Saturday, October 16, 2010

கவிதைக்கென்று தனித் தளம்-அழைப்பிதழ்

அறிவார்ந்த நண்பர்களுக்கு,வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் இந்த விஜய தசமி நன்னாளில் எனது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.


வெற்றித் திருமகளும் அறிவுத் திருமகளும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்காதிருப்பார்களாக.


இந் நன்னாளில் ,’கிருஷ்ணன் பாலா‘ என்ற பெயரில் தனி வலைத் தளம் ஒன்றைத் தொடங்கி உள்ளேன். அதன் முகவரி்: http:krishnanbalaa.blogspot.com  இதை,கவிதை ரசிகர்களுக்கென்று மட்டுமே உருவாக்கி உள்ளேன். அதற்கான அழைப்பிதழ் கீழே பதியப்பட்டுள்ளது.


இந்த ’உலகத் தமிழர் மையம்’வலைத் தளத்தை உங்கள் அனைவரின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு இதில் யாரும் எழுதிடலாம் என்ற பொது நோக்கோடு அமைத்துள்ளேன்.


உலகெங்கிலுமிருந்து, இதுவரை 1500 விருந்தினர்கள் 20 நாடுகளிலிருந்து இதைப் பார்வையிட்டுள்ளனர்.


இவர்களில் 98 சதவிகிதம் பேர்  பார்வையளர்களாக மட்டுமே இருந்து விடுகிறார்கள்:கருத்துரையைப் பதிவு செய்வோர் மிக மிகக் குறைவு.


உங்களில் பெரும்பாலானோருக்குத் தமிழைப் படிக்க மட்டுமே முடிகிறது என்பதால் படிப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன்.


யாரும் எழுதலாம்;ஆங்கில வார்த்தைகளிலேயே உங்கள் தமிழை TYPE செய்தால்,தமிழில் அப்படியே வார்த்தைகள் மாறும் SOFTWARE ஒன்று உள்ளது. அதை DOWN LOAD செய்து கொண்டால் net இல்லாதபோதும்கூட சாதாரணமாக MS Word document Type செய்வது போல type செய்து மகிழலாம்.


தமிழில் Type செய்ய முயலுங்கள். விருப்பம் உள்ளோர் எனக்கு எனது மின்னஞ்சலுக்கு (Mail id  - krishnanbalaa@gmail.com) க்கு எழுதினால் சுலபமாக  5 நிமிடத்தில் அந்த SOFTWARE  ஐ  DOWN LOAD செய்து கொள்ளும் முறையை எழுதி அனுப்புவேன்.நன்றி.




இனி, எனது புதிய தனி வலைத் தளமான http://krishnanbalaa.blogspot.com/ ஐ பார்வையிட  வாருங்கள். எனது அழைப்பு இதோ:
-----------------------------------------------------------


 நண்பர்களே,வணக்கம்.


அனுபவம் எனும்
குப்பைகளையே உரமாக்கிக் கொண்டு
தளிர்ப்பவைதாம் கவிதைகள்.


இவற்றுக்கு விதைகள்
எங்கிருந்து இரைக்கப் படுகின்றன?


ஆள் நடமாட்டமே இல்லாத
அடர்ந்த காடுகள்,
பச்சை மரங்கள் படர்ந்து,
எப்படிப் பசுமை வனமாயிற்று?


அவற்றுக்கு விதைகளைத் தூவி,
காற்றும் மழையும் வெயிலும் தந்து
படைத்தவன், எவனோ,அவனே,
எந்தன்
மனம் எனும் வனத்தில்
கவிதைகளுக்கான
எண்ண வித்துக்களைத் தூவுகின்றவன்.


இன்பமும் துன்பமும்
அவற்றுக்கான உரங்களாகின்றன.


காலம் எனும் மழை நீரால்
அவை,
துளிர்த்து வேரூன்றி
கவிதை மரங்களாய்ப் பூத்துக் குலுங்குகின்றன!


இன்பம் மட்டுமே வாழ்க்கை என்றால்,
அது-
செல்வச் சீமான் வீட்டுச்
சவலைக் குழந்தை போல ஆகிவிடும்.


விருந்தும் வேடிக்கையும் மட்டுமே
அதன் வளர்ச்சியாக இருக்க முடியும்.
வளரந்தபின் பார்த்தால்தான் புரியும்:
அது, அனுபவமும் அறிவுமற்ற
சவலைக் குழந்தையாக வளர்ந்திருப்பது!


கவிதையின் சத்தும் அவ்வாறே!


வெறும் இன்பத்தை மட்டுமே
துய்த்துணர்ந்த அனுவத்தால்
எழுதப் படும் கவிதைகள்
சருகுகள் போன்று
காலம் எனும் வெள்ளத்தில்
அடித்துச் செல்லப்பட்டுக்
காணாமற் போய் விடுகின்றன!


துன்பம்-
அனுபவிக்கும்போது
மனதைக் கலங்க வைக்கும்;
தனக்குத் தானே’ கதற வைக்கும்!


தெளிந்தபின்தான் தெரியும்:
‘அத்தனையும் ஞானத்தின் விளைச்சல்’ என்று.


அறிவும் ஞானமும்
வேறு எதைக் கொண்டும்
விளைந்து விடுவதில்லை,நண்பர்களே,
அனுபவத்தைத் தவிர;


“துன்பமே அனுவங்களின் சிறந்த ஆசான்”.


‘எனக்கு-
நிறையக் கவிதைகளை
எழுதும் தகுதிகளை
குருநாதன் அருளியிருக்கின்றான்;


அவற்றில்-
நீந்தி , நீந்தி
ஏகாந்தக் கரையில்
இளைப்பாறிக் கொண்டிருக்கின்றேன்’


என்பதை-
இங்கே,
எனது கவிதைகளே கட்டியம் கூறும்.


எண்ணங்களைச்சாறு பிழிந்து
இலக்கிய மலர்கள் பூத்துக் குலுங்கிட
வண்ணமயமான வார்த்தைகளில்
வடித்துத் தருகின்றேன்,கவிதைகளை!


“இலக்கியத் தேனீக்கள் மட்டுமே
உலவிடக் கூடிய ஏகாந்த வனம் இது”


அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
16.10.2010
krishnanbalaa@gmail.com
http://krishnanbalaa.blogspot.com/

No comments: