Thursday, September 19, 2013

மோடி- ஒரு இந்திய வெறியர்.


மோடி என்றொரு அரசியல் அலை நாடெங்கும் வீசத் தொடங்கி அது நாளுக்கு நாள் பேரலையாய்,பெருகிக் கொண்டிருக்கிறது’ என்ற உண்மையை உணராதோர் கிணற்றுத் தவளைகள்;அல்லது கிணற்றுக்குள் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு கத்துபவர்கள்.

மோடி அவர்களை  இந்து வெறியராகப் பார்க்காதீர்கள்;இந்திய வெறியராகப் பாருங்கள்.

’இனப் படுகொலை,மதப் படுகொலைக்குக் காரணமானவர் மோடி’ என்று  வெறித்தனமாகச் சிலர் பேசுவதில்  உண்மை இல்லை;உள் நோக்கம்தான் இருக்கிறது.

உலகிலேயே அதிக முஸ்லீம் மக்கள் வாழும் நாடு என்று எடுத்துக் கொண்டால் இந்தோனேஷியாவுக்கு அடுத்ததாக இந்தியாதான்;இங்கே இருபது கோடி இஸ்லாம் மக்கள் பெருகி,பரவி வாழ்கின்றார்கள்.

இங்குள்ள இஸ்லாம் மக்கள் நம் முன்னோரின் ரத்த வாரிசுகளே. மத நம்பிக்கையிலும் இறை நம்பிக்கையிலும் வேறு பட்டாலும்கூட அவர்கள் பாரதத்தாயின் உதிரத்தில் பிறந்த வாரிசுகளே,

இந்தியா வலிமை பெற்ற நாடாகவும் ஊழல் ஒழிந்த நாடாகவும் ஒற்றுமை சிதறா நாடாகவும் நேர்மையும் உறுதியும் மிக்க பிரதமரால் ஆளப்பட வேண்டும்’ என்று எண்ணுகின்ற அனைவரும் மோடியை ஆதரிப்பது ஒன்றே கடமை.

குடும்பமும் குழப்பமும் இல்லாத கொள்கையுடையவர்;
குறிக்கோளில் பின் வாங்காத துணிவு மிக்க தேசப் பற்றாளர்.

’மோடி  பிரதமராகக் கூடாது’  என்பவர்கள் வேறு யாரை முன் நிறுத்தி அவரை மக்களின் மிகப்பெரிய ஆதரவு பெற்றவராகக் காட்ட முடியும்?

வேண்டாம் என்று சொல்பவர்கள் யார் வேண்டும் என்று சொல்லும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டுமே தவிர, கூட்டத்தில் கோவிந்தா போடும் கூகைகளாக இருக்கக் கூடாது.

ஆளும் அதிகார வெறி இல்லாத, ஆட்சியை நேர்மையாகவும் நிமிர்ந்தும் நடத்தி,பாரதத்தை உலக நாடுகள் எல்லாம் கண்டு மதிக்க வேண்டும் என்ற இலக்கு உடையவர்.

அந்த இலக்கை இந்தியாவை வழி நடத்தும் வல்லமை கொண்ட வல்லபாய் அவர்களின் வாரிசு. ’வாரிசு அரசியலை ஏற்படுத்தும்  வழியே இல்லாதவர்’ என்பதை நாட்டு மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

நான் பி.ஜே.பியை ஆதரிக்காதவன்;ஆனால் மோடியை முனைப்போடு ஆதரிக்கின்றவன்.

காரணம், ’
காங்கிரஸ் தன்னை எப்படிப்பட்ட தலைமையின் கீழ், நாட்டைக் கீழ்மைப்படுத்தி விட்டது? என்பதைக் கண்டு நெஞசம் பதைக்கின்றவன் நான். அதுதான் என்னைப் போன்றோருக்கு  மோடியை அடையாளம் காட்டி இருக்கிறது என்று சொன்னால் அது முழுக்க முழுக்க உண்மை.

எனது இஸ்லாம் நண்பர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.9.2013

No comments: