Sunday, November 17, 2013

'பாரத் ரத்னா’: குருவி தலையில் பனங்காய்!

றிவார்ந்த நண்பர்களே,

டந்த  சில  மாதங்களுக்கு முன்பே  ‘சச்சினுக்குப்  பாரத ரத்னாவிருது கொடுக்க வேண்டும்’ என்ற கோஷம் எழுப்பப் பட்டது.

அதன்பிறகு அந்தக் கோஷம் ஏனோ அமுக்கப்பட்டு, அமைதியாகி, திடீரென இப்போது  சச்சினை ‘பாரத ரத்னாஎன்று  மத்தியில் ஆளும் காங்கிரஸ் அறிவித்திருப்பது,  சமீபத்தில் அவருக்கு காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்ட ‘ராஜ்ய சபை உறுப்பினர் என்ற கௌரவம் குறைவுஎன்று கருதிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.

ஆக, நாட்டின் மாநில எல்லைகளைக் கடந்து  பல லட்சம்  இளைஞர்-இளைஞிகளால் கொண்டாடப்படும்  ஒருவரைக்  காங்கிரஸ்காரராக்கி  MP பதவி  வழங்கி, அதன் பின் சில மாதங்களில்  அவரை  இப்போது  ‘தேசியச் சொத்து’  என்பதுபோல் காட்டி, அவரை  ஓட்டு வங்கியை நிரப்புப்புகின்ற இழிநிலைக்குக் கொண்டு  செல்ல எத்தனித்திருக்கிறது  காங்கிரஸ்.

ஊழலில் ஊறிப்போய். நாட்டில் நாறிக் கொண்டிருக்கிற காங்கிரஸ், தனது வெட்கங் கெட்ட மலிவான விளம்பர உத்திக்கு  இன்றுபாரத் ரத்னாவைப்  பயன் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை..

இந்தப் ‘பாரத ரத்னா’ மூலம் ‘அப்துல் காலமும் சச்சினும் ஒரே தரம்’ என்ற ஆனபிறகு, இனி, பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட இதை வழங்கினாலும் நாம் ஆச்சரியப்படப் போவதில்லை

கிரிக்கெட் என்ற விளையாட்டு ஒரு சூதாட்டம் நிறைந்தது. கிரிக்கெட் போர்டு தலைவர் பதவியை அடைவது முதலாய் அணியில் இடம் பிடித்து ஆடுவதுவரை  அனைத்திலும் பணமும் அதிகாரச் செல்வாக்கும்  புகுந்து, லஞ்சம் ஊடுருவி நிற்கும் தனியார் அமைப்பின்  ஊழல்துறை இது’ எனது அறிவுடையோர் அறிவர்;முட்டாள்களுக்குப் புரியாது..

நமது இளைஞர்களுக்கும் இளைஞிகளுக்கும் அநாகரிகமான தோற்றங்களையும் ஆர்வத்தையும் தூண்டி இருக்கிற ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியாகத்தான் இந்தக் கிரிக்கெட் இருக்கிறதே தவிர, தேசத்தின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஒருபோதும் தூக்கி நிறுத்துகிற விளையாட்டாக இதை ஒரு தொண்டு நிறுவனமோ தூய்மையான கொள்கைகளைக் கொண்ட அமைப்போ  கையில் எடுத்துக் கொண்டு நடத்தவில்லை.
 
கிரிக்கெட்  சூதாட்டத்தில் தொடர்புஎன  இப்போது பலரும் புகாருக்கு ஆளாகிச் சிரிப்பாய்ச்  சிரிக்கும்  இந்த விளையாட்டில்  மிகப் பெரும் கோடீஸ்வரானாய்த் திகழும் சச்சின், எப்பொழுதும் சுயநலமாகப் பெயரெடுக்கவும்  சாதனைப் பட்டியலை வளர்த்துக்  கொள்ளவும்தான்  தன் திறமைகளையும் புகழையும் பயன்படுத்தினாரே  தவிர , ஏழை, எளியவருக்கு ஒரு சல்லிக்காசைக்  கூட மனமுவந்து  தானம் செய்ததாகத்  தகவல்கள் வந்ததில்லை.

ந்த நிலையில் இந்தப்  பாரத் ரத்னாவுக்காக  அவர் என்னமாய்ப் பாடுபட்டிருப்பார்? என்பதும் சொல்லாமல் விளங்குகிறது, நமக்கு.

பாகிஸ்தானின் புகழ் பெற்ற கிரிகெட் வீரர்/கிரிக்கெட் குழுக் கேப்டனாகத் திகழந்த இம்ரான்கான் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து பாகிஸ்தானின் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மனையைக் கட்டி இருக்கிறார்.

அவருடைய அறச் சிந்தனைக்கும் சச்சினுக்கும் நேர் எதிர்மறையான குணாதியசங்கள்.

மும்பையில் மட்டும்  ரூபாய் 100 கோடி மதிப்புக்கும் மேலான  சொகுசுப் பங்களா கட்டி அதில் தனது  மனைவி குழந்தைகளைக்  குடி வைத்து, குஷியாக குடித்தனம் நடத்தும் அவரிடம் கணக்கில் வாராத கோடிகளும் உண்டு.
அவரது வருமான வரித் தாக்கல் எவ்வளவு  என்பது தெரிந்தால் வருமானம் காட்டாத சொத்து  எவ்வளவு இருக்கும் என்பது விளங்கும்.  அத்தனையும் கிரிகெட் விளையாட்டில் கொட்டிய பணம் மட்டுமல்ல அதையும் தாண்டி விளம்பரங்கள் மூலமும் நிதி முதலீடுகள் மூலமும் பல்கிப் பெருகிய பணம்.

சச்சின் நாட்டுக்கு  என்ன செய்தார்?  சச்சின் சம்பாதித்த பணம்  சூதாட்ட்த்தில் சம்பந்தப்பட்டது  என்று நாளை ஒரு புகார் எழுந்து  அதுபற்றிய  சர்ச்சைகள் கிளம்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

கிரிக்கெட்டில் கிறுக்குப் பிடித்துப்போய் சச்சினை கிரிக்கெட் கடவுள் என்ற அளவுக்கு உளறுகின்றவர்களும் சச்சினுக்குப் பாரத ரத்னா வழங்குவதில் புளகாங்கிதம் கொள்வோரும் இது பற்றி என்ன சொல்வார்கள்?

சரியான கோணத்தில்  புலன் ஆய்வு நட்த்தினால் தாவூத் இப்ராஹீமும் சச்சினும் எங்கேனும் ஒரு  நேர்க்கோட்டில் நிற்கத்தான் செய்வார்கள். ஏனெனில்  தாவூத் இப்ராஹீமை மீறி  இன்று கிரிக்கெட் விளையாட்டில்  சூதாட்டத்தை எவரும் நடத்த முடியாது’  என்பது உலக ரகசியம்.

பாரத் ரத்னா’  என்னும் உயர் தரவிருது  உன்னதமான  நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவை  உன்னத  நிலைக்குக் கொண்டு  வரும்  சிந்தனைகளில் செயல்பாடுகளில்  தனித்து  நின்று சாதித்துக்  காட்டிய உத்தமர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உயர் விருது இது.

முதிர்சியும் அனுபவமும் புகழும் நிறைந்தவர்களுக்கு  இதை வழங்கிப் பெருமை கொள்ள வேண்டிய இந்திய நடுவண் அரசு, வயது 40 ஐக் கூட்த் தாண்டாத ஒருவருக்கு 100 ஆண்டுச் சாதனைபோல் கருதி  ‘பாரத ரத்னா’வைச் சூடி மகிழும் சிறுமையில் சிக்கிக் கொண்ட்து.

சிறுமதி  கொண்ட ராகுல் போன்றவர்களின்  குணத்தைத்தான் இது பிரதி பலிக்கின்றதே ஒழிய ஆழந்த சிந்தைனையையும் அறிவுப்பூர்வமான முதிர்ச்சியையும் அல்ல..

இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பாடாப் படப் போகும் சச்சினுக்கு, அரசியல் உள் நோக்கம் நிறைந்த இந்தப்  ‘பாரத் ரத்னா’  பெரும்  அவமானத்தைத்தான் பின்னாளில் தரும்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்: குருவி தலையில் பனங்காய்!


இவண்-
கிருஷ்ணன்பாலா
17.11.2013
Post a Comment