Wednesday, November 14, 2012

நீதிக்குச் சோதனை;நம் வேதனை!


நமது சுப்ரீம் கோர்ட்டை விட அதிகாரம் மிக்க கோர்ட் ஒன்று நமது நாட்டில் உள்ளதுஎன்பது இப்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை,lநமது அறிவு ஜீவிகள் முதல் பத்திரிகை மற்றும் தொலைக் காட்சி ஊடகங்கள்வரை யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை!

’புதிதாக 2ஜி வழக்கின் முறையீடுகள் எதையும் கீழ்க் கோர்ட்டுக்கள் ஏற்கக் கூடாது’  என்று சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டிருந்தும் டில்லி உயர் நீதி மன்றம் 20க்கும் மேலான அஃபிடவிட்டுக்களை 2ஜி ஊழல் மன்னர்களின் சார்பாக ஏற்று நோட்டீஸ் அனுப்ப,இதைக் கண்டு அதிர்ந்த சுரீம் கோர்ட் அந்த டில்லி உயர்நீதிமன்றத்தைக் கண்டித்துஅவ்வாறு மனுக்களைசுப்ரீம் கோர்ட்ஆணையை மீறி எப்படி ஏற்கலாம் என்று தீர்ப்பு அளித்து நிறுத்தி விட்டது.

இது நடந்தது சென்ற வாரம்.

இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு பற்றியும் மரபு பற்றியும் அஞ்சா நெஞ்சம் கொண்டு,அதையும் மீறி ’தான் கீழ் கோர்ட் அல்ல;மேல் கோர்ட்’ என்று காட்டி,சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைக் கேலிக்குரியதாக்கி  இருக்கிறது, டில்லி உயர் நீதி மன்றம்.

இந்திய நீதித்துறையில் இப்படியொரு அத்து மீறலும்  அக்கிரமத் துணிச்சலும் இதற்கு முன்பு இருந்தது இல்லை.

சரி,
டில்லி உயர் நீதிமன்றத்தின் இந்த செயலுக்கு யார் பொறுப்பு?
அதன் தலைமை நீதிபதியா?

2ஜி கொள்ளையர்களின் கூட்டுத் திட்டமா?

மத்திய அரசின் Learned Advocateகளின் அபார சட்ட ஞானமா?

அல்லது சுப்ரீம் கோர்ட்டை மட்டம் தட்டிப் பார்க்க வேண்டும்என்ற காங்கிரஸ் அரசின் கள்ள எண்ணமா?

இதில் சட்டமும் ஒரு எழவும் தெரியாத பாமரன் கொள்ளும் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பது யார்?

பின் குறிப்பு:
---------------------
ஒரு மாதத்துக்கு முன்பு, தேனி மாவட்டத்துக்காரரான ஒரு ஹை கோர்ட் நீதிபதிவட மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றதை ஒட்டி, அம்மாவட்டத்தின் பத்திரிகைகள் அனைத்திலும் சினிமா மற்றும் அரசியவாதிகளுக்குத் தரப்படும் விளம்பரங்களே வெட்கப்படும் அளவுக்கு அந்த நீதிபதியின் புதிய தலைமைப் பொறுப்பை வாழ்த்தியும் பாராட்டியும் ஜாதி மற்றும் ’சில்லரை’ வியாபாரிகளின் தனி மற்றும் கூட்டு விளம்பரங்கள் பக்கம் பக்கமாக, கலர் கலராகப் பளிச்சிட்டன.

இந்த சீரியஸான விளம்பரக் குற்றத்தை சம்பந்தப் பட்ட நீதிபதியே உற்சாகப் படுத்திப் புளகாங்கிதம் கொள்வதாக எனக்கு ஒரு சில மின்னஞ்சல்கள் வந்தன. இது ஒருவகை ஜாதிப் பற்றின் பணப் பின்புலம் என்று வேறு சில தகவல்களும் வந்தன.

எதையும் அந்த நீதிபதி கண்டு கொள்ளவில்லை.

இதைக் கடுமையாகக் கருதி எனது முகநூலில் எழுதினேன்.


அந்த நீதிபதி மட்டுமா? இங்கு முகநூல் அறிவு ஜீவிகளும்கூடத்தான் இந்த சீரியஸான விஷயத்தின் ஆழத்தையும் அவலத்தையும் நீதித்துறையின் சீர்கெட்டுப் போகும் ஆபத்தையும் கண்டுகொள்ளவில்லை.

நீதித்துறை அழுகி வருவதற்கு எடுத்துக்காட்டானவரின் வீரமிகும் தலைமையைப் பெற்றிருப்பதுதான் இந்த உயர் நீதி மன்றம் என்பதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்

இங்கே எவளாவது ஒருத்தி நமீதாவுக்குப் போட்டியாகக் கருத்தூட்டம் இட்டால் அங்கே போய்க் குவிந்து விடும் ஈக்களாக முகநூல் மற்றும் ட்வீட்டர் தளங்களின் அறிவு ஜீவிகள் இருக்கின்றார்கள்.

அழுகிய பழத்தின் ஈக்களாக இருப்பதையே விரும்புகின்றார்கள் போலும்.

‘இல்லை,நாங்கள் துணிவும் தேச நலனும் கொண்டு எழுதுவோர்’ என்று 
எவரேனும் எழுந்து நிற்பார்கள் எனில் அவர்கள் தங்கள் எழுத்தின் வீரத்தைக் காட்டட்டும்.


நீதியின் உயர் மாண்பு குறித்து கேள்விகள் கேட்பது தேச நலன் கருதுவோர் கடமை.

எனது நண்பர்கள் ’சிலர் இதெல்லாம் உங்களுக்கு எதற்கு? வம்பில் மாட்டிக் கொள்ளாதீர்என்று பயமுறுத்துகிறார்கள்.

நீதி வாழ்வதற்கும் அநீதியைச் சுட்டிக் காட்டவும் இயலாத எழுத்து எனக்கு
வேண்டாம் என்று இறைவனிடம் சொல்வேன்;

எனக்கு அவன் வழங்கிய எழுத்து இது.இதை அவனுக்கே காணிக்கை செய்து; எதிர் வரும் விளைவை எதிர் கொள்வேன்.


‘அநீதியை சாகடிக்க, நீதியை நோகடித்தால்தான் முடியும்’ என்றால்
அதை நான் செய்யத் தயங்க மாட்டேன்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.11.2012

No comments: