Thursday, March 1, 2012

இரண்டு விஷயங்கள்,இன்று!

நாம் மண்டூகங்கள்தான்!
-------------------------------------------------
(மண்டூகம் என்றால் தவளை)




கடவுளை நம்புகிறவன் விதியை முன்னிலைப் படுத்துகிறான்; கடவுளை நம்பாதவன் மதியை முன்னிலைப் படுத்துகிறான்.


நம்புவதும் நம்பாமல் இருப்பதும் இரண்டுமே அறிவுதான்.


அந்த விதியோ,மதியோ எல்லாம் ஒரு நீர்ச் சுழற்சியில் தோன்றி மறைகின்ற நீர்த் திவலைகள்தாம்.


உண்மையில்-


நாம் அந்த நீரில் வாழுகின்ற 
மண்டூகங்களே அன்றி வேறில்லை.


நாம், நம் போக்கில் கத்திக் கொண்டிருக்கின்றோம்;அவ்வளவுதான்.


இவண்-
கிருஷ்ணன்பாலா
1.3.2012






யார் காரணம்?
-------------------------
நீங்கள் இறை நம்பிக்கையும்
தன் நம்பிக்கையும் உள்ளவரா?

இறைவனே உங்களை வழி நடத்துகின்றான்என்று நீங்கள் நம்புவது உண்மையானால்.உங்கள் தவறுகளுக்கும் அதனால் விளையும் துன்பங்களுக்கும் பிறர் மீது பழியைப் போடாதீர்கள்.


உங்கள் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளுக்குப் பிறர்தான் காரணம்
என்பதை முதலில் உறுதியாக ஒதுக்கித் தள்ளுங்கள்.


பிறர் மீது பழி போடும் இழிச் சொற்கள், இழிவான ஒருவனின் உதட்டில் இருந்துதான் பிறக்க முடியும்..

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

என்கிறது வள்ளுவ வேதம்.
(குறள் எண்; 505 / அதிகாரம்; தெரிந்து தெளிதல் / பிரிவு: பொருட்பால்)

இவண் -
கிருஷ்ணன்பாலா
01.03.2012

No comments: