Tuesday, June 18, 2013

தாலியை அறுக்கச் சொல்லும் மூடனே!



ண்பர்களே,
தமிழ்ப் பண்பாட்டின் அடிவேரை -அதாவது தாலியை அறுத்தெறிந்து அறிவு மிக்க பெண்களாய் ஆகும்படி நமது தமிழ்நாட்டில் ’கவிஞர்-எழுத்தாளர்-பதிப்பாளர்’என்றெல்லாம் நமது ஊடகங்களால் ஊக்குவிக்கப்படும் ‘மனுஷ்ய புத்திரன்’ எனும் பேர்வழி ’தெரு’வாய் மலர்ந்து எழுதி இருக்கிறார்.

’தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?’வென்று அறிந்திடாத இந்த மூட எழுத்தாளர், எப்படி? ஏன் பண்பாட்டிலக்கிய  முடவரானார்? என்பது நமக்குத் தெரியாது.

ஆனாலும் அச்சில் ஏற்றப்பட்டுட்டுள்ள இவரது கருத்து, நமது தமிழ்க் கலாச்சாரத்தின் பண்பாட்டின் மீது புகுத்தப்படும் ‘யுத்தம் என்பதால் நாம் அது கண்டு ஒதுங்கி இருக்க முடியாது.; ஒதுங்கிக் கொள்வது என்பது
ஒப்புக் கொள்வது என்றாகி விடும்.

கண்டிப்பதும் கழிசடைக் கருத்துக்களைத் தண்டிப்பதும் நமது கடமை.

இதோ:


தாலியை அறுக்கச் சொல்லும் மூடனே!
------------------------------------------------------------


தமிழனென்று தலைநி மிர்ந்து வாழுகின்ற கூட்டமே!
தமிழனுக்குப் பெருமையான தகுதி என்ன தெரியுமா?
தமிழர்தம் இல்லறத்தின் சாட்சியான தாலிதான்;இந்தத் தலைமுறைகள்தோறும்இங்கு தலைமைச் சின்னம் என்பது!

கற்புடைய மாதருக்கும் கருத்துடைய ஆண்களுக்கும்
கட்டுப்பாடு கூட்டி,இந்த உலகை வியக்கச் செய்ததும்
பொற்புடைய வாழ்வில் நமது பரம்பரையைக் காப்பதும்
’பொற்றாலி’ என்னும் இந்த மங்கலநாண் அல்லவோ?

தாலிதானே பெண்களுக்கு வேலி என்று சொல்கிறோம்?
தாலியில்லாப் பெண்களைத்தான்மூளிஎன்றும் காண்கிறோம்;
தாலியதன் பெருமைகளைத் தாங்கவொண்ணாப் பயல்களின்
தகுதியிங்கு என்ன வென்று தமிழில் உரைக்க வேண்டுமோ?

‘எப்பொழுது தாலிகளைக் கழற்றி வீசி எறிவளோ?
அப்பொழுது தான்அறிவு வளர்ந்ததென்று’ ஆகுமாம்?
இப்படியோர் இழுக்கன் இந்த நாட்டில் எழுதுகின்றனன்;
அப்படியே அழுக்கர் சிலர் ஆதரித்து மகிழ்கிறார்!

அப்பன்-அம்மை வாழ்ந்த வாழ்வு அற்புதமாய் இருக்கத்தான்;
அகிலமெல்லாம் தமிழர்களின் தனிச் சிறப்பை மதிக்குது;
தப்பில்லாத தரம் மிகுந்த கற்பு வாழ்வின் அறநெறி
கட்டிக் கொண்ட தாலிக்குத்தான் ஒட்டியுள்ள அற்புதம்.

அதை அறுத்து எடுத்து வீசும் துணிவு பெற்ற பெண்களை
அறிவுமிக்க மாதர் என்று சொல்லுகின்ற மூடனே!
எதை எடுத்தும் எழுதுவது இயலும் எனில், சொல்லடா
இந்த நாட்டு அப்பனுக்குப் பிறந்தவன் நீ இல்லையா?

கேட்பதற்கு ஆள் இல்லாத கேனப்பயல் எழுதினால்
கேடுகெட்டு நாமதனைக் கேட்டு அமைதி கொள்வதா?
தீட்டிடுவீர் எழுத்து என்னும் கூர் மிகுந்த ஆயுதம்;
திரட்டி அதைக் குவித்திடுவீர்; பாதகர்கள் அஞ்சவே!

இவண்-
கிருஷ்ணன்பாலா
18.6.2013

1 comment:

இமேஜ் நெஸ்ட் ஷிவா said...

அருமையான கவிதை.... இபொழுதுதான் பார்த்தேன். மிக நன்றாக உள்ளது. மூன்றாவது வரிதான் கொஞ்சம் 'அசை' இடிக்கிறது.... தவறென்றால் மன்னிக்க...!