சலாம் முலாயம்; மீண்டும் கலாம் என்றுதான் சொல்ல
வேண்டும்!
ஆம் நண்பர்களே,
நமது தமிழர்களின் அடையாளச் சின்னமாய்த் திகழும்
தலைசிறந்தஅறிவியல் ஞானியும் இந்தியாவின் முன்னாள்
குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம்
அவர்கள் மீண்டும் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகப்
போகிறார் என்பதை நாமெல்லோரும் எதிர்பார்க்கலாம்;
ஆக வேண்டும்.
அதுதான் தமிழனுக்குப் பெருமை;இந்தியாவுக்கும் பெருமை!
உ.பி. மாநிலத்தில் மறுபடியும் முலயாம் சிங் வெற்றி பெற்று
அவரது கட்சி ஆட்சிப் பீடம் ஏறியிருப்பதில் இந்தியாவுக்கே
நல்ல காலம் பிறக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்தியாவின் குடியரசுத் தலைவராக மறுபடியும் நமது ஞானி –
விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப்
பொதுக்கருத்தில் வருவதற்குரிய காரணங்கள் உருவாகி
உள்ளன.
டாக்டர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக வருவதற்குச் சென்ற முறையே முதல் ஆதரவு காட்டியவர், முலயாம் சிங்
அவர்கள்தான்.
இன்று மறுபடியும் உ.பி.யில் பெரும்பான்மை
இஸ்லாமியர்களின் ஆதரவைப் பெற்ற பேராதரவுதான்
அவரது கட்சி ஆட்சிக்கு வரக் காரணமாயிற்று.
இந்தத் தேர்தலில் இஸ்லாமியர்களின் தேசப் பற்றையும்
அவர்கள் இந்திய அரசியலில் பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டி அவர்களுக்கு உரிய தேசீயப் பங்களிப்பை - தேசிய மரியாதையைப் பெற்றுத்
தரப் பாடுபடுவதாக வாக்குறுதிகள் அளித்துத்தான் முலாயம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் குடியரசுத் தலைவர் பதவிக்கு
வலிமையான இந்தியாவைக் கனவுகாணத் தூண்டிய
டாக்டர் அப்துல் கலாம் அவர்களையே மறுபடியும் குடியரசுத்தலைவராக்கும் அரசியல் முக்கியத்துவத்தை
அவர் பெற்றுள்ளார்.
வலிமையான இந்தியாவைக் கனவுகாணத் தூண்டிய
டாக்டர் அப்துல் கலாம் அவர்களையே மறுபடியும் குடியரசுத்தலைவராக்கும் அரசியல் முக்கியத்துவத்தை
அவர் பெற்றுள்ளார்.
அரசியல் சார்பற்ற மனிதராகத் திகழ்வதுடன் நேர்மையும்
தூய்மையும் ஒழுக்கமும் மிக்க உன்னத சிந்தனையாளருமான
நமது முன்னாள் குடியரசுத் தலைவரை மறுபடியும் ஆதரித்து
இந்திய அரசியல் களத்தில் வலிமையான அரசியல் அதிகாரம் கொண்டவராகவும் ஊழலுக்கு எதிரானதொரு தூய்மையான
மனிதரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம்தனது கட்சியையும் இந்திய அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்தவும் முலயாம்சிங் அவர்களுக்கு இயல்பாக இப்போது வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியும்முலயாம் சிங்
அவர்களுடன் கைகோர்த்துச் செயல்படுவது இப்போதைய
அரசியல் சூழலின் சூட்சுமக் கயிறு என்பது போகப் போகத் தெரியும்.

அடுத்த சில மாதங்களில் வரவுள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் முலயாம் சிங் முடிவு செய்யும்
வேட்பாளரையே
காங்கிரஸ் ஒப்புக்கொண்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் அநேகமாக எல்லாமுக்கிய மாநிலங்களிலும்
ஆட்சிச் செல்வாக்கை இழந்து விட்ட சூழ் நிலையில்,
இனி காங்கிரஸானது தன் போக்குக்கு தனது முன்னாள்
அடிமைகளையெல்லாம் இனி,இந்திய ஜனாதிபதி பதவிக்கு
நிறுத்தி, அந்தப் பதவியைக் கேவலப் படுத்த முடியாது.
அதைவிட எந்த,எளிய மனிதரை,நேர்மை தவறாத நெஞ்சரை,
தேசப்பற்றில் எவருக்கும்இளைத்து விடாத அறிவியல்
ஞானியை,சுத்தத் தமிழரை மறுபடியும் இந்தியக் குடியரசுத்
தலைவராக வாராமல் தடுத்து தனது குடும்பக் கொள்ளைக்கு
ஏதுவான எண்ணங்களுக்காக வஞ்ச நெஞ்சை வலை விரித்து
சோனியாவுடன் திட்டமிட்டுக் கூட்டுச் சேர்ந்து கொள்ளையடித்த கலைஞரின் எண்ணங்கள் இனி ஈடேறாது.
மேலும்,தமிழகத்தில் மேடம் ஜெ மிகுந்த பலத்துடன் ஆட்சியில்
அமர்ந்திருப்பது டாக்டர் அப்துல் கலாம் அவர்களை மறுபடியும்
குடியரசுத் தலைவர் ஆக்கும் வாய்ப்புக்குக் கிடைத்திருக்கும்
குடியரசுத் தலைவர் ஆக்கும் வாய்ப்புக்குக் கிடைத்திருக்கும்
இன்னொரு இருப்பது கூடுதல் நன்மை.
கருணாநிதி ,இந்த உண்மைத் தமிழருக்கு, ஒழுக்கம் மிக்க இஸ்லாமியச் செம்மலின்
தகுதியின்பால் இழைத்த வஞ்சகக் கறையை மேடம் ஜெ. அவர்கள், நீக்கி, இந்த மாசில்லாத் தமிழன் மீண்டும் குடியசுத் தலைவர் ஆவதை ஆதரிப்பது அவருக்கும் ‘ஆல்வா’ போன்ற விஷயம் ஆகிவிட்டது.
ஆக, உ.பி.யின் முலாயம் சிங்,தமிழத்தின் மேடம் ஜெ.
இருவரும் இணைந்து மீண்டும் டாக்டர் அப்துல் கலாமை
குடியரசுத் தலைவராக்க விரும்பிவிட்டால் காங்கிரஸ் தனது
கைகளால் வாயைப்பொத்திக் கொண்டாக வேண்டும்!
கைகளால் வாயைப்பொத்திக் கொண்டாக வேண்டும்!
பிறகென்ன, இடதுசாரிகள் ‘சரி’ எனச் சொல்ல, பி.ஜே.பியோ
பின்னால் நின்று கொண்டு கை தட்டித்தான் வரவேற்கும்.
பின்னால் நின்று கொண்டு கை தட்டித்தான் வரவேற்கும்.
ஆக,எல்லாக் கட்சிகளும் புறக் கணிக்கமுடியாத ‘எளிய மாமனிதர்’
டாக்டர் அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் என்றைக்குமே ‘பாரதத்
தாயின் தலைமகன்’தான்.
தாயின் தலைமகன்’தான்.
அன்று செய்ததைப் போலவே இனி,நாளையும் இந்தியத் தாய் இருகரம் ஏந்தி உங்களை எடுத்துக் கொள்வாள்.
நீங்கள் மட்டும் குழந்தைபோல் அடம் பிடித்து
விட மாட்டீர்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
இவண்,
இந்தியத் தமிழன்.
கிருஷ்ணன்பாலா
7.3.2012
No comments:
Post a Comment