Tuesday, October 22, 2013

பண்புத் தமிழ்ப் பேண.....!


வேசைக் குணங்கள்;அதில்
ஆசைப் பட் டுழன்று
பேசித் திரிகிறவள் பெண்ணா?

தாசித் தனம் காட்டும்
தமிழை எழுதப் பெரும்
ஆசைப் படுகிறவன் ஆணா?

மோசம் மிகும் பண்பை
முந்திப் படித் திங்கு
நேசம் கொள்பவர்கள யாரும்

நாசம் புரிபவர் கள்;
நாட்டைக் கெடுப்பவர்கள்;
நபும்சப் பிறவியெனச் சொல்வேன்!

தாலித் தலைவ னையும்
தனது மனைவி யையும்
கேலிப் பொருள்ஆக்கிக் கொண்டு

போலித் தனங்க ளிலும்
புரட்டுக் குணங்க ளிலும்
பூசும் அரிதாரம் கண்டு

சேலைக்குள் ஆண் மகனும்
சேவல்போல் பெட்டைகளும்
ஆளுக்கு ஒருவிதமாய் இங்கு

தாளிக்கும் வார்த்தை களில்
தரம் கெட்ட பேர்வழிகள்
கேளிக்கை செய்வதைநான் கொல்வேன்!

யாருக்கும் அஞ்சா மல்
எவருக்கும் தாழா மல்
எழுதும் துணிவுதனைக் காட்டி

நேருக்கு நேர் நின்று
நிஜமான எழுத் துக்கள்
நிமிர்திங்கு நடைபோடத்  தீட்டி

தோளுக்குத் தோள் தந்து
தொய்வில்லா நட்போடு
தொடர்கின்ற கூட்டத்தைக் கூட்டி

பாருக்கு நலம் சொல்லும்
பாதைக்கு வா வென்று
படைக்கின்றேன்,என் மனதை இங்கே!

பற்றும் கணினி யுகம்
பண்புத் தமிழ் பரப்பப்
பற்றும் உணர்வுகளை நன்று

கற்ற மனம் உடையோர்
காட்டும் அக்க றையை
உற்று நோக்குகிறேன்,இன்று!

ஒற்று உற வாடி
ஓங்குத் தமிழ் நாடும்
சுற்றம் உடையவர்கள் என்று

முற்றும் நம்புகி றேன்;
முனைந்து எழுதுகிறேன்
முன்னே இருப்பவர்கள் அறிக!

இவண்-
கிருஷ்ணன்பாலா
22.10.2013

1 comment:

நடராஜன் said...

கற்ற மனம் உடையோனெனக்
காட்டும் அக்கறையை அக்கறையும்
உற்று நோக்கும்,இன்று நான்

ஒற்று உற வாடி உங்கள்
ஓங்குத் தமிழ் நாடும்
சுற்றம் உடையவர்களை

முற்றும் நம்புகி றேன்;
முனைந்து எழுதுகிறேன்
பின்னிருந்து அறிவதால்
அறியும் அறிவை பெறுவதில்
நானும் உங்களில் ஒருவன்