Monday, May 26, 2014

பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி


றிவார்ந்த நண்பர்களே,

பாரத மக்களின் மிகப்பெரும்பான்மை ஆதரவும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் உணர்ச்சிப்பூர்வமான ஆதரவும் பெற்று நாடாளுமன்றத்தேர்தலில் வாகை சூடிய குஜராத்தின் தவப்புதல்வன் திரு நரேந்திர மோதி இன்று 26.5.2014 மாலை 6:13க்கு, தலைநகர் தில்லையில்  பாரதப் பிரதமாராகப் பதவி ஏற்றுக் கொண்டு விட்டார்.

இந்தியாவில் சிறப்பான முதல்வர்களில் ஒருவர், சிறப்பான இந்த தேசத்துக்குப் பிரதமராக ஆகி இருக்கும் திரு மோதி அவர்கள்,
’இந்தியப் பிரதமர்களிலேயே முதல்வர்’ என்ற பெரும் புகழ் பெற வேண்டும்.

தனது நேர்மையான, நெருடல்கள் இல்லாத ஆட்சியினால், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும்  நல்ல நதிகளைப்போல் கருதி, அவற்றை இந்தியப்பெருங்கடலில் கலக்கும் புண்ணிய நதிகள் ஆக்கும் வகையில் பாரத தேசத்தை வழி நடத்தி அவரை விரும்பியவர்கள் எல்லோரும் பெருமிதம் கொள்ள வாழ்த்துவோம்.

மகாகவி பாரதி இந்தப் புதிய பாரதத்தை வரவேற்ற பாஷையிலேயே நாமும் எண்ணி:

                        ” புதிய பாரதத்தினாய் வா...வா...வா!
                         பொலியும் புதிய முகத்தினாய் வா...வா...வா
                         எதையும் வெல்லும்  வீரனாய் வா..வா....வா
                         இந்தியாவின் மைந்தனாய்  வா..வா....வா”

                         ஒளி இழந்த நாட்டினில், உன்னாலே;
                         ஒளி பெருக்கச் செய்குவாய் வா..வா....வா
                         களி மிகுந்து வாழ்த்தினோம் வா..வா....வா
                         காலம் தோறும் சிறக்கவே  வா..வா....வா

என்று கூறி வரவேற்போம்; வாழ்த்துவோம்!

வாழ்க பாரதம்.

உங்கள் அனைவரின் சார்பாகவும்,
கிருஷ்ணன்பாலா
26.5.2014 /18:13

No comments: