Friday, April 20, 2012

நட்பை விரும்புவோர்;புரிவோருக்கு மட்டுமே இது:



நண்பர்களே,

எழுத்தும் எண்ணமும் ஏதோ காமெடிக்கும் பொழுதுபோக்கும் பயன் உள்ளதாக இருக்குமென்று ஏராளமானவர்கள் முக்காடு போட்டுக் கொண்டும் முகவரிகளை மாற்றிக் காட்டிக் கொண்டும் இங்கே நட்பு வட்டத்தில் நத்திக் கொண்டு திரிகிறார்கள்.

அவர்களுக்காக நான் இங்கு எழுதுவதுமில்லை;ஏங்குவதுமில்லை’

தமிழைச் சரியான இலக்கில் ஏற்றி வைத்து எழுதுவதென் இயல்பு.

தாகம் மிகும் தமிழ் உள்ளங்களுக்கான தடாகம் இதுவென நான் ஆரம்பத்திலேயே என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கின்றேன், இங்கே.

எனது வலைத்தளத்திலும் இந்த முகத் தளத்திலும் .நான் அறிவித்துக் கொண்டுள்ள உண்மைகளைக் கண்டு உணராமல் நண்பர்கள் பலர் எனது முகநூல் பதிவுகளை மட்டும் அவ்வப்போது பொழுது போக்குக்காகப் படித்து விட்டு மிரள்வதோ, மிகைப்படப் பொருள் கொள்வதோ,‘எனது எழுத்துக்களுக்குத் திமிர்’ என்று பொருள் கொள்வதோ பொருத்தமற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

தமிழின் சுவை கண்டும் அதன் தரம் கண்டும் என்னோடு பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்; விழைகின்றார்கள்.அதில் பலர் எனது முக நூல் பதிவுகளின்  கருத்துக்களை மட்டுமே படிக்கிறவர்கள் என்பதும் அவர்களுக்கு எனது வலைப் பதிவுகள் பற்றிய அறிமுகமே இல்லாதிருப்பதும் வியப்புக்குக்குரியதாக இருக்கிறது.

இத்தனைக்கும் நான் எனது பதிவுகளின் இணைப்பை அவ்வப்போது முகநூலில் பதித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த இணைப்புக்களை அவர்கள் தொடரத் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது அப்போதுதான் தெரிகிறது.

பதிவுகளின் போது தருகிற இணைப்புக்களின் மீது கணினியின் ‘கர்ஸரை’ வைத்து அழுத்தினால் அந்த இணைப்புகள் அல்லது ஒரிஜினல் வலைப் பதிவுகள் தானாகத் தோன்றும். அவற்றை யாரும் ஒரிஜினலாகப் படித்து இன்புறலாம்.

சிலர் முகநூலில் எனது நண்பர்களாக இருந்துவரும் போதிலும் எனது எழுத்தின் நோக்கங்களையும் அதனைப் பிரதிபலிக்கின்ற எனது கட்டுரைகளையும் படித்தவர்களாக இல்லை என்பது தெரிகிறது.

ஒரு குறிப்பட்ட பொருள் பற்றி நீங்கள் எழுதுங்களேன் என்று அவர்கள் என்னைக் கேட்டுக் கொள்ளும்போதும் அது பற்றி ’நான் ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்’ என்பதைச் சுட்டிக் காட்டினால் பிறகு ‘’ஓ..நான் படிக்க வில்லையே;;சிறப்பான நடையில் சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறதே” என்று சிலாகித்துக் கொள்ளும்போது சிரித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே, நற்றமிழ் நேசர்களே,

நீங்கள்,என்னுடன் பேச விழையும்போதோ புதிதாக நட்பு இணைப்புக் கோரும்போதோ எனது முகநூலின் Profile மற்றும் வலைப் பக்கங்களை (1.'உலகத் தமிழர் மையம்' http://ulagathamizharmaiyam.blogspot.com;  2. கவிதைத் தளம், 'கிருஷ்ணன்பாலா’ http://krishnanbalaa.blogspot.com) படித்து விட்டு வந்தால் நாம் தொடர்ந்து பேசுவதிலும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதிலும் குழப்பம் ஏதும் இராது.

என்னை பொருத்தவரை -
என் எழுத்துக்கும் எனது குணங்களுக்கும் இடையே விரல் அளவுகூட வித்தியாசமிருக்க விரும்புவதில்லை.

உண்மை நட்புக்கும் அதையே விரும்புகிறவன்.

நட்பை விரும்புவோர்;புரிவோருக்கு மட்டுமே இதை எழுதுகிறேன்.

நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
20.4.2012

No comments: