Thursday, May 29, 2014

அவலமிக்க அரசியல் சாசன விதி எண்:370 (பகுதி-1)றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இந்திய மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்து 127 கோடி இந்தியர்களின் மரியாதையைக் காப்பாற்றும் ஆட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டார் திரு.நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்கள்.

இந்தியர்கள்,தங்களது பன்முகக் கலாச்சாரத்திலும் இனம் மொழி, சமயம் என்று பல்வேறு வகையான நிலைப்பாடுகளிலும் வேறுபட்டிருந்தாலும் ‘அனைவரும் இந்தியர்’ என்பதில் மாறாத பெருமிதம் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா,விடுதலை பெற்றபோது அதன் மக்கள் தொகை ஏறத்தாழ 60 கோடி. இந்த 66 ஆண்டுகளில் இரட்டிப்புப் பெருக்கம். அதாவது 127 கோடி.
இந்தியா சுதந்திரம் பெற்று ஏறத்தாழ 55 ஆண்டுகள் ஒரே பரம்பரையினரின் ஆட்சியில் அடிமைப்பட்டுப் போயிருந்த நிலையில், இந்த 127 கோடி இந்தியரின் இரண்டாவது சுதந்திர வெற்றியாக நரேந்திரமோதி கிடைத்திருக்கிறார்.

இந்தியா,தனது பாரம்பரியச் சிறப்பை அடைந்து உலக அரங்கில் தன்னிகரில்லாத் தலைமைத் தகுதிகளோடு, தலை நிமிர்ந்திருக்கும் காலம் நிச்சயமாகத் தளிர்க்கத் தொடங்கி இருக்கிறது.

ஆம்! இந்திய வரலாற்றில் மோதிக்குமுன் (மோ.மு.) என்றும் மோதியின் வருகைக்குப்பின் (மோ.பி) என்றும் எழுதப்படும் புதிய சரித்திரம் தொடங்கி இருக்கிறது.

அண்ணல் காந்திஜியின் தலைமையில் இந்தியா பெற்ற சுதந்திரம், உலக வரலாற்றில் தனித்தன்மை மிக்கது. அன்றைய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெருமைக்குரிய தலைவர்கள்  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தோன்றியவர்களாக இருந்தபோதும் அவர்கள் அனைவரும் ஒரே சக்தியின் கீழ் ஒன்றிணைந்து ஒருமுகமாக அந்த சக்தியின் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு சுதந்திரப் போராட்டங்களில் தியாக உணர்வோடு ஈடுபட்டனர்.

அந்த ஒரே சக்தி அண்ணல் காந்திதான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

’இந்தியா’ என்ற தேசத்தின் மகோன்னத நிலையை உலகிற்குக் காட்டிய மகாத்மாவை நாட்டுக்கு ஈன்ற அதே குஜராத் மண்தான் இன்று பாழ்பட்டுப்போயிருக்கும் பாரத தேசத்தை நிமிர்த்தி நேராக்கி, கூராக்கும் வல்லமை கொண்ட நரேந்திர மோதியை நமக்குத் தந்திருக்கிறது என்பது வியக்க வைக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்ற கையோடு காங்கிரஸைக் கலைக்கச் சொன்னார், காந்திஜி. ‘சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி’ என்ற உரிமையில் அது ஆட்சி பீடம் ஏறுமாயின் ’விரைவில் இந்த தேசத்தைச் சுரண்டி இதன் பெருமையைச் சீர் குலைத்து விடும்’ என்பது அந்த மகாத்மாவின் தீர்க்க தரிசனப் பார்வைக்குத் தெரிந்து போயிருந்தது.

குஜராத் மண்ணில் அவதரித்த அண்ணல் காந்தியின் அறிவுரைக்கு மாறாக, கலையாது இருந்த காங்கிரஸை, 67 ஆண்டுகளுக்குப் பின், இப்போது நிலைகுலையச் செய்து, தானாகவே தொலைந்து போகும்படி வெற்றிவாகை சூடி இருக்கிறார் அதே காந்தி மண்ணில் தோன்றிய நரேந்திர மோதி. 

அது மட்டுமா? 
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக வந்திருக்க வேண்டியவர் இதே குஜராத் மண் ஈன்ற ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல்தான். 
ஆனால் பண்டித நேரு, தனது செல்வாக்கினாலும் திட்டமிட்ட குயுக்தி வழிகளிலும் பிரதமராகி  கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு பரம்பரை ஆட்சிக்கு வழி வகுத்து விட்டார்.

ஏறத் தாழ  67 ஆண்டுகளுக்குப் பின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் வாரிசுபோல்,அவர் அடையத் தவறிய பிரதமர் பதவிக்கு இன்று குஜராத்திலிருந்து  நரேந்திர மோதி வந்திருக்கிறார்.

குஜராத் மண்ணுக்குத்தான் எப்பேர்ப்பட்ட பெருமை?

பட்டேல் விரும்பிய வலிமை மிக்க இந்தியாவை நரேந்திரமோதிதான் நனவாக்கப் போகிறார்.

சுதந்திரம் பெற்ற பிறகும் தனித் தனி ராஜ்யங்களாக இருந்து இந்தியாவுடன் இணைய மறுத்த  சமஸ்தானங்களின் மன்னர்களையெல்லாம் பணிய வைத்து, இமயம் முதல் கன்னியாகுமரிவரை ’எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு’ என்று ஆடிப்பாடி மகிழ வைக்கும் மகாகவி பாரதியின் கனவை நினைவாக்கியவர்தான் நம் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேல்.

எனினும்.இந்தியத் திருநாட்டில்  ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’என்ற நீதியின் உயர் மாண்பை நிலை  நிறுத்துவதற்குக் காஷ்மீர் மட்டும்  இன்றுவரை தடையாக இருக்கிறது.

இதற்குக் காரணம், இன்று அதிக அளவில் விவாதப் பொருள் ஆக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் சாசனத்தின் 370 என்ற பிரிவுதான்.

இந்தியாவில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நியதியைத் தலைகுனிய வைத்து. ‘காஷ்மீருக்கு மட்டும் விஷேச உரிமையாக இந்திய அரசியல் சாசனத்தின் இந்த 370 ஆவது பிரிவை உருவாக்கி அதை காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கச் செய்தவர் பிரதமர் நேரு..

இந்திய மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்கி காஷ்மீரிகளை முதல்தர மக்கள் போல் ஆக்கிய  பண்டித நேருவின் படுபாதக அரசியல் இன்று மறு பரிசீலனைக்கு உட்பட்டதுதான்.

காஷ்மீருக்குத் ‘ தனி அந்தஸ்து’ என்பது வல்லபாய் பட்டேலின் எண்ணங்களுக்கு நேர் முரணாணது.

அது பண்டித நேருவின் சுயநலத்தால் உருவாக்கப்பட்ட மோசடி மிக்க திட்டம் இது. அத்திட்டத்தை அரசியல் சாசனப்படி நிறைவேற்றவேதான் இந்த 370 என்ற விதியை நேரு பார்லிமெண்டில் நிறைவேற்றச் செய்திருப்பதன்  பின்னணியில் நேருவின் குடும்பத்துக்கு மிகப்பெரும் சுயநலம் இருந்தது.

காஷ்மீருக்கென்று 370 என்ற சிறப்பு விதி ஏற்படுத்தப்பட்டதன் பின்னணி:

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் நிம்மதியாக பதவில் அமர்ந்து  ஆட்சி செய்ய நேருவால் முடியவில்லை. இந்தியா முழுவதிலும் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை அரசர்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்டு வந்தனர்.
உள்துறை அமைச்சராக இருந்து இந்த  சமஸ்தானங்களையெல்லாம் இந்தியாவுடன் இணைக்கும் பெரும் பணியினை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் செய்து வந்தார்.

ஏறத்தாழ எல்லா சமஸ்தானங்களும்  வல்லபாய் பட்டேல் அவர்களின் எண்ணத்துக்குக் கட்டுப்பட்டு இந்தியாவில் இணந்த போதும்
அவரது பணி நிறைவு பெறுவதற்கு ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானமும்  காஷ்மீரும் முட்டுக் கட்டை போட்டன.

ஹைதரபாத்தை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த நிஜாம்  இந்தியாவுடன் தனது மாநிலம் இணைய முடியாது என்று அறிவித்ததுடன்  பாகிஸ்தானுடன் இணைக்கப் போவதாய்ச் சொல்லவிட்டார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ உதவியைக் கோரி இருந்தார்.
ஆனால் போருக்கு முன்னமே, பாகிஸ்தானைக் கடுமையாக எச்சரித்துவிட்டு மிகத் துணிவோடு நிஜாமை நிராயுதபாணியாக்கிப் பணிய வைத்த வல்லபாய்படேலின்  வீரமும் சாணக்கியத் தனமும் அப்போது இந்தியாவையே நிமிர வைத்தது.

சுதந்திர இந்தியாவின் சிற்பியான வல்லபாய் பட்டேலின் முயற்சி இல்லாமல் போயிருந்தால்அன்று கிழக்குப்பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதுபோல் இன்றைய ஹைதராபத்தும் அதன் சுற்றுப் பகுதிகளும் இந்தியாவுக்குள் ’தெற்குப் பாகிஸ்தான்’ என்று ஏற்பட்டிருக்கும்.


காஷ்மீர் பிரச்சினை இதற்கு மாறுபட்டது. 
நேரு பிரதமரான சூழ்நிலையில் அன்றிருந்த அரசியல் குழப்பங்களும் பாகிஸ்தானின் சதியும் அவரை நிம்மதியாக ஆள முடியாதபடிச் செய்து காஷ்மீரில் தனி நாடு கேட்டுப் போராட்டங்கள் தூண்டப்பட்டன.
அதன்மூலம் ‘காஷ்மீரிகளின் தனித் தன்மை’ என்ற இனப் பாகுபாடும் மதம் சார்ந்த உணர்வுகளும் அங்கே கொழுந்துவிட்டு எரிந்தன;எரியச் செய்யப்பட்டன.

அப்போதுதான் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டிருந்ததாலும் பாகிஸ்தானுக்கு இயற்கையான பங்காளிப் பகை இந்தியா மீது இருந்ததாலும்  காஷ்மீர் மக்களில் பெரும்பாலோர் இஸ்லாம் மதம் சார்ந்தவர்களாக இருந்ததாலும் பாகிஸ்தான் காஷ்மீர் போராட்டத்துக்குப்  பின்புலமாக இருந்து  இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை காஷ்மீர் மக்கள் எடுக்க வேண்டும்’ என்ற அதன் சதி செயல் வெற்றி பெறும் கட்டத்தில் இருந்தது.
பாகிஸ்தானின் பங்காளிப் பகைக்கு விலை போனவர்தான் காஷ்மீர் சிங்கம் என்று பேரெடுத்திருந்த  ஷேக் அப்துல்லா.  அவர்தான் ’காஷ்மீரைத்  தனிநாடாக  அறிவிக்க’க் கோரி, போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார், அவர் இந்தியாவுக்கு எதிராகவே நடந்து கொண்டிருந்தார்.

நேரு மீது அவருக்குத் தனிப்பட்டமுறையில்  பொறாமையும்  நேருவின் குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்கும்  வெளியில் விளம்பரப்படுத்தப்படாது இருந்த தொப்புள் கொடி உறவினால் வந்த உட்பகையும்தான் இதற்குக் காரணம் என்பது பலருக்கும் விளங்கிக் கொள்ள முடியாது.

இதை ஆராய வேண்டுமானால் மோதிலால் நேருவின் குடும்பம் காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து  பலநூறு மைல்களுக்குக் கிழக்கே இருந்த அலகாபாத் நகருக்கு  வந்து குடியேறிய பின்னணியைத்தான் பேச வேண்டும்.
பண்டித நேருவின் பரம்பரை காஷ்மீர் பண்டிட் வகையைச் சேர்ந்தது.
காஷ்மீரை அதன் அரசர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்தபோதும் அதற்கு எதிராக ’ காஷ்மீரை காஷ்மீரிகளே ஆள்வதற்குத் தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என்ற போராட்டத்தை ஷேக் அப்துல்லா தலைமை ஏற்று நடத்தினார்.
ஷேக் அப்துல்லா தனி நாடு கேட்டு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்தப் போராட்டத்தை அடக்கி ’ராணுவத்தின் மூலம் காஷ்மீரை இந்தியாவுடன்  இணைப்பது’ என்பது வல்லபாய் பட்டேலின் திட்டம். ஆனால், சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாணலாம் என்பது நேருவின் முடிவு. ’ஷேக் அப்துல்லாவின் தலைமையில் நடப்பது ‘காஷ்மீர் மக்களின் சுதந்திர உரிமைப்போர்’ என்ற மிகத்தவறான அணுகு முறையில், காஷ்மீர் பிரச்சினைக்கு உயிர் கொடுத்தவர் பண்டித நேருதான்.
பண்டித நேருவின் அணுகுமுறையும் ராஜ தந்திரமும் அடிப்படையிலேயே தவறானவை என்பதில் வல்லபாய் பட்டேலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால்,என்ன நடந்தது?
நேருவின் மேதாவித்தனத்தாலும் தவறான கணிப்பினாலும் இந்தியா  உடனடியாக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போய், நிதானம் காட்டிவந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்து பாதிக் காஷ்மீரைக் கைவசப்படுத்திக் கொண்டது.


காஷ்மீர் என்பது ஒரு தனித் தேசமாய் இந்து மன்னர்களால்  மகாராஜா ஹரிசிங்கின் முன்னோர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாக அரசாளப்பட்டு வந்த மாநிலம்.

வேதம் அறிந்த பண்டிதர்கள் நிறைந்த மண். காஷ்மீர் பண்டிட்களின் ஆதிக்கமும் ஆன்மீகச் சிந்தனைகளின் செழிப்பும் நிறைந்த இம்மண்ணில் காஷ்மீர் பண்டிட்களின் வம்சா வழியினரில் பெரும்பாலோர் இஸ்லாம் பேரரசர்களின் படையெடுப்புக்குப் பின்னர் மதம் மாறியவர்கள் என்ற போதும், காஷ்மீரிகள் என்ற சுயகவுரவத்தையும் தனித் தன்மையையும் விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக வாழ்ந்தவர்கள். அடிப்படையில் தங்கள் இனம், வேறு எந்த இனத்தோடும் கலப்பதை அனுமதிக்காதவர்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் சுதந்திர இந்தியாவில் காஷ்மீர் பிரிவினை வாதம் தலை எடுக்கப் பாகிஸ்தான் தனது குள்ள நரித்தனத்தைக் காட்டியது. 

இதற்கேற்ப, மஹாராஜா ஹரி சிங்குக்கு எதிராக காஷ்மீரில் ஷேக் அப்துல்லா போராட்டம் நடத்தி அங்குள்ள காஷ்மீரிகளைத் தூண்டிவிட்டு காஷ்மீர் சுதந்திரப் போர் என்ற பெயரில் இந்திய எதிர்ப்புப்  போராட்டம் நடத்தினார். பாகிஸ்தான் அவருக்குப் பின்புலமாக ராணுவம் மற்றும் ரகசிய உதவிகளைச் செய்யத் தயாராகி காஷ்மீருக்குள் புகுந்தது.

வேறு வழி இல்லாமல்,ராஜா ஹரிசிங் வலிய வந்து இந்தியாவின் உதவியைக் கோரியதும்தான் தாமதம்; வல்லபாய் உடனே காஷ்மீருக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி, மீதிக் காஷ்மீரைத் தக்க வைத்தார்.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரையும் மீட்க வல்லபாய் பட்டேல் ராணுவத்தை மேலும் பயன்படுத்த விரும்பியபோதும் காந்திஜியும் நேருவும் சமாதனம் மூலம் நிலைமையைக் கையாள விரும்பியதன் விளைவே, பாதிக் காஷ்மீர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலேயே இருக்க மீதிக் காஷ்மீர் ’இந்தியாவின் ஆளுமையில் இருக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

காஷ்மீரை முழுமையாக மீட்க இந்தியா தனது ராணுவத்தைப் பயன்படுத்தினால் தனக்கு இருக்கும் நற்பெயர் கெட்டு, காஷ்மீரிகள் தனக்கு எதிராகத் திரும்பவிடுவார்கள்; அதனால் இப்போது இருக்கிற காஷ்மீரும் பாகிஸ்தான் பக்கம் போய் விடும் என்பது நேருவின் சுத்தச் சுயநலம் மிக்க அச்சம்.

நேருவின் உள் நோக்கம் ஷேக் அப்துல்லாவைக் காயப்படுத்தி விடக் கூடாது என்பதுதான்.அதற்காகவே பிரதமர் நேரு, காஷ்மீரில் காலம் காலமாக வாழும் பெரும்பாலான இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக ஷேக்அப்துல்லாவின் குயுக்தி அரசியலை அங்கீகரித்து அவர் தலைமையில் காஷ்மீரில் சுய ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.

அதாவது இந்திய ராணுவத்தின் முன்பு ஒரு நொடியில் சுருண்டு போகக் கூடிய காஷ்மீர் தனி நாடு கோரிக்கையாளர்களின் கொட்டத்தை நேருவின் மிதவாதக் கொள்கையானது பூதாகரமாகப் பார்த்து, அவசியமே இல்லாத ‘காஷ்மீருக்கான தனி அந்தஸ்து’ என்ற சிறப்புத்தகுதியை வழங்கி உலக ஆங்கில் தான் மிகப் பெரும் ஜனநாயகவாதிபோல் காட்டிப் பெருமை பட்டுக் கொண்டார் நேரு என்பதுதான் உண்மையிலும் உண்மை.

இவர் பதவியை அனுபவிப்பதில் மிகப்பெரும் சுயாலவாதியாகவே இருந்த வீரமற்ற விவேகி என்றால் அது பொய்யாாகாது. 1962களில் இந்தியா மீது ஆக்ரமிப்புச் செய்த சீனப் படையெடுப்பின்போதும் பண்டித நேரு மிகப்பெரும் பயந்தாங்கொள்ளியாக இருந்து போருக்குப் பதில் வெள்ளைக் கொடி காட்டி இந்தியாவின் வட கிழக்கு எல்லையில் பல்லாயிரம் சதுர மைல்கள் பரப்பளவுப் பகுதியைத் தாரைவார்த்த கோழை என்பதை போர் 
நுட்ப வல்லநர்கள் அறிவார்கள். 

நேரு தனது பதவிக் காலத்தில் தனது போலிக் கௌரவத்துக்காக இந்தியாவின் நலன்களை விட்டுக் கொடுத்தவர். ஆனால்,அவருக்கிருந்த செல்வாக்கும் அரசியல் அதிகாரமும் வேறு எவரையும் எதிர்க்கவிடவில்ல; எதிர்த்தாலும் எடுபடவில்லை. தொடர்ந்து அவருடைய பரம்பரையின் ஆட்சியே இந்தியாவில் நீடித்ததால் அவருடைய அரசியல் பிழைகளை எவரும் ஆராயவும் இல்லை;அடித்துப் பேசவும் இல்லை.

இந்த அடிப்படையில்தான் காஷ்மீரின் ஷேக் அப்துல்லாவைக் குஷிப்படுத்தி, நல்ல பெயர் எடுக்கவே ‘காஷ்மீருக்கென்று தனி அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசன விதி 370 ஐக் கொண்டு வந்தார்.

நண்பர்களே,
இதன் மூலம் இன்றுவரைக் காஷ்மீர்  பிரச்சினை தீர்ந்ததா? 
கடந்த 67 ஆண்டுகளாகவே காஷ்மீர் குறித்தான் சண்டையும் சச்சரவுமாக இந்தியா பாகிஸ்தானுடன் போராடிக் கொண்டுதானே  இருக்கிறது? இதனால் இந்திய அரசுக்கு ஆகியிருக்கிற வீண் செலவுகளின் கணக்கைப் பார்த்தால் இந்திய நதிகள் அத்தனையையும் இணைத்திருக்க முடியும்? 

இந்த 370ன் பயன் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு வீண் செலவுகளையும் வெற்றுக் கோஷத்தையும்தான் வளர்க்க முடிந்ததே தவிர நன்மை எதுவும் இல்லை. 

இந்த சட்டத்தின் பயனால் காஷ்மீரில் தீவிரக் குழுக்களின் வளர்ச்சியும் ஆயிரக் கணக்கில் நமது ராணுவ வீர்களின் உயிர் இழப்பும்தான் மிகுந்து வருகிறது.

ஆரம்பத்திலேயே, பட்டேலின் எண்ணம் நிறைவேறி இருந்தால் அப்போதே ஆஸாத் காஷ்மீர் என்கிற முழுமையான காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்கும்; நேருவின் மிதவாத எண்ணத்தினால் பிளவுபட்ட காஷ்மீருக்காக அரசியல் சாசன திருத்தம் 370 கொண்டு வரத்தேவையில்லாது  போயிருக்கும்; இன்றுநாள்வரை, காஷ்மீரைக் காரணம் காட்டி பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக நடத்தி வரும் வன்முறை மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கும் இடம்  இல்லாமல் போயிருக்கும்.

ஆனால் விதி நேருவின் ராஜதந்திரத்தோல்விகள் மூலம் விளையாடி விட்டது.

உண்மையில்-
இந்த விதியைப் பயன் படுத்திக் காஷ்மீரிகளுக்கு தலைக்கனமும் போலி அந்தஸ்தும் அளித்து, ஒருவகையில் அரசியல் உரிமை லஞ்சம் போல் அளித்து, அவர்களை எல்லாம் ஷேக் அப்துல்லாவின்  தலைமையில் மாநில அரசு அமைத்துக் கொள்ளும்படிச் செய்திருப்பது ஒரு அரசியல் சாசன மோசடியே தவிர இந்தியாவைக் கௌரவப்படுத்தும் விஷயமல்ல.
ஷேக் அப்துல்லாவுக்குக் கிடைக்கச் செய்த முதல்வர் பதவியை அவர்கள் ’பிரதமர் பதவி’ என்று வைத்துக் கொள்ளவும் காஷ்மீர் இந்தியாவுடன் அரசியல் சாசன நட்போடு இருக்கக் கூடிய தனி நாடு என்று ஒப்புக் கொள்ளவும் இந்தியாவின் சொத்துரிமைச் சட்டம், பொது உரிமைச் சட்டம் எல்லாம் காஷ்மீரிகளுக்குப் பொருந்தாது என்றும் பலவகையிலும் காஷ்மீரிகளைத் ‘தாஜா’செய்து தனிச் சலுகைகளை அளிப்பதுடன் அதற்காகக் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் பாதுகாப்புக்கென்று ஆயிரக் கணக்கான கோடி நிதி உதவிகளை அளித்து
வருகிறது இந்தியா.

மிகக் கடுமையான பனிமலைச் சிகரங்களில் பல்லாயிரக்கணக்கான நம் வீரகள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடுருவல் நிகழாவண்ணம் காவல் காக்க, கொஞ்சமும் மதிக்காமல் அவர்களை எல்லாம் தங்கள் நாட்டுக்குக் காவல் செய்யும் வேலைக்காரர்கள் போல்தான் காஷ்மீரிகள் கருதுகின்றார்கள்.

“யாருக்காக இந்த ராணுவம்? இந்தியாவின் நலனுக்கே தவிர எங்களுக்காக அல்ல; இந்த ராணுவம் எங்களுக்குத் தேவையில்லை” என்பதே பெரும்பாலான காஷ்மீர்களின் மெத்தனம் மற்றும்  எகத்தாளச் சிந்தனைகள். இதனை இன்று பரவலாக நாம் உணர முடியும்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உருவாக்கும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் தீவிரவாதப் பேச்சாளர்களுக்கும் இங்கே தொப்புள் கொடி உறவுகளை வளர்க்கும் நன்றி கெட்ட மாந்தர்கள் மலிந்த மாநிலமாகவேதான் இந்த இந்த 370 விதி காத்து வருகிறது..

அங்கு பெரும்பான்மையாக இருந்த காஷ்மீர் பிராமணர்களின் குடும்பங்களைக் கடந்த அறுபது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுகச் சாகடித்தும் நோகடித்தும் காஷ்மீரை விட்டுத் துரத்தியும் சுகம் கண்டு வரும் மிருகங்களை வளர்த்ததே தவிர தேசப்பற்றை வளர்க்கவில்லை இந்த 370.

பண்டித நேருவின் சாமர்த்தியம்போல் அன்று பேசப்பட்ட இந்த 370 உண்மையில்  நேருவின் பரம்பரைப் பங்காளியான ஷேக் அப்துல்லாவுக்குத் தனக்கு நிகரான அரசியல் பதவி கிடைத்து அது நிலைக்கச் செய்வதற்காகவே கொண்டுவரப்பட்டது.

இந்திய சரித்திரத்தில்  தேடலும் நாடலும் உடையோர் இந்த 370 விதியைப் படித்துணர்ந்தால் பண்டித நேருவின் மிகப்பெரும் ராஜதந்திரத் தோல்விகளில் காஷ்மீர் பிரச்சினை தொடர்ந்திருப்பதும் ஒன்று என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
 
இந்த 370 இருப்பதால்தான்,காஷ்மீரில் பாகிஸ்தான் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி ,இன்றுவரை உலக அரங்கில் நம்மைக் கேனையர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அதன் குள்ள நரித்தந்திரங்களில் வீழ்ந்த காஷ்மீர் முஸ்லீம்களோ ’இந்தியாவின் சலுகை மட்டும் வேண்டும்; ஆனால் இந்தியா தங்களை ஆளக் கூடாது’ என்ற சித்தாந்த வெறி கொண்டவர்களாக இருக்கிறார்கள்.,இந்தியாவுக்கு எதிராகவும் இந்திய இறையாண்மையைக் கேலி செய்யும் வகையிலும்தான் அங்குள்ள அரசியல்வாதிகள் அனைவரும் செயல்படுகிறார்கள்.

அவர்களுக்கு ’இந்தியர்’ என்ற சிந்தனையே இல்லை. இந்தியர் என்று தங்களை அழைப்பதிலும் அவர்களுக்கு உடன்பாடே இல்லை. ஆனால் இந்தியா வழங்கும் பணம் மட்டுமே வேண்டும். இந்தப்பணத்தை ஆட்சி செய்யும் அப்துல்லா குடும்பம் முதல் அவரைக் கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வரத் துடிக்கும் காஷ்மீர் எதிர்க் கட்சித்தலைவர்கள்வரை சுரண்டிப் பங்கு போட்டுக் கொண்டு பாகிஸ்தானிடமிருந்தும் ரகசிய வழிகளில் பல்வேறு விதத்தில் உதவிகள் பெற்று உல்லாச வாழ்வு நடத்துகிறவர்கள்தாம்.

’எனவே காஷ்மீரில் விசித்திரமான நன்றி கெட்ட மக்களை வளர்த்ததாக இந்த 370 விதி இருக்கிறதே’ என்ற கோபம் எந்த ஒரு ஒரிஜினல் இந்தியனுக்கும் வரத்தான் செய்யும்.

அந்தத் தாக்கம் நமது பிரதமர் திரு. நரேந்திர மோதிக்கு  முழுக்க முழுக்க இருக்கிறது.

இந்த விதியை ரத்து செய்து ’இந்தியாவில் எல்லோருக்கும் பொதுவான ‘Commom Civil Code’ என்னும் பொது சிவில் சட்டத்தைக் கொணர’ மானமும் ஞானமும் உள்ள இந்தியர்கள் ஆதரிக்க முன் வர வேண்டாமா?

(இன்னும் வரும்)
Post a Comment