Thursday, March 8, 2012

மகளிர் தினம்:மல்லிகா ஸ்ரீநிவாசன் - ஓர் உதாரணம்.


மல்லிகா ஸ்ரீநிவாசன் - ஓர் முன் உதாரணம்.




நண்பர்களே,

தொழில் துறையில் பெண்கள் சாதனையாளராகத் திகழ முடியும் 
என்பதற்கு 'டஃபே (TAFE)' நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் இருக்கும் திருமதி மல்லிகா ஸ்ரீனிவாசன் 
ஓர் உதாரணம்


சிம்சன் குடும்பத்தில் பிறந்து TVS குடும்பத்தில் மண உறவு கொண்டு இல்லத்தரசியாக மட்டும் இருந்து விடாமல் துணிச்சலுடன்டஃபே (TAFE’) நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை 1985ல் ஏற்றுக் கொண்டார்


இவர் பொறுப்பேற்ற போது அந்த நிறுவனத்தின் ஆண்டு வரவு செலவு 
ரூபாய் 86 கோடி. இப்போது 2010/2011 ஆம் ஆண்டுகளில் இதன் வரவு 
செலவு ரூபாய் 5800 கோடியாக உயர்ந்துள்ளது


26ஆண்டுகளில் அசுர வளர்ச்சிதான் இது

விவசாயத் தொழிலுக்கு இன்றியமையாத ட்ராக்டர்களின் நவீனத் 
தொழில் வடிவமைப்பில் TAFE தயாரிப்புக்கள் முதன்மையானவை; தரமானவை;எளிதானவை என்று பெயரெடுத்து உலகின் வளர்ச்சி
அடைந்து வரும் நாடுகளுக்கு அவை ஏற்றுமதி ஆவதிலும் 
இந்தியாவில் நவீன விவசாயத்துக்கு இன்றியமையாத தோழனாக இருப்பதிலும் இதன்பெயர் பிரபலம்.


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் 
இருப்பதாகப் பேசிக் கொள்வோம். ஆனால் இந்தப் பிரபலத்தின் 
பலத்துக்குப் பின்னால் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருக்கிறது என்றுதான் சொல்லமுடியும்.


அப்படியானால் இவருடைய கணவர் ஸ்ரீனிவாசன் இவர் வெற்றியின் பின்னால் இல்லையா? என்று கேட்டு விடாதீர்கள். அவர் டி.வி.எஸ் நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கிறார்.


இவரால் தமிழ் நாட்டுப் பெண்கள் தலை நிமிர்ந்து கொள்ளலாம்;


மகளிர் எல்லாம் இவருடைய உழைப்பையும் உறுதியையும் (இந்தப் பதிவையும்) காப்பி அடிக்கலாம்! வாழ்த்துக்கள்.



அன்புடன்,

கிருஷ்ணன்பாலா

8.3.2012






A Brief Note about Mrs MallikaSrinivasan
----------------------------------------------------------
Mallika Srinivasan, the Chairman and CEO of TAFE, believes in a no-frills 
working style. She has risen to become India's tractor woman making an indelible impression in a heavily male-dominated industry. TAFE's turnover, a mere 
Rs.86 crore in 1985 - the year she joined - had risen to Rs.5,800 crore by 2010/11

Source: Yahoo Finance / 8.3.2012

1 comment:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. அருமையான முன்னுதாரணம்.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.