Monday, November 19, 2012

உலகப் பிரசித்தி பெற்ற கார்டூனிஸ்ட்!


அரபிக்கடலின் அமைதியான நகர்வு.
பால்தாக்ரே!

அறிவு ஜீவிகளுக்குப் பாசிஸ்ட்;
அப்பாவி மராத்தியர்களின் கடவுள்;

ஆனால்,நிஜத்தில் நிகரற்ற கார்ட்டூனிஸ்ட்!

இவரைத் திட்டுவோர்,இவர் எப்படி, மராத்தி மக்களின் ‘கடவுளாக’ மதிக்கப்பட்டார்?’ என்ற காரணங்களை ஆராய்ந்தால் தலை சாய்ந்துதான் ஆக வேண்டும்.

’பால்தாக்ரே’ என்று ஒரு தனி மனிதன் இல்லாது இருந்திருந்தால்,இன்று இந்தியாவின்பொருளாதாரத் தலை நகர் மும்பை, ‘பாகிஸ்தானின் ’பொருளாதர’த் தலைநகர்’ என்றே தாவூத் இப்ராஹிம் மாற்றிக் காட்டி இருப்பான்!

அப்போது இந்த அறிவு ஜீவிகள் இப்படியெல்லாம் கூவிக் கொண்டிருக்க முடியாது!

ஒரு ராணுவம் செய்ய முடியாத பணியை இந்த ‘பால் தாக்ரே’ செய்து காட்டியிருப்பதை நாட்டுப் பற்றுள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்’   அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து ஒழிக்க முடியாத  ’தாவூத் இப்ராஹிமின்’ அண்டர் க்ரவுண்டு ஆதிக்கத்தை மும்பையிலிருந்து அறவே ஒழித்து அவனை நாடு கடத்தி ’இண்டர் நேஷனல் அகதி’ ஆக்கிய சாதனை ஒன்றுக்கே நாம் பால் தாக்ரேவுக்கு ‘சலாம்’போட வேண்டும்.

மும்பைவாழ் மக்களில் பெரும்பாலோர் அப்படித்தான் பால்தாக்ரேயின்பால் மாறாத நம்பிக்கையும் மதிப்பும் கொண்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை பால்தாக்ரே தாதாதான்;
தாதாவுக்கெல்லாம் தாதா.
முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.

நமது மாநிலத்தில் எவனாவது ஒரு போக்கத்த வெட்டி அரசியல் தலைவன் செத்துப் போனால் திமிலோகப் பட்டுவிடும் தேசம். வன்முறைப் பேய்களுக்கும் வஞ்சக நரிகளுக்கும் மாபெரும் கொண்டாட்டமாக அண்றைய நாள் பண்டிகை தினமாகி அதில், கலவரம் தலை விரித்தாடும்.

வன்முறை அரசியல் நடத்தும் பாஸிஸ்ட்’என அறிவற்ற மூடர்களின்  மூச்சை அடக்கி விட்டனர் சிவசேனைத் தொண்டர்கள்.

ஆம்!

’பாலா சாஹேப்’ பால்தாக்ரேயின் இறுதி ஊர்வலத்தில் அரபிக் கடலே மும்பையில் புகுந்த போதும் சிறு அலைகூட கலவரம் என எழும்பவில்லை.

இது உண்மையான மத வெறியர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகவும் மும்பையில் குவிக்கப்பட்டிருந்த  போலீஸ்,ராணுவம் மற்றும் ஊர்க் காவல் படையினருக்குச் சிறந்த ஓய்வு நாளாகவும் ஆகிப் போனதில் உலகமே வியக்கிறது.

இறுதியாக-

தனது இறுதி ஊர்வலத்துக்கென்று தனது தூரிகையால் மும்பை மக்களின் அன்பையும் ஒற்றுமையயும் வரைந்ததுதான் கார்ட்டூனிஸ்ட் பால்தாக்ரேயின் ‘உலகப் பிரசித்தி பெற்ற கார்ட்டூன்!

இவண்-
கிருஷ்ணன்பாலா
19.11.2012

No comments: