Monday, September 23, 2013

கலைஞர்: வரலாற்றின் இருண்ட பக்கம்

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இன்று  (22.9.2013) தென்னிந்திய திரைப்படத்துறையின் காலம் நூறு
ஆண்டுகள் நிறைவெய்தியதை ஒட்டி மிகப் பிரமாண்டமான விழா, தென்னிந்திய திரைப்படத் துறையினர் சார்பாக சென்னை நேரு விளையாட்டு மைதானத்தின் உள் அரங்கில் இன்று ஏற்பாடு செய்யப் பட்டு, மாண்புமிகு தமிழக  முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமை ஏற்று, விழாப் பேருரையை நிகழ்த்தினார்.

அவரது உரை உலகெங்கும் தமிழ்ச் சேனல்கள் மூலம் ஒலி/ஒளி
பரப்பப் பட்டது. இதை உலகெங்கும் உள்ள தமிழர்கள் அநேகமாக எல்லோரும் பார்த்தார்கள்.

நண்பர்களே,
உலகத் தமிழர் இனம் படுபாதாளத்தில் வீழ்வதற்கு உரிய அத்தனை கேடுகளையும் செய்தவர் கலைஞர்தான்.

அதற்கு அவருக்குக் கையில் எளிதாகக் கிடைத்த ஆயுதம்; சினிமா.

அவருடைய தனிப்பட்ட வக்கிரங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள்குடும்ப உறவுகள், கொள்ளை அடிப்பதற்குக் கூட்டாக இருந்தவர்கள் தவிர வேறு யாரும் முன்னேறவும் உயர் நிலை அடையவும் கலைஞர் அனுமதித்ததே இல்லை.

’தமிழர்;தமிழ் இனம்’ என்றெல்லாம் அவர் வாய் கிழியப் பேசியதும் எழுதியதும் அத்தனையும் பித்தலாட்டம்;ஏமாற்றுத்தனம்.

தனது மனச்சாட்சியின் கேடு கெட்ட குணங்களைத் தனிமையில் சிந்தித்து உணர்ந்து வருந்தும் மனோ நிலையே இல்லாதவர் அவர்..

புராணங்களில் வர்ணிக்கப்பட்ட ’அரக்கர்களின் ஒட்டு மொத்தக் கலியுக அவதாரம் கலைஞர்’ என்று சொன்னால் அது மிகை அல்ல.

அவரைப் பின்பற்றும் அத்தனை பேரும் அரக்கர்களின் கலியுகப் பிறப்புக்கள்தான்; அவர்கள் தமிழ்ப்பண்பாட்டின் தலைசிறந்த கோட்பாடுகளைப் படித்தறியாப் பாதகர்கள்;அறிவிலிகள்..

அந்த அரக்கர் கூட்டத்தைத் துவம்சம் செய்ய வந்த அவதாரம் மேடம் ஜெ. என்பது எனது கணிப்பு.

மேடம் ஜெ. முன்பு கலைஞரின் எந்த சாணக்கியத் தனமும் எடுபடாது.
எம்.ஜி.ஆர் அவர்களைவிடவும் கலைஞர் மீது சினம் கொண்டு, சீறி எழுகின்ற குணம் மேடம் ஜெ. அவர்களுக்கு இருக்கிறது’ என்பதை நம்மால் உணர முடிகிறது.

அந்த உணர்வை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் இன்றுதென்னிந்திய திரைப் படத்துறையின் நூற்றாண்டு விழா வைபவம்’  அமைந்திருக்கிறது.

அதற்கு, இவ்விழாவில்  மாண்புமிகு தமிழக முதல்வர் மேடம் ஜெ. அவர்கள் தலைமை ஏற்று, நிகழ்த்திய பேருரை சான்று.

கலைஞர் முதல்வராக இருந்தபோது அவருக்கு முழு நேர ஈடுபாடே சினிமாக்காரர்களை அழைத்து வாரத்துக்கு ஒரு விழாவை நடத்தச் சொல்வதும், அதில் தனக்கு கிறு கிறுப்பை ஊட்டக் கூடிய நடிகைகளை மேடையில் தன் முன்னே தோன்றச் செய்து, ரசித்து இன்புறுவதும்தான்  மிகப் பெரிய கடமையாக இருந்தது.

அவருடைய செயலாளர்களுக்கும் இன்ன பிற IAS அதிகாரிகளுக்கும் மந்திரிமார்களுக்கும் முதல்வர் கலைஞரை மகிழ்விப்பது ஒன்றுதான்பெருமாள் சேவையாகஇருந்தது.

எத்தகைய விமர்சனங்கள் எழுந்தபோதும். கொஞ்சமும் வெட்கப்படாமல், மக்கள் நலத் திட்டச் சிந்தனைகள் ஏதுமின்றி பொழுது விடிந்தால் ’நாளைய சினிமா நிகழ்ச்சி அல்லது தனது பெருமைகளைப் பேசுகின்ற விதூஷகர்களின் விழா என்று திட்டமிட்டுச் செயல்படுவதே’ தனது ’அமைச்சர் அவையின் முக்கியப் பங்கு’ என முதல்வர் பதவியை முழுக்க முழுக்கத் தன் சுய இன்பத்துக்கென்றே அனுபவித்தவர் அவர்.

அதிகாரத்தின் மமதையால் திரை உலகத்தைத் தன் காலடியில் கிடத்தி
அவர்களை நாயினும் கீழாக நடத்தி, நச்சுச் சுகம் கண்டவர் கலைஞர்,

இன்று அதே திரை உலகம் அவரை இருட்டடிப்புச் செய்து, அவரைக் கௌரவிக்க மறுத்து விட்டதன் மூலம்  அவருடைய திரை உலக வாழ்வை எட்டி உதைத்திருக்கிறது.

இதைவிட வேறு ஒரு  அவமானம் கலைஞருக்கு வழங்கப்பட முடியாது.

திரை உலகமே,தன் பின்னால் அணிதிரண்டு ,தன்னைப் புகழ்ந்து பெருமை கொள்வதாக அளவுக்கு மிஞ்சிய  கற்பனையில் மிதந்து கொண்டிருந்தவரின் இன்றைய நிலை மிகவும் இழிவானதாக, வெட்கக் கேடானதாக மாறி விட்டது பார்த்தீர்களா?

திரை உலகில் ஒருவர் கூடச் சீண்டாதவராக, தீண்டத் தகாதவராக  உதாசீனப்பட்டு இன்று உளறிக் கொண்டிருக்கிறார்.

இதை ஆளுகின்ற அதிமுக அரசு செயல்பட்டு ஏதோ திட்டமிட்டு,’கலைஞரை இருட்டடிப்புச் செய்திருக்கிறது’ என்று எவரேனும் சொல்வார்களானால் அவர்களுக்கு நமது அனுதாபங்களைச் சொல்லிக் கொள்வோம்.


அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கு அடிபணிந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் நன்றியுள்ள நாய்தான் திரைப்பட உலகம்.

அது, ’தன் நன்றியை ஒழுங்காகச் செய்திருக்கிறதுஎன்றுதான் சொல்வேன்.

அதன் செயல்பாடுகள், மேடம் ஜெ. அவர்களை மகிழ்விக்கச் செய்திருக்கிறது அவ்வளவுதான்.

எனினும்-

என்னைப் பொறுத்தவரை, கலைஞர் திரைப்படத்துறையில் இருண்ட வரலாற்றுக்குரியவர்.

அவர் உண்மையான தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான அனாச்சாரக் கருத்துக்களைத்தான் திரைக்கதைகளாகவும்  வசனங்களாகவும் எழுதி, கலாச்சாரச் சீரழிவை ஏற்படுத்தக் காரணமாக இருந்தாரே ஒழிய, தமிழரின் உண்மையான பண்பாட்டுக்கும் மேன்மைக்குமான எந்தச் சிந்தனையையும் அவர் சினிமாவில் புகுத்தவில்லை.

அது அவருக்குத் தெரியாத ஒன்று.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?.

தமிழர்களைக் கேடு கெட்ட பாதையில் திருப்பும் அடுக்கு மொழி மற்றும் ஆரவார வசனங்களால் மயக்கி, தன்னையும் தனது கூட்டத்தையும் வளர்த்துக் கொண்டாரே தவிர , தமிழரை வளர்க்கவில்லை.

வரலாறு மன்னிக்க முடியாத மாபெரும் சுயநலவாதிதான் அவர்.
இந்த உண்மையைத் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கவியரசு எழுதிய ’வனவாசம்’ மற்றும்’ மனவாசம்’ நூல்களைப் படிக்க வேண்டும்.

இன்றைய வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் பேருரை நிகழ்த்திய தமிழக முதல்வர் மேடம் ஜெ. அவர்கள்  இதைத்தான் தெள்ளத் தெளிவாக தேர்ச்சி மிக்க உபகதை மூலம்  கலைஞரின் சுய உருவத்தை நமக்கு உணர்த்தி இருக்கிறார்.
திரை உலகில் அதிகம் பங்கு கொண்டு பிரபல கதாநாயகியாகத் திகழ்ந்த மேடம் ஜெ. அவர்கள்,  நம்மை எல்லாம் விட கலைஞரை அதிகம் தெரிந்தவர்.

பொய்யுரை செய்யத் தெரியாத புகழுக்குரியவர்.

தனக்குச் சரி என்று உணர்வதைத் தலை நிமிர்ந்து சொல்லவும் செயல்படுத்தவும்  தயங்காதவர்.

தமிழ், தமிழர் இனம் என்ற கோஷங்களைக் கையில் எடுத்துக் கொண்டு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் தமிழ்ப் பற்றையும் பாசத்தையும் ஒட்டு மொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்போல், திரை உலகத்தைத் தன் அடிவருடும் கருவியாக்கிக் கொண்டு, தாண்டவமாடிய கலைஞருக்கு அதே திரை உலகம் இன்று அவரை இருட்டடிப்புச் செய்து கொண்டதன்மூலம் அவருக்குத் தக்க வெகுமதி அளித்திருக்கிறது.

மறுபடியும் ஆட்சிக்கு வந்து திரை உலகத்தினரைப் பழிவாங்கும் வாய்ப்பே இல்லாதவரான நிலையில் புலம்புவதைத் தவிர, அவருக்கும் வேறு மார்க்கம் இல்லை.

இதற்கேற்ப,தமிழக முதல்வரின் தென்னிந்திய திரைப்பட நூற்றாண்டு விழாப் பேருரை,கலைஞரின் பங்கீட்டையும் அவரை நெருங்கி நின்றவர்களையும் பெயரில்கூட இருட்டடிப்புச் செய்துள்ளது.

அதற்குத் தான் காரணமல்லஎன்பதை வெகு சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்; ‘திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதுஎன்று அடிக்கோடிட்டு உரை நிகழ்த்தியிருப்பதே அதன் விளக்கம்.

சுயநலம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு,’பிறர் வாழாமல் தான் மட்டுமே வாழ வேண்டும்என்று வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவன் கிணற்றில் வீழ்ந்த கதையைச் சொல்லி அவன் மேலே வரமுடியாது மறுபடியும் கிணற்றுக்குளேயே வீழ்ந்து ஒழிந்ததைக் குறிப்பிடும் உண்மை அர்த்தம் பொதிந்த அவரது உரையைக் கேட்டவர்கள் ‘பாவத்தின் சம்பளம் யாதெ’னத் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

எனினும்

நம்மைப் பொருத்தவரை,கலைஞரை  எந்த வகையிலேனும் திரை உலகமோ,,தமிழக முதல்வரோ கைவிட்டு விட்டிருக்கக் கூடாது.

தமிழகத்தை இன்று கட்டி ஆளும் மேடம் ஜெ. அவர்கள் இது குறித்துக் கொஞ்சம்  கவனம் செலுத்தி, திரைப்படத்துறையில் கலைஞர் மற்றும் அவர் தொடர்பான கலைஞர்களைக் கௌரவித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் அவர்தன் கையால் கலைஞருக்கு ஏதேனும் ஒரு விருதை வழங்கி கலைஞர் அவர்களைக் கௌரவித்திருந்தால் மேடம் ஜெ. அவர்களின் பெருமையும் தகுதியும் பல மடங்கு உலகத் தமிழர்களின் நெஞ்சமெல்லாம் உயர்ந்திருக்கும்.

அந்த வாய்ப்பு ஏனோ தவிர்க்கப்பட்டு விட்டது; நமக்குச் சற்று வருத்தம்தான்.

எனினும் ஒன்று சொல்வேன்:
வரலாற்றின் இருண்ட பக்கங்களை இருட்டடிப்புச் செய்த போதிலும்,அதுவே ஒரு வரலாறாகி,அதுவும் பேசப்படும்தான்..

வரலாற்றின் இருண்ட பக்கங்களைப் புறக்கணித்தத் துணிவுகூட
வரலாற்றின் பக்கங்களே.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
22.9.2013

No comments: