மன்னர்களும் மக்களும் தெய்வக் கட்டளையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்ட கால கட்டம் அது. அதன் அடிப்படையில், அந்த ஆரியர்களுக்குத் தேவையான மரியாதை மற்றும் வாழ்வதற்குரிய வசதிகளை எல்லாம் செய்து கொடுத்தது அன்றைய நிலையில் பரிபாலிக்கப் பட்ட ராஜ நீதியாகவும் இருந்தது.

6. அவ்வாறு குடியேறிய ஆரியர்கள்,தங்கள் அறிவு நுட்பத்தாலும், பணிவினாலும், பக்குவமான அணுகுமுறைகளினாலும் மிகக் குறுகிய காலத்தில் மன்னர்களிடத்திலும் உயர் மரியாதையைப் பெற்றதுடன் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை, மிகக் குறுகிய காலத்தில் சொந்த மண்ணாகச் சுவீகாரப் படுத்திக் கொண்டதும் அன்றைய நிகழ்வுகளாக இருந்திருக்கின்றது.

7. இதற்கெல்லாம் அடிப்படையாக, நமது ரிஷிகளின் வாழ்வியல் முறை மற்றும் மனிதர்களுக்கு அவர்கள் அருளி வந்த உபதேசங்களில் இந்த ஆரியர்களுக்கிருந்த பற்றுதல்;நாட்டம் முதலானவை முக்கியமான காரணங்கள்.மன்னர்களும் மக்களும் இறைவனின் பிரதிநிதிகளாக நமது ரிஷிகளைப் பாவித்து,அவர்கள் சொல்வதே வேதவாக்குஎனக் கொண்டு செயல்பட்டது,அதன் தொடர்புக் காரணங்கள்.

8. நமது ரிஷிகளைப் பற்றிய ஞானமும் பக்தியும் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே  மேற்கு ஆசியாவில் பரவி இருந்தது;அதற்கான ஆதாரத்தை, கிறித்துவர்களின் புதிய ஏற்பாட்டு மூலமே எடுத்துக் கூற முடியும். கூறுவோம். (மத உணர்வு கொண்டு இக் கருத்தை எதிர்த்து இப்போதைக்குத் தடுமாறி, எவரும் விழுந்து விட வேண்டாம்; நானே அடுத்து எழுதுவேன்;அப்போது மறுத்து எழுத முனைவோர் எழுத வரலாம்) இந்த ஆரியர்களுக்கு அப்போது  மேற்கு ஆசியாவில் நிகழ்ந்த பிரளயமும் அங்கு ஏற்பட்டு வந்த சித்தாந்தப் போதனைகளும் அங்கிருந்த அரசர்களின் புதிய சித்தாந்த ஈடுபாடும் வருத்தம் தருவனவாய் இருந்திருக்க வேண்டும்.அதே சமயம் மேற்கு ஆசியாப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்த ஆரியர்களுக்கு இமயச் சாரலில் வாழ்ந்த ரிஷிகளின் சித்தாந்தங்களில் நாட்டம் மிகுந்திருந்திருக்கவும் காரணங்கள் உண்டு. இவற்றின் தொடர்புகளால் அவர்கள், அந்தப் பிரளய காலத்தைக் காரணமாகக் கொண்டு இந்தியாவை நோக்கி வந்ததே உண்மையாக இருக்க முடியும்.

9. அந்தக் கால கட்டத்தில்  புனிதமிக்க இந்த முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் கீழ்ப்படிந்தே  மன்னர்களும் ஆட்சிசெய்து வந்ததால்இந்த ஆரிய மக்களுக்கு அந்த ரிஷிகளின் ஆக்ஞைப்படியேஉற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றிடவைத்தனர்நம் நாட்டு மன்னர்கள்மக்களும் மன்னர்களின் ஆணைப்படியே நடந்து இந்த ஆரியர்களின் அறிவுப் பணிகளுக்குக் கீழ்ப்படிந்து ஆரியர்களுக்குத் தனி மரியாதை செலுத்தி வந்தனர்.  ‘மன்னர் எவ்வழி மக்களும் அவ்வழிஎன்பது நம் முன்னோர் சொன்ன முது மொழியல்லவா?

இவ்வாறாகத்தானே அந்த ஆரியர்கள் குடியேறிய விதமும் அவர்கள் இந்திய மண்ணில் ஒன்றிப் போனவர்களாய் மாறிய  நிலையும் அன்றைய வரலாறாக இருக்க முடியும்?

வாழ்க்கையில், சொந்தப் பூமியை இழந்து,கைப் பொருள் இழந்து உற்ற உறவுகளை இழந்து, வேற்று மண்ணில் வாழ்வதற்குக் கொஞ்சம் இடமும் வாய்ப்பும் கிடைத்தால்,அகதியைப் போல் இருக்கும் அறிவுள்ள மனிதன் என்ன செய்வான்?

ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கி, அறிவினால் ஆகும் அத்தனை சாதனைகளையும் தோற்றுவிப்பானா அல்லது தோற்றுப் போவானா?

முக்காலத்தையும் அறிந்த அந்த வேத காலத்து முனிவர்களுக்குஆரியன்என்றும்,ஆரியன் அல்லாதவன்என்றும் பேதம் இருக்க முடியுமா?

வாழ்விழந்து தவிக்கும் மக்களை அவர்கள் கைவிட்டு விடுவார்களா?கருணை மிகும் இறை நேசர்களான நம் ரிஷிகள் அவர்களுக்குஅந்த ஆரியர்களுக்கு கருணைக் கரம் நீட்டி, அவர்கள் வாழ்வதற்கு வழிகாட்டி, தாங்கள் பெற்றிருந்த ஞானமாம் வேத அறிவைப் போதித்தனர்.

காலத்தின் கட்டாயமும்,ரிஷிகளின் கருணையும் அந்த ஆரியர்களை வெகு நுட்பமாக,வெகு விரைவாக அனைத்தையும் கற்றுக் கொள்ள வைத்து. ஆரியர்கள் அந்தக் கங்கைக் கரையில், கரையிலா அந்த ஞானங்களைக் கற்றுத் தேறினர்.

பற்றற்ற அந்த இமயச் சாரலின் ரிஷிகள்,தங்களைப் பற்றிப் 
பணிந்து, கற்றுத் தேறிய இந்த ஆரியர்கள், காலத் தேவையினாலும் ரிஷிகளின் எண்ணப்படியும்  மன்னர்களுக்கும் மக்களுக்கும் ராஜ குருக்களாகினர்

முக்காலமும் அறிந்த ரிஷிகளோ,தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமலேயே இமயச் சாரலில் தவத்தின் மூலம் இறைவனிடம் ஒன்றியிருத்தலிலேயே நாட்டம் செலுத்தினர்..அறிவுள்ளவன் ஆரியன் ஆனான். ஆதங்கப்பட்டவன் திராவிடன் ஆனான்.

அந்த ஆரியக் கூட்டத்தினர் மக்களுக்கும் மன்னர்களுக்கும் நல்லதை எடுத்துச் சொன்னால்,அதைப் புரிந்து கொள்ளாமல் புழுங்கியவர்கள் போய்ச் சேர்ந்த இடம்  ‘திராவிடம்’.

நம் ஏழை,எளிய மக்களைக் கற்றுக் கொள்ள விடாமல் அவர்களுக்குத் துர்ப் போதனை செய்யும் சூது மதியாளர்களே உண்மையான திராவிட இனத்தின் எதிரிகள்….

(எடுத்துச் சொல்வோம்....
அடுத்து ....>அறிவுடையோர் அறிக,தொடர் -2 காண்க.........> .
-கிருஷ்ணன் பாலா
 31.10.2010 / 06:44 am

Thursday, October 21, 2010

இந்திய மைந்தர்களே!

எத்தனை ஏற்றம் எத்தனை மாற்றம்;
இந்திய சுதந்திர வரலாற்றில்?
எத்தனை ஏக்கம்;எத்தனை ஊக்கம்;
எங்கள் பாரதத் திருநாட்டில்?

இத்தரையில் ஒரு நூற்றாண் டெய்திய
இந்தியக் காங்கிரஸ் இருக்கின்றதா?
உத்தமர் காந்தியின் உன்னத நெறிகள்
 உண்மையில் இன்னும் இருக்கின்றதா?

இந்திய மக்கள் சிந்திய ரத்தம்
இனும்நம் நினைவில் உரைக்கின்றதா?
வந்தேமாதரம் என்றே போதிலும்
வாழ்க்கையில் அதுநமை இணைக்கின்றதா?

அதன்பின் னால்நமை அடிமைகள் ஆக்கிய
அரசியல்  'விலங்குகள்' இருக்கின்றதே?
மதம்,இனம்,மொழிஎனும் வெறிகளி னாலே
மக்களை அழித்திடத் துடிக்கின்றதே?

ஆயிரம் கட்சிகள் முளைத்தவை இங்கு
அணு அணுவாகப் பிரிக்கின்றதே?
தாயவள்நமக்குப் பாரதம் எனினும்
தனித்தனி உணர்வுகள் தளிர்க்கின்றதே?

குளுமைக் காஷ்மீர் ரோஜா மலரின்
கூரியமுள் நமைக் குத்துவதேன்?
பளுமிகு நக்ஸல் பிரச்சினையில்;நாம்
பலவிதமாகக் கத்துவ தேன்?

தமிழன் எவர்க்கும் தாழ்ந்தவன் இல்லை;
தரணியில் நிமிர்ந்து நின்றானா?
அமைதியும் வளமும் பிறருக்கு நல்கும்
ஆற்றலில் தன்சுகம் கண்டானா?

தென்னகம் உள்ள இலங்கையின் மேன்மை 
தீட்டிய தமிழ் மகன் இப்போது;
தன்அகம் தேடி அலைகின்றான்:
தணிந்திடும் நிலமை எப்போது?

உன்னதம் படைக்கும் திறமையும் அறிவும்
ஓங்கிய பாரத மைந்தர்களே;
இன்றெழும் கேள்விக்கெவ்விதம் பதிலை
ஏற்பது என்பதை உரைப்பீரே!

இவண்-
கிருஷ்ணன் பாலா
15.8.1985ல் எழுதியது

எழுத்தில் ஏற்றம் வேண்டும்!

நன்றி: படம்- ச.உதயன்.
முகநூல் மற்றும் வலைத் தளம் என்று
முனைந்து எழுதிடும் நண்பர்க்கெல்லாம்:
அகம்எழும் உணர்வில் தமிழ் நலன்கருதி
அன்புடன் எழுதும் பண்புரைக் கடிதம்:
 
சமூகத் தளமென இதனைத் தந்தார்;
சமுத்திரம் போலே சங்கமம் ஆகி
சுமூகமாக ஒருவருக் கொருவர்
உணர்வுகள் பகிர்ந்து எழுதிடுகின்றோம்!


எழுதிடும்போது எல்லைகள் வகுத்து,
'இனியவை;புதுமை;இலக்கியச் செய்திகள்
பழுதில்லாமல் படைக்கும் கவிதைகள்;
படங்கள்,மற்றும் தகவல்கள்' எல்லாம்


படைக்கும் திறத்தோர் படைக்கின்றவாறும்
படிப்போர் உணர்ந்து மகிழ்கின்ற வாறும்
கிடைக்கும் தளம்’ என இதனைச் செய்து
கேண்மை கொள்வதே தமிழர் மேன்மை!


அண்ணன்-தங்கை ஆயினும்,கூட
அதீத அன்பைக் காட்டுதல் குறைத்து
பண்புடன் எழுதும் பக்குவம் நிறைத்து
படிப்பவர் மதிக்க,எழுதிடல் வேண்டும்!


ஒருவருக் கொருவர்  நேசிக்கின்ற
உண்மைக் காதல் உள்ளே இருப்பின்
பருவக் காமம் அதனைக் கவியாய்;
படிப்பவர்க் கெல்லாம் எடுத்துரைக் காதீர்!


தமிழுக்கென்று தனிச் சிறப்புண்டு;
தயவும் பணிவும் தகைசால் பண்பும்
அமைந்த மொழி என அகிலம் சொல்லும்
அதனை உணர்ந்து எழுதுதல் நம் கடன்!


பண்டை இலக்கியம் பழந்தமிழ் நெறிகள்
பக்குவம் நிறைந்த காதல் கவிதைகள்
கண்டு,மகிழ்ந்து எழுதுவ தெல்லாம்
காண்போருக்கும் கற்பித்தல் பொருட்டே!


இலைமறை காயென எழுதிடும் செய்திகள்
எச்சில் இலைபோல் காற்றில் பறக்க
தலைமுறை இதனைக் கெடுக்கும் விதத்தில்
தமிழைக் கெடுத்து எழுதாதிருப்பீர்!


நல்ல சந்ததி இன்றைய தலைமுறை
நாளை அவர்தாம் ஆளும் குடிகள்
நல்லவர்,வல்லவர் என்றவர் இருந்து
நாடும் வீடும் காத்திடச் செய்வீர்!


இவண்-
கிருஷ்ணன் பாலா
21.10.2010 / 11:28 காலை

Saturday, October 16, 2010

கவிதைக்கென்று தனித் தளம்-அழைப்பிதழ்

அறிவார்ந்த நண்பர்களுக்கு,வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் இந்த விஜய தசமி நன்னாளில் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.


வெற்றித் திருமகளும் அறிவுத் திருமகளும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்காதிருப்பார்களாக.


இந் நன்னாளில் ,’கிருஷ்ணன் பாலா‘ என்ற பெயரில் தனி வலைத் தளம் ஒன்றைத் தொடங்கி உள்ளேன். அதன் முகவரி்: http:krishnanbalaa.blogspot.com  இதை,கவிதை ரசிகர்களுக்கென்று மட்டுமே உருவாக்கி உள்ளேன். அதற்கான அழைப்பிதழ் கீழே பதியப்பட்டுள்ளது.


இந்த ’உலகத் தமிழர் மையம்’வலைத் தளத்தை உங்கள் அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு இதில் யாரும் எழுதிடலாம் என்ற பொது நோக்கோடு அமைத்துள்ளேன்.


உலகெங்கிலுமிருந்து, இதுவரை 1500 விருந்தினர்கள் 20 நாடுகளிலிருந்து இதைப் பார்வையிட்டுள்ளனர்.


இவர்களில் 98 சதவிகிதம் பேர்  பார்வையளர்களாக மட்டுமே இருந்து விடுகிறார்கள்:கருத்துரையைப் பதிவு செய்வோர் மிக மிகக் குறைவு.


உங்களில் பெரும்பாலானோருக்குத் தமிழைப் படிக்க மட்டுமே முடிகிறது என்பதால் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன்.


யாரும் எழுதலாம்;ஆங்கில வார்த்தைகளிலேயே உங்கள் தமிழை TYPE செய்தால்,தமிழில் அப்படியே வார்த்தைகள் மாறும் SOFTWARE ஒன்று உள்ளது. அதை DOWN LOAD செய்து கொண்டால் net இல்லாதபோதும்கூட சாதாரணமாக MS Word document Type செய்வது போல type செய்து மகிழலாம்.


தமிழில் Type செய்ய முயலுங்கள். விருப்பம் உள்ளோர் எனக்கு எனது மின்னஞ்சலுக்கு (Mail id  - krishnanbalaa@gmail.com) க்கு எழுதினால் சுலபமாக  5 நிமிடத்தில் அந்த SOFTWARE  ஐ  DOWN LOAD செய்து கொள்ளும் முறையை எழுதி அனுப்புவேன்.நன்றி.
இனி, எனது புதிய தனி வலைத் தளமான http://krishnanbalaa.blogspot.com/ ஐ பார்வையிட  வாருங்கள். எனது அழைப்பு இதோ:
-----------------------------------------------------------


 நண்பர்களே,வணக்கம்.


அனுபவம் எனும்
குப்பைகளையே உரமாக்கிக் கொண்டு
தளிர்ப்பவைதாம் கவிதைகள்.


இவற்றுக்கு விதைகள்
எங்கிருந்து இரைக்கப் படுகின்றன?


ஆள் நடமாட்டமே இல்லாத
அடர்ந்த காடுகள்,
பச்சை மரங்கள் படர்ந்து,
எப்படிப் பசுமை வனமாயிற்று?


அவற்றுக்கு விதைகளைத் தூவி,
காற்றும் மழையும் வெயிலும் தந்து
படைத்தவன், எவனோ,அவனே,
எந்தன்
மனம் எனும் வனத்தில்
கவிதைகளுக்கான
எண்ண வித்துக்களைத் தூவுகின்றவன்.


இன்பமும் துன்பமும்
அவற்றுக்கான உரங்களாகின்றன.


காலம் எனும் மழை நீரால்
அவை,
துளிர்த்து வேரூன்றி
கவிதை மரங்களாய்ப் பூத்துக் குலுங்குகின்றன!


இன்பம் மட்டுமே வாழ்க்கை என்றால்,
அது-
செல்வச் சீமான் வீட்டுச்
சவலைக் குழந்தை போல ஆகிவிடும்.


விருந்தும் வேடிக்கையும் மட்டுமே
அதன் வளர்ச்சியாக இருக்க முடியும்.
வளரந்தபின் பார்த்தால்தான் புரியும்:
அது, அனுபவமும் அறிவுமற்ற
சவலைக் குழந்தையாக வளர்ந்திருப்பது!


கவிதையின் சத்தும் அவ்வாறே!


வெறும் இன்பத்தை மட்டுமே
துய்த்துணர்ந்த அனுவத்தால்
எழுதப் படும் கவிதைகள்
சருகுகள் போன்று
காலம் எனும் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டுக்
காணாமற் போய் விடுகின்றன!


துன்பம்-
அனுபவிக்கும்போது
மனதைக் கலங்க வைக்கும்;
தனக்குத் தானே’ கதற வைக்கும்!


தெளிந்தபின்தான் தெரியும்:
‘அத்தனையும் ஞானத்தின் விளைச்சல்’ என்று.


அறிவும் ஞானமும்
வேறு எதைக் கொண்டும்
விளைந்து விடுவதில்லை,நண்பர்களே,
அனுபவத்தைத் தவிர;


“துன்பமே அனுவங்களின் சிறந்த ஆசான்”.


‘எனக்கு-
நிறையக் கவிதைகளை
எழுதும் தகுதிகளை
குருநாதன் அருளியிருக்கின்றான்;


அவற்றில்-
நீந்தி , நீந்தி
ஏகாந்தக் கரையில்
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றேன்’


என்பதை-
இங்கே,
எனது கவிதைகளே கட்டியம் கூறும்.


எண்ணங்களைச்சாறு பிழிந்து
இலக்கிய மலர்கள் பூத்துக் குலுங்கிட
வண்ணமயமான வார்த்தைகளில்
வடித்துத் தருகின்றேன்,கவிதைகளை!


“இலக்கியத் தேனீக்கள் மட்டுமே
உலவிடக் கூடிய ஏகாந்த வனம் இது”


அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
16.10.2010
krishnanbalaa@gmail.com
http://krishnanbalaa.blogspot.com/