Friday, September 17, 2010

கண்டவை;உண்டவை-1

அறிவார்ந்த நண்பர்களே,


தமிழாசான்’என்றொரு இணைப் புலம்.(சரிதானே திரு.உதயன் சத்தியானந்தன் அவர்களே)


நார்வே நாட்டில் வாழும் தமிழர் திரு.உதயன் சத்தியானந்தன் அவர்கள் பதிப்பித்து நடத்தி வருகிறார்.


அதன் உட்பக்கம் சென்று படித்தேன்.


ஆகா... என்ன சொல்வது?


நாமெல்லாம் நமது எழுத்துப் பணி குறித்து வெட்கப்படும்படிச் செய்து விட்டார்.
அவ்வளவும் அளவற்ற தமிழ் ஈடுபாட்டில் அவர் பதிப்பித்து வரும் படைப்புக்கள்.


தமிழ்ச் சான்றோர்களில் தலை சிறந்த தோன்றலாகிய மறைமலை அடிகளாரின் உயிர்ப் பற்றாளர் இவர்.சொல்லவேண்டுமா? இவர் தமிழின்பால் கொண்டுள்ள மெய்ம்மைப் பற்றும் தமிழ்ப் பண்பாட்டின் ஒற்றும்.


மூச்சும் பேச்சும் தமிழாய் வடிக்கும் திரு.உதயன் சத்தியானந்தன் அவர்கள் பதிப்பித்த கட்டுரை என்னை மிக ஆழமாகப் படித்து,எடுத்து இங்கே படைப்பவர்க்கும் பகிர்ந்தளிக்கச் செய்துள்ளது.அத்தனை பெருமைக்குரிய தமிழ்ப் பணியை அவர் செய்து வருபோது,‘அதைக் காணாத கண் என்ன கண்ணொ?’ என்று என்னை இங்கே ‘கண்டேன்;உண்டேன்’ என்று எழுதத் தூண்டிற்று.


இதோ-


நான் கண்டு உண்டதை அப்படியே பதிப்பிக்கிறேன்;
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்”- குறள் காட்டிய வழிதானே!


அவருடைய ‘தமிழாசான்’ எடுத்துக் காட்டியுள்ள,நம் தமிழ் மொழியின் மாண்பு, செம்மொழியாளர்கள்கூட எடுத்துச் சொல்லாத நோன்பு.படியுங்கள்:


"மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி"
மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பது உண்மைதான்.தமிழனுக்குப் பெருமைதான்.ஆனால் தமிழ் தொலைந்ததே.
_காசியானந்தன்_


சிந்திய,மங்கோலிய,சீன மொழிகளுக்கும் தமிழுக்கும் உறவு இருக்கிறது என்கிறார் கால்டுவெல்.


இந்தோ - அய்ரோப்பிய மொழிகளும் தமிழும் நெருங்கியவை என்கிறார் போப்.
அங்கேரி துருக்கி பின்னிசு போன்ற பதினொரு பின்னே - உக்ரியன் மொழிகள் தமிழிலிருந்து பிறந்தன.என்கிறார் கபோர் சென்(த்) கொதல்நய்.


சுமேரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவைச் சுட்டிக்காட்டுகிறார் லோகநாத முத்தரையர்.


எலாமைட் மொழிக்கும் தமிழுக்கும் தொடர்புண்டு என்கிறார் மக் ஆல்பின்.
கொரியன் மொழிக்கும் தமிழுக்கும் உள்ள உறவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் ஆல்பர்ட்.


சப்பானிய மொழிக்குத் தமிழே மூலம் என்கிறார் ஓனோ.


ஆபிரிக்க மொழிகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவை ஆய்ந்து நிறுவுகிறார் செங்கோர்.


பாசுக்கு மொழி உலகளாவப் பரவிய பண்டைத் தமிழ் மொழியின் ஒரு கூறே என்கிறார் இலாகோவாரி.


ஆத்திரேலியப் பழங்குடிகளின் மொழிகளும் தமிழும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என்கிறார் பிரிச்சார்டு.


அமெரிக்கப் பழங்குடிகள் பேசிய மொழிகள் தமிழோடு கொண்டுள்ள உறவினை அறியத்தருகிறார் சமன்லால்.


தொல்தமிழர் காலத்திலேயே தமிழன் போன போன இடங்களில் எல்லாம் தமிழைத் தொலைத்தான் என்றுதான் இதற்குப் பொருள்._ காசியானந்தன்_


வெளியிட்டவர் Tamilnorsk நேரம் 6:35 AM தேதி Oct 31, 2009

2 comments:

munril said...

தோழர் ஐயாவுக்கு!
அடியேன் (ச.உதயன்) அன்பு வணக்கம்.
ஐயா பதிப்பில் சிறு தவறு நிகழ்ந்து விட்டது போலும். நீங்கள் இட்டுள்ள இடுகைச் செய்திகள் 'தமிழனா தமிங்கிலனா' என்ற காசியானந்தர் அவர்களின் நூலில் வாசித்து, வாசித்த வியப்பில் அவற்றை இடுகை இடுவதற்கு யான் ஓரூடகமாக இயங்கினேன்.எல்லாப் பெருமையும் உணர்ச்சிப் பாவலன் காசியானந்தரையே சாரும்.
தோழர் ஐயாவுக்கு என் உளம் கனிந்த நன்றி. நீங்கள் பெரியதொரு நூலக உலகத்தை இயக்குகிறீர்கள். தமிழ்த்தாய்ச் செய்திகளை உலகறிய ஊடகமாய் இயங்கும் உங்களின் தாள் பணிகிறேன்.நீங்கள் என்னைப்பற்றி எழுதிய செய்திகளை மிகைப்படுத்தலென மற்றவர் நினையாத வரை நன்றி.

தமிழாசான் உயில்
"செத்துக் கொண்டே
போகும் பொழுதும் - எனது
செவிகள் தமிழைக்
கேட்டுக் கொண்டே
சாக வேண்டும்
வெப்பங் கூட்டை
விலகும் பொழுதும் - மெய்யி
னுயிரும் ஓயும்
நேரம் சொத்தென்
றிருந்தால் பிரித்த - பங்கில்
ஒரு பங்கு
அன்னை பூபதி
தமிழுக் கலைக்கூடம்
சேர வேண்டும்
செத்துப் போனால்
சிதை யிடாதீர் - உடல்
மருத்துவக் கல்விக்கு
பயனா கட்டுமே!
ச.உதயன்.

ulagathamizharmaiyam said...

இந்த இடுகையில் உள்ள தகவலுக்கே முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது.தவிர ‘தமிழாசானில்’ உள்ள பிற படைப்புக்களும்சேர்த்தேதான் பாராட்டுப் பெற்றுள்ளன்.நன்றி.
-கிருஷ்ணன் பாலா