![]() |
வன்கொடுமைச் சிறுவனும் வரிப் புலிப் பூனையும் |
அருமை நண்பர்களே,
வணக்கம்.
டெல்லியிலிருந்து என் நண்பர்,வழக்கறிஞர் திரு இராம் சங்கர் அவர்கள் காணொளி ஒன்றை "Gussa sabhi ko aata hai" ( All are capable of anger)” என்று தலைப்பிட்டு எனது மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தார்.
சில வினாடிகளே ஓடும் அந்தப் படம் பல மணி நேரச் சிந்தனையை நம்முள் பதித்தி விடுகிறது.
ஆம்!
பூனைதான்,அது .
வன்மமாகத் தாக்கப் படும்போது பூனைகூட புலியாக மாறி.சீறி,தன்னைத் தாக்கும் எஜமானச் சிறுவனையும் தள்ளி வீழ்த்தும் என்பதை நிரூபிக்கும் அரிய காணொளி அது.
’வலியவன்;எஜமானன்’என்று ஒருவன் தன்னைக் கருதிக்கொண்டு, எளியவனை, ‘அவன் தன் வீட்டு அடிமைதானே’ என்று சீண்டி,சீண்டித் தாக்கி விளையாடி இன்புற்றால், அந்த எளியவன் என்ன செய்வான்?
இதோ இந்தப் பூனைபோல்,புலியாக மறி விடுவான்.
இதன் எதிரொலியாய்-
இன்றைய நமது சமூக நிலையையும் எண்ணிப் பார்க்கும் கட்டாயம் இந்தக் காணொளியால் கருத்தில் பதிந்தது.
“ குனியக் குனியக்குட்டினால் கோழைகளும் கொதித்தெழுவர் குவலயத்தில், இந்தக் கூறுகெட்ட தமிழனைத் தவிர” என்பதே அது.
ஏனெனில் -
இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள்எல்லாம் எலிகளாகி விடுகின்றார்கள், முக்கியமான காலகட்டத்தில்!
அதேசமயம் எலிகள் எல்லாம் புலிகள் போல் பொய்க்குரலை எழுப்புகின்றன அரசியல் மேடைகளில்..
காணுங்கள் இந்தக் காணொளியை.
கருத்திலும் கண்ணிலும் உறுத்தும் காட்சி அது.
குறிப்பு:
செல்லப் பிராணி என்பதால் உங்கள் குழந்தைகள் அவற்றைச் சீண்டவோ,அவற்றின் கோபத்தைத் தூண்டவோ செய்து விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
இவண்-
கிருஷ்ணன்பாலா
24.8.2012
No comments:
Post a Comment