Tuesday, June 10, 2014

மதியோடு ‘மோதி’ விளையாடு!

நிருபேந்திர மிஸ்ரா
அறிவார்ந்த நண்பர்களே,

மோதியின் தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசை எப்படியாவது விமர்சித்து,அம்மாவின் கவனத்தை அல்லது அம்மாவின் தொண்டர்கள் ஆதரவைப் பெற்று விடவேண்டும்' என்று சிலருக்குப் பிரத்தியேக ஆசை இருப்பதில் தவறில்லை.

ஆனால்-
எதற்கெடுத்தாலும் புத்திசாலித்தனமாக நுணுகி ஆராய்ந்து மோதியின்  செயல்பாட்டைக் கேலி செய்யவோ குற்றம் சுமத்தவோ முனையும் இவர்களின் முதிர்ச்சி இன்மைக்கு முகவரி தருவதைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டியிருக்கிறது.

உதாரணமாக-

நிருபேந்திர மிஸ்ரா பிரதமர் மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதைப் பற்றி அ.தி.மு.க  தீவிரவாதப் பதிவர்கள் குட்டிக் காட்டும்  குமுறல் இது:

//நிருபேந்திர மிஸ்ரா, 2G விவகாரத்தின் முக்கிய கதாபாத்திரம்....தயாநிதி தொலை தொடர்பு மந்திரியாக இருந்தபோது இவர் தான் அவருடைய செயலராக இருந்து 2G ஊழலை ஆரம்பித்தவர்... .
பின்னர் ராசா மந்திரியாக இருந்த போது ’டிராய்’ தலைவராக இருந்தவர்... 
டிராய் பதவியில் இருந்து ஓய்வுபெற்றதோடு அவருக்குத்  திரும்பவும் மத்திய அரசு பதவியில் இடம் தரக் கூடாது என்ற சட்ட ஆணையை பிஜேபி திருத்தி இவரைப் பிரதமரின் செயலாளராக நியமித்துள்ளது ....//

என்று குறிப்பிட்டு ‘இது நல்ல ஆரம்பமாக இருக்கிறதே’ என்ற கிண்டலைப் பதிப்பித்துக் ’காலரைத் தூக்கி விட்டிருக்கிறார்கள்.

அதுசரி.
இதில் புதைந்துள்ள அரசியல் சாதுர்யத்தை இவர்கள் புரிந்து கொண்டால் அவர்களுடைய கிண்டல் அவர்களுக்கே சுவையான சுண்டலாக மாறிவிடும்.

எப்படி?நேர்மை மிக்க அதிகாரி என்று ’நிருபேந்திர மிஸ்ராவுக்கு டெல்லி அதிகார வட்டத்தில் மதிப்புண்டு. இதன் அடிப்படையில் இந்த ஊழல்களின் மூலாதாரத்தை அறிந்தவர் இவர் என்பதால் அந்த ஊழல்களை எளிதில் அலசுகின்ற வாய்ப்புக்காக இவரை ஏன் தனது ஆலோசகராக பிரதமர் மோதி
வைத்துக் கொள்ளக் கூடாது? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

சாணக்கியத்தனம் என்பது எதிரியுடன்  குலாவுவதோடு நின்று விடுவதில்லையே!

எதற்கும் மோதியின் விமர்சகர்கள்,மதியோடு ’மோதி’ விளையாடக் கற்றுக் கொள்வது நல்லது!

இவண்-
கிருஷ்ணன்பாலா
10.6.2014

No comments: