Saturday, April 21, 2012

படைப்பிலக்கியம் போற்றுமின்!


நண்பர்களே,

படைப்பிலக்கியம் என்பது பண்பட்ட சமூகத்தின் அறிவுச் செழுமையின் ஆணிவேர். உலகிலேயே நம் தமிழில் உள்ள இலக்கியங்கள் போல் எம்மொழியிலும் இல்லை என்பதில் நாம் இறுமாப்புக் கொள்ளலாம்.

அத்தகைய நம் இலக்கியங்களின் தரம் என்ன? என்கிற ஞானம்நம்தலை முறையினரிடையே நலம் குன்றிப் போய்விட்டது.

புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு எழுத்தின் மாண்பும் இலக்கணமும் புரியாமல் எழுதுவதெல்லாம் எழுத்து; என்கிற எண்ணத்தில் எழுத்துப் புரட்சி செய்வதாய் இலக்கு இல்லாமல் எழுதுகிறார்கள்.

இது அவர்களின் பிழை அன்று: இன்றைய நம் கல்வித் தரத்தின் குறை.


"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.”



என்பதே கல்வியின் மாண்பெனக் குறள் நெறி காட்டும்.

அதுவே நம் முன்னோர் கற்றுத் தெளிந்து, தேறி நின்ற திசை
.
இன்று நமது கல்வியின் செழுமை, திசை மாறிவிட்டது.

வள்ளுவனும் அவ்வையும் கம்பனும் இளங்கோ அடிகளும் மற்ற சங்கப் புலவர்களும் எந்த சர்வகலாசாலையில் பட்டம் பெற்றனர்?

அவர்களின் எண்ணங்களும் எழுத்துக்களும் எப்படி இன்று கோடிகணக்கானவர்கள் ஆராய்ச்சி செய்து ‘டாக்டர்’ பட்டம் பெறும் வகையில் அமைந்தன.?

உயர்கல்வி என்று எந்தவிதமான கல்விப்பட்டமும் பெறாத அவர்களின் இலக்கியங்கள் இன்று உலகெங்கும் சர்வகலாசாலைகள் என்கின்ற பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி ஆராய்ச்சிக்குரிய படைப்புக்கள் ஆனது எவ்விதம்?

நண்பர்களே,
நமது அறிவும் தகுதியும் வெறும் காகிதப் பட்டங்கள் மூலம் கணக்கிடப்படுவது வயிறு பிழைக்கத்தானே தவிர,வரலாறு படைக்க அல்ல.

வரலாறு காக்கும் வளமான அறிவு,காகிதப் பட்டங்கள் மூலம் வந்து
விடுவதுமில்லை.

வாருங்கள், வரலாற்றுப் பெருமை மிக்க நமது பண்பாட்டைக் கட்டிக் காக்கும் எழுத்துக்களை இலக்கியம் ஆக்குவோம்!

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
21.4.2012

1 comment:

ulagathamizharmaiyam said...

Comment received from a valuable reader one Mr.Vijayakumar from his mail to my mail for this article as follows:
Dear Mr .Krishnan Balaa,
I am really touched by your words on valluvar kamban elango Avaiyar.
Even students who studied first class will remember till attihi chudi by Avaiyar. Which we find
Even late in life. Needless to mention about Valluvar. As regards Kamban and Elango Adigalarwe the expert commentary to make people understand and appreciate their writings. People like needs to be explained and educated.

Regards.
K.Vijaykumar
Sent from my iPad