Thursday, June 12, 2014

பேசியது, நாக்கல்ல;இதயம்!

றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான இந்தியப் பாராளுமன்றத்தின் குடியரசுத் தலைவரின் முதல் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் இறுதியில் இன்று (11.6.2014) பிரதமர் மோதி ஆற்றிய உரை, இந்தியாவுக்குப் பொற்காலம் படைக்கும் போர்க் குணத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மாற்றாரும் தோற்றாரும்  மூக்கின்மீது விரல் வைத்துப் போற்றும்படியான உரை அது.

‘மோதியின் அரசு எந்த மாதிரியான செயல் திட்டங்களை அமலாக்கப்போகிறது’ என்பதை தெள்ளத் தெளிவாக அந்த உரையில் அறிவித்திருக்கிறார்.

முந்தையை காங்கிரஸ் அரசின்  முக்கியப்புள்ளிகள் மட்டுமல்ல மோதியைக் கடுமையாக எதிர்த்த முலயாம்,மம்தா, லாலுபிரசாத் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் என்று ஒருவர்கூட  மூச்சு விடமுடியாதபடிச் செய்த, பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அந்த உரையிலிருந்து தொகுக்கப்பட்ட ரத்தினச் சுருக்கமான கருத்துக்கள் இவை:
  • நமது நாட்டின் அடையாளமாகிவிட்ட  ஊழலை மாற்றி         தொழில்நுட்பத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும்  முன்னுரிமை அளிக்க வேண்டும்; சர்வதேச அரங்கில் நமது தேசம் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • ஏழ்மையிலிருந்து ஏழை மக்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.  அதை நாம் செய்யத் தவறினால் அவர்கள் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
  • கிராமங்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க        வேண்டும். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு முன்னேற்றம் அடையும்.எனவே,கிராமங்களிலும் விவசாயத்திலும் மாற்றத்தை உண்டாக்க உறுதியாக முடிவுகள் எடுப்பேன்.
  • இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப்பாதையில்          ஒன்றுக்கொன்று போட்டியிட வேண்டும்.அதற்கு ஒவ்வொருவரும் ஒத்துழைத்து உழைக்கவும் சிந்திக்கவும் முன் வரவேண்டும்.
  • அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய எதிர்க்கட்சிகளுக்கும் பொறுப்புள்ளது. எனவே அரசியலுக்காக எதிர்ப்பது என்ற கொள்கையை விட்டு விட்டு திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டவும் உரிய முறையில் மக்களுக்குப் பயன் சென்றடையவும் குரல் கொடுக்கவும் முன் வர வேண்டும்.    
  • இளைஞர்களுக்கு தொழிற்கல்வி அளிப்பதன் மூலம் மற்ற நாடுகளைவிட,  இந்தியா சிறந்து விளங்க முடியும்; நாம்  செயல்படுத்தும் ஒவ்வொரு  திட்டமும் ஒவ்வொருவரின் பணியும் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே மையமாகக் கொண்டிருக்க வேண்டும்.
  • நாட்டின் விடுதலைப் போரை மக்கள் இயக்கமாக,காந்திஜி         மாற்றினார். அதேபோல் நாம், நம் நாட்டின் வளர்ச்சியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
  • ஆண்டுகளுக்குப் பிறகு காந்திஜியின் 150 ஆவது நினைவு தினத்தில் சுத்தமான சுகாதாரமான இந்தியாவை காந்திஜிக்கு நாம் அர்ப்பணிக்க நாம் அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
  •  நாட்டிற்காக உயிரைவிட இயலாவிட்டாலும் நாட்டிற்காக,          அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதை நாம் நழுவ விட்டு விடக்கூடாது.

நண்பர்களே,

பேசியிருப்பது பிரதமர் நரேந்திர மோதியின் நாக்கல்ல;இதயம்!

உண்மையான தேசப்பற்றும் மக்கள்மீது மதிப்பும் கொண்ட மாபெரும் மனிதர் இந்த தேசத்துக்குக் கிடைத்திருக்கின்றார் என்பதை பிரதமர் மோதி இன்று பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையிலிருந்து அறிந்து கொண்டு நெகிழ்கிறோம்;மகிழ்கிறோம்!

இவை வெற்று வார்த்தைகள் அல்ல; வெற்றி வார்த்தைகள். அவை வெற்றிகரமாக மாற வேண்டும்.

மாறும் என்ற நம்பிக்கை என் போன்றோருக்கு உண்டு; மோதி அப்படி மாற்றுவார்.மாற்றிக் காட்டும் துணிவும் தைரியமும் கொண்ட தனி ஒரு தலைவன்தான் மோதி.

நாட்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அவரது எண்ணங்கள் இடையூறின்றி வெற்றி பெற வேண்டும்.

அதற்கு நல்லோரும் நடுநிலையாளர்களும் நெஞ்சார வாழ்த்த வேண்டும்.

கட்சி  வேறுபாடுகளைக் கடந்து இந்த தேசத்தின் நன்மையைக் கருதுவோரெல்லாம் கைதட்டுங்கள்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
11.6.2014
Post a Comment