Wednesday, April 16, 2014

வெற்றி நிச்சயம்!


றிவார்ந்த நண்பர்களே,
வணக்கம்.
ந்தியா முழுவதிலும் காங்கிரஸின்பால் ஏற்பட்டிருக்கும் ’வெறுப்பே’ நரேந்திரமோதியின்பால் ’ஆதரவுப்பேரலை’ என மக்களை விருப்புக் கொள்ள வைத்திருக்கிறது என்பதுதான் அறிவுப் பூர்வமான உண்மை.

இதில்,நரேந்திர மோதியின்பால் தேசமெங்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பின் அளவை ஊடகங்கள் ஆட்டும், மாநில கட்சிகள் ஆகட்டும் குறிப்பாகத் தமிழ் நாட்டின் பி.ஜே.பி தலைவர்கள் ஆகட்டும் குறைத்தே மதிப்பீடுகள் செய்து வருகிறார்கள்.

காங்கிரஸின் குடும்பச் சர்வாதிகாரமும் ஊழல் மலிந்த,வெட்கமற்ற ஆட்சிச் சறுக்கலும்  நரேந்திர மோதியை மக்களின் நாயகனாக உயர்த்தி  இருக்கிறது.

அதற்கான தகுதித் தேர்வில் குஜராத்  மாநிலத்தை 12 ஆண்டுக்காலம் முழுமையாக ஆண்டு மக்களின் ஏகொபித்த ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார் அவர்.

நரேந்திர மோதியின் வெற்றி என்பது காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் மற்றும் குடும்பச் சர்வாதிகாரச் சுரண்டலின் தோல்வி என்றுதான் அமையப்போகிறது.

சொல்லப்போனால் இந்தியா முழுவதிலும் உள்ள கட்சிகள்  ஊழலுக்கு எதிராக, நியாயமான நிர்வாகம் ஏற்பட வேண்டும் என்பதற்காக  ஓரணியில்  ஒன்றுபடவில்லை என்பதும் உண்மையில் காங்கிரஸுக்கு எதிரான அலையைத் தங்கள் ஓட்டு வங்கிக்குச் சாதகமாக்கிக் கொள்வதற்காக அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டுச் சுயநல நோக்கோடுதான் அணி சேர்ந்திருக்கின்றன என்பதும் வெட்கப்படவேண்டிய ஒன்று.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரையில்  நரேந்திர மோதியை மையப்படுத்தி பி.ஜே.பி தனித்து நின்றிருந்தால் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி  மற்ற கட்சிகளைவிட அதிக வாக்குகள் பெற்றிருக்கும்.

ஆனால் இங்குள்ள பி.ஜே.பித் தலைவர்களின் சுய நலமும் பழக்கப்பட்ட அவர்களுடைய வாக்கு வங்கி குறித்தான அச்சமும்  மோதியை நம்புவதற்குப் பதிலாக மக்களின் வெறுப்புக்கு ஆட்பட்ட கட்சிகளின் தயவை நோக்கித் தவம் கொள்ள வைத்து மோதியின் தனிப்பட்ட செல்வாக்கைத் தடுத்திருக்கிறது. இதைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்தான் உணர முடியும்..

இதன் மூலம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த மோதியின் அலை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தடைபட்டுப்போனதுடன், கூட்டணிக்குள் குழப்பமும் நம்பகத்தனமை கெட்டும் மக்கள் ஆதரவு மேலும் வளரமுடியாமல் போயிருக்கிறது.

நரேந்திர மோதியை மட்டும் மையமாக்கி தமிழ்நாட்டு பி.ஜே.பி தனித்து நின்று தேர்தலில் அரைகூவல் விட்டிருந்தால் இன்று தமிழ்நாட்டுக் கட்சிகளிடம் மக்கள் கொண்டிருந்த வெறுப்புக்களும் தேசிய நீரோட்டத்தில் மக்கள் காட்டுகின்ற அக்கறையும் மெஜாரிட்டி ஓட்டுக்களாக மாறி இருக்கும்.

பிற கட்சித் தலைவர்களிடம் புரையோடிப் போயிருக்கும் பதவி ஆசை, தமிழக பி.ஜே.பித் தலைவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. அதன் விளைவே இங்கு ஏற்பட்டிருக்கும் குழப்பல் கூட்டணி.

இதையும் மீறி தமிழ்நாட்டில் பி.ஜே.பி  வியப்பான வெற்றியை ஈட்டும் , மோதி என்ற மந்திரச் சொல்லால்.

இவண்-
கிருஷ்ணன்பாலா
16.4.2014

No comments: