Sunday, November 3, 2013

காமன் வெல்த்தும் காமன் சென்ஸும்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இலங்கையில் நடைபெறவுள்ள ‘காமன் வெல்த்தில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்கிற அயோக்கியத்தனமான அரசியல் எதிர்ப்புப் போராட்டத்தைச் சிலர் நடத்தி வருகின்றனர்.

இவர்களின் கூற்றுப்படி இந்தியா கலந்து கொள்ளாமல் போனால்,இவர்கள் கூவுகின்ற அரசியல் சுதந்திரம் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைத்து, இதுவரை இலங்கைத் தமிழருக்கு எதிராக இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகள், பலாத்காரம், கற்பழிப்பு, கண்மூடித்தனமான இழிசெயல்கள் அனைத்துக்கும் தீர்வாகி விடுமா?

கொஞ்சம்கூட ‘காமன் சென்ஸ்’ இல்லாத அரசியல் பித்தலாட்டப் பித்து  இது.

தமிழ்நாட்டில் இருக்கிற ஏமாளித் தமிழ் உணர்வாளர்களிடையே தாங்கள்தான் தமிழர்களின் உரிமைக்குப் போராடும் உண்மையான அரசியலை முன் வைக்கின்றவர்கள்’ என்று கூறிக் கொண்டு, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்களை வளைக்கின்ற உள்குத்து ராஜ தந்திர முயற்சியே தவிர,இது  உண்மையாகத் தமிழர் நலம் பேணும் நோக்கம் அல்ல.

இலங்கை தமிழர் இனம் அழிக்கப்படுவதற்கு இலங்கை அரசுக்கு முழு ஆதரவையும்  அளித்தது, மத்தியில் ஆட்சி புரிந்தது, காங்கிரஸ் அரசு;
அதனோடு தோளுக்குத் தோளாய் நின்று  ஆட்சி அதிகாரத்தின் அத்தனை சுகங்களையும்  அனுபவித்துக் கொண்டிருந்தது கலைஞர். உடன் கட்டை ஏறும் பத்தினியாகக் கலைஞரின் கரங்களைக் கோர்த்துக் கொண்டு குள்ளநரி அரசியல் செய்தது திருமாவளவன்.

கலைஞரும் திருமாவும் நினைத்திருந்தால்  முள்ளிவாய்க்கால் போரில் பிரபாகரனைக் கைது மட்டும் செய்து, பெரிய அளவில் இனப்படுகொலை ஏற்படாதிருக்கப் பண்ணியிருக்கலாம்.

ஆனால் சோனியாவின் சொந்த வன்மத்துக்கு உடன்பட்டுத்தான் கலைஞர்  ஒரு போலி நாடகத்தை நடத்தினார். அவரது உண்ணாவிரதமானது பிரபாகரன் பிணமானதுக்குப் பழச்சாறு  சாப்பிட்டதுபோல்தான் ஆனது.

இது நம் அனைவரின் கண் முன்னே நடந்த அருவறுப்பான  அரசியல்.

பிரபாகரன்  அதர்மவழியில் கொல்லப்படுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்தது  சோனியாவின் சொற்படி நடந்த காங்கிரஸ் அரசு.

இத்தகைய இழி செயல்களுக்கு ஒத்து ஊதி,  பின் ஒப்பாரி வைத்தழுத கலைஞரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து  தமிழர்கள் முற்றிலுமாகக் களை எடுத்தனர்.

அதன் பின் கொஞ்சமும் லஜ்ஜையின்றி இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக ‘டெசோ’ என்றும்  ‘தமிழ் இனம்’ என்றும் ‘தமிழர் நலன்’ என்றும்  போலிக் கண்ணீர் சிந்திப் பிழைப்பு நடத்தும் அவலத்துக்குக் கலைஞர் ஆளாகி இருக்கிறார், இன்று.

மத்தியில் காங்கிரஸ் அரசின் அதிகார நிழலை விட்டு ஒதுங்காமல் கலைஞர் நடத்தும்  அரசியல் தமிழருக்கல்ல; அவரது ஒட்டு மொத்தக் குடும்ப நலனுக்கு மட்டுமேதான் என்பது,பாவம் இன்னும்கூட பலருக்குப் புரியவில்லை.

அந்தப் புரியாதவர்கள் போலி அரசியல்வாதிகளின் புரட்டு ஆதரவாளர்களாத்தான் இருக்க முடியுமே தவிர, அறிவார்ந்த சிதனையும் சரியான அரசியல் பார்வையும் கொண்டவர்களாக இருக்க முடியாது.

இந்த உண்மைகளை உணராதவர்கள்தான்  இலங்கைவாழ் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும்  ஏதோ ஒரு விடியலைக் கையில் வைத்திருப்பவர்கள்போல் ‘இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்னும் கோஷத்தைக் கொடி பிடித்துக் கொண்டு கூட்டத்தில் ‘கோவிந்தா’ போடுகிறவர்களாகக் கூவுகின்றார்கள்.

நண்பர்களே,

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’ என்பது திரிபு வாதம்; தெளியாத அரசியல் பேதம்; அரைவேக்காட்டு அல்பத் தனம்.ஆழ்ந்த உள் நோக்கம் கொண்ட அரசியல் பித்தலாட்டம்.

இந்தியா அதில் கலந்து கொண்டு இலங்கையில் நடை பெற்றுள்ள
இன அழிப்பு வன் கொடுமை மற்றும் போர்க் குற்றம்’ குறித்து எடுத்துரைத்து இலங்கையைக் கண்டித்து, இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரத்
இத்தருணத்தைப் பயன்படுத்தத் தூண்டாமல், அதற்கான சந்தர்ப்பத்தையே ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்று போராடுவதைத்தான் தமிழர் ஆதரவுப் போராட்டம் என்று அனர்த்தம்  கொண்டிருக்கிறார்கள்.

உண்மைக்கு எதிரான அரசியல் தீண்டாமையை வளர்ப்பதில்  அவ்வளவு அக்கறை இவர்களுக்கு.

‘காமன்வெல்த் மாநாட்டில்  இந்தியா கலந்து கொள்ளக் கூடாது’என்று போராடுவது தமிழர் நலனுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

எப்படி?

இதுவரை மத்தியில் உள்ள சோனியாவின் அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான வஞ்ச உணவோடுதான் செயல்பட்டு வந்தது. அதற்குத் தமிழகத்தை ஆட்சி புரிந்த கலைஞரும் அவரோடு இரண்டறக் கலந்து அரசியல் செய்த திருமா அவர்களும் ஒத்துழைத்து வந்தார்கள்.

இதன் மூலம் உலகின் ஒட்டு மொத்தத் தமிழர்களிடையில் காங்கிரஸுக்கு எதிரான ஆறாத சினமும் மாறாத வடுவும்  தோன்றிஉள்ளூரி முதல் உலகத்தமிழர்வரை,உணர்வால்   ஒன்றுபட்டிருக்கும்  நிலையில் அதனோடு கூட்டு வைத்திருப்பவர்கள் எல்லோருமே தமிழருக்குத் துரோகம் செய்தவர்களே’ என்றும் ’ காங்கிரஸ் தமிழர் இன விரோதி’  என்றும் உலகத் தமிழர்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்ட இத்தருணத்தில் தமிழக வாக்காளர்களை வசீகரிக்க ஏதாவது ஒரு காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றன், காங்கிரசும் அதனோடு கூட்டணி வைத்திருக்கின்ற கட்சிகளும்.

இந்த நிலையில் ’இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது’என்ற வாதத்தை முன் வைப்பதும் அதன் மூலம காங்கிரஸை ஒப்புக்கொள்ள வைப்பதும் இதுவரை தாங்கள் இலங்கைத் தமிழர் இனப்படுகொலை விஷயத்தில் எட்டப்பனாக இருந்து சோனியாவுக்கும் ராஜ பக்க்ஷேவுக்கும் ஒத்துழைத்த ஐந்தாம் படைக் காரியங்களை மறைத்துக் கொள்ளவும் காங்கிரஸ் இந்த விஷயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆஹராவாகத் திரும்பி விட்டது என்று காட்டவும்தானே தவிர  உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அல்ல.



இன்று எழுப்படும் வெறும் உணர்ச்சிகள் சார்ந்த கோரிக்கையை வலுப்படுத்தி அதன் அடிப்படையில் ‘தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வை மதித்து இந்தியா இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாது’ என்று அறிவித்து விட்டால், இங்கு  அதைத் தங்கள் வெற்றி என்று கொண்டாடுவதோடு, காங்கிரஸ் அரசின் கொள்கை முடிவுகளை ஆதரித்து. இனி இலங்கைத் தமிழர் விஷயத்தில் காங்கிரஸை நம்புகிறோம்’ என்று சொல்லி அதனோடு தமிழகத்தில்  கூட்டணி போட்டுக் கொள்கிற அரசியல் சந்தர்ப்பவாதம்  இது என்றாகாதோ?

அதற்காகத்தான் இவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே இதில் மறைந்துள்ள ராஜ தந்திரம்.

ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதில் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவா? என்பது பெரிதா? நீ அதில் கலந்து கொள்ளாதே? என்பது பெரிதா?

’கலந்து கொள்ளக்கூடாது’ என்று போராடுவதன் மூலம்
இதுவரை இலங்கைத்தமிழின அழிப்புக்குத் துணைபோன காங்கிரஸ் அரசைத் தூய்மைப்படுத்தவும் ‘சரி நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம்’  என்று காங்கிரஸ் அறிவிப்பதன் மூலம்  தமிழகத்தில் கூட்டணி போட்டுக் கொண்டு எதிர்ப்பாளர்களின் ஆதரவை வரும் தேர்தலில் காங்கிரஸ் பெறுகின்ற ராஜ தந்திரமாகவும் மாற்றிவிடத்தான் இம்முயற்சி.


எனவே, நாடாளுமன்றத்தேர்தலில்  திமுகவையும் திருமாவையும் தனது கவசமாக்கிக் கொண்டு  வாக்காளர்களை எட்டிப்பார்க்கக் காங்கிரஸ் தூண்டி விடும் உள்குத்து அரசியல் ராஜ தந்திரம்தான் காமன் வெல்து மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற கோஷம்.

காமன் வெல்த்தில் கல்ந்து கொள்ளாமல் போனால் அது இந்தியாவுக்கும் இலங்கைவாழ் தமிழர்களுக்கும்தான் இழப்பு. பிரதமர் மன் மோகன் சிங் இன்று எல்லாவகையிலும் தரம் தாழ்ந்து பிரதமர் பதவியின் தரத்தையும் வெகுவாகத் தாழ்த்தி விட்டார்.

இனி இவர்,இலங்கைத் தமிழர் விஷயத்தில் எதைப் பேசினாலும் அது எடுபடப்போவதில்லை. இந்த அவமானத்தையும் சரி செய்து தப்பித்துக் கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங்  கலந்து கொள்ளாமல் யாராவது ஒரு சப்பாணியை இந்தியாவின்  பிரதிநிதியாக அனுப்பி  பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டப் போவது காங்கிரஸ்தான்.

அவிந்து போன அரசியலுக்கு ஆலாபனை பாடுகின்ற வெற்றுக் கோஷங்களில் காங்கிரஸுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் வெட்கமே இல்லை.

நாம்தான் வெட்கித் தலைகுனிகிறோம்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
3.11.2013

No comments: