Thursday, September 20, 2012

திசைமாறிப் போன போராட்டம்.


நண்பர்களே,

எந்தப் போராட்டத்திலும் காவல்துறை தலையிட நேர்ந்தால்,பிறகு அதன் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உரியதாகி,அதுவே பின் அரசியல்வாதிகளுக்கும் போலி சமூக ஆர்வலர்களுக்கும் ’அல்வா’ ஆகி விடுகிறது.

இதில் Main Subject" என்பது கண்டுகொள்ளப் படாமல் போய்,அதன் கிளையுள் கிளையான ‘காவல்துறையின் நடவடிக்கைகள் ‘போலீஸ் அராஜகம் என்று FOCUS செய்யப்பட்டு, அதுவே Main Subject ஆக்கப்பட்டு விடுகிறது

அதை நமது ஊடகங்கள்-குறிப்பாக தொலைக்காட்சி ஊடகங்கள்- போட்டி போட்டுக் கொண்டு ’பாதிக்கப்பட்டவர்களின் குரல்’ என்று விதம் விதமாக ஒளிபரப்பி இத்தகைய ‘தூண்டப்பட்ட’ போராட்டங்களை மேலும் உணர்ச்சி வேகப் படுத்தி அதையே செய்தி வியாபாரமாகப் பயன் படுத்துகின்றன.

அறிவுக்கும் உண்மைக்கும் சமூக நலனுக்கும் புறம்பான போராட்டங்களின் உள்முகத் திரையைக் கிழித்து, செய்திகளை வெளியிடும் உயர்தர ஊடகத் திறன் இன்று சிறுத்துப் போய் விட்டது.

கூடன்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம் திசைமாறி ’போலீஸ் அராஜகம்’ என்பதில் மட்டுமே FOCUS ஆகி வருவதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

இவண்-
கிருஷ்ணன் பாலா
13.9.2012

No comments: