Saturday, March 10, 2012

அந்தோ தமிழா..!

அறிவார்ந்த நண்பர்களே,

தமிழ் உணர்வு கொண்ட யாவருக்கும் இன்று  தமிழ் நாட்டின் ரசியல்  குறித்து  அக்கறையும் கவலையும் இல்லாமல் இருக்க முடியாது.

அறிவிலும் உலகியல் பண்பிலும் நம்மைவிட வேறு எந்த இனமும் உயர்ந்ததல்ல;என்றாலும் நாம் இன்று உலக மாந்தர்முன்னே சற்றுத்
தலை குனிந்துதான்  நடக்க முடிகிறது.

காரணம்,நம் தமிழ் நாட்டு மக்களிடையே பரவி விட்டபாமரத் தனமும் பண்பாட்டுச் சீரழிவும்’தான்.

அந்நியர்களும் ஆங்கிலேயர்களும் நம்மை அடக்கி ஆண்டகாரணத்தை விட, நம்மிடையே  பிறந்து பிழைக்க வழியின்றிகூத்திலும் பேச்சிலும் கூச வைக்கும் நடத்தையிலும் வெட்கமின்றி மேடை போட்டுப் பிழைத்தவர்கள் காட்டிய வித்தையில் நம்மவர்கள் வீழ்ந்து போனதே  முக்கியக் காரணம் என்பேன்.

வெள்ளைக்காரன் ஆண்ட 150 ஆண்டுகால ஆட்சியில் நாம் எதையும்
இழந்து விடவில்லை; ஆனால் சுதந்திரம் பெற்றபின் நமது அரசியல்
கொள்ளக்காரர்களின் குடும்ப ஆட்சியில் - மத்தியிலும் சரிமாநிலத்திலும் சரி-நாம் இழந்து விட்டதுதான் : மானமும் ஞானமும்.

மானம்தான் தமிழ்ப் பண்பாட்டின் உயிர்.அது போனபின்னால் வாழ்வது வெறும் நடைப் பிண வாழ்வே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

இந்தக் கொள்ளையர்களின் பின்னால் நின்று கூட்டணி வைத்துக் கொண்டு,பத்துக்கும் நூற்றுக்கும் பிச்சை எடுத்துத் திரிந்தவன் எல்லாம் இன்று பில் கேட்ஸ்களுடன் பேரம் நடத்தி ‘பிஸினஸ்’ பேசிக் கொண்டிருப்பதை ஒரு வரலாற்றுப் பிழையாகத்தானே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

‘பெற்றவர்களின் பெருமை யாதெ’னச் சொல்ல முடியாது வீட்டை
விட்டு ஓடிப் போய்த் தெருவில் திரிந்து, திருடர்களின் சகவாசத்தில் திருடிப் பிழைக்கவும்,தீமைகளை வருடிப் பிழைக்கவும் கற்றுக் கொண்டவர்கள்; பிறகு அதிலிருந்து அடைந்த பரிணாம வளர்ச்சிதான்திராவிடம்’ என்னும் பித்தலாட்ட அரசியல்.

உண்மையிலேயே, திராவிடம் என்று இருந்த  புவியியல்,மானுட இயல் என்னும் பொருளானது ஒரு சில புல்லர்களின் புரட்டுத் தனமான வித்தைப் பொருளாய் வீச்சு பெற்று விட்டிருப்பது தமிழனின் துரதிர்ஷ்டம்.

உண்மையான திராவிட இயக்க வரலாறானது இந்தப்
பித்தலாட்டக்காரர்களால் நீர்த்துப் போனதுதான் உண்மை..
ஆனால் அதை இன்றுள்ள யாரும் மேலான அறிவோடும் மேதைமை உணர்வோடும்  மீட்டிப் பேசத் தயாராக இல்லை.

காரணம், கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளாகிக் காயப்பட்டுக்
கையது கொண்டு மெய்யது  பொத்தி’க் கொள்ள அவர்களால் இயலாது.

ஆனால் அவர்களைப் போல எல்லோரும் இருக்க மாட்டர்கள்,

திராவிடம் பேசி,அது சார்ந்த கொள்கைகள் என்று வகைப் படுத்த முடியாது,வெறும் ’திராவிடக் கவர்ச்சி’வசனங்களை மட்டுமே சினிமாவிலும் பத்திரிகைகளிலும் எழுதியேதனக்கென ஒரு பெரியதத்துவத் திருடர்’  கூட்டத்தை வளர்த்து,அவர்களின்இன மானத் தலைவர்’ என முடி சூடிக் கொண்டவர்தான் கலைஞர் கருணாநிதி.

எப்பவும் கூத்து நடத்திப் பிழைக்கும் ஒருவர் கலைஞன்தான்;
‘கலைஞர்’ என்பது உண்மையான காரணப் பெயர்தான். ஆகவே, கலைஞர் கருணாநிதி அவர்களை அவரது வயது காரணமாக நாம் மரியாதை கொண்டு அழைப்பது அறிவுடைமையே தவிர வேறு இல்லை.

நாம் ஆய்ந்து தெரிந்து கொண்ட திராவிட இயக்கத்துக்கும் இன்று
திராவிடத்தின் பெயரால்’ அரசியல் பண்ணிக் கொண்டிருக்கும்திராவிடக் கட்சிக்கள் பேசும்திராவிடத்துக்கும்’ சம்பந்தமே இல்லை.

இது பற்றி நான் நீண்ட காலமாகக் கனத்த இதயத்தோடுதான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

‘இன்றைய பித்தலாட்ட அரசியலின் பிதாமகனாகத் திகழும்
கலைஞர் கருணாநிதி அவர்களைத் தொடாமல் எந்த ஒரு விமர்சனத்தையும் விளக்கத்தையும் நாம் எழுத முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாய் உணர்த்தி நிற்கிறது.

சுய நல அரசியல் நடத்திஊழலுக்கும் ஒழுக்கக் கேடுகளுக்கும்
ஆணி வேராகவும் அகராதியாகவும்  திகழும் அவரை மறந்து, நாம் பண்பாட்டு அரசியல் பாடம் நடத்துவது  என்பது ஊமைகள் நடத்தும் நாடகம் போல் ஆகி விடாதோ?

எனது நீண்ட கால நண்பரும், பத்திரிகையாளரும் தமிழ் உணர்வாளர்களில் நியாயம்  நிறைந்த மனித நேயருமான திரு.அரப்பா தமிழன் என்கிற அரப்பா தியாகராஜன் எனக்கு ஒரு பதிவை அனுப்பி இருந்தார்.

அந்தப் பதிவைப் படித்து நான் வியந்து போனேன்.

’சுயமரியாதைச் சுடரொளி’ 
எஸ்.ராமச் சந்திரனார்
அந்தக் காலத்தில் நம் தமிழ் நாட்டில் ஒரு சிறு பான்மை மக்கள்,தங்களுக்கிருந்த  அரசியல் செல்வாக்கில் ஆதிக்க உணர்வோடு இங்குள்ள பெரும்பான்மைப் பாமரத் தமிழர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு எதிராக, பெரியார் வெகுண்டெழுந்து, திராவிடம் பேசி, அந்த இயக்கத்தை  ஒரு புதிய பரிமாணத்தில் வழி நடத்த முனைந்த காலத்தில் அவருக்குத் தோளோடு தோள் நின்று உழைத்தவர்களில் ஒருவர்  எஸ்.இராமச்சந்திரனார்.

1933களில் மறைந்த அந்தசுமரியாதைச் சுடரொளி’ ஏனோ தானோ என்று வாழ்ந்தவர் அல்ல; அன்றைய காலத்திலேயே சிவகங்கையில் வாழ்ந்திருந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேராக, திராவிட இயக்க வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த குடும்பங்களின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்தவர்தான்சிவகங்கை வழக்கறிஞர்’ எஸ்.இராமச்சந்திரனார்.

சுயமரியாதைச் சுடரொளி’ என்று பெரியாராலேயே 
மதிக்கப் பட்டவர்.

தன் சொத்துக்களைச் செலவிட்டு பாமர மக்களின் நல்வாழ்வுக்கான திராவிட இயக்கப் பணியில் தன்னை அர்ப்பணித்து மறைந்தவர்.இவர்  மறைந்தபோது பெரியார், தனது குடியரசுப் பத்திரிகையில் ‘எனது வலது கரம் முறிந்து விட்டது’ என்று  எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தசுய மரியாதைச் சுடரொளியின் வாரிசுகள் இன்றளவும் தமிழ் சமுதாயத்துக்குத் தங்கள் கைக் காசுகளைச் செலவிட்டுக் கொண்டு சேவை செய்து வருகின்றார்களே தவிர, சொத்துக்களைக் குவித்து கோடிகளில் புரளவில்லை.

சுயமரியாதையைச் சுட்டு விட்டு
ஒளிரும் தலைவர்
இவரைப் போன்ற சுமரியாதைச் செம்மல்கள் எங்கே? தமிழனையும் தமிழர் உரிமைகளையும்  தனது கற்பனைப்  பொருளாக்கி அவற்றை அரசியல் மூலம் விற்பனை செய்து  வெளியே சொல்ல முடியாத அளவுக்குக் கோடிகளைக் குவித்து வாழும் கலைஞர் எங்கே?

இலங்கையில் தமிழர் இனம் தாழ்வுற்றுத்  தங்கள் உயிருக்காகத் தவித்தபோது, இந்தப் போலி ‘இன மானத் தலைவர்’ கோட்டையில் உட்கார்ந்து கொண்டு சோனியா காந்தியோடு சொந்தம் பேசிக் கொண்டிருந்தவர்தானே?

இப்போது,’தமிழ்தமிழர் இனம்என்று பேசியும் எழுதியும்
அது பற்றி போலிக் கண்ணீர் சிந்திபுளுகுப் புராணம் எழுதிக் கொண்டிருக்கிறார்.....

இவரைப் பற்றி,முகநூலில் சரியாகத்தான் சொன்னார்,Kishore Kswamy என்ற நண்பர்.

அந்த நண்பர்  எழுதினதை இங்கே உங்களுக்கு எடுத்து வைப்பது இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும்இதோ,அவரது அலசலும் ஆலோசனையும்:

 //Kishore Kswamy: முத்தமிழையும் விற்றவர் , மூதறிஞர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதுகெலும்பு இல்லாதவர் , கண்ணகிக்குச் சிலை எழுப்பி அதன் அடியில் கண்ணியத்தைப் புதைத்தவர் .... அண்ணாவிற்குச் சமாதி எழுப்பி அவருடனே அண்ணாவின் பண்புகளையும் கொள்கைகளையும் புதைத்தவர்; முன்பு ஒரு சமயம், இந்திரா காந்தி ஆட்சியை இழந்து நிராயுதபாணியாக மதுரையில் மக்களைச் சந்த்திக்க வந்தபோது ‘,உடன் பிறந்த ரவுடிகளைஏவிக் கல்லெறிந்து அவரை ரணக் காயப் படுத்தி விட்டு, ”அந்த ரத்தம் கல்லடி பட்டுச் சொட்டிக் கறை படிந்ததல்ல;பெண்களுக்கே உரிய மாதாந்திர விலக்கினால் பட்ட ரத்தம்என்றும் அவரை ஒரு விதவை என்றும் விமர்சித்தும் வக்கிரம் பேசிய , பின்னர் ,தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக,அவரையே ‘நேருவின் திருமகளேஎன்றும் ‘குல மகளே’’.... என்றும் குலவையிட்டுத் தன் குலப் பெருமையைக் கூச்சமறக் காட்டிக்  கூட்டணி கொண்டவர்! அதுமட்டுமா?... காமராஜருக்கு அவர் வாழ்ந்த காலங்களில் கொடிய விமர்சனங்களால் குழியினைத் தோண்டிவிட்டு , அவர் இறந்தப்பின் சவக்குழி தோண்ட மண் வெட்டியுடன் கிளம்பியவர்
எம் ஜி ஆரைத் தூக்கி எறிந்து, அசிங்கப்படுத்தி அரசியல் நடத்தி, பின்னர் ’நண்பேண்டா ’ என்று அவர் இறந்து இருபது ஆண்டுகளுக்கு பிறகு நாக்கில் நரம்பின்றி முழங்கியவர் ....

இவர் இன்று... தமிழர்கள் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பார்த்து கண்ணீர் வடிக்கிறாராம்

தமிழர்களே ,தமிழர்களே , இவர் கடல் அளவு கண்ணீர் வடித்தாலும் கவிழ்ந்து விடாதீர்கள் , அதைப் புறக்கணித்து உங்கள் வேலையை பாருங்கள் , நீங்கள் உருப்படலாம்?? //

நண்பர்களே,

கலைஞரைப் பற்றி எடுத்துச் சொல்லி இதைவிட, இன்னும்
விளங்க வைக்கத் தேவையில்லை. இந்த அலசல் ஒன்றே கலைஞர் கருணாநிதியைப் பற்றிய அருமையான அலசல்:உயிர்த் துடிப்பு மிக்கது

திராவிட இயக்க உணர்களை இதயத்தில் ஏந்திக் கொண்டு இரவு பகலாய் ஏமாந்துபோய்க் கொண்டிருக்கிற அனைவரும் இந்த அலசலைக் கட்டாயம் படித்து உணர்ந்து கொண்டால் அவர்கள் உருப்படுவார்கள்.

இக்கருத்தைக் கலைஞருக்கு எதிரான அரசியல் கருத்தாக மட்டுமே கொள்ளாது.தமிழ்ப் பண்புகளைச் சீரழிக்கின்ற அரசியலுக்கு எதிராகவும் நாம் எடுத்துக் கொள்வதே சால்பு.

ஆயினும் கலைஞருடைய தகிடுதத்த அரசியலையும் இவருடைய திராவிடப் பித்தலாட்டக் கொள்கைகளையும் விமர்சிக்கும்போது இன்னும் நிறைய ஆதரங்களை நாம் காட்ட முடியும்.

காட்டுவோம்..அவ்வப்போது....

யாராவது இதை மறுத்து நமது எழுத்தை வெறுத்துச் சொல்லட்டும்; அப்படி அவர்கள் வெகுண்டெழுந்து பேசினால் அதுதான் அழைப்பிதழ் நமக்கு....

இவண்,
கிருஷ்ணன்பாலா
10.3.2012

1 comment:

Anonymous said...

அய்யா!உங்கள் அரசியல் தொலைநோக்கு நன்கு புரிகிறது.சிவகங்கை இராமச்சந்திரனார் போல்,சவுந்தரபாண்டியனார் குடும்பமும் திமுக ஆதரவில் இல்லை.இதுபோல் திராவிடம் வளர்த்த பல குடும்பங்கள் இன்று ஏழ்மையில் உள்ளன.தங்களின் சொத்துக்களை விற்று திராவிடம் வளர்த்து இன்று தெருவில் நிற்கிறது.ஆனால்,கருணாநிதி குடும்பமோ திராவிடத்தின் சொத்தாக மாற்றப்பட்டு,உலகப்பணக்காரர்கள் வரிசையில் நிற்கிறது.கொடுமையிலும் கொடுமை!இதை மையப்படுத்தியுள்ள உங்கள் கட்டுரை தமிழின வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.