![]() |
எந்தை,’ தாயுமானவன்’ அமரர் கிருஷ்ணசாமிக் கவுண்டர் (1905 1990) |
அன்னைக் கருவ றையில் என்னைச்
சுமக்கும் முன்
அன்னை அவள் சுமந்த உன்னில் எனைச் சுமந்தாய்;
அன்னை அவள் சுமந்த உன்னில் எனைச் சுமந்தாய்;
தந்தை என்றெ னக்குச் சிந்தை
உரைத் தவளை
முந்தி இருந்த உயிர்ச் சொந்தம்
உனை மறவேன்!
வயிற்றில் சுமந் தாளை வாழ்வில்
சுமந் தாய்நீ;
கயிற்றில் வாழ்ந் தாளின் கருத்தில்
வாழ்ந்தாய் நீ!
பத்து மாதம் எனைப் பதித்து
வளர்த் தாளைச்
சொத்துச் சுகம் போலச்சுமந்த உயிர்
நீதான்!
உதிரப்பால் ஊட்டி உயிரை வளர்த்
தாளின்
எதிரில் இணை வைக்க இல்லை
ஒரு தெய்வம்!
எனினும் அவள் மேனி இளைத்
துவிடா திருக்க
உனது உதி ரத்தை உழைப்பில்
சிந்தி யவன்;
எனது தந்தை யென எண்ணி
நெகிழ்கின்றேன்!
மனதில் வைத் துன்றன் மாண்பில்
மகிழ்கின்றேன்;
தந்தை என்று மட்டும்தனித்து இல்லா
மல்,
எந்தை நீ எனக்குஎல்லா முமாய்
இருந்தாய்;
அறிவு புகட்டி எனை ஆளாக்கி
இம் மண்ணில்
உறவை உயிர் உணர்வாய் ஓங்க
வளர்த் தவனே!
தோயும் உணர்வுகளில் தோய்ந்து தோய்ந்து உனைத்
தாயு மான வனாய்த் தனித்து
வணங்கு கிறேன்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
30.11.2013
3 comments:
நடராஜன் has left a new comment on your post "தாயுமானவனே!":
//அன்னைக் கருவறையில் என்னைச் சுமக்கும் முன்
அன்னை அவள் சுமந்த உன்னில் எனைச் சுமந்தாய்;// ஐயா இந்தவரிகள் ஏன் என்னைக்குழப்புகிறது ?
அன்னையின் கருப்பையில் நாம் நுழையும் முன்னே தந்தையின் விந்தில் நாம் இருக்கிறோம். அந்த அன்னையால் சுமக்கப்பட்டவர் தந்தை. ஆக அன்னைக்கு முன்னே ’உன்னில் எனைச் சுமந்தாய்’ எனத் தந்தையின் உறவை முன்னிலைப் படுத்தும் வரிகள் இவை அய்யா!
நடராஜன் has left a new comment on your post "எனது ஆத்திச் சூடி!":
//அவ்வைப்பாட்டி இன்றிருந்தால் அவளும் இவ்வாறுதான் பாடியிருப்பாள்//
Post a Comment