Thursday, March 15, 2012

சேர வாரும் செகத்தீரே - An Invitation

மதிப்பிற்குரிய நண்பர்களேவணக்கம்

அவர்-

அரசு நிர்வாகத்தில் நேர்மையும் துணிவும் மிக்க ஓர் உயர்
அதிகாரி; எனது நண்பர். இளைஞர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் எப்போதும் இன்முகம் காட்டி இனிதே
கடமை ஆற்றும் பண்பாளர்.


சலியாத உழைப்புக்குச் சான்றாய்த் திகழும் அவர், எனது
கட்டுரைகளைப் படித்ததுடன் மட்டும் ஆறுதல் கொள்ளாது
தனது நண்பர்கள் பலருக்கும் உணர்வுப்பூர்வமாக அதைப்
பங்கிட்டுச்(Share) செய்து பலரையும் சிந்திக்கத் தூண்டும்
பயன்மிக்க பணியைச் செய்து வருகிறார்.


இப்போது அவர்களுக்கெல்லாம் எனது படைப்புக்களை நேரிடையாகவே அனுப்பித் தரும்படிச் சொல்லி விட்டார்,
எனது எழுத்துக்களை உடனுக்குடன் அவர்களும் படிக்கட்டுமே
ன்ற எண்ணத்தில்.


சிந்தனையும் கருத்துப் பரிமாற்றங்களும் சேர வேண்டிய 
இடத்தில் சேர வேண்டும்என்ற அவருடைய உணர்வு மூலம் 
எனது எழுத்துக்களுக்கு மேலும் உரம் இட்டுள்ளார்.


அவர் மூலம் எனது எழுத்துக்களைப் படித்த அவருடைய
நண்பர்களில் பலர் அவரைப் போலவே சமூக அக்கறையுடன்எ
தேச நலனும் போற்றும் உயர் அதிகாரிகள்; உயர்ந்த அரசு நிர்வாகப்
பொறுப்பில் இருப்பவர்கள்.


அவர்களில் பலர் எனது எழுத்துக்களின் தரமானதகுதி மிக்க
வாசகர்களாக இருந்து என்னைப் பாராட்டுவது கண்டு மகிழ்கிறேன்.
இந்தப் பாராட்டுக்கள் ‘என் எழுத்துக்களுக்கு’ என்பதைவிட,
‘நமது தமிழ்ப் பண்பாடு போற்றும் பாரம்பரியச் சிந்தனைக்கும்
பழுதில்லாத் தமிழுக்கும்’ எனச் சொல்வதில்தான்
பெருமைப்படுகிறேன்.
  
அவர் பல உயர் அதிகாரிகளையும் சமூக அக்கறையுள்ள ஆர்வலர்களையும் என் எழுத்துக்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்காகவும் அவருடைய நண்பர்களை  வரவேற்றும்  
நான் எழுதிய மடல்இங்கு படிக்கின்ற அனைவருக்கும்  எழுதும் மடலாகவே கருதி ஏற்க வேண்டுகிறேன்.

முகநூலிலும் வலைப்பதிவுகளிலும் பலர் உடனுக்குடன் எனது கட்டுரைகளைப் படிக்க நேரம் வாய்ப்பதில்லைஆயிரக்கணக்கில்   குவிந்துவிடும் இணையதளப் பதிவுகளில் தரமான பதிவுகளைத்    தேடிப் பிடிக்கவும் படிக்கவும் பொறுமை அமைவதுமில்லை.

எனவே –
பலர்,தங்கள் தனிப்பட்ட மின்னஞ்சல்  தொகுப்பிலிருந்து அவற்றைப்
பெற்று ஓய்வான நேரங்களில் ஒருமித்துப் படிக்கவே விழைகின்றார்கள்.

எனவேதாங்களும் அவ்வாறே விரும்புவீர்கள் எனில், உங்கள் மின்னஞ்சல் முகவரியை (Mail id) எனக்கு அனுப்பினால் என் கட்டுரைகளைப் பிரத்தியேகமாக உங்கள் Mail க்கு அனுப்பி 
வைக்கின்றேன்.
எனது  நண்பரும் அரசுத் துறை உயர் அதிகாரியுமானவரின் நண்பர்களை வரவேற்று நான் எழுதின மடல்இதோ:

உங்களுக்கும் உங்கள் மூலம் எனது Mail Group இல்
இணைய /  இணைக்கவிரும்புகின்றவர்களுக்கும்:திரு ஆர்.சிவகுமார் IAS.
என்னுடைய மதிப்பிற்கும் நட்புக்கும் இனிய நண்பர்; நாட்டுச்  சிந்தனை மிக்கவர்;துடிப்பு மிக்க அரசு நிர்வாகத்தில் துணை நிற்கும்  தூய பண்பாளர்.
அவர்,தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை  எனக்கு அளித்து எனது எழுத்துப் பதிவுகளை நேரிடையாக 
உங்களுக்கும்  அனுப்பிவரும்படிச் சொல்லியிருக்கிறார்.

உள்ளத்தில் உள்ளது என்றான் பாரதி..

செழிப்பான உள்ளமும் சிந்தனையும் கொண்டவர்கள்   
செய்யும் பணியே இதுதான்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ 
என்று  திருமூலர் அருளிய வாசகமும்

சேர வாரும் ஜெகத்தீரே
என்று தாயுமானவர்  தந்தருளிய தத்துவமும் ஒன்றுதான்.

அதை அப்படியே பிரதி பலித்துள்ளார் அருமை நண்பர் அவர்கள் .

நல்லார் இணக்கமும் நின் பூசை நேசமும் ஞானமும்
அல்லாது வேறு நிலை உளதோ?”

என்று பட்டினத்தார் பாடினார் இறைவனிடத்தில்.

அத்தகைய நல்லாரை எனக்கு இங்கு அறிமுகம் செய்து,
அவரோடு இணங்கி இருக்கும் கருத்துக்களால் காரியம் செய்” 
என்று தூண்டுவது போல் அவரது தோழமை.

அவருக்கு உங்கள் மூலம் நன்றி நவில்வது என் கடமை.

உண்மையில் –
என் கடன் தமிழ் செய்து கிடப்பதேதான்

எழுதுகிறேன்எவ்வித சுய நலமும் இன்றி.

அதனால் -
எனக்கு அரசியல் சார்பு என்று உள்நோக்கம் ஏதும் இல்லை
என்பதை உங்கள் முன் உறுதிபட உரைசெய்கின்றேன்

உலகத் தமிழர் மையம்என்ற எனது வலைத் தளம் 
மூலம் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உணர்வுகளையும் உள்ளங்களையும்  உறவு கொண்டு வருகின்றதென் எழுத்துக்கள்.

நேர்மை,வாய்மை,தூய்மை இவற்றை மேன்மையோடு 
மீட்டிக் கொண்டு தமிழுக்குப் புதிய உரை செய்யவும் 
கவி வளம் சேர்க்கவும் நாட்டுச் சிந்தனையை நடுவதும்தான் 
எனது எழுத்துக்களின் நோக்கம்.

கீழ்மையும் கிறுக்குத் தனமும் இதற்கில்லை;

தமிழின் உயர்தரச் சான்றின் ஒப்பற்ற துடிப்பில் ஓசையிடும் சொற்களைக் கொண்டு உங்கள் இதயக் கதவைத் தட்டும் இறுமாப்பு அதற்கு உண்டு.

நீங்கள் கடந்த காலத்தில் பிழையில்லாப் பெற்றொரால் விதைக்கப் பட்ட விதைகள்.இன்று இந்தத் தேசத்துக்குக் குளிர்நிழல் தரும் விருட்சமெனத் திகழும் சதைகள்.

தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும்’ என்று சொலவடை இருப்பதுபோல்நாட்டுக்குத் தீமையான விஷயங்களில் வெகுண்டெழுந்து ஆடும் சதைகள் என  இருப்பவர்களாய் 
உங்களைக்  காண்கின்றேன்.

உங்களை எனக்கு அறிமுகப் படுத்தியவர் பற்றி மறுபடியும் இங்கே
சொல்வதென்றால்,சொல்வேன் இப்படி:

"உனது நண்பர் யார் என்று சொல்:
நான் உன்னை யாரென்று சொல்வேன்!”

அப்படித்தான் உங்கள் ஒவ்வொருக்கும் எனது அடையாள அறிமுகம்;

உங்களுக்கு நான்;எனக்கு நீங்கள்.’

இனி எனது படைப்புக்கள எழுதும் தோறும் தங்கள் முவரிக்கு அனுப்பி வைப்பேன்.

கருத்துப் பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்;
வரவேற்பேன்.

கருத்துச் செறிவு எனில் தொட்டுப் பேசுங்கள்;
தோழமைக்குத் துணை என்று தூரிகையைப் பலமாக்கிக் கொள்வேன்.

நட்பும் நாட்டமும் மலர,
கிருஷ்ணன்பாலா
நிறுவனர்: உலகத் தமிழர் மையம்
15.3.2012


குறிப்பு:

To understand my writings both in creating public awareness and Tamil Literary Concept with admirable publications in the following bloggers you can visit them at any Time,any where.These bloggers are read by the Tamilians across the world from more than 39 countries. You can also visit my Facebook where I supposed to be the one among top rated commentator and used to quick respond my viewers and friends.

My Bloggers: (All can be appeared  through Google search):

1.http://ulagathamizharmaiyam.blogspot.com  
உலகத் தமிழர் மையம்
(உலகத் தமிழர்களின் ஒப்பற்ற உறவுப் பாலமாய்  சமூகம்,அரசியல்,
கலாச்சாரப் பண்பாட்டுச்  சிந்தனைகளின் சத்தான உரமாய்  
எழுதப் படும் தளம்)

கிருஷ்ணன்பாலா
(கவிதை இலக்கியத் தேனீக்களுக்கான ஏகாந்த வனம்.    
எதுகையும் மோனையும் இயைபுச் சந்தமும் பொங்கித் ததும்பும் 
தரமான தமிழ்க் கவிதைகள் உயர்தரப் படைப்புக்களின் தளம்;
கவிதை ரசிகர்கள் போற்றும் கவித்தலம்)   
                                                                                                                                                                                                       
3.http://ilakkiyappezhai@blogspot.com               
இலக்கியப் பேழை 
(இலக்கியத் தரமான படைப்புக்களை உலகெங்கிலும் உள்ள
 தமிழ் எழுத்தாளர்கள் எவரும் இங்கே படைப்பதற்கு உரிய தளமாய் 
 உருவாக்கப்பட்டிருப்பது;தரமான படைப்பாளர்களின் படைப்புக்களை 
இதில்பொக்கிஷம்’  எனப் பூட்டி வைக்கலாம்)

With best Regards,
Krishnan Balaa
Mobile: +91 9444069234
E-mail: krishnanbalaa@gmail.com
Post a Comment