Tuesday, March 13, 2012

அறிவுடையோர் அறிக ; ஓர் விளக்கம்!


நண்பர்களே,
வணக்கம்.

அறிவுடையோர் அறிகஎன்னும் தலைப்பில் எனது உலகத் தமிழர் மையம்வலை பதிவில்  தொடரை எழுதி வருகின்றேன்

இதுவரை இரண்டு தொடர்கள் எழுதப் பட்டுள்ளன.

நான் தொடக்கத்தில் எழுத முற்பட்டது
ஜோதிடம் பற்றிய ஓர் அறிமுக
உரை எழுதும் பொருட்டேதான்.



ஆனால், ’அதன் உள்ளடக்க விஷயங்கள் அதையும் கடந்து, நமது
தேசியப் பண்பும் பயனுமாய் பற்றிக் கிடப்பதால் நமது வரலாற்றையும் தொடாமல் அவ்வாறு எழுதுவது சரியல்லஎன்றாகிவிட்டது.

அதன் உள்ளடக்க விஷயங்கள் வெகு ஆழமானவை. அவற்றில் நான்
கொஞ்சம் நீந்தி இருப்பதால்நான் அறிந்த உண்மைகளை தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சொல்வது என் கடமைஎனக் கருதிதனை எடுத்து மறுபடியும் உங்கள் முன் வைக்கத் தலைப்பட்டுள்ளேன்.

இதில் நண்பர்கள் சிலர் கேட்கும் கேள்விகள்,அதற்கு வேறு சிலரின் குறுக்கீடுகள் நான் எழுத வந்த விஷயத்தைத்திசை திருப்பி விடக் கூடாது என்பதற்காக விளக்கம் சொல்ல வேண்டியுள்ளது.

எனது நீண்டகால நண்பரும் தமிழ் தேசியப் பற்றாளரும் பத்திரிகையாளருமான திரு அரப்பா தமிழன் அவர்கள் இக்கட்டுரைப் பதிவில்முக நூல் முற்றம் குழுமப் பகுதியில்- ஜோதிடம் தொடர்பாகக் கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்.

அதன் விளக்கமாக -
நூற்றுக் கணக்கில் இத் தொடரைப் படித்து வருகின்ற  நண்பர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் இனிமேலும் படிக்கப் போகின்றவர்களுக்கும் எனது எழுத்தின் நோக்கம் யாதெனத் தெளிவு படுத்திக் கொள்வதற்காக இதை எழுதுகின்றேன்.

எனவே,
@அரப்பா தமிழன்,@Atthippattu Srinivasan Muralitharan @ மீண்டும் முகமூடி @துளசி தாசன் மற்றும் ஜோதிடம் பற்றிய ஆர்வம் உள்ள நண்பர்கள், அதை அறியாமல் கேலி செய்வோர், கேள்வி கேட்போர் யாவரும் அறிவதாக:

ஜோதிடம் பற்றிய விரிவுரை செய்யவோ ,அதை விவாதிக்கவோ இது ஏற்ற இடம் அல்ல. ’ஜோதிடத்தை நான் முற்றும் அறிந்தவன்என்று எவரேனும் சொல்வாராயின் அது ,’நான் கடவுளை நேரில் பார்த்தவன்என்று சொல்வதற்குச் சமம்.

ஜோதிடம் என்பது வேதங்களின் ஒரு பகுதி. வேதங்களை ஆறு அங்கங்களாக உருவகப் படுத்தி அதன் கண்கள்தாம் ஜோதிடம் என்று நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கின்றார்கள் நம் முன்னோர்.

நான் அவர்களின் வழியே சென்று பின்னேர்ப் பிடிப்பவன்.

நமது பாட்டனும் பூட்டனும் அதை எதிர்த்தோ.கேலி செய்தோ வாழ்ந்தவர்கள் அல்ல; வேதம் அறிந்தவர்களை அவர்கள் முதன்மைப் படுத்தி, அவர்களைத் தம் வழிக்காட்டிகளாகக் கொண்டு வாழ்ந்தனர்.

நமது முன்னோர்கள் அனைவருக்கும் ஜோதிட ஞானம் கிடையாது;ஆனால் ஜோதிடம் அறிந்திருந்தவர்களைத் தங்களின் வழி காட்டிகளாகக் கொண்டு போற்றும் ஞானம் இருந்தது.

அவர்கள் எல்லோருடைய தெய்வ பக்தி,சமூகக் கட்டுப் பாடு, ஒழுக்கம், அறம் சார்ந்த வாழ்வு இவற்றின் அழிக்க முடியாத அடையாளச் சின்னங்கள்தாம் நம் தமிழ் நாட்டில் ஆங்காங்கே நிர்மானிக்கப் பட்டிருக்கும் ஆலயங்கள். அவற்றை அவர்கள் வேடிக்கைப் பொருட்களாகக் கட்டியிருக்கவில்லை என்பதை இங்குள்ளோர்  யாவரும் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

மறுப்பவர்களுக்கு எனது எதிர்ச் சொல்லாடல் எதுவும் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்வீராக!

கண்டவர் விண்டதில்லை;விண்டவர் கண்டதில்லைஎன்னும் கூற்று இதற்குப் பொருந்தும். அதை யாரும் சவால் விட்டுப் புரியவோ,புரிய வைக்கவோ முயலுதலும் ஓர் அறியாமைதான்.

நான் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையும் ஆய்வும் கொண்டிருப்பவன். அதனை இங்கு விளம்பரப் படுத்திக் கொண்டு அதன் மூலம் ஆதாயம் தேடும் எண்ணம் கிஞ்சித்தும் இல்லாதவன். ஜோதிடம் பற்றிய எனது அனுபவங்களும் தேடலும் உண்மையானவை என்பதை மட்டும் இங்கே சொல்ல முடியும்.

என்னை நேரில் அறிந்த நண்பர்களில் சிலருக்கு நான் கொண்டுள்ள ஜோதிடச் சிந்தனை பற்றியோ ஜோதிடம் ஆய்வு பற்றியோ எதுவும் தெரியாமல் இருந்தும்; அதை நம்பாமல் இருந்தும் கூட பலர், இன்று என்னிடம் அதில் ஆலோசனை பெற்று வருகின்றார்கள். ஆயிரக் கணக்கான நண்பர்கள் இதன்பால் நம்பிக்கை கொண்டுள்ளனர். மிகச் சிலர் இதை மூட நம்பிக்கை எனச் சொன்னால் இதைப் பலரும் ஒரு அறிவியல் என்று உணர்கின்றார்கள். உணாராதவர்களுக்கு எப்படி உணர்த்த முடியும்? உணர்த்த வேண்டிய அவசியமும் இல்லை.

என்னை பொருத்தவரை-
நம்பிக்கை - மூடநம்பிக்கைம் இரண்டுமே அறிவு சார்ந்த விஷயம்தான்.

ஒன்றைப் பற்றி அக்கறையோடு அறிய முயல்வதும் அதை நிராகரிப்பதும் அறிவுதான். அதை  ‘ஆம்’ என்றும்  ‘இல்லை’ என்றும் வாதிப்பதேஆத்திகம்; நாத்திகம்என்றுதான் பொருள். பலருக்கும் ஆத்திகம் என்றால் ‘கடவுள் நம்பிக்கை’  என்றும்  ‘நாத்திகம்’ என்றால்  ‘கடவுள் எதிர்ப்பு’ என்றும்தான் புரிந்து கொள்ளத் தெரியுமே தவிர,அதற்கு மேல் அர்த்தம் தெரியாது.

நான், எனது வலைத் தளத்தில் இந்த உண்மைகளின் அடிப்படையில்தான்அறிவுடையோர்,அறிகஎன்ற தலைப்பில் புவியியல் சார்ந்த மானுட இயலின் மாற்றங்களையும் அதில் மடிந்து போனஉண்மைகளையும் மறைந்து போன உண்மைகளையும் எழுத முற்பட்டுள்ளேனே தவிர, ஜோதிட அறிவுக்கு விளம்பரம் தேடியல்ல,

நம்மில் பலருக்கு வரலாற்று ஞானம் என்பது கடுகளவும் இல்லை;எனக்கோ எழுதப் பட்டுள்ள வரலாறுகளை அப்படியே ஏற்றுக் கொள்ளும் அறிவு இல்லை.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்று திருமூலர் அருளிய வாசகத்தை எனக்கு வாய்த்த குரு மொழியாகக் கொண்டு அவர் தெளிந்துரைத்தவாறே- ,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்;
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

என்பதற்கேற்பத் தமிழைச் செய்கின்றேன் இங்கே.

அப்படி எழுதப்பட்டுள்ள இரண்டு தொடர்களும் எனது வலைத் தளப் பதிவுகளிலேயே அதிக எண்ணிகை கொண்ட வாசகப் பதிவுகளாக  இரண்டாவது மூன்றாவது வரிசையில் உள்ளன என்பது வியப்பாக உள்ளது,அறிவுத் தேடல் மிக்க வாசகர்கள் அதிகம் என்பதில்.

இதுவரை அந்தத் தொடர்களைப் படிக்காதவர்களுக்கு இங்கே எடுத்துக் குறிப்பிடுவதன் மூலம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்கள் படித்தபிறகுதானே உணர முடியும்?

இதோ,நீங்கள் படித்து மகிழலாம்:

உலகத் தமிழர் மையம்/அறிவுடையோர் அறிக-1
(பதிவு தேதி: 31:10:2010)
மற்றும் அறிவுடையோர் அறிக -2 (பதிவு தேதி:05:12;2012)
 (http://ulagathamizarmaiyam.blogspot.com)


தாகம் கொண்டோர் புசிக்கலாம்.

அன்புடன்,
கிருஷ்ணன்பாலா
13.3.2012

No comments: