Thursday, July 8, 2010

இது உலகத் தமிழர்களின் உறவுப் பாலம்!

நண்பர்களே,
வணக்கம்.
உலகத் தமிழர்களின் எழுத்துறவுப் பாலமாக இருக்கும் பொருட்டு
இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களை இங்கே கொட்டலாம்; பகிர்ந்து கொள்ளலாம்;அள்ளிக் கொண்டும் செல்லலாம்.

நாம் முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் தெரிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கக் கூடாது.

நாம் தேசங்களைக் கடந்து வாழ்பவர்கள்தாம்;ஆனாலும் நமக்கு எல்லை உண்டு. 'தமிழ்' என்ற எல்லை. இது நமக்குப் பெருமை தருகின்ற 'வரைமுறை' என்ற கர்வத்தோடு, நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற இடமாக,தளமாக இந்த மையத்தைத் தெரிந்து கொண்டு அடிக்கடி சந்திப்போம்.

இதில்,நீங்கள் தேடுகின்ற நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கக் கூடும்; எதிர்பாராத விஷயங்களைச் சிந்திக்கவும் கூடும்.

இங்கே ஒருவருக்கொருவர் எல்லைகளைக் கடந்த நட்புடன் உணர்வுகளைப் முகவரிகளைப் பரிமாற்றிக் கொண்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் தமிழுக்கும் தமிழர்வாழ்வுக்கும் உரிய சிந்தனைகளைப் பகிரங்கப் படுத்திக் கொள்ளவும் உதவும் அடித்தளத்தை இத்தளம் அளிக்கின்றது.

அடி மனத்தின் ஆழத்திலிருந்து எழும் எனது இந்த அழைப்பு, உங்கள் இதயத்துக்கு.

வாருங்கள்; ஒன்று சேருங்கள்.

நட்புடன்,
கிருஷ்ணன் பாலா

எனது முகவரி:

கிருஷ்ணன் பாலா
282 / 1, கண்ணகி நகர்,
பை பாஸ் சாலை அருகில்,
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு

அலை பேசி:(00 91 ) 94440 69234
மின்னஞ்சல்:krishnanbalaa@gmail.com

4 comments:

V I K R A M said...

nice...

Kanya said...

பெற்ற தாய், வளர்த்த தந்தை .. கட்டிய மனைவி .. ஈன்ற மக்கள் இவர்களுக்கு எல்லாம் அமைதியான ஒரு வாழ்கையை தரமுடியாத, தன்னுடைய கடமைகளை செய்ய தவறிய, நான் தான் கடவுள் என்ற எண்ணம் படைத்த, நட்புக்கு இலக்கணம் தெரியாத சிலர் கலாசாரம் பண்பாடு எல்லையற்ற நட்புறவு இவை எல்லாம் வளர்க்க பாடு படுகிறர்கலாம் ... நல்ல வேடிக்கை!!!

ulagathamizharmaiyam said...

அம்மையீர்,
'உலகத் தமிழர் மையம்' தொடர்பான உங்கள் விமர்சனம்.நீங்கள்
குறிப்பிடும் சில விஷயங்கள் நமது மையம் தொடர்பான அழைப்புக்குப் பொருந்தவில்லை. குற்றச்சாட்டு சொல்பவர்கள் ஆதாரத்துடன் சொல்லவேண்டும்; ஆத்திரத்துடன் சொல்லக் கூடாது.யார்,யாரைப் பற்றி என்ன, எதற்காக,ஏன் சொல்கிறார் என்பதற்கு முகாந்திரம் தேவை.

இன்று விஞ்ஞானத்தின் அற்புதப் படைப்பான கணினியைக் கொண்டு கலாசாரக் கேடுகளை விதைக்கும் தீமைகளுக்கு எதிராகவே இந்த 'உலகத் தமிழர் மையம்' என்ற 'பகிர் வலைத் தளத்’தை உருவாக்கியுள்ளேன். இதில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படியில்தான் விமர்சனங்களை எழுத வேண்டும். வரவேற்கும் மனம் உங்களுக்கு இல்லாமல் போனது மட்டுமல்லாது,சம்பந்தா சம்பந்தமின்றி தனி நபரைத் தாக்குவது போல் அல்லவா எழுதியிருக்கிறீர்கள்? நல்லது. விமர்சனம் என்று வந்து விட்டால் அது குறித்து அலசுவதே அறிவுடைமை.எதற்காக, எதனுடைய அடிப்படையில் உங்கள் கருத்து அனுப்பப் பட்டுள்ளது? விளக்கமாக எழுதுங்கள்;வெளிச்சத்துக்குக் கொண்டு வருவோம்.

The rest of the subject will be expanded with proof and truth.

ulagathamizharmaiyam said...

விவரம் எதுவும் இதுவரை இல்லை;
வெறும் விமர்சனத்தால் பயனே இல்லை;
தவறியும் பிறரைத் தாக்க எண்ணாதீர்;,
தாமே இடறி விழுவது நன்றா?