Monday, July 1, 2013

இது நாடா? இல்லை கேடா?

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

பாலியல் ஒழுக்கக் கேடு என்பதும் பாலியல் கொடுமை என்பதும் வேறு வேறு.

பாலியல் ஒழுக்கக் கேடு  என்பது  இரண்டு பாலினமும் சமூகத்தின் முன்பாக  ஒன்றை ஒன்று கேடு கெட்ட வகையில் ‘புணர்’ நட்புக் கொண்டிருப்பது. நேர்மையும் ஒழுக்கமும் விழையும் பொது சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் நடத்தைதான் அது.

அந்தரங்கத்தில் வைத்திருக்க வேண்டிய அந்தரங்கமான  நிலைப்பாடுகளை அரங்கம் அறிய நடந்து கொள்வதும் அதை,பண்பட்ட சமூகம் கண்டிக்குபோது தனி மனித உரிமைகள் அது என்று பேசுவதும் பாலியல்  ஒழுக்கக் கேடுதான்.

இதை நாம் வேடிக்கை பார்ப்பதா? வெகுண்டெழுந்து வேரறுப்பதா?

சிந்திக்க வேண்டும் நண்பர்களே.

ஒருத்தி ஒருவனுடன் இத்தகைய நட்புக் கொண்டு அவனையே -தாழ்வோ,சரிசமானமான அந்தஸ்திலோ, உயர்வான அந்தஸ்திலோ மணம் பற்றி வாழ்வதென்பது  அவர்கள் இருவரின் அந்தரங்க விஷயமாகிறது.  அதற்கு சட்டப்படியான உரிமை இருப்பதால் மூன்றாமவர் இதை விமர்சிப்பதும், அவமானமாக அதைக் கருதி எழுதுவதும்  சட்டப்படியான குற்றம் ஆகிறது.

எனினும் -
பண்பட்ட சமூகத்தின் முன்னே ஆண்-பெண் பாலியல் உறவுக்கு ஊற்றான வார்த்தையாடல்களோ,வக்கிரச் சொல் பதிவுகளோ,அது குறித்தான தூண்டல்களோ புரிவோர் சமூக ஒழுக்கக் கேடர்கள்தான்.

‘சட்டம் பாதுகாக்கிறதே’ என்பதால்,அதன் பின்புலத்தில் இத்தகைய கேடுகளைச் செய்வோர்,செய்வோரைத் தூண்டுவோர்,அதை ஆதரிப்போர், இந்தக் கேடு கெட்ட அறிவுப் பரிணாமத்தைச் சாடுவோரை எதிர்ப்போர், இதைப் பெண்ணீயத்தின் பெட்டக உரிமையெனப் பேசிப் பிதற்றுவோர் யாவரும் ஒட்டு மொத்த சமூகத்தின் ஒழுக்கக் கேடர்களே.

சட்டத்தின் துணையைக் காட்டி, வயதுக்கு வந்த ஆணோ பெண்ணோ தங்கள் எதிர் பாலினத்தோடு நட்’புணர்’வு கொண்டு நடத்தை கெட்டாலும் அது ஏற்கக் கூடியதாகி விடுகிறது என்னும்போது நாம் எத்தகைய இழிநிலையில் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது? என்பது ஊசி முனையாய்க் குத்துகிறது.

பாலியல் குற்றம் புரிவோரை,அதுவும் விடலைப் பருவத்தின் விபரீத உணர்ச்சிகளுக்காளாகி, ஆண்-பெண் இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டுக் காதல் எனும் பெயரில் களியாட்டம் போடத் துடிப்போரைக் கண்டித்து அவர்கள் சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் பொருந்தாக் காதலில் ஈடுபடுபவர்கள் என்பதை பண்புடையோரும் உண்மையிலேயே சமூக நல்லிணக்கம் விழைவோரும் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர ஆதரிக்கக் கூடாது.தி திருத்த வேண்டுமே தவிர, ஆதரிக்கக் கூடாது.

18 வயது நிறைந்தவர்கள் வாக்களிக்கலாம்;ஆனால் பருவக் கவர்ச்சிக்குள் பதுங்கிக் கொள்ளும் உரிமைக்குப் பலியாகி  விடக் கூடாது.

18 வயது முடிந்து விட்டால் சட்டப்படி அவர்கள் இஷ்டப்படி வாழலாம் என்பதைச் சட்டம் சொல்லலாம்’; ஆனால் அவர்களைப் பெற்றவர்கள்  சொல்ல முடியாது.

 “ஆயிரம் காலத்துப் பயிரை 18 வயதுப் பூர்த்தி’ என்ற  ஒற்றை நாள் தீர்மானிக்கிறது ’’ என்ற சட்ட விளக்கம்தான்  இன்றைய சாதி வன்கொடுமை ப் பாதிப்பையும் சாதி அரசியலையும் வளர்க்கிறது’  என்பதைக் கண்கூடாகப் பார்த்த பின்னும் சமூக அமைதிக்கும்  ஒழுக்கத்துக்கும் ஆதரவான சட்ட மாறுதல்களை நாம் சிந்திக்க வேண்டாமா?

என் மகள்,தன் அறியாமையால், பிறிதொரு சாதியைச் சேர்ந்த பையனுடன் உறவு கொள்வது தவறு;அவளுக்குரிய திருமண வாழ்வை நாங்கள் ஒன்று கலந்து பேசி முடிவெடுக்க பெற்றவர்களாகிய எங்களுக்கு உரிமை உண்டு’ என்பதை ஏற்கும் சட்டம் தேவை’ என்ற கோரிக்கை எழுமானால் அதை எல்லா சமூகத்து மக்களும் வரவேற்பார்களா? மாட்டார்களா?

’சாதி இல்லை என்பதும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்’என்பதும் சமூக நியதியின் சமன்பாட்டை நிலை நிறுத்தவே; எந்த ஒரு சாதிக்கும் எதிரான நியதி அல்ல அது.

ஆனால்;
காதல் ஈர்ப்பு என்ற பாலியலின் இயல்பான ஒழுக்கக்கேட்டு பள்ளத்தில் தடுமாறி  வீழும் விடலைகளைக் கைப் பிடித்து இழுத்துக் காப்பாற்ற வேண்டியதற்குப் பதில் அவர்கள் இருவரையும் சம்சாரம் என்கிற கடலில் அப்பொழுதே சேர்த்துத் தள்ளி அவர்கள் நாசமாகப்போக வேண்டும்’என்றல்லவோ, இந்தச் சமூகப் ’புர்ரட்சிப் போராளிகள்’ போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறர்கள்?.

இவர்களுடைய பிள்ளைகள் இதே நிலைக்கு ஆளாகும்போது   இவர்களின் மனத்தில் பொங்குவது மகிழ்ச்சி என்னும் கங்கை வெள்ளம் அல்ல; கசப்பு என்னும் சாக்கடை நாற்றம்தான்.

’தாங்கள் செய்வது இன்னதென அறிகிலார்; பிதாவே இவர்களை  மன்னியும்’
என்ற ஏசு பிரானின் கழிவிரக்கம்தான் நமக்கும் ஏற்படுகிறது இத்தகைய  அரைவேக்காடு சமூக ஆர்வலர்கள் மீது.

நண்பர்களே,

பருவத் தூண்டலின் காரணமாகக் காதல் என்னும்  ஒழுக்கக் கேட்டுக்குப் பலியாகி, முதிர்ச்சியற்ற காகல்யானத்தைச் சட்டத்தின் துணை கொண்டு நாடுவதும் அதற்குத் துணை நிறபது என்பது சாதி வேறுப்பாட்டைக் களைகின்ற சமூகச் சேவை என்று தாளிப்பதும் அறிவுடைமையன்று;அரை வேக்காட்டுத்தனம்.

வாலறுந்து போன நரிகள் வேண்டுமானல் இதில் பெரியாரின் கொள்கைகளையும்  அரைவேக்காட்டுத்தனமான அரசியல்வாதிகளையும் துணைக்கழைத்து ஊளை யிடலாமே தவிர,மூளையுள்ள மனிதர் எவரும் மூளை கெட்ட முதிர்ச்சியற்ற காதலை ஏற்க மாட்டார்கள்.

சட்டத்தின் துணை கொண்டு நடந்த கட்டாயக் காதல் திருமணங்களில் முக்காலே மூணுவீசம்  முழுத் தோல்வி அடைந்து போனவை; அதில் சிக்கிச் சீரழிந்து போன இல்லற வாழ்க்கையைப் பற்றிப் பேசக் கூட சம்பந்தப்பட்டவர்கள் முன் வருவதில்லை.

அத்தகைய திருமணங்களின் பிம்பங்களாய்த் தோன்றி குழந்தைகளின் எதிர்காலத்தைச் சரியானபடி ஏற்படுத்தமுடியாமலும் அவர்களுடைய கலப்புக் காதல் ஈர்ர்பை ஏற்றுக் கொள்ள முடியாமலும் ஏற்றுக் கொண்டாலும் மனதள்வில் பாதிக்கப்பட்டவர்களாயும் தவிக்கின்ற பெற்றோர்களின் எண்ணிக்கையைக் கணக்குப்படுத்த  உடியாது.

எனவே,
சட்டம் இருக்கிறது’என்பதற்காக

த்தகைய  த்னம.றப்ப்து தல் ம விளையாட்டு அது என்று சமூக நலன் நாடுவோர் கண்டிப்பதற்குப் பதில், அவர்கள் சாதி மறுப்புக்கு எதிராகத்தான் காதல் கொண்டுள்ளார்கள் என்றும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு உள்ல உரிமையில் பெற்றவர்களேகூட தலையிட முடியாது’ என்று கூறும் சட்டத்தின் துணையைக் காட்டி இருவேறு சாதி இனங்களுக்குக்கிடையே  ‘மனித உரிமை என்னும் பெயரால் அவர்களுக்கு சம்பந்தமே இல்லாத ‘சாதி எதிர்ப்பு ஜோடிகள்’என்று புகழ் சூட்டி ஆரவாரம் செய்வோரையும்  என்னும் சட்டத்தால்  அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து வாழ வைபபதுதான்  மனித உரிமை என்று  பாலியல் ஒழுக்ககேடுகளைக் கண்டிப்பதற்குப் பதில் பேசும்,சாதிகள’ சாதி அந்த ஒழுக்கக் கேடர்களை இந்தச் சமூகம்  காறி உமிழ முடியுமே தவிர அவர்கள் முகத்தில் உமிழ முடியாது.

உண்மையில்-

சமூகம் என்பதே ஒட்டு மொத்தமாக இந்த மனித குலத்தின் பண்பாட்டை,ஒற்றுமையை,மனித நேயத்தோடு  வலிமையாக வைத்திருக்கும் ஓர் இயற்கையான கட்டமைப்பு.

’அந்தக் கட்டமைப்பு,கட்டுக் குலையாமல் இருக்க வேண்டும்’ என்பதற்காகத்தான் நம் முன்னோர்,  தங்களைத் தாங்களே மதிப்பு மிக்க சமுதாயமாகக் காத்துக் கொள்வதற்கான நியதிகளைச் சட்டங்களாக, அன்று தோன்றி வாழ்ந்த உன்னத மனிதர்களைக் கொண்டு உருவாக்கிக் கொண்டனர்.

ஆக,சமூகத்தைப் பாதுகாக்கவே மனிதர்களால் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

அந்தச் சட்டமானது காலத்துக்கேற்ப,மனிதர்களின் பண்புகள் மாற மாற அவற்றுக்கேற்ப, திருத்தி  மாற்றப்பட்டது;மாற்றப்பட்டும் வருகிறது.


முற்காலத்தில், அரசு நீதி போற்றப்பட்ட காலத்தில் சட்டம் இயற்றிய மனிதர்கள் புனிதர்களாகவும் ’புனிதர்களுக்குள்ளே புனிதர்’ என்று பொறுக்கி எடுக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர்.

’அதனால்தான் பண்பாடும் சமூகக் கட்டுப்பாடும் அன்றைய காலத்தில் ஒழுக்கம்’ என்று  உயிரினும் மேலாய் ஓம்பப்பட்டு, ஒப்பற்ற சமுதாயத்தின் வாரிசுகளாக நாம் வார்க்கப்பட்டு வந்தோம்.

ஆனால் இன்று....?

சட்டங்களை மாற்றி, திருத்தி அவற்றை அமல் படுத்தும்  மனிதர்கள் எந்த வகையைச்சேர்ந்தவர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், சமூகத்தில் ஒழுக்கக்கேட்டையே  உபதேசித்து அதையே அறிவுஜீவித்தனம் என்று விலாசப்படுத்தி, அதை நாடகமாக, நாறிப்போன சினிமாவாக, செந்தமிழின் அடுக்கு மொழிப் பேச்சுக்களின் அவலமாக  ஊர் தோறும் மேடையிட்டு, பாமரக் கூட்டத்தை வளர்த்து, அந்தப் பாமரர்களின் ஒழுக்கக்கேட்டுப் பசியை அதிகப்படுத்தி, அதற்குத் தீனி போடுவதாக ஆரவாரம் செய்து, அந்தப் பாமர மக்களின் அசுரப் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த அயோக்கியர்கள் என்ற நுண்புலச் சிந்தனை  நோக்கப் படும்.

இத்தகைய அயோக்கியர்களை வளர்த்ததும்  வார்த்ததும் வளர்ப்பதும் இதே சமூகம்தான்.

இங்கே அயோக்கியத் தனமும் அநீதியும் அக்கிரமும் மெஜாரிட்டி ஆகிப் போனது; நியாயமும் தர்மமும், சத்தியமும் நேர்மையும் குறுகிப் போய்,மைனாரிட்டி ஆகி விட்டது.

இன்று அயோக்கியத்தனங்களை மட்டுமே ரகசிய அஜண்டாவாக்கிக் கொண்டு சட்டங்கள் உருவாகி யுள்ளன. எனவே தான் அந்தச் சட்டங்கள் இத்தகைய அயோக்கியர்களையும் அவர்களின் வாரிசுகளையும் காத்து நின்று ஊக்கப்படுத்தி வருகின்றன.

இல்லையென்றால், பெண்ணீயம் என்றும் பெண்ணுரிமை என்றும் பேசிக் கொண்டு சமூக ஒழுக்கக்கேடான விஷயங்களைக் கூட ’ஒருவனுடைய அல்லது ஒருத்தியுடைய தனிப்பட்ட அந்தரங்க  விஷயம்;அதில் அதில் தலையிட  யாருக்கும் சட்டப்படி உரிமை இல்லை’ அதை கண்டிப்பதும் விமர்சிப்பதும் ’தனி ஒருவரின் உரிமைக்கு எதிரான அவதூறு’ஒரு சில பெண்கள் எழுதி வருவதை ஒரு விவாதப் பொருளாய் இந்தச் சமூகம் வேடிக்கை பார்க்குமா?

சமுதாயம் என்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக ஆயினும் இப்படித்தான் இருக்க வேண்டும்;அதை ஊறு செய்ய முனையும் எவரும் பொதுவில் வைத்து கல்லால் அடிக்கப்பட வேண்டும்’ என்ற நியதியை இஸ்லாமியச் சட்டமாக நடைமுறைப்படுத்தி வரும் சவுதி அரேபிய முதலான இஸ்லாமிக் நாடுகளில் நம் நாட்டில் ஊகப்படுத்தப் படுவதுபோன்ற பாலியல் ஒழுக்கக் கேடுகளுக்கு வழியும் இல்லை; அனுமதியும் இல்லை.

இஸ்லாமிய மார்க்க நெறியாளர்கள் எதிர்காலத் தலைமுறைகளின் கட்டுக் குலையாத வாழ்வு முறைக்காக ‘கடுமையானசட்டங்களைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்று கொண்டு, எந்தக் கால மாற்றத்திலும்  அது மார்க்கத்தின் மகத்தான   நெறி’ என ஏற்றுக் கடைப்பிடித்து வருவதை பார்க்கும் போது ‘இன்று நாம் நமது பாதையை மேற்கத்திய நாடுகளின் நச்சுக் கலாச்சாரமே வெட்கப்படும்படியான அநாகரீக மோகத்துக்கேற்ப ‘தனி மனித ஒழுக்கக் கேடுகளை’ மனித உரிமை’ எனப் பேசவும் கேட்கவும் கற்றுக் கொண்டு விட்டோம்.

எனவேதான்,சமூக சேவகிகள் என்றும் பெண்ணீயப் புரட்சிப் பத்திரிகையாளர் என்றும்  முற்போக்குச் சிந்தனைவாதிகள் என்றும் தங்கள் இஷ்டத்துக்கு இங்கே நமக்கு இருக்க வேண்டிய கட்டுப்பாடுகளைத்  தகர்த்தெறிந்து விட்டு‘ தான் தோன்றித் தனமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.


இஸ்லாமியச் சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தனி மனிதக் குற்றங்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்பைப் பார்க்கும் போது, நமது நாட்டில் அம்மாதிரியான கடும் ஒழுக்கக்கட்டுப்பாடுகளைப் பேணத் துடிக்கும் சான்றோர் பலரும் அதுப்போல் கடும் சட்டங்கள் வேண்டும் என்று விரும்பி ஏங்குவதுடன் இஸ்லாத்தின் சமுக்கக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை நிமிர்ந்து நின்றுதான் வணங்குவார்கள்.

இஸ்லாமியக் கட்டுப்படுகள் மிகுந்த  நாடுகளில் பாலியல் ஒழுக்கக்கேடுகளுக்குத் தண்டனையே பொது மக்கள் முன்னிலையில்  கல்லடி; அல்லது சவுக்கடி; மீறிப் போனால் தலையைச் சீவடிதான்!

இங்கே சொல்லடிக்கே சட்டத்தை நாடுவார்களாம்? அந்தச் சட்டம்  இவர்களைக் காத்து,அவர்களுக்கு எதிராக ஒழுக்கத்தை வலியுறுத்தும் உறுதியாளர்களைத் தண்டிக்குமாம்?

பேசுகிறார்களே.

இது நாடா? இல்லை கேடா?

நாம் பண்பட்ட நாட்டில் வாழ்கிறோமா? அல்லது புண்பட்ட கேட்டில் வாழ்கிறோமா?

இவண்-
கிருஷ்ணன்பாலா
1.7.2013

1 comment:

பிரேமி said...

”நாம் பண்பட்ட நாட்டில் வாழ்கிறோமா? அல்லது புண்பட்ட கேட்டில் வாழ்கிறோமா?”.... இன்னும் இதற்கு பதில் யாராலும் சொல்ல முடியவில்லை!