Friday, June 14, 2013

நானும் எனது கவிதைகளும்...



நண்பர்களே,

1970கள் முதலே-கவிதைகள் எனது கை ,வசப்படத் தொடங்கின. 1972 களில்,முதன் முதலாக கவியரசு கண்ணதாசன் அவர்கள் எனது கவிதை ஒன்றைத் தனதுகண்ணதாசன்மாத இதழில் பிரசுரித்தார். ”வண்ண மயிலே....’’ என்ற என்னுடைய கவிதைதான் முதல் பிரசுரம்;தொடர்ந்து கல்கியில்ஏழாம் படை வீடு...’’ என்ற கவிதை. அதன் பிறகு பல்வேறு இதழ்களில் வானொலியில், பத்திரிகைகளில் என்று பிரசுரம் ஆயின.

உண்மையில் நான் இலக்கணம் ஏதும் கற்றிராதவன். இலக்கணத்தின் வழி நின்று சிந்தித்து எழுதும் வழக்கமும் இல்லாதவன்.
பாரதியும் கண்ணதாசனுமே எனது கவிதைச் சிந்தனையின் ஊற்றைத் திறந்து விட்டவர்கள் என்பேன்.

சின்ன வயதில் ஆறாம் வகுப்பு படித்த காலத்தில் அவ்வையின் மூதுரையும் ஆத்திச் சூடியும் தனிப்பாடல் திரட்டும் விவேக சிந்தாமணியும் எனது சிந்தைக்கு விருந்தாக அமைந்து அப்பொழுதே சிந்திக்கத் தூண்டியவை.

எனினும்-
எனது கவிதைகளில் சில சமயம் தளை தட்டும்தான்.

ஆனால்-
சொல்லவரும் கருத்தில் எவ்விதப் பிழையும் இருக்காது. இலக்கணம் மாறாக் கருத்துக்களில் அது தன் கம்பீரத்தை இழப்பதில்லை என்பதில் கர்வம் கொள்கிறவன் நான்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
14.6.2013

No comments: