Thursday, December 20, 2012

மோடி : ஒரு பார்வை.















காங்கிரஸின் எதிர்ப்பைவிட,முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விடபி.ஜே.பி.யின் உள்குத்து வேலைகளை மீறி, குஜராத் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் மாநிலத் தேர்தலில் நரேந்திர மோதி வென்றிருக்கிறார்.

பி.ஜே.பி.யின் ஆட்சி இம்மாநிலத்தில் 4 ஆவது முறையாகத் தொடரவும்.மூன்றாவது முறையாக குஜராத் மக்கள், தன் தலைமையின் மீது நம்பிக்கை கொள்ளும்படியும் நடந்திருக்கிறார்.

இது இந்திய அரசியல் அரங்கில்-குறிப்பாக, கடந்த 50 ஆண்டுகளில் ஜோதி பாசு அவர்கள் நீங்கலாக,வேறு எந்த ஒரு  மாநில முதல்வரும் சாதித்திராத சாதனை.

நமது மாநிலத்தைப் போல், ‘தமிழர்களைப் பிச்சைக்காரர்களாக’ எண்ணி, ஆளாளுக்கு இலவசங்களை அள்ளித் தருவதாகத்  தேர்தல் அறிக்கைகள் விட்டு, ஓட்டுப் பிச்சை ஏந்தும் கேடு கெட்ட அரசியலைச் செய்யாமல், மாநிலத்தின் தொழில் வளத்திலும் மக்களின் நீண்டகால நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்தி, சிகப்பு நாடா நிர்வாகத்தை ஒழித்து, ஒற்றைச் சாளர (Single window) நிர்வாகத்தைத் தந்து, மாநிலத்தின் ஒட்டு மொத்த நலனுக்காக ஆட்சி நிர்வாகத்தை நடத்தியதன் மூலம், மிகப்பெரும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் குஜராத்தில் பெரிய தொழில்களைத் தொடங்கும்படிச் செய்தவர் நரேந்திர மோதி.

‘குஜராத்தை முன் மாதிரியாகக் கொண்டு  இந்தியாவில் ஊழல் அற்ற  நிர்வாகத்தை இவர் தர முடியும்’ என்ற நம்பிக்கையை ‘நல்லோர் மத்தியில் விதைத்திருக்கிறார் இவர்’ என்பது உண்மை.

பதவிப் பகட்டு, படாபடோபம், உறவினர்கள், தன் கட்சியினர், நண்பர்கள் என்ற பச்சாதாபம் எல்லாம் காட்டாமல்மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு எப்படி நேர்மையும் துணிச்சலும் மிக்க நிர்வாகத்தைத் தர முடியுமோ, அப்படி ஒரு தரமான ஆட்சி நிர்வாகத்தைத் தந்த மோதியை அவருடைய ஜன்ம வைரிகள் கூட ஊழல்வாதி என்று விரலை நீட்டி விட முடியாது.

காங்கிரசும்,பி.ஜே.பி யும் ஒன்றுக்கொன்று ஊழல் நிர்வாகத்தைத் தந்து,தேசப் பற்றாளர்களை எல்லாம் சலிப்பும் வெறுப்பும் கொள்ளச் செய்தவைதாம்.

தனது கட்சியில் இப்படி ஒரு நேர்மையும் துணிவும் தேசப் பற்றும் கொண்ட ஒரு முதல்வர் இருக்கிறாரே!” என்று பெருமை கொள்வதற்குப் பதில், “அய்யோ, இந்த ஆளை வளரவிட்டால் நாளை அகில இந்தியத் தலைமைக்கும் பிரதமர் பதவிக்கும் தானாக வந்து விடுவாரேஎன்று அஞ்சி, நயவஞ்சகத்தால் ‘குஜராத்திலேயே இவரது பெருமையைக் குலைக்க வேண்டும்என்று திட்டமிட்டுச் செயல்பட்டது, அகில இந்தியக் காங்கிரஸ் தலைமை அல்ல; அகில பாரதீய ஜனதாக் கட்சித் தலைமைதான்.

இன்று குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மாபெரும் வாகை சூடியதன் மூலம், அவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து பல தலைவர்களைப் பாத்ரூமுக்குள்ளேயே படியளக்கச் செய்திருக்கிறார் இந்த மோதி

அந்த வகையில் இவர் ஒரு ’மோடி மஸ்தான்’தான்.

‘மோதி இந்த குஜராத் தேர்தலில் வென்றால் இந்தியாவின் அடுத்த பிரதமர்தான்’ என்ற அரசியல் கணிப்பு இப்போது அதிகரித்துள்ளது.

ஆனால்,அதற்கு பி.ஜே.பி.யின் இமேஜ் அல்லவா தடையாக இருக்கிறது? என்பதை இந்த அரசியல் பார்வையாளர்கள் பார்க்கத் தவறி விட்டனர்.

காங்கிரஸைக் குப்பையில் எறிய மக்கள் தயாராக இருந்தாலும்,மோதியை கோபுரத்தில் ஏற்றி வைக்க பி.ஜே.பி.யின் உள் குத்து, ஊழல் தலைவர்கள் தயாராக இல்லையே?

இந்தியா, இன்றுள்ள நிலையில், இரும்புக் கரம் கொண்ட வலிமையான  மனிதர்தான் இந்தியாவுக்குத் தலைமை ஏற்க வேண்டும்.

ஆனால் அது சாத்தியப்படவோ, சாத்தியப் பட்டாலும் நிலைத்திருக்கவோ நமது அரசியல்வாதிகளும் சரி; மதத் தீவிரவாத வன்முறையாளர்களும் சரி; ஏன்,  ‘இந்தியா ஒரு வலிமை மிக்க தலைவனால் ஆளப்படக் கூடாது’ என்று கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு விழித்திருக்கும் சர்வதேசச் சதியாளர்களும் சரி,விட்டு வைப்பார்களா? சந்தேகம்தான்.

மோதிதான் பிரதமர் என்று பல்வேறு ஜோதிடர்கள் இன்று ஜெபிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவின் தலை எழுத்தும் இவருக்கு நடக்கும் ஏழரைச் சனியின் விதியும் இன்றைய இந்தியாவின் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளின் சதியும் மற்றும்   ‘போலி மதச் சார்பற்ற பித்தலாட்டப் பிரசங்கிகளின்’ பேச்சில் மயங்கும் முட்டாள்களின் மதியும் சேர்ந்து  இம்மனிதரை  இந்தியாவின் உயர் நிலைக்குக் கொண்டு செல்லுமா?

சற்றுச் சிந்தித்தால் தேசப் பற்றாளர்கள் மனம் தத்தளிக்கத்தான் செய்யும்!.

தேசத்தின் தலைவிதி நன்றாக இருக்க, பிரார்த்திப்பதை விட வேறு ஒன்றும் பெரிதாக  இருக்க முடியாது.

இவண்-
கிருஷ்ணன்பாலா
20.12.2012

2 comments:

முத்துபாலகன் said...

அருமையான பகிர்வு; மனது மிகவும் பெருமை கொள்கிறது

Selvarangam Subramaniam said...

தன்னலமற்ற தலைவர்கள் வரிசையில் மோடி இடம் பிடித்துள்ளார்;நாடு நலம் பெற,வளர்ச்சிப்பாதையில் மீள ஒரு தேசியவாதியின் ஆட்சி வேண்டும்.இந்த காலகட்டத்தில்,அனைத்து தகுதிகளும் பெற்றவர் மோடி மட்டுமே...