Saturday, November 17, 2012

மறைந்தது மராத்திய சிங்கம்!



‘பாலா சாஹேப்’  பால் தாக்கரே
(1926-2012)
ன்றைய பம்பாயின் பத்திரிகை உலகின் கார்ட்டூனிஸ்டாக வாழத் தொடங்கி,உலகக் கார்ட்டூனிஸ்ட்களின் கருத்துச் சித்திரமாக விஸ்வரூபம் எடுத்தவர் பால்தாக்கரே.

அரசியலுக்கும் அப்பால் மும்பையின் முடிசூடாமன்னனாகதாதாக்களுக்கெல்லாம் தாதாவாக வாழ்ந்து காட்டியவர்.

அன்றைய பாரதத்தின் மொகலாயர்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீர சிவாஜியின் இன்றைய பிம்பமாகத் தன்னைக் காட்டிக் கொண்டு ஒளிவு மறைவின்றி  ‘இந்துத்துவத்தைக் காப்பதே தனது அரசியல் பணி’ என்பதை அறிவித்து அப்படியே வாழ்ந்தவர்..

இவரது அரசியல் நடவடிக்கை கண்டு எல்லாக் கட்சிகளுமே அஞ்சினஅடங்கின.

மதவாதம் இந்திய அரசியல் சாசனத்தின் எதிரியாகக் குறிக்கப் பட்டிருந்த போதும்இவரது மதவாதத்தைக்  குறிவைத்து அதே சட்டம் அடக்க முடியாமல் அடங்கிப் போனது உண்மை.

அது சரியா,தவறா என்ற கேள்வியை மும்பை மக்களிடம் கேட்க முடியாது, தாவூத் இப்ராஹிமின் நிழல் உலக வேலைகளும் பாகிஸ்தானின் சண்டாளத்தனமும் இதன் பதில்களாகப் பதிந்து போனதை மறுக்கவும் முடியாது.

பால்தாக்கரே பற்றிக் குற்றம் சாட்டுபவர்களும் அவர் மறைந்து விட்டதைக் கொண்டாடுபவர்களும் இருக்கலாம்;ஆனால் அவர்கள்தான் இன்னொரு பால்தாக்கரேவை உருவாக்குகிறவர்கள் என்பதையும் உணர வேண்டும்.

நம்மைப் பொருத்தவரை மராத்திய சிங்கம் மறைந்து விட்டதுஅது மீண்டும் இன்னொரு வடிவில் உலா வரக் கூடாது; அவரது எதிரிகள்,இந்தியாவின் எதிரிகளாக இருக்கவும் கூடாது.

-கிருஷ்ணன்பாலா
17.11.2012

No comments: