Thursday, July 29, 2010

காதல் அல்ல: இது காமம்!

காதலில் ஏற்படும் தோல்விகளில்
புலம்புவதை மட்டுமல்ல-

காதலையே
எப்பொழுதும் 
முனைந்து முனகுவதைத்
தவிருங்கள்;
நண்பர்களே...

காதல் மட்டுமா மனித வாழ்க்கை? 

காதல் கொண்ட மனது,
அதன் வசப் பட்டிருக்கும்போது
'நிற்கின்ற இடம் சேறு'
என்று கூடப் பார்ப்பதில்லை.

காதலியையோ,காதலனையோ
ஒருவர்-
விட்டுப் பிரியும்போதுதான்,
'தான் சேற்றில் நிற்கிறோமே'
என்று புலம்பச் சொல்கிறது,மனம்!

நண்பர்களே...!
காதல் என்பது எல்லோருக்கும் வருவதுதான்.
ஆனால்-
வருவதெல்லாம் 
காதல் அல்ல;'காமம்' என்கிற கொடுமை.

அது-
வரும்போதே 
கண்களைக் குருடாக்கி விடுகிறது!
பிறகு-
எங்கே நாம் பார்த்துப் பார்த்து
நடந்து கொண்டு  காதலிக்கிறதாம்? 

காதல் என்பது
பல் நிலைகளில் வருதுதான்;

காதலை உணராத
மனிதனில்லை!

ஆனால் 
அதன் காரணத்தை 
அறிந்து கொள்ளாதவன்
மனிதனே இல்லை;
மிருகத்துக்கும் அவனுக்கும் 
வேறுபாடே இல்லை.!
 

விழித்துக் கொண்டு 
காதலிக்கிறவர்களே
புத்திசாலிகள்; 

அவர்கள்- 

காமத்தைத் தடுத்து விடுகிறார்கள்;
காதலித்துவிட்டுப் பின்
புலம்புகிறவர்களோ
புத்திகாலிகள்; 

அவர்கள்-
காமத்தில் தடுக்கி விழுகிறார்கள்!

உண்மையான
காதலின் தோல்வி,
நல்ல கவிதைகளாக மாறும்;


காமத்தினால்
ஏற்படும் சறுக்குதலோ
'கவிதை' என்ற பெயரில் நாறும்.

தயவு செய்து-
உங்கள் வலைத் தளங்களில்
காதலைச் சொல்லுவதாகக்
கற்பனை செய்து கொண்டு
காமத்தின் துர்நாற்றத்தைப் பரப்பாதீர்கள்!


நண்பர்களே...!

காதலில் ஏற்படும் தோல்விகளில்
புலம்புவதைத் தவிருங்கள்;
காதல் மட்டுமா மனித வாழ்க்கை?

இவண்-
கிருஷ்ணன் பாலா

No comments: