Tuesday, January 17, 2012

மறப்போமா?


எம்.ஜி.ஆர்.  யார்?



இந்த மூன்று
எழுத்துக்கள்
தமிழனின்
தலை எழுத்தாக இருந்தது
என்னவோ உண்மைதான்!

ஆனால்-

அதுதான்
அவனுடைய
தலையாய எழுத்து’

என்பதை
ஏற்க மறுக்கின்றேன்.

  

லட்சக் கணக்கான
ரசிகர்களின்
லட்சிய புருஷனாய்
வாழ்ந்து மறைந்த-

இந்த
லட்சணம் மிகுந்த
மனிதரிடம்

லயித்த விஷயங்கள்
ஆயிரம் இருந்தன

மறுக்கவில்லை;

இவர்,
உயிர் பிழைக்க வேண்டி,

அன்று

உருகிக் கவி எழுதிய
மனம்-

இன்று
உணர்ந்து எழுதும்
உணர்வையும்
மறைக்கவில்லை!

’எம்.ஜி.ஆர்.’
என்ற
மூன்று எழுத்தினால்-

தமிழனின்
தலை எழுத்தே மாறிப்போனது’

என்பதைச்
சரித்திரம் காட்டுகின்றது.

அதை
எப்படி மறுக்க முடியும்?

இந்த-

மூன்று எழுத்துக்களின் மகிமையால்

தமிழன்
’அறிவுஎன்ற
மூன்று எழுத்தை இழந்தான்;

’கடமை’ என்ற
மூன்று  மறந்தான்;

’பண்புஎன்ற
மூன்று எழுத்தைத்துறந்தான்;

’வறுமை’ என்ற
மூன்று எழுத்தில்  உழன்றான்;

’சினிமா என்ற
மூன்று எழுத்திலேயே சரிந்தான்!

எம்.ஜி.ஆர்.என்ற மூன்று எழுத்து
முடிவெடுத்திருந்தால்

தமிழனின் -
குடி’யைக்கெடுத்த ’குடி’யை

அன்று-

தடுத்திருக்க முடியும்;
அவனுக்கு
உழைப்பின் உயர்வைக்
கொடுத்திருக்கமுடியும்!

அந்தோ-

குடியைப் புழக்கத்தில் விட்டு
அதைத்
தமிழனுக்கு வழக்கப் படுத்திய

இவர் வல்லமையை
இந்தத் தமிழன்

இன்றும்

பார்களில் நின்று கொண்டு
பார் புகழப் பேசுகிறானே!

இவரைப் புகழ்வதற்கு
ஆயிரம் காரணங்கள்….

மறக்காமல் இருப்பதற்கு
லட்சக் கணக்கில் ரசிகர்கள்

ஆனால்-

ஒரு பானைச் சோற்றில்
ஒரு துளி விஷம் இட்ட

இவரை
எப்படி மறப்பது?

மறைக்கவே முடியவில்லை.

ஆம்!

எம் தமிழருக்கு

’மீளாக்குடி’யுரிமை
பெற்றுத் தந்த

இவரை,

இன்றும்
மறைக்க முடியவில்லை!


இவண்-
குடி கண்டு கொதிப்படைந்த தமிழன்
17.1.2012


5 comments:

V.Rajalakshmi said...

//அறிவு என்ற மூன்று எழுத்தை மறந்தான்;
கடமை என்ற மூன்று எழுத்தைத் துறந்தான்;
பண்பு என்ற மூன்று எழுத்தை இழந்தான்!
வறுமை என்ற மூன்று எழுத்தில் இருந்தான்
சினிமா என்ற மூன்று எழுத்திலேயே புதைந்தான்!//
ஏழ்மை என்ற மூன்று எழுத்தில் உழன்றாலும் உலகநாடுகள் வியக்கும் வண்ணம்
அறிவு என்ற மூன்று எழுத்தில் சிறந்து,
திறமை என்ற மூன்று எழுத்தை உணர்த்தி,
வளமை என்ற பாதை நோக்கி சொல்லவில்லையா?

ulagathamizharmaiyam said...

இன்றைய தமிழனின் வளர்ச்சி என்பது இன்னும் நிலக்கரியில் ஓடிக் கொண்டிருக்கும் ரயிலைப் போன்றதுதான்.

V.Rajalakshmi said...

சிறுக பெருகுவதுதான் இயற்கை,
சுதந்திரம் அடைந்த பிறகும் தேவை இல்லாத சீண்டல் போர்களை பார்த்தவை நம் நாடு அதை ஒற்று பார்க்கும் போது இந்த முன்னேற்றம் அதிகமே!

Unknown said...

MGR ENBATHU ORU MANTHIRAM.ITHAI JABIKKATHAVAN AMMA ENKIRAN.ITHARKU PIRAGU YAAR ENBATHU PUTHU MANTHIRAM.

பாலகிருஷ்ணன் said...

அருமை