Saturday, July 20, 2013

வாழி, நீ வாலி!



ஞானம் மிகும் கவிஞனுக்கு
நண்பரெலாம் விடை கொடுத்தார்;
போனவனின் புது நடையும்
பொய்யில்லாத் தமிழ்ப் பாட்டும்
வானவர்க்கு விருந் தென்று
வந்துரைத்த மழை நடுவே-
ஆனவரை கவிஞரெலாம்
அவரவர்தம்  விழி துடைத்தார்!

வாலிக்கு முன்னாலே
வாலாட்ட ஆளில்லை;
வாலிக்குப் பின்னாலும்
வரிசைக்கு ஆளில்லை!
கேலிக்குச் சொல்வதற்கு
கேனைபல இருந்தாலும்
வாலிக்கு நிக ரென்று 
வைக்க ஒரு  கவிஞனிலை!


இவண்-
கிருஷ்ணன்பாலா
19.7.2013

2 comments:

Unknown said...

kavinganukku innoru kavinganin mariyathai arumai KB

Unknown said...

kavinganukku innoru kavinganin mariyathai arumai bala