Saturday, June 2, 2012

எச்சரிக்கை: இறைவனின் இடைத்தரகர்கள்.



அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
‘Be aware of such brokers ‘in the name of any GOD and any relegion' என்று சொல்லவே இப்பதிவு.

கடவுளின் பெயரால் மதவாத ஏஜெண்டுகள் பிறருடைய இணையதளங்களிலும் மின்னஞ்சல் முகவரிகளிலும் நுழைந்து“உங்களுக்குகாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உங்களை ரட்சிக்கச் செய்கிறோம்” என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

அது மட்டுமல்ல சற்றும் தொடர்பில்லாமல் ஒருவருடைய உள் பெட்டியில் சென்று தாங்கள் சார்ந்துள்ள மதத்தின் கொள்கைகளையும் கடவுள் கோட்பாடுகளையும்  சம்பந்தப்பட்டவர் விரும்பாமலேயே,’அடி செருப்பால நாயே’ என்று வசை மொழியைத் துப்பும்வரை தத்துவ- சித்தாந்த மழையைப் பொழிவதும் இந்தக் கூறு கெட்ட குப்பைகளின் குதூகல விஷயம்.


பிரச்சினை இல்லாத மனிதன்இல்லை.அவன் துன்பத்திலும்
துயரத்திலும் தோல்விகளிலும் மூழ்கியிருக்கின்றபோது,
எத்தை தின்றால்  பித்தம் தீரும்?”என்றிருக்கின்றவன்இவர்களுடைய
மாய்மாலப் பித்தலாட்ட விளம்பரங்களைக்  கண்டு...இவர்களின்
பின்னே சென்றால் நம் துன்பத்துக்கு முடிவு கிடைக்குமோ?; கடவுள்
இவர்களுடைய பிரார்த்தனையில் கண் திறந்து விடுவாரோ?”
என்றெல்லாம் பலவாறு மூட நம்பிக்கைகொண்டு இப்படி
அழைக்கிறவர்களையும் பூசாரிகளையும்  போலிச்சாமியார்களையும்
கடவுளின் பிரதிநிதிகளாக நம்பிச் சரண் அடைகின்றான்.

பிறகு, அவர்களே அந்தத் துன்பப்பட்டவனுக்குக் கடவுளாகிப்
போய் விடுகிறார்கள்.

காலம் கடந்த பிறகு அந்தப் போலிகளைச் சரண் அடைந்தவனும்
அவனுக்குக் கடவுளைக் காட்டி கொடுப்பதாகச் சொல்லி,கடவுளாகவே
ஆகிவிட்டவனும் போய்ச் சேருவது  ஒரே இடம் என்றாகிஅவர்கள்
இருவருமே  குழியில் விழுந்த குருடர்கள் ஆன  கோலம் வரையப்பட்டு
விடுகிறது. இது உலக அனுபவம்.

இதைத்தான்-
திருமூலர்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
நம்செவியில் அறைந்து  செப்பி இருக்கிறார்,இப்படி:.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்;
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்;
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே!



முகநூல் என்னும் அகண்ட வலைத்தளத்தில் சில குருட்டு மதப் பிரசங்கிகள் தனி ஒருவரின் பக்கங்களில் அவருடைய சம்மதம் இல்லாமலேயே ஊடுருவி, வர்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதற்காகப் பேசவந்துள்ளதாக ஊளையிடுவதை அறிகிறேன்.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அந்த குருட்டு நரிகள்,
கடவுள் எங்கள் ஜெபத்திலும் எங்கள் யோகா தவத்திலும்
இருக்கிறார்; என்றும்; எங்கள் ஜெபத்தில் கடவுள் வந்து உங்களை  
எல்லாம் ஆசீர்வதிக்கிறார்வாருங்கள்,எங்களின் பின்னே என்றும்
இன்னொரு மதத்தின் ஏமாற்றுக் காவிகளோ இன்னும் ஒருபடி மேலே போய், “நானே கடவுளின் அவதாரம்என்னைச்
சரண் அடைந்தோருக்கு மோட்சம் அருள்வேன்’ என்றும் பலவாறு பலவிதத்தில் பிதற்றுவதும் கண்கூடாகத் தெரிகிறது.

இந்த எத்தர்களையும் பித்தர்களையும் நம்பி பின்னே செல்லும்  மனிதர்கள் யாவரும் மந்தைகளே!

அத்தகையோருக்கு  அந்தப் பித்தர்கள் ஏய்ப்பர்களாகிய
மேய்ப்பர்களே!

எனக்கு ஒரு மதப் பிரசங்கியிடமிருந்து மின்னஞ்சல்ஒன்று வந்தது.

எனக்குச் செய்தி அனுப்பியத்துடன் திரும்ப நான் அவரைத் தொடர்பு கொள்ள வசதியாக  அழைப்புக்குரிய தொலை பேசி எண்கள் மற்றும் அவர்களுடைய சில வலைத்தளங்களின் முகவரிகளையும் தந்திருந்தார்.

அதாவது மத மாற்றத்துக்கு வலை வீசும் கும்பலைச் சார்ந்தவர் இந்த ஆசாமி என்பதற்கான அனைத்து அடையாளங்களுமான மின்னஞ்சல் இது.

அந்த மின்னஞ்சல் அழைப்பின் அத்து மீறலான அசல் செய்தி பின் வருமாறு:

//From: raj kj
Sent: Wednesday, 30 May 2012 10:43 AM
Subject: For your kind Attention
.     
 Dearly beloved,    You are so precious to GOD.

“In an acceptable time heard you, And in the day of salvation I have helped you.” Behold, now is the accepted time; behold, now is the day of salvation.  
                                                                      
GOD says that'' When you pass through the waters, I will be with you and when you pass through the rivers, they will not sweep over you.   When you walk through the fire you will not be burned, the flames will not set you ablaze.

Again GOD says that '' Since you are precious and honored in my sight, and because I love you, I will give men in exchange for you, and people in exchange for your life.

GOD can not afford to loose you, because he paid a high price for your redemption.
That price is JESUS (the son of the living God) died for you.

GOD demonstrates his own love for us in this; while we were still sinners, JESUS died for us.

Again the word of God says that ''Jesus was delivered over to death for our sins and was raised to life for our justification.

Jesus is the only way to God and to heaven.
Jesus said to him, “I am the way, the truth, and the life. No one comes to the Father (God) except through Me (Jesus).

If a person lives in this world without accepting Jesus as his Lord and Savior, he will end his life in hell.

The blood of Jesus, his (God's) son, purifies us from all sin.
If we claim to be without sin, we deceive ourselves and the truth is not in us.
If we confess our sins, he is faithful and just and will forgive us our sins and purify us from all unrighteousness.

For every one who calls on the name of the Lord (Jesus) will be saved.
You can receive Jesus now by saying and believing the following
That if you confess with your mouth, '' Jesus is Lord'', and believe in your heart that God raised him from the dead,  you will be saved.

For it is with your heart that you believe and are justified and it is with your mouth you confess and are saved.

And the word of God says that '' yet to all who received him to those who believed in his name (Jesus), he gave the right to become children of God.
Jesus Christ is the only name by which we must be saved, “Nor is there salvation in any other, for there is no other name under heaven given among men by which we must be saved.”

So believe in Jesus Christ, He loves you and he will be coming soon.

With Regards"//


’இதை அனுப்பியவர் எனக்கு யார்?’ என்றே தெரியாதுஆனால்,
அந்த மின்னஞ்சலைப் பலருக்கும் ஒரே நேரத்தில் அனுப்பி, அதில்,
கடவுள் சொன்னதாகச் சில செய்திகளையும் சொல்லி,
அப்படிப்பட்ட கடவுள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்;
அவர் விரைவில் வரப் போகிறார்வாருங்கள் எங்கள்
ஜெபக்கூடத்துக்குஉங்களைக் கடவுளின் பிள்ளையாக
ஆக்குகிறோம்” என்று அழைப்பு அனுப்பியிருந்தார் அவர்.

நானும் அவரது மின்னஞ்சல் வழியே பதில் அனுப்பினேன்.

எனது செய்தி இதுதான்:

நண்பரே,

கண்ணுள்ளவனுக்கும் கருத்துள்ளவனுக்கும் யாரும் 
கடவுளுக்கு வழிகாட்ட வேண்டியதில்லை.

கடவுள்தான் என்னையும் உங்களையும் படைத்தான்இதில் 
நீங்கள் மேய்ப்பனாகவும் நான் மேய்க்கப் படுபவனாகவும் 
இருக்க முடியாது.

அப்படி இருந்தால் அந்தக் கடவுளும் இந்த அரைகுறை 
மனிதனின் தீர்ப்பாகத்தான் இருக்க முடியும்.

யாரும் வழி நடத்திச்சென்று நம்மை அல்லது என்னை 
கடவுளிடம் சேர்த்து அவனுக்குப் பெருமையும் புகழும் சேர்க்கும் 
ஏஜன்ஸி’ நடத்துவதை (அதாவது புரோக்கர் வேலை பார்ப்பதை) நான் கடுமையாக எதிர்ப்பவன்.

மனித சமூகத்தின் மாசு படிந்துள்ள விஷயங்களை 
அகற்றுவதாகக் கூறிக்கொண்டு இன்னொரு மாபெரும் 
மாசு கொள்ளும் முயற்சியைத் தவிர்ப்பீராக.

அன்புடன்,
Krishnan Balaa
30.5.2012

இந்தப் ப்ரோக்கர் பயலை நான் கல்லால் அடிக்காமல் சொல்லால் அடித்ததனால்தான் பதுங்கிக் கொண்டான்.

இது ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் என்று இல்லாமல் கடவுளைக் காட்டுகிறேன்’ என்று எவன் சொன்னாலும் அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் நமது செய்தி இதுதான்.

நாம் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பதை விடவும் சகிப்புத் தன்மையைஅவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்களாக இருப்போம்.


இவண்,
கிருஷ்ணன்பாலா
3.6.2012

1 comment:

Unknown said...

yaarukitta???super