Tuesday, December 14, 2010

உண்மையைத் தூண்டும் உலகத் தமிழர் மையம்

அன்புள்ள நண்பர்களே,சகோதரிகளே,


வணக்கம்.
எனது ’அறிவுடையோர் அறிக’என்ற தொடர் ‘உலகத் தமிழர் மையம்’ (http://ulgathamizharmaiyam.blogspot.com) வலைத் தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை இரண்டு பகுதிகள் பதிவாகியுள்ளன.முதல் பகுதி 3.10.2010 அன்றும் இரண்டாம் பகுதி, 5.12.2010 அன்றும் பதிவாகி இருக்கின்றன.


இது ஜோதிடம் பற்றிய தொடர்போல் தலைப்பில் தோற்றம் அளிப்பினும், ஏற்கனவே எழுதப் பட்ட சரித்திரங்களின் இருட்டுப் பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டிட, இந்திய வேத சாத்திரங்களின் தொன்மையை, அவற்றின் தொடமுடியாத தத்துவச் சிறப்பைத் தமிழர்களும் உணரவேண்டும் என்ற அறிவுத் தாகத்தை வெளிப்படுத்தி, ’உலகிற்கே தலையாயதான அதன் பெருமையை மறைக்க முயலும் பகுத்தறிவு வாதங்களின் குருட்டுத் தன்மையையும், தமிழனைக் குழியில் தள்ளி அவன்மீது குதிரை சவாரி செய்து வரும் ’ திராவிடப் பொய்களையும் தோலுரிக்கின்ற தொடராகத்தான் எழுதப் படுகிறது, நமது இந்தியா வேத சாத்திரங்கள் மீது சாமான்ய மக்களிடையேயும் ஓர் தெய்வீக மதிப்பையும் பார்வையையும் தருவதே ஜோதிட அறிவியல்தான்.


சுமார் 40 நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் எனது ‘உலகத் தமிழர் மையம்’ வலைப் பதிவுகளைப் படித்து வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.


இது உலக விஞ்ஞானம் அறிவியலையும் கடந்து நிற்கும் ஓர் தெய்வீக அறிவியல் என்பதால் நம்மவர் அநேகம் பேருக்கு இதைப் புரிந்து கொள்ளும் ஞானம் இல்லாது போயிற்று. அதனால்தான் அவர்கள் நம் நாட்டு ’அறிவு ஜீவிகள்’ என்று சொல்லிக் கொள்கின்ற ’பகுத்தறிவுப் பாமரர்’களின் வாதங்களுக்கு மதி மயங்கிப் போய், நமது வேத சாத்திரங்களைப் பற்றிய ஞானத்தோடு யாராவது எழுத முனையும்போதும் பேசும் போதும் மவுனமாகி விடுகிறார்கள்.


நம்மிடையே இருக்கின்ற ’தமிழ் உணர்வாளர்கள்’ என்று சொல்லிக் கொள்கின்ற பலருக்கும் கூட,இந்த தொடரைப் படிக்கத் தயங்கும் உணர்வினைத் தோற்றுவித்துள்ளது என்பதை நான் அறிவேன்.


காரணம், ’அந்தணர்களை ஆதரிப்பதும் பகுத்தறிவாளர்களைச் சாடுவதும் ஏதோ ஒரு தமிழ்க் குற்றம்’ என்பதாகக் கற்பனை செய்து கொண்டு, இந்த மெய்ஞ்ஞானம் பற்றிய நுண்ணறிவைத் தெளிந்து கொள்ளத் தயங்குகிறார்கள்.


உண்மையிலேயே, இது ’தமிழர்களுக்கு உண்மையான அறிவுத் தேடலை நாடச் செய்யும் அறிவுப் பூர்வமான தொடர்’ என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விழைகின்றேன்.


சிலர் நினைப்பதுபோல் நான் ஒரு பார்ப்பனனோ;ஆரிய வருடியோ அல்லன்,சுத்தத் தமிழன்;கொங்குத் தமிழன். எனினும்,அந்தணரை ஆதரிப்பவன்; ‘குறள்மறை’ கூறும் ‘அறவோ’ராகிய ‘அந்த’ணரை ஆதரிப்பவன் ‘.


ஆனாலும், இங்கே,மிகப் பெரும் சித்தாந்த மாயைக்கும் நடைமுறைக்கும் எதிராக நான் எழுத முற்பட்டிருப்பதானது, கட்டாயம் அறிவு சார்ந்த வாசகர்களின் / படைப்பாளர்களின் கருத்தையும் பெற்றாக வேண்டும் என்பதற்குத்தான்.


இத் தொடர் விரைவில் ஒரு சமூக சிந்தனையைத் திறக்கின்ற நூலாய் வடிவெடுக்கும்.அதில் மிகச் சிறந்த விமர்சனங்களையும் பதித்திட விரும்புகின்றேன்.


பலர்,இந்து மதம் தொடர்பாக சிறு சிறு விளக்கங்களை,செய்திகளைக் கூறும்படி எனக்கு எழுதுகின்றார்கள். நான் ஒரு மதப் பிரச்சாரகன் அல்லன்; நமது வேத,ஞான சித்தாந்தங்களின் தொன்மை குறித்தும் அதன் தொடர்பு குறித்தும்-சரித்திரங்களின் கூற்றில் உள்ள குறைபாடுகள் குறித்தும் எழுதி, முடிந்தவரை சமூக அறிவியல் விழிப்புணர்வை விதைத்திடவே விரும்புகின்றேன்.


எனவே, இத் தொடர் குறித்த வாதப் பிரதி வாதங்களை மட்டும் இங்கே வரவேற்கின்றேன்.வாசக நண்பர்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு இத் தொடரின் முடிவில் எனது விளக்கங்களைப் பதிப்பேன்.


உங்களைப் போன்ற சமூக அக்கறையுள்ள நண்பர்கள் இதன் வாதப் பிரதி வாதங்களில் / இடம் பெறுவது இந்த வாதத்தின் உண்மையான நோக்கைச் சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும் என நம்புகிறேன்.


எனவே, இந்திய வேத சாத்திரங்கள் குறித்தான எனது ’அறிவுடையோர் அறிக’ தொடரை, உலகத் தமிழர் மையம்’வலைத் தளத்தில் (அதன் நுழைவுத் தடம்: http://ulagathamizharmaiyam.blogspot.com )படித்து, கருத்துக் கூற விழைவோர் அதிலேயே விமர்சனமாகப் பதிவு செய்திட வேண்டுகின்றேன். நன்றி.


அன்புடன்,
கிருஷ்ணன் பாலா
krishnannbalaa@gmail.com
14.12.2010

1 comment:

'முன்றில்' said...

நீங்கள் கூறும் அந்தணர்கள் தூயமாந்தர். அவர்கள் பூசாரிகளன்று. அந்தணன்=அம்+தண்+அன் அதாவது இளகிய நீரையுடைய சிந்தைகொணடர்.எ+கா:மறைமலையடிகள்,குன்றக்குடி அடிகளார்,சிவனார் போன்றோர் தமிழையும் சிந்தையையும் சீர்ப்படுத்தியவர். பார்ப்பணன் என்னும் போழ்தே தமிழரும் இடம் பிடிக்கின்றனர். அதனால் 'ஆரிய'பார்ப்பணர் என்றே கூறவேண்டும். பார்ப்பணர் என்போர் மறை பார்ப்பவர். மறை என்பது மறைப்பொருளாய் மறைந்து நிற்பது. மக்களுக்கு தெரியாத மறைப்பொருளை காட்டவிழையும் உங்களை யாம் பாராட்டுகிறேம். தொடரட்டும் நிம் நற்பணி.வாழ்ந்து உலகுக்கு வளம் சேர்ப்பீர்கள் சந்தக் கவிஞரே!
நற்றோழன்
ச.உதயன்.