Friday, December 24, 2010

ஈசன் பிறந்தான்!

 எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களுடன்....

ஈசன் பிறந்தான்.....


ஈசன் உலகில் பிறந்தான் உண்மை;
இஸ்ரேல் மண்ணை மகிமைப் படுத்தி,
மாசில் மரியாள்; வயிற்றில் மகவாய்
மாட்டுத் தொழுவம் அவனது பிறப்பு!


கர்த்தரின் உருவாய் அவதரித்திங்கு
கருணை பொழியும் கைகளை உயர்த்தி
அர்த்தம் மிகுந்த அருள் வழி காட்டி
அனைவரும் வாழ சிலுவையை ஏற்றான்!


கழுமரம் அவனைத் தாங்கி நின்றதால்
கர்த்தரின் ரத்தம் தோய்ந்து கொண்டது;
தொழுமரம் என்றே ஆகி நெஞ்சில்
தொட்டு வணங்கும் பேறு பெற்றது!


உண்மை, அன்பு,சமாதானம்
உயர்ந்த வாழ்வை மனிதர் பெற்றிட
மண்ணில் செய்த பாவத்தையெல்லாம்;
மன்னித் தருளும் கருணயைப் பொழியும்


ஈசன் ஏசுவின் பிறப்பை எண்ணி
இந்நாள் அனைவரும் வணங்கிடுவோமே;
நேசன் அவனது நாமம் ஜெபித்து
நெகிழ்ந்தே அன்பைப் பகிர்ந்திடுவோமே!


இவண்-
                                              கிருஷ்ணன் பாலா
                                            24.12.2010

1 comment:

'முன்றில்' said...

யுதாசு - யூசிசு- இயேசு
யூதர்களின் தலைவன். இவருக்கு மூவாயிரம் பெயர்கள் இருந்ததாக இயேசு காவிய ஆய்வாளர்கள் கருதுகிறனர். ஆனால் இசுரேவேல் மக்களுக்கு பிடித்த பெயர் கத்தர் என்பதாகும்.
வைரமுத்து அவர்களின் பாடல் மிக அருமையானது."அன்பென்னும் மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே".
அத்தோடு கிருட்ணன் பாலா ஐயாவின் வரிகளும் மிகாருமையாக உள்ளன.
"பொன்வழி தன்னில் பூதடுடல் தன்னை
போக்கிய இயேசுவும் இருபத்தைந்தாம் தேதியின்
பக்கில் பிறந்தார் என்பவர் பற்பலருளர்
போக்கில் இயங்கினாலும் உலகம் சூரிய
கோளின் திருப்பு முனையாம் காண்பீர்"
புனைந்த கதையும் இன்று உண்மையானது. அமைதி பிறக்கட்டும் எல்லோருக்கும்.