நான் இங்கு முக நூலிலும்
எனது வலைத்தளங்களிலும்
தொடர்ந்து எழுதி வருவது ஒரு
தொழில் போல் அமைந்து விட்டது.
ஜோதிடம் மற்றும் தொழில் சம்பந்தமான
ஆலோசனைகளைப் பிறருக்கு வழங்கி வருவது எனது
இப்போதைய நடைமுறை வாழ்க்கை.
எனது சிறு பிராயம் முதலே
எழுத்தில் இயற்கையான ஈடுபாடு ஏற்பட்டதாலும் எழுத்தையும்
எண்ணங்களையும் கொண்டுதான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற
சூழ்நிலை என்னை இழுத்ததாலும் சென்னைக்கு
வந்தேன் 1972களில் எனது 18,19 வயது
பிராயத்தில்.
இயல்பாகவே எனக்குப் பெரிய பத்திரிகைகளில் மட்டுமல்லாது
மிகப் பெரிய மனிதர்களுடன் நெருங்கி
பழகும் வாய்ப்பையும் விதி எனக்கு விதைத்து
விட்டது.
எந்தப் பாரதி “நமக்குத் தொழில்
கவிதை; நல்லவே எண்ணல்; நாட்டுக்கு
உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று இந்தத் தமிழுக்கும்
தேசத்துக்குமாகச் சிந்தித்து எண்ணி எழுதினானோ, அவ்வாறு
அவன் எழுதி வந்த பத்திரிகையிலும்
பணியாற்றி அவனைப் போலவே எண்ணி
இறுமாந்து வளர்ந்தவன் நான்,
அந்த இறுமாப்புத்தான் எனது எழுத்துக்களின் ஜீவன்;அவன்தான்
எனது ஞான குரு.
எனது ஞான குரு.
அத்தகைய உணர்வுகள் உரமிட வளர்ந்ததே எனது
எழுத்து வேட்கை; அதுவே இப்போது
’எனக்குத் தொழில் எழுத்து; என்றாகி
விட்டது.
அத்தகைய எழுத்துக்கள்தான் இங்கே இலவசமாக ’இறை’க்கப் படுகின்றன. பசியுடையோர்
புசிக்கவும்; எழுத்து ருசி உடையோர்
ரசிக்கவுமாக அவை இங்கே விற்பனைக்கின்றி
கற்பனக்காக கடை விரிக்கப் பட்டு
‘ கண்ணுடையோர் காண; கருத்துடையோர் பேண;
கடை கெட்டோர் நாண…”..என்று முரசறைவித்திருந்தேன்.
உலகெங்கிலும் இருந்து பல்லயிரக் கணக்கான
தமிழ் நெஞ்சங்கள் தொடர்ந்து எனது முகநூல் பக்கங்களையும்
வலைப் பூக்களிலும் பரவிப் பெருகிப் படித்து
வருவதைக் காண என் நெஞ்சம்
மேலும் நிமிர்கின்றது.
ஆனாலும் ஒரு சில பெட்டைகளும்
பேயர்களும் என் எண்ணங்களுக்கு எவ்விதத்திலும்
தொடர்பற்றவர்களாக இருந்து கொண்டே இங்கே
நுழைந்து எச்சில் துப்புகிறார்கள்.
‘இங்கே அசுத்தம் செய்யதீர்கள்’ என்று அறிவிக்கப் பட்ட
இடம் என்று அறிந்தும் அவர்களின் அரிப்பானது அவ்வாறு இங்கே எச்சிலைத்
துப்பும் இழிவான காரியத்தைச் செய்யத்
தூண்டுகிறது போலும்.
நேற்று முன் தினம் (4.3.2012) எனது
முகநூல் பதிவில் “இது சுய விளம்பரம்
அல்ல; சுய தரிசனம்’ என்ற
தலைப்பில் ஓர் சிறு குறிப்பைப்
பதிவு செய்திருந்தேன் :Siva Maayilsamy
என்ற ’நபர் .டேய் யார்ரா
இந்த ஆள்? என்று எனது
பதிவில் பண்புடையோர் யாரும் விரும்பாத மொழியில்
பொருத்தமில்லாத- நண்பர்கள் வருத்தம் கொள்ளும்படி எழுதியிருந்தார்.
முக நூல் நண்பர் திரு/திருமதி Jaya Rajkumar அவர்கள் அந்த நபரை
கண்டித்தும் எனது எழுத்துக்களைக் கௌரவித்தும்
அதிலேயே எழுதியிருந்தார்.
எனினும் நான் அந்த நபருக்கு
மட்டும் இன்றி நச்சு இலக்கியத்தில்
தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்கிறவர்களுக்கும்
புரியும்படி
எழுத நேர்ந்தது. எழுதினேன் இப்படி:
@Jaya Rajkumar:நண்பரே
அந்த நபர் தனது குணம்
யாதெனக் காட்டியிருக்கிறார்;விடுங்கள்.
இதேபோல்தான் இன்னொரு நபரும் – Kangayan Kumaran என்ற பெயரில்
நாய்கள் நக்கித் தின்னும் நரகல்
மொழியில் எனது மரபு வழிக்
கவிதைகள் குறித்து என்னுடைய வலைப் பக்கத்துக்கே விமர்சனம்
அனுப்பி இருந்தார். அவருக்கு நமீதா போன்றோர் ஆடும்
ஆட்டத்துக்கேற்ற பாடுவாது போன்ற கவிதை எழுதாமல்
பாட்டன் காலத்து ’ஸ்டைலில்’ கவிதைகள் எழுதினால் தங்கள் ஜாதிகள் அங்கே
மல்லாந்துகூடப் படுக்காது என்பதாக அவருடைய வி(மர்)சனம்????
இந்த சிவா மயில்சாமியும் அந்த
காங்கேயன் குமரனும் ஓரினம்;ஓரிடம் என்றுதான்
எண்ண முடிகிறது.
நாம் வழியில் நடந்து போகும்
போது சம்பந்தமில்லாமல் தெரு நாய்கள் குரைத்துக்
கொண்டு நம்மை நோக்கி ஓடி
வருவதில்லையா? அவ்வாறு எதற்குக் குரைக்கிறோம்
என்று இலக்கில்லாமல் அவை ஓடி வரும்;வந்த வேகத்திலேயே நின்றும்
விடும். சில நாம் கல்லை
எடுத்தால் பின்னங்கால் பிடறியில் படத் தலை தெறிக்க
ஓடி விடும். அவற்றுக்கும் இந்த
நபர்களுக்கும் வேறுபாடே கிடையாது. ஆனால்,நாய்களோடு நாய்களாய்
வாழும் இரண்டு கால்கள் கொண்ட
அதிசய நாய்கள் என்று வேண்டுமானால்
இவர்களைச் சொல்லலாம்.
நம்மிடம் கல் எனும் சொல்
உண்டு. அது அவர்களைக் காயப்
படுத்தாது; அவர்களின் குணத்தை நியாயப்படுத்தும்
நாம் எழுதிவரும் விஷயங்கள் ‘அரம்’போலும் கூர்மையாகப்
படத்தான் செய்யும்,இந்த மரம் போன்ற
மக்கட் பண்பு இல்லாத Siva Mayilsamy Kangayan Kumaran முதலானவர்களுக்கு.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்
மக்கட்பண்பு இல்லா தவர்
என்ற வள்ளுவனின் வாய்மொழியைப் படித்தவர்களுக்கு இது புரியும்.
நண்பர்களே,
எனது எழுத்துக்கள் எவரையும் காயப் படுத்துவதற்கன்று.
தமிழன்னையைத் தரம் கெட்ட மொழியாலும்
பண்பற்ற நடத்தையாலும் புன்செயல்களாலும் காயப்படுத்துவோரைக் காறி உமிழத்தான்: அவளுடைய
காயங்களை ஆற்றத்தான்.
எனது எழுத்துக்களின் இலக்கியத் தரமும் எண்ணங்களின் உரமும்
இயல்பானவை; தமிழன்னை ஏந்தி இருக்கும் அட்சய
பாத்திரத்திலிருந்து எடுத்து இரைக்கப்படும் அமுதென
எனது தமிழ்ச் சாதியினருக்கு அள்ளித்
தந்து கொண்டிருக்கின்றேன்,அதை..
அஜீரணம் உள்ளோருக்கு இது மருந்து;அது
இல்லாதோருக்கு இனிய விருந்து.
இதைப் பற்றி உங்கள் மனதில்
பட்டகருத்துக்களை எழுதுங்கள். வரவேற்பவன் நான்.
எதிர்த்து எழுதுவதாயினும் மறுத்து எழுதுவதாயினும் எழுதுவோரின்
சிந்தனைத் தூண்டலுக்கு எனது எழுத்துக்கள் காரணமாக
இருப்பதை விரும்புகிறேன்.அதுதான் படைப்பாளனின் தரமான
குணமாக இருக்க முடியும்.
ஆனால் எழுதும் கருத்துக்களுக்குக் கண்டனம்
தெரிவித்து பண்பற்ற வார்த்தைகளில் தங்களை
அடையாளம் காட்டுகின்றவர்களைக் கண்டு நாம் வாளாவிருப்பதில்லை
என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது இங்கே.
உலகெங்கிலும்
இருந்து பல்லாயிரக் கணக்கில் எனது தமிழை நேசிக்கின்ற
தமிழ் உள்ளங்களின் எண்ணச் செறிவுக்கு உரமிடும்
எனது எழுத்துக்கள்; அது,பண்பற்ற பாதகர்களுக்குச் சூலாயுதமாகத்
திரும்புவதுகூட செந்தமிழின் சீற்றம் யாதென அறிவிக்கத்தான்.
நன்றி, உங்கள் நேசத்துக்கு.
நட்புடன்,
கிருஷ்ணன்பாலா
6.3.2012
1 comment:
ஓ! இப்படி நடந்தது. தெரியவில்லை. எதைக் கூறுவது என்றும் தெரியவில்லை...தெரியத் தந்ததற்கு நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment