Wednesday, November 27, 2013

முகநூல் டைரிக் குறிப்புக்கள்:2முகநூலில் எழுதப்படும் நிலைத் தகவல்களின் நிலையான எழுத்துக்கள் இவை. (தொகுதி:2)

கார்ப்பொரேட் சாமியார்கள்
தன்னை நேரிடையாகவோ தனது அடி வருடிகள் மூலமாகவோ விளம்பரப்படுத்திக் கொள்கிற துறவி அல்லது யோகி அல்லது சாமியார் ஒரு
கார்ப்பொரேட் சாமியார்தான்.

அவனைத் துதி பாடும் அடிவருடிகள் ஒரு கார்ப்பொரேட் அடிமைகள்.

இது எல்லா மதத்தின் எருமை மாடுகளுக்கும் பொருந்தும்

இதற்கு எதிர்வாதம் உண்டென்றால் தைரியமாக எழுதுங்கள்.

உங்களைத்தான் சந்திக்க ஆவல் கொண்டுள்ளேன்.
21.11.2013

பணம் என்பது......
பணம் இல்லையென்றால் வாழ்க்கை ஒரு சூன்யம்தான்.

ஆனால், பணம் உள்ளவனும் பணம் இல்லாதவனும் பிணம் ஆகிப் போன பின்னர் அந்தப் பணத்தால் எவ்விதப் பயனும் இல்லை என்பதைத் தெரிந்த பின்னரும் பணத்துக்காகவே எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்யும் அரசியவாதிகளையும் தொழில் அதிபர்களையும் சமூகச் சிந்தனையாளர்களையும் ஏன் கணவரை விட்டுப் பிரிந்த மனைவியரையும் மனைவியை விட்டுப் பிரிந்த கணவர்களையும் நான் ஏனோ நடமாடும் பிணங்களாகவே பார்க்கின்றேன்.

என் பார்வையில் உங்களுக்குக் குறை இருந்தால் சொல்லுங்கள்நியாயம் என்றால் திருத்திக் கொள்ளத் தயார்!
21.11.2013நான் கவிஞனும் இல்லை....
என்னைக் கவிஞர் என்று யார் அழைத்தாலும் எனது மனத்தின் உட்சுவர்களில் அவர்கள் ரத்தக் கறைகளையே கீறுகிறார்கள்.

பத்தாம் கிளாஸ் படித்தவனும் பாமர ஜனங்களின் பாராட்டுப் பெற்றவனும்
தன்னைடாக்டர்என்று போட்டுக் கொள்வதில் எத்தகைய மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றானோ அதுபோல்தான் ஒருவன் தன்னைகவிஞர்என்று போட்டுக் கொள்வதும்.

எனது பதிவுகள்;படைப்புக்கள்; கவிதைஎன்று கருத்தப் படுபவைகள் அனைத்தும் எனது பெருமையைப் பேசுவதற்கன்று; பெருமை மிக்க நம் தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து இருத்தற் பொருட்டே!
21.11.2013

முகநூலில் தங்கள் அறிவார்ந்த விஷயங்களைக் காட்டிக் கொள்ள எந்த அளவுக்கு சுதந்திரம் உண்டோ?, அதுபோலவே, ஒருவருடைய ஒழுக்கங்கெட்ட சிந்தனைகளைப் புளகாங்கிதப்படுத்தி அம்பலமாக்கிக் கொள்ள அதைவிட அதிக சுதந்திரம் உள்ளது.
21.112013


ஒழுக்கமே உயர்வு!
நாட்டுப் பற்றுக் குறித்தான சிந்தனைகளுக்கும், அறிவுப் பூர்வமான விஷயங்களுக்கும் சினிமாச் சிந்தனை என்பது நேர் முரணானது.

சினிமா பற்றியும் சினிமாப் பாடல்கள் பற்றியும் பலவித ரசனைகளை நீங்கள் எழுதி கொண்டு பிறகு தேசம்,பண்பாடு, மக்கள் இலக்கியம்,ஒழுக்கம், குடும்ப மரியாதை இவை பற்றி விரும்புவீர்களானால் அது விபரீதமான பாதைகளுக்கே உங்களை வழி நடத்தும்.

வெட்டிப்பயல்களின் கூட்டத்தைச் சேர்ப்பதற்காக எழுதாதிருங்கள்.

ஒழுக்கம்,பண்பாடு,உயர் குணங்கள். அறச் சிந்தனை இவற்றில் நாட்டம் கொண்டோர் மட்டுமே நண்பர்களாக இருப்பதை குறிக்கோளாகக் கொண்டு,புதியதோர் சமுதாயம் காண விழையுங்கள்.

முக்கியமாக மனச் சாட்சியை அடகு வைத்து விட்டு,முகநூலில் முறுக்கிக் கொண்டு முனகாதிருங்கள்.

நண்பர்களே,
உங்களுக்கு உள்ளன்போடு உரைக்கும் அறவுரை இதுதான்.
21.11.2013
 

நாட்டுச் சிந்தனை!
சரியோ,தவறோ? நாட்டுச் சிந்தனை எனக்குள் புகுந்து விட்டது.

சினிமாப் பாட்டு, சினிமாச் செய்திகள், காதல் கருமாந்திரம் போன்ற விஷயங்களில் ஏனோ ஒவ்வாமை என்னுள் புகுந்து விட்டது.

அதனால், அதைப்பற்றிச் சிலாகித்துக் கொண்டு தங்கள் வித்வத்தைக் காட்டிக் கொண்டு கிறுக்குவோரையும் எப்பொழுதும் அதற்கென்று வெட்டிக் கூட்டத்தை ஈர்ப்போரையும் நான் அங்கீகரிக்க முடியாதிருப்பது எனது அறிவுக் குறைபாடா? அல்லது அறிவு சார்ந்த விஷயமா? என்பதைத் தெரிந்து கொள்ள, புத்திக் கூர்மையுள்ள வாசக நண்பர்களுக்கே விட்டு விடுகிறேன்.
20.11.2013


நமது பாரம்பரியப் பெருமைகளை நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமோ அப்படியே நமது பரம்பரை அடிமைத் தனத்தையும் அறியாமையையும் தூற்றிப் புதைத்து அதையும் எச்சரிக்கையோடு பாதுகாக்க வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல;கால மரபினானே” -இது நன்னூல் குறிப்பு.
20.11.2013


பாரத் ரத்னா!
பாரத் ரத்னா, என்னும் உயர் தரவிருது உன்னதமான நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவை உன்னத நிலைக்குக் கொண்டு வரும் சிந்தனைகளில் செயல்பாடுகளில் தனித்து நின்று சாதித்துக் காட்டிய உத்தமர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உயர் விருது இது.

முதிர்சியும் அனுபவமும் புகழும் நிறைந்தவர்களுக்கு இதை வழங்கிப் பெருமை கொள்ள வேண்டிய இந்திய நடுவண் அரசு, வயது 40 ஐக் கூட்த் தாண்டாத ஒருவருக்கு 100 ஆண்டுச் சாதனைபோல் கருதி பாரத ரத்னாவைச் சூடி மகிழும் சிறுமையில் சிக்கிக் கொண்ட்து.

சிறுமதி கொண்ட ராகுல் போன்றவர்களின் குணத்தைத்தான் இது பிரதி பலிக்கின்றதே ஒழிய ஆழந்த சிந்தைனையையும் அறிவுப்பூர்வமான முதிர்ச்சியையும் அல்ல..
17.11.2013


கிரிக்கெட் கிறுக்கு!
பாரத ரத்னாவின் உயர் மதிப்பு இன்னதெனத் தெரியாதவர்களும் நாட்டின்
உண்மையான கௌரவம் எது எனப் புரியாதவர்களும்கிரிக்கெட் ஒரு வீர விளையாட்டுஎன்று கிறுக்குப்பிடித்துப் பேசுபவர்களும்தான் தேசபக்திக்கு கிரிக்கெட் மகத்தான பங்கு வகிக்கிறது என மாய்ந்து மாய்ந்து புகழ்கின்றனர்.

எனக்குத் தெரியும்:’நிர்வாணப் பிரதேசத்தில் கோவணம் கட்டிக் கொண்டு எழுதுவது நாம் தான்என்று.
17.11.2013

நேரு மாமாவுக்கு ‘டாட்டா’ 
நான் குழந்தையாக இருந்தபோது நேருவை மாமா என்று காட்டி அவரைநேரு மாமா என்றே பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் அடையாளப்படுத்தினர் அன்றைய ஆட்சியாளர்கள்.

இன்றைக்கும் அதே நேருவை இன்றைய குழந்தைகளுக்குமாமாஎன்பது சரித்திரப் பிழை.

ஏமாந்ததும் ஏமாற்றப்படுவதும் அரசியல் ஏய்ப்பு.
தலை முறைகள் மாறி விட்டன; தத்துவங்களும் மாறி விட்டன.
தலைப்புச் செய்திகள் மாறுவதில் தப்பு இல்லையே?
14.11.2013

ஆயிரத்தில் ஒருவன்!
அறிவுத் தாகத்துக்கும் அரிப்புத் தாகத்துக்கும் முகநூல் மதிப்பீடு 1:1000.

பத்துப்பேர் அறிவுத் தாகம் கொண்டவர்கள் என்றால் 10000 பேர் அரிப்புத்தாகம் கொண்டவர்கள்.

நாம் ஆயிரத்தில் ஒருவராக அறிவுத் தாகம் கொண்டவர்கள்தான் என்பதைப் புத்தி உள்ளோர் முகநூலில் பதிவு செய்து கொள்கின்றனர்.
                                                                  5.11.2013


எழுத்தே தலைஎழுத்து!
எனக்கு எதிரிகள் என்று எவரும்
இருக்க முடியாது.

என்னை எதிரியாக எண்ணுபவர்கள் தங்கள் மனச் சாட்சியின் எதிரிகளாகவே வாழ்பவர்கள் என்பதை எப்போதோ அடையாளம் கண்டவன் நான்.

எனது எழுத்துக்கள் எந்த ஒரு தனி மனிதரையும் குறித்துப்
படைக்கப்படுபவை அல்ல.

படைப்புலகில் கால் பதிக்கும் எவருக்கும் இருக்க வேண்டிய இலக்கணத்தை எடுத்தியம்பும் எனது எழுத்துக்கள் ஏணிப்படிகளே தவிர எவருடனும் சேர்ந்து ஏறிச் செல்பவை அல்ல.

சுய ஒழுக்கமும் சுய சிந்தனையும் இல்லாமல் அறச் சிந்தனைகளைச் சந்தைப் பொருளாக்கி, ஊருக்கு உபதேசம் செய்கின்றவர்களிடமிருந்து எப்போதும் விலகியே நிற்கின்றவன் நான்.

வசதியிலிருந்து வசதிக்காக வார்த்தெடுக்காமல் அனுபவங்களிலிருந்து சமூகத்தின் வசதிக்காக வடிவம் பெறும் எழுத்துக்களையே நேசிக்கின்றேன்.

அற்பக் காரணங்களுக்காக என்னோடு பகை கொண்டு விலகியவர்கள் சூழ்ந்த உலகில் அவர்கள்பால் அனுதாபம் கொண்டு வாழும் மனம் எனக்கு; அங்கலாய்ப்பும் அவதியும் கொண்ட குணம் அவர்களுக்கு.

சமூகத்தின் உண்மைக்கும் உயர்வுக்கும் எனதுஎழுத்துக்கள் உரைகல்லாகத் திகழ்பவை என்பதை உணர்வதற்கும் ஒப்புக் கொள்வதற்கும் தகுதிகள் வேண்டும்.

அந்தத் தகுதி இல்லாதவர்களின் கூட்டத்தில் நான் மேய்ப்பனாக இருப்பேனே தவிர ஒரு போதும் ஏய்ப்பவனாக இருக்க மாட்டேன்.
3.11.2013


தீபாவளி!
தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் எல்லாக் குழந்தைகளுக்கும் உற்சாகம் தரும் பண்டிகையாக வளர்ந்து விட்டது.

இந்துக்களின் தெருக்களில் அல்லது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியரின்குழந்தைகளும் கிறிஸ்துவர்களின் குழந்தைகளும்கூட மற்ற
குழந்தைகளைப்போல் புத்தாடை உடுத்திக் கொண்டும் பட்டாசுகள் கொளுத்தியும் இரண்டறக் கலந்து தீபாவளி நாளில் உற்சாகமாக இருப்பது கண்டு நாமும் மகிழ்கிறோம்.

இது இந்துக்களின் பண்டிகை என்பதை விடவும் இந்தியர்களின் பண்டிகை என்பதே சாலப் பொருந்தும்.

எனினும் இங்குள்ள அன்றாடங் காய்ச்சிகள்,தினக் கூலிகள், பிளாட்பாரங்களில் வாழ்வோர்,சேரிகளில் வாழ்வோருக்கு இது பணச் சுமையையும் பாரத்தையும் தருகின்ற பண்டிகையாகவும் இருக்கின்றதேஎன்று காணும்போது கண்களும் நெஞ்சமும் பணிக்கின்றன.

வசதி படைத்தவர்கள் தங்களுக்குக் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக புகையாகவும் கரிக் குப்பைகளாகவும் போகிற பட்டாசுகளை வாங்கிக் குவித்து மகிழும் வசதி படைத்தவர்கள், இல்லாத ஏழைகளின் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் கொஞ்சம் மனமுவந்து பட்டாசுகளும் புத்தாடைகளும் வாங்கித் தந்தால்தான் தாங்கள் கொண்டாடும் இந்தப் பண்டிகையில் முழுமை இருக்கும்; தர்மமும் தங்கள் வாழ்வின் ஒளியாகத் திகழும் என்பதை ஒரு சம்பிரதாயமாகவே மேற்கொண்டால்தான் இப்படிப்பட்ட பண்டிகைகளுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.

அருகில் இருப்போரும் நம்மிடையே நலிந்து இருப்போரும் இத்தகைய பண்டிகைகளால் கையறு நிலையில் கலங்க,நாம் மட்டும் ஆரவாரமாகக் கொண்டாடுவது நரகாசுரத்தனம் அல்லவோ?

நான் இதைத்தான் சிந்திக்கின்றேன்.

மற்றவர்களுக்கு ஈந்து உவகை கொள்கிற ரம்ஜானின் சிறப்பு இன்று என் மனதில் நிழலாடுகிறது.

எல்லோரும் இன்புற்று இப்பண்டிகையைக் கொண்டாட வாழ்த்துகின்றேன்.
1.11.2013


நைட்டி ஒரு நோய்!


நைட்டிஎன்றதொரு உடை எதற்கு? எந்த நேரத்தில்,எங்கே பயன் படுத்தப் படவேண்டும்/’படுகிறது என்பதை இந்தச் சமூகம் அறியும்.

ஆனால்அதை அணிந்து கொண்டு பொது நிகழ்ச்சிகளுக்கே போய் வர வேண்டும்;அதுபோன்ற தட்டுக் கெட்ட பண்புடைய தங்கள் அறிவின்மையானது இங்கே புரட்சிகரமாகப் புகழ வேண்டும்என்றும்தங்கள் கணவன்மார்கள் அதற்கெல்லாம் வெகுமதி வாங்கித்தந்து தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும்என்றும் தங்கள் அந்தரங்க ஆசைகளை இங்கே அரங்கத்தில் எழுதி இன்புறுவோர் பெண் குலத்தைப் பீடிக்கின்ற அபூர்வ நோய்.

பண்பட்ட தாய்க் குலமே,
இந்த நோய் உன்னைப் பற்றிவிடாதிருக்க நீ,உடனே தடுப்பூசி போட்டுக் கொள்.
22.10.2013


ஒரு தூரப் பார்வை!
மருத்துவ ரீதியாக தூரப்பார்வை என்பதும் கிட்டப்பார்வை என்பதும் நம்மில் பலருக்கும் உண்டு. அதாவதுஅருகில் இருக்கும் பொருட்களையோ, எழுத்துக்களையோ தெளிவாகக் காண முடியாமல் இருப்பதற்க்கு கிட்டப்பார்வைக் கோளாறு; தூரத்தில் உள்ள உருவங்களைத் தெளிவாக உணர
முடியாமல் திணறுவதற்குத் தூரப் பார்வைக் குறைவுஎன்று மருத்துவர்கள் கண்டு பிடித்து அதற்கேற்ப மூக்குக் கண்ணாடியை அணிவிக்கச் செய்கின்றார்கள்.

ஆனால், முகநூலில் இருக்கின்றவர்கள் அனைவருக்கும் (என்னையும் சேர்த்துக் கொள்ளலாமா கூடாதா? என்பதில் நண்பர்களுக்குக் குழப்பம் வர வேண்டும் ) கிட்டப்பார்வைக் கோளாறுதான் என்பது அப்பட்டமான உண்மை.

ஏனெனில், முகநூலாளர்கள், ஒருபோதும் தங்கள் அருகில் இருக்கும் குடும்பத்தாரை,நண்பர்களை,உறவுகளை எல்லாம் நட்பும் நேசமும் கொண்டு உற்றுப்பார்க்கும் பார்வையின்றி, எங்கோ,கண்ணுக்கும் நெஞ்சுக்கும் புலப்படாதிருக்கும் முகவரியாளர்களை மட்டும் பார்வைகொண்டு அவர்களிடம்பிசிராந்தையார் நட்புக் கொண்டுபிசினாக ஒட்டி உறவாடத் துடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

பரிதாபத்துக்குரிய இந்தப்பார்வை தூரப் பார்வைதானே?
22.10.2013


பெண்ணீயம்
பெண்ணீயம் பேசவேண்டிய பிரதேசம் இந்தியா அல்ல; இந்தியப் பண்பில் திளைத்தவள் பெண்ணீயம் பேசுபவளும் அல்ல.

ஏனெனில் பிறந்த மண்ணைத் தாய் மண் என்று பிறவி உணர்வுடன் பேசி, பெண்களைத் தெய்வம் நிகர் வைத்துப் பேசும் மக்கள் நாம்.

உலகிலேயே பெண்களைத் தாயாகவும் சகோதரியாகவும் மகளாகவும் பார்க்கின்ற கண்களும் மனமும் கொண்டவர்கள் இந்தியர்கள்.

ஒரு சில மனித மிருகங்கள் இருக்கின்றன, அதில் ஆண் மிருகங்களின் அடாத செயல் கண்டு பெண் மிருகங்கள் எல்லா ஆண்களையும் அதுவாகவே பார்க்கும் அறியாமையும் அடங்காமையும் கொண்டு மற்ற பெண்களுக்குக் கட்டுப்படா உரிமையை இங்கே உபதேசிக்கின்றன.

பன்னாடை அறிவு என்று ஒன்று உண்டு.
அது கசடுகளைக் கவ்விக் கொண்டு தெள்ளிய நீரை வெளியே விட்டு விடும் இயல்பு கொண்டது.

அந்தப் பன்னாடை குணம் கொண்டவர்கள்தான் பெண்ணியம்பேசுவதே பேரறிவு என பேதலித்துப் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கு எது பெருமையோ அதை அழித்து விட்டு அல்லி ராஜ்யம் நடத்துவதில் ஆசை கொண்ட வேசைகளாக இருக்கக்கூடாதுஎன்று இவர்களுக்கு நல்லது சொன்னால் பெண்ணியம் பேசும் இந்தப் பன்னாடைகள் பதறுகிறார்கள்; கடித்துக் குதற எத்தனிக்கிறார்கள்.

எனினும்-
இவர்களின் பித்தலாட்டப் பிரச்சாரம் கண்டு,எச்சரிக்கையாக ஒதுங்கி இருக்கும் குலமாதர்கள்தான் இந்தப்பன்னாடைகளுக்கு முதல் எதிரிகள்.

பிறகுதான் பெண்ணீயம் பேசுவோரின் எண்ணங்களுக்கு எதிராக எழுதுவோர்.
21.10.2013யார், எதில், முன்னிலை?
தமிழகத்தை யார் அதிக ஆண்டுகள் ஆண்டது? என்பதில் அதிமுக-திமுக
கட்சிகளிடையே போட்டி.

இதில் பூரித்துக் கொள்வது ..க்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும்.

உண்மையில் அதிக நாட்கள் ஆண்டு தமிழகத்தைக் குட்டிச் சுவர் ஆக்கியதில் யார் முன்னிலை பெறுகிறார்கள்?’ என்ற போட்டி வரும்போது...”அப்பாடா..நாங்கள்தான் பின்னுக்குப் போய் விட்டோம்என்று புளகாங்கிதம் கொள்கிற்வர்கள் .பிக் களும் அவர்களுடைய ஆதரவாளர்களும்.

நடு நிலையாளர்களோஇதைச் சொல்லலாமா.கூடாதா?’ என்பதில் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்....
17.10.2013


கோடாரிக் காம்புகள்
உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும் அவரவர்கள் கொண்டாடத்தக்க விசேஷ நாட்களும் பண்டிகைகளும் இருக்கின்றன.

அவற்றை எல்லாம் நம்மவர்களில் சிலர் கேலி செய்வதில்லை;ஆனால்,நாம் பாரம்பரியமாகக் கொண்டாடும் நோன்பு மற்றும் விசேஷ தினங்களை அவர்கள் கேலி செய்வதும் கிண்டலடிப்பதும்ஓர் அறிவுப் புர்ரட்சிஎன சிலாகித்துக் கொள்கின்றனர்.

நமது உணர்வுகளில் சகிப்புத் தன்மையும் சாத்வீகமும் மிகுந்திருப்பதாலேயே அவற்றை இந்தப் போலி சீர்திருத்தவாதிகள் கவசமாக்கிக் கொண்டு அதற்குள் வசதியாக ஒளிந்து கொள்கிறார்கள்.

உண்மையில் பிற மதத்தவர்கள் யாரும் இந்துக்களின் பண்டிகைகளைக் கேலி செய்வதில்லை.

இன்னும் சொல்லப்போனால் ஆயுத பூஜை அன்று பிற மதத்தவர்கள் கூட தங்கள் அலுவலகங்களில் விஜய தசமியைக் கொண்டாட அனுமதிக்கின்றார்கள்.

நமது மத நல்லிணக்கத்தைக் கெடுப்பதற்கென்றே இங்குள்ள சிலர் புல்லுருவிகளாகவும் கோடாரிக் காம்புகளாகவும் இருப்பதில் பெருமை கொள்கிறார்கள் என்பது பரிதாபத்துக்குரியதல்லவோ?
13.10.2013


 எது கவிதை?
எப்படியெல்லாம் கவிதை எழுதக் கூடாதுஎன்பதைக் கற்றுத்தரும் கற்றுக்குட்டிகளின் கவிதைகளைப் படித்து ஏராளமானவர்கள் கவிஞர்கள் ஆகி விட்டனர்;

எது கவிதை? என்று காட்டும் கவிதைகளைப் படித்தவர்களோ
வயிற்றெரிச்சல் கண்டுவிட்டார்கள்.

ஆக,தரமான கவிதை என்பது முகநூலில் அதிகம் ரசிக்கப்படுவதில்லை.

எனினும் ஒருசில கவிதை உணர்வாளர்களுக்கு மட்டுமே எனது
இலக்கிய விருந்து என்பது எழுதி வைக்கப்பட்ட சட்டம்.
12.10.2013
இலவசமாகக் கிடைக்கும் எதன் மீதும் இந்த மாக்களுக்கு மரியாதை இருக்காது என்பதைஅறியாதவன் அல்லன் நான். எனினும்என்கடன் பணி செய்து கிடப்பதேஎன்ற அப்பர் பெருமானின் வாக்கும்ஊருக்கு நல்லது சொல்வேன்; எனக்கு உண்மை தெரிந்ததைச் சொல்வேன்என்ற மகாகவி பாரதியின் நோக்கும் எனக்கு வேத மந்திரங்கள்.

எனது பதிவுகள் உண்மையையும் அறிவையும் யாசிப்பவர்களுக்கே அன்றி அவற்றை யோசிப்பவர்களுக்கு அல்ல!
3.10.2013


வருக மரணம்!
இதனைப் படிக்கின்ற நண்பர்களே,பெண்மணிகளே,

உங்களில் எவராவது, ‘மரணம் என்னை நெருங்க முடியாதுஎன்பதை உறுதி செய்ய முடியுமா?

முடியவே முடியாது.

ஆக மரணம் என்பது இன்றோ நாளையோ.அல்லது என்றோ ஒருநாள் உங்களை உங்கள் குடும்ப உறவுகளிலிருந்தும் உலகப் பற்றிலிருந்தும் கழற்றி இழுத்துச் சென்று விடக் காத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

இந்த நிச்சயமான உண்மையின் பொருட்டு,நீங்கள்பொய்யும் புரட்டும் மனச் சான்றுக்கும் விரோதமான செயல்களிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும்இன்றே உங்களைச் சுய அறிவோடு விடுவித்துக் கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்தவரை-

எனக்கு நேர்கின்ற மரணமோ துன்பமோ அறச் சிந்தனையின் பொருட்டே வர வேண்டும்எனத் தீர்க்கமான முடிவை எப்போதோ எடுத்து விட்டேன்.
3.10.2013


அ.சத்தியமூர்த்தி!
அரசியல்வாதி அற்புதநாதன் தனக்குப் புதிதாய்ப் பிறந்த மகனுக்குச்சத்தியமூர்த்திஎன்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அவருடைய தர்ம பத்தினி பதைபதைத்தாள்:

"என்னங்க,உங்களுக்குக் கொஞ்சம்கூட மனச் சாட்சியே இல்லையா? நம்ம
மகன் சத்தியமூர்த்தியின் பெயரை மக்கள்,நாளை கேலிப் பெயராய்ச் சித்தரிப்பார்களே?”

அற்புதநாதன் அமைதியாகச் சொன்னார்:

பைத்தியம்...எல்லோரும் அவனைஅசத்தியமூர்த்திஎன்று உணர்வதற்காகத்தானே இந்தப் பெயரை வைத்துள்ளேன். எப்போதும் அவன், எனது பெயரை இனிஷியலாகக் கொண்ட .சத்தியமூர்த்தி அல்லவோ?”
3.10.2013
Post a Comment