Tuesday, October 25, 2011

ஒளிர்க,இத் தீபாவளி!


நண்பர்களே,

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த நாளாய் இத் தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இந்தியாவில் எல்லா மதத்து மழலையர்க்கும் இது ஓர் கனவுலகத் திருநாள். அவர்களின் பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தைச் செல்வங்களை மகிழ்வித்து மகிழும் நாளாய் இது அமைந்திருப்பது குறிப்பிட்த் தக்கது.


இந்தியாவைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் நம் மதம்தான்; எல்லோரும் இந்தியத் தாய் ஈன்றெடுத்த ஒருதாய் வயிற்று மக்களே.


எல்லோரையும் சொந்தம் கொண்டாடுங்கள்;எல்லோருக்கும் சொந்தம் ஆகுங்கள்.




ஒரே ஒரு எச்சரிக்கை:

தீபாவளி மரபைப் போற்றும் வகையில் “கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று நண்பர்களைப் பார்த்துக் கேட்கும் வெடியைப் பார்த்து வெடியுங்கள்:


இங்கே கூவத்தில் குளித்துக் கொண்டிருப்பவர்களுக்குக் கோபம் வந்து விடப் போகிறது!


வாழ்த்துக்களுடன்,
கிருஷ்ணன்பாலா
25.10.2011

1 comment:

Rathnavel Natarajan said...

இந்தியாவைப் பொருத்தவரையில் எல்லா மதங்களும் நம் மதம்தான்; எல்லோரும் இந்தியத் தாய் ஈன்றெடுத்த ஒருதாய் வயிற்று மக்களே

நல்ல பதிவு.
நன்றி ஐயா.