Thursday, April 17, 2014

மோதி முன்னூறு பிளஸ்!

அறிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.

இந்தியா முழுவதிலும் எதிரொலிக்கின்ற மக்களின் குரல்: ’மத்தியில் மாற்றம் வேண்டியே எங்கள் ஓட்டு’

ஆம்.
நரேந்திர மோதியின் அரசு அமைய வேண்டும் என்பதில் அனைத்துத்தரப்பு மக்களிடமும் ஏகோபித்த எண்ணம் வலுவாக இருக்க, மோதியை எதிர்ப்போர் ஓரணியில் இல்லை என்பதும் அவர்கள் தங்களுக்குள் ’யார் பலசாலி?’ என்று காட்டிக் கொள்வதில் அணிகளாகப் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் வீழ்த்திக் கொள்வதிலும்தான் வெறிகொண்டிருக்கின்றனர்.

இதன் மூலம் மோதியின் ஆதரவு ஓட்டுக்கள் சிதறாமலும் அவருடைய எதிர்ப்பாளர்களின் ஓட்டுக்கள் சிதறியும் போவதால் அவருடை வெற்றி சர்வ நிச்சயமாகிறது.

சொல்லப்போனால்,மோதியை எதிர்ப்பதில் ஒற்றுமை இல்லாத எதிர்க்கட்சிகள் காணாமல் போக வெண்டிய காங்கிரசை மத்தியில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்த்தப் போராடுகின்றன.

90 சீட்டுக்களைக் காங்கிரஸ் தாண்ட முடியாது. மம்தா,முலயாம்,நிதிஷ்.மாயாவதி,ஜெயலலிதா ஆகியோரின் தலைமையிலான மாநிலக் கட்சிகளும் காம்ரேடுகளும் 120 ஐத் தாண்ட வழியே இல்லை. உதிரிகள் 10க்குள்.

கணக்குப்போடுங்கள்:
மோதிக்கு எதிரான கட்சிகளின் மொத்த எண்ணிக்கையே 220 ஐ மையமாகக் கொள்ளும்போது மோதி அணி 300 பிளஸ் என்பதுதான் நிதர்சனம்.

இதைப் ’பல மாதங்களுக்கு முன்பே கணக்குப் போட்டுச் சொல்லியிருக்கிறேன்’ என்பதைத்தான் நமது வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
17.4.2014

No comments: