Sunday, March 29, 2015

நல்ல மனதின் நட்புத் தேடி,

றிவார்ந்த நண்பர்களே,
 
சரியோ,தவறோ? நாட்டுச் சிந்தனை எனக்குள் புகுந்து விட்டது

சினிமாப் பாட்டு, சினிமாச் செய்திகள், காதல், கருமாந்திரம் போன்ற விஷயங்களில் ஏனோ ஒவ்வாமை என்னுள் புகுந்து விட்டது.

அதனால், அதைப்பற்றிச் சிலாகித்துக் கொண்டு தங்கள் வித்வத்தைக் காட்டிக் கொண்டு கிறுக்குவோரையும் எப்பொழுதும் அதற்கென்று வெட்டிக் கூட்டத்தை வளர்த்துக் கொள்வதை ஒரு பொழுது போக்காவே கொண்டிருப்போரைய்ம் இருப்போரையும் நான் அங்கீகரிக்க முடியாதிருப்பது  எனது அறிவுக் குறைபாடா? அல்லது அறிவு சார்ந்த விஷயமா? என்பதைப் பற்றி நான் ஆராய்ச்சி செய்வதில்லை

அந்த  வேலையைப்  புத்திக் கூர்மையுள்ள வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன்.

ஆனால் இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாவது

நியாயம் தேடும் நண்பர்களே,நல்லோரே,  

நாட்டுப் பற்றுக் குறித்தான சிந்தனைகளுக்கும், அறிவுப் பூர்வமான விஷயங்களுக்கும் சினிமாச் சிந்தனை,காதல் சிந்தனை என்பதெல்லாம் நேர் முரணானது

சினிமா பற்றியும் சினிமாப் பாடல்கள் பற்றியும் குறிப்பாக காதல் சங்கதிகளின் பலவித ரசனைகளை நீங்கள் எழுதிக் கொண்டே தேசம்,பண்பாடு, மக்கள் இலக்கியம்,ஒழுக்கம், குடும்ப மரியாதை இவை பற்றியும்  விரும்புவீர்களானால் அது விபரீதமான பாதைகளுக்கே உங்களை வழி நடத்தும்.

உங்கள் உள்ளக் கிடக்கையை  சாக்கடைச் சங்கதிகளால் நிரப்பிக் கொண்டு சமுதாயத்துக்கு நறுமனம் தெளிக்கும் வேலையைச் செய்கின்றேன்என்னும் உங்கள் வாதம்  நீங்கள்  யாரைக் கோமாளியாக்க விரும்புகிறீர்கள் என்பதை விளக்கி விடும்

கட்டிய மனைவியும் கழுத்துக்கு மேலே வளர்ந்த பிள்ளைகளும் அருகில் இருக்க  இன்னும் இருபது வயசுக்கு மேல் வளராதிருக்கும் உங்கள் புத்தியைச் சற்றேனும்  தீட்டிக் கொள்ளப் பாருங்கள்

வெட்டிப்பயல்களின் கூட்டத்தைச் சேர்ப்பதற்காகவும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சொறிந்து கொண்டு சுய புகழில் தேடிக் கொள்கிற அவல் நிலையை வளர்க்கவும்  எழுதாதிருங்கள்

ஒழுக்கம்,பண்பாடு,உயர் குணங்கள். அறச் சிந்தனை இவற்றில் நாட்டம் கொண்டோர் மட்டுமே நண்பர்களாக இருப்பதை குறிக்கோளாகக் கொண்டு,புதியதோர் சமுதாயம் காண விழையுங்கள்

முக்கியமாக மனச் சாட்சியை அடகு வைத்து விட்டு,முகநூல் முதலான வலைத் தளங்களில் முறுக்கிக் கொண்டு  அசுத்தம் செய்யாதிருங்கள்

ஒழுக்கம் மிக்க சமுதாயத்தின் ஒப்பரிய மாண்பை ஓங்கி நின்று உரைக்கும் எழுத்துக்களில் உலாவரும்  உள்ளத்தை எப்போதும் தீட்டிக் கொண்டிருங்கள்.

புத்தியைத் தீட்டுங்கள்-மனதின்
சுத்தியைக் காட்டுங்கள்

நல்ல மனதின் நட்புத் தேடி,

நான் உங்களுக்கு எழுதும் நல்லுரை இதுதான்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
29.3.2015

No comments: